Wednesday, August 01, 2012

பாஸ்போர்ட்.... நல்ல பாஸ்போர்ட்

சென்ற மார்ச்மாதத்தோட என்னுடைய பாஸ்போர்ட் எக்ஸ்பையரி
ஆகிடிச்சு. பசங்களுக்கு 5 வருஷத்துக்குத்தான் பாஸ்போர்ட்
கொடுப்பாங்க என்பதால எங்க 3 பேருக்கும் போன் வருஷ
மார்ச் மாதம் பாஸ்போர்ட் ரெனுவலுக்கு அப்ளை செய்தோம்.

புதுவீட்டுக்கு போயிருந்ததால அந்த அட்ரஸ் ஃப்ரூவ் ஒரு வருஷத்துக்கு
இருக்காது என்பதால அஃபிடவிட் எல்லாம் வாங்கி மார்ச் மாசம்
கொடுத்தோம். போய் கேட்டா ஒண்ணும் பதிலே வரலை.
போன வருஷம் தசராவுக்கு மும்பைக்கு கிளம்பிக்கிட்டு இருந்தப்போ
ஆஷிஷ் அம்ருதா பாஸ்போர்ட் வந்திருச்சு. ஹை அப்ப நம்மளதும்
வந்திடும்னு போஸ்ட்மேன் கிட்ட சொல்லி வெச்சிருந்தேன். அவரும்
தன்னுடைய போன் நம்பரைக்கொடுத்து ஊரிலிருந்து வந்ததும்
ஃபோன் பண்ணுங்கம்மா, நான் கொண்டாந்து தர்றேன்னு சொன்னாரு.


மும்பை போய் வந்தாச்சு. திங்கள்கிழமை போஸ்ட்மேனுக்கு போன்
போட்டேன். பாஸ்போர்ட் வரலைன்னு சொன்னாரு. 1 மாசம்
பொறுத்து பாத்தேன். நெட்டில் விவரங்கள் கொடுத்து தேடினால்...
போலிவெரிஃபிகேஷனுக்கு அனுப்பியிருக்கோம்னாங்க!!!

இரண்டுமாசம் இப்படியே ஓடி, ஜனவரி மாசம் ஒரு நாள்
காலையில் போலீஸ் அதிகாரி ஒருத்தர் வந்தாரு. நல்ல வேளை
இப்பல்லாம் மஃப்டியில வர்றாங்க. புதுகையில் அப்பாவுக்கு
பாஸ்போர்ட் அப்ளை செஞ்சிருந்த பொழுது காலை நேரத்துல
ரோடில் எங்க வீட்டுக்கு பைப் கனெக்‌ஷன் கொடுத்திருக்கும்
இடத்தில் பள்ளம் தோண்டி, அதுக்குள்ளார ஒருத்தர் பாத்திரத்தை
வெச்சு நிரப்பி மொண்டு மொண்டு குடத்துல ஊத்தினா அதை
நாங்க உள்ள ரொப்புவோம். அப்படி செம பிசியா இருந்த நேரத்துல
இரண்டு போலீஸ்காரங்க வீட்டுக்கு வந்து,” ரமணி இருக்காரான்னு!!”
கேட்க வீதியில எல்லோரும் இருந்தாங்க, அத்தனை பேரும்
ரமணி வீட்டுக்கு போலீஸ் எதுக்கு வந்திருக்குன்னு யோசனையோட
தண்ணி ரொப்பிக்கிட்டு இருந்தாங்க.

தந்தி வந்தா பயம் அதுமாதிரி போலீஸ் வீட்டுக்கு வந்தாலே
ஏதொ தப்பு நடந்திருக்குன்னுத்தான் நினைப்பாங்க. இப்ப மாதிரி
அப்ப பாஸ்போர்ட் பத்தி யாருக்கும் அதிகமா தெரியாது வேற.
எங்கப்பா வேற பாங்க்ல வேலை!!! அதனால மக்கள்ஸுக்கு
சந்தேகம் அதிகமாகிடிச்சு. கணேஷ் நகர் போலீஸ் ஸ்டேஷன்லேர்ந்து
வந்திருந்தாங்க அந்த போலீஸ்காரங்க. பாஸ்போர்ட்க்காக
போலீஸ் வெரிவிகேஷனுக்கு வந்திருக்கோம்னு சொல்லி
விவரங்கள் வாங்கிகிட்டு போனாங்க. அப்புறம் தான் வீதிக்காரங்க
கொஞ்சம் நிம்மதி ஆனாங்க. :) சரி என் பாஸ்போர்ட்
கதைக்கு வருவோம். ஜனவரில போலீஸ் வெரிவிகேஷன் ஆச்சு.
இன்னும் 1 மாசத்துல வந்துடும்னு சொன்னாரு போலீஸ்.

1 மாசம் கழிச்சு நெட்டுல ஸ்டேடஸ் என்னன்னு பாத்தா,
பாலிசி செக்‌ஷனில் இருக்கு, அங்க போய் பாருங்கன்னு
மெசஜ் இருந்தது. சரின்னு பாஸ்போர்ட் ஆபீஸ் போய் ஆர்பிஓவை
பாத்து சார் இந்தமாதிரி சொல்றாங்கன்னு சொல்ல அவரு
பாலிசி செக்‌ஷனில் ஒரு மேடம் பேர் சொல்லி அவங்களைப்
போய் பாருங்கன்னு எழுதி அனுப்பினாரு. அந்த மேடம்
அன்னைக்கு லீவு. அடுத்தவாட்டி போனேன். உங்க ஃபைலை
சென்னைக்கு அனுப்பியிருக்கோம். (பழைய பாஸ்போர்ட்
சென்னையில் இருந்தப்ப வாங்கினது) அப்படின்னு சொன்னாங்க.

அப்படி இப்படின்னு மார்ச் 2012ம் வந்திருச்சு. பாஸ்போர்ட்
வரலை. நாங்களும் அலைஞ்சு திரிஞ்சு நொந்து நூடில்ஸாகி,
வெந்து வெர்மிசெலியாகி, வெறுத்துப்போனோம். பாஸ்போர்ட்
ஆபீஸுக்கு நடந்து நடந்து போன மாசம் திரும்ப போனோம்.
ஜூலை 5 சுபயோக சுபதினம் அன்று பாஸ்போர்ட் ஆபீஸில்
என் ஃபைலை க்ளோஸ் செய்துவிட்டதாக சொன்னாங்க!!!

ஏன்யா, போலீஸ் வெரிவிகேஷன் ஆச்சு. பாஸ்போர்ட்
கொடுக்க வேண்டிய நேரத்துல என் ஃபைலை ஏன் க்ளோஸ்
செஞ்சீங்கன்னு கேட்டா பதிலே இல்லை. (ஃபைல்
தொலைஞ்சு போச்சுன்னு சந்தேகம் எனக்கு).

ஜூலை மாதம் 13ஆம் தேதி பேகம்பேட் பாஸ்போர்ட் சேவா
கேந்திராவில் போய் பாருங்கன்னு எழுதி கொடுத்தாங்க.
அதுலதான் ஃபைலை க்ளோஸ் செஞ்சிட்டோம்னு எழுதி
கொடுத்திருந்தாங்க.!!! அடக்கொடுமையேன்னு அதை
வாங்கிகிட்டு வீட்டுக்கு வந்தேன். அப்புறம்......

தொடரும்.


24 comments:

ஸாதிகா said...

ம்ம்..அப்புறம்...சீக்கிரம்....:)

”தளிர் சுரேஷ்” said...

நமது அரசாங்க அலுவலகங்களின் பொறுப்பின்மை இது! என்ன செய்வது?

இன்று என் தளத்தில் வெற்றி உன் பக்கம்! தன்னம்பிக்கை கவிதை! http:// thalirssb.blogspot.in

pudugaithendral said...

வாங்க ஸாதிகா,

அப்புறத்துக்கு அப்புறமா வரும் :))

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க சுரேஷ்,

ரொம்பவே பொறுப்பின்மை. அதுவும் இந்த பாஸ்போர்ட் ஆபிஸ்காரங்க கிட்ட பேசி ஏதும் பேஜாரானா நம்ம பாஸ்போர்டுக்கே வேட்டு வெச்சிடுவாங்க.

வருகைக்கு நன்றி

ஹுஸைனம்மா said...

உங்களுக்குன்னே இப்படிலாம் நடக்கும்போல, பதிவெழுத வசதியா!! :-)))) (முன்னாடி கூரியர் - திவான்)

உண்மையைச் சொல்லணும்னா, நான் மற்றும் இங்க அமீரகத்துல நிறைய பேர், பிரசவத்தை இங்கதான் வச்சுக்கணும்னு நினைப்போம். காரணம் - புதுகுழந்தைக்கு பாஸ்போர்ட் இங்கதான் ஈஸியாக் கிடைக்கும்!! ஊருல கைக்குழந்தையைத் தூக்கிட்டு அல்லாட வச்சிருவாங்க.

அதேபோல, எல்லாரின் பாஸ்போர்ட்டும் ரினீயுவல் இங்கதான் பண்ணுவோம் - ஒரு வாரம்கூட ஆகாது!!

Organic Farmer said...

You can always file a RTI application and get to know why your file was closed. When you file this see the activity of the staff.Passport is your right and no one can deny that.

Giri

கோவை நேரம் said...

அப்புறம்....சுவாராசியமான நேரத்தில் தொடரும்.....?

சீக்கிரம்....

அன்புடன் அருணா said...

அட! அப்புறம்????

திண்டுக்கல் தனபாலன் said...

மெகா தொடர் போல் நின்னு போச்சே...

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

ஆமாம். :((

நான் கூட ஆண்டவன் கிட்ட வேண்டி இருக்கேன் என்னன்னு தெரியுமா? அடுத்தவாட்டி பாஸ்போர்ட் ரெனியூ செய்யும்பொழுது வேற ஏதாவது நாட்டுல இருக்கணும்னு!!! :(( 2 நாள்ல ஆஷிஷ் அம்ருதாவுக்கு பாஸ்போர்ட் வாங்கினது ஞாபகம் வந்துச்சு. (நாம பேசாம வேற நாட்டுல பிறந்திருக்கலாம்)

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க கிரிகுமார்,

அதெல்லாம் அயித்தான் செஞ்சு பாத்தாங்க. :((

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க கோவைநேரம்,

அடுத்த பதிவு போடுறேன் சீக்கிரம். :)

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க அருணா,

அடுத்த பதிவுல சொல்றேன்

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க தனபாலன்,

மெகா தொடர் போலன்னு சொல்லியிருக்கீங்க அம்புட்டு எல்லாம் ஆகுதுன்னு நினைக்கிறேன்.

வருகைக்கு நன்றி

வெங்கட் நாகராஜ் said...

//அப்புறம்......

தொடரும்.//

அடடா.... :) காத்திருக்கிறேன்.

இராஜராஜேஸ்வரி said...

ஆன் லைனில் அப்ளை செய்து நேற்று போய் ரெனிவல் செய்து வந்தேன்..

சுமுகமாகத்தான் இருக்கிறது !

pudugaithendral said...

வாங்க சகோ,

நெட்டு கொஞ்சம் கஷ்டம் கொடுத்தது. நாளை பதிவு வந்திரும்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க இராஜராஜேஸ்வரி,

அதைப்பத்தியும் சொல்றேன். :))

வருகைக்கு நன்றி

Pandian R said...

எத வாங்கினீங்க? பைலையா பாஸ்போர்ட்டையா?
-----

இந்தக் கதையை முடிங்க. பாஸ்போர்ட் சேவா கொடுமைகளை நான் சொல்றேன்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நேர்மையா பாஸ்போர்ட் வாங்கணும்னா இவ்வளோ தொல்லைகளை எல்லாம் அனுபவிக்கனும் போல இருக்கு.

pudugaithendral said...

வாங்க ஃபண்டூ,

ரெண்டையும் வாங்கலை :)

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க முரளிதரன்,

நேர்மையா இருப்பது இப்ப ரொம்ப தப்புல்ல.....

வருகைக்கு மிக்க நன்றி

Dr.S.Soundarapandian said...

நான் நெல்லூரிலே காரத் தோசை சாப்பிட உட்கார்ந்தேன் ; ஐயையோ ! நாக்குப் பொத்துப்போனது ! கண்ணில் தண்ணீர் ! கிட்னி இன்று தொலைந்தது என்று கலங்கிவிட்டேன் ! பாதித் தோசையோடு ‘போதுமடா சாமி’என்று எழுந்துவிட்டேன் ! ஆனால் அங்குள்ளவர்கள் சும்மா ‘கட்டு கட்டு’ என்று கட்டுகிறார்கள் ! நல்ல வித்தியாசந்தான் ! -
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

pudugaithendral said...

வாங்க சொளந்தரபாண்டியன்,

அது அப்படித்தான். ஆனா நான் அவ்ளவு காரம் ஹைதையில் சாப்பிட்டதே இல்லை.

வருகைக்கு மிக்க நன்றி