அர்த்தராத்திரி பத்துமணிக்கு!! போன். வலிக்கு மருந்து சாப்பிட்டு
9 மணிக்கே தூங்கப்போய்விட்டேன். அயித்தான் தான் போன்
எடுத்து பேசிருக்காக. காலையில் பேசுவதாக சொல்லியிருக்கிறாள்
என் தோழி. காலையில் பேசினால் செம சந்தோஷம் அதுவும்
ரெட்டை சந்தோஷம். அதை உங்களிடமும் பகிர்ந்து கொள்வதில்
ரொம்ப சந்தோஷம்.
என் தோழி அடைந்திருக்கும் இந்த நிலை சாதாரணமானது
இல்லை. ஒரு கதவை அடைத்தால் இறைவன் இன்னொரு
கதவை திறப்பான் என்பது பொய்யில்லை. சிறிய வயதில்
அவளுக்கு இறைவன் செய்த கொடுமையை உங்களிடம்
முன்பே பகிர்ந்து கொண்டுள்ளேன். என்ன சந்தோஷமான
செய்தின்னு சொல்லிடறேன்.
என் தோழி இனி டாக்ரேட் பட்டம் வாங்கியவர் என
பெருமையா இருக்கு. நாங்கள் இருவரும் ஆங்கில இலக்கியத்தை
ஆர்வமாக தேர்வு செய்து கல்லூரிக்குள் நுழைந்தவர்கள்.
இன்று என் சாந்தி கோல்ட் மெடலிஸ்ட், அண்ணாமலைப்
பல்கலைக்கழக பேராசிரியை என்ற பெருமைகளுடன்
தனது கனவான பிஎச்டியையும் செய்து முடித்து
விட்டாள். பூங்கொத்துக்களுடன் எனது பாராட்டுக்கள்
சாந்தி.
அடுத்த பூங்கொத்து பாராட்டுக்கள் சொல்லும் முன்னாடி
சிதம்பரம் நகர வாசிகளுக்கு எச்சரிக்கையையும் சொல்லிக்கிட
கடமைப்பட்டிருக்கேன். இது என்னாத்துக்குன்னு கேக்கறீங்களா??!!!
சொல்றேன். எங்க ஆத்தா மங்கம்மா கார் வாங்கி இருக்காக.
அதை ஓட்டவும் போறதா முடிவு செஞ்சிட்டாங்க. அதான்
சிதம்பரத்துல இருக்கறவகளுக்கு எச்சிரிக்கை சொல்லிடறேன்.
பயமா இருக்குடா தம்பின்னு மகன் கிட்ட சொன்னதுக்கு
அந்த நல்லவர் சொன்ன தைரியம்,” நீ ஏம்மா பயப்படற!
எதிர்ல வர்றவுகல்ல பயப்படணும்!!!”
ஏதாச்சும் ஆச்சுன்னா கவலைப்படாதே, மாமா வக்கில்தான்
ஒரு கை பாத்துக்கலாம். (சாந்தியின் தம்பி காரைக்குடியில்
பிரபல வக்கீல் :)
சீக்கிரமா சிதம்பரத்துக்கு ஒரு ட்ரிப் அடிக்கணும். என் சாந்தி
வண்டி ஓட்ட நான் கார் முன் கதவை திறந்து இந்த
ஓட்டு கேட்க போகும்போது நிப்பாங்களே அதுமாதிரி ஏறி
நின்னு கிட்டு ஓரம்போ ஓரம்போன்னோ “ தள்ளு தள்ளு”
ஒத்திக்கோ ஒத்திக்கோன்னு கத்திகிட்டு போகணும். :)))
நான் படிச்சு முடிக்காததை என் தோழி சாதிச்சிட்டா,
B.A, M.A, MPHIL, PHD இது என் திட்டமா இருந்தது
என்னால முடிக்க முடியாம போயிருச்சு. ஆத்தா
அதை சாதிச்சிட்டான்னு பெருமையா இருக்கு. கார்
ஓட்டுறேன் பேர்வழின்னு ஆரம்பிச்சு அதை பாதியில
விட்டுட்டேன். ஆனா என் சாந்தி தானே சம்பாதிச்சு
கார் வாங்கியிருக்கறது எம்புட்டு பெருமை. இந்த
உயரம் அவளுக்கு சுளுவா கிடைச்சிடலை. ஆனா
இத்தனைக்கு அவள் தகுதியானவள். இந்தப் பெருமையோட
நான் இருக்க, அவளுக்கோ நான் வலைப்பூவரசியானதில்
பெருமை, சீரியல்கள் பார்த்து பொழுதை கழிக்காமல்
“உருப்படியாக” சாதித்து கொண்டிருப்பதிலும், நல்ல
அம்மாவாக, இல்லத்தரசியாக திகழறதாகவும் சொல்லி
சொல்லி பெருமைப்பிடிபடலை.
இரண்டு வருஷமா டெடிகேஷனோட தன் பிஎச்டிக்கு
தயாரகிகிட்டு இருந்த தோழி வாங்கிய முதல்
இதழில் நான் வலைப்பூவரசியாக வந்திருப்பதில்
ரொம்பத்தான் பெருமை.
என் பெருமை எனக்கு. அவள் பெருமை அவளுக்கு.
நமது நட்புக்கு இப்பொழுது வயது 21 சாந்தி.
ஆண்டவன் உனக்கு இழைத்த கொடுமைக்கு
பிராயசித்தம் தேடிக்கொண்டுள்ளான்.
இனி எல்லாம் சுகமே. எனதன்பான வாழ்த்துக்கள்.
16 comments:
எனது வாழ்த்துகளும்..
வாழ்த்துக்கள்
என் இனிய வாழ்த்துக்கள் உங்கள் தோழிக்கு !!!........
மிக்க நன்றி பகிர்வுக்கு .
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... வாழ்த்துக்கள்...
மனம் நிறைந்த வாழ்த்துகள் தென்றல்.
நானும் காரை ஓட்ட ஆரம்பித்துப் புளியமரத்தில் நிறுத்தியவள் தான். பிறகு தொடுவதில்லை.
வலைப்பூ அரசியா?இது என்ன பட்டம்.எப்பொழுது வாங்கினீர்கள். சொல்லவே இல்லையே.இல்லை நான் படிக்கலையே. உங்கள் தோழிக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள்!
இன்று என் தளத்தில்
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி6
http://thalirssb.blogspot.in/2012/08/6.html
மதுரை ஆதினம் அப்பல்லோவில் சேர்ப்பு!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_28.html
நல்வாழ்த்துகள்.
poongothu!
வாழ்த்துகள்
இன்று தான் உங்கள் வலைப்பதிவிற்கு வருகிறேன்...
மிகவும் அழகாக எழுதுகிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
http://dohatalkies.blogspot.com/2012/08/one-flew-over-cuckoos-nest.html
எனது வாழ்த்துக்களையும் சொல்லிவிடுங்கள்...
நன்றி அமைதிச்சாரல்,
நன்றி ஜலீலா
நன்றி அம்பாளடியாள்
நன்றி திண்டுக்கல் தனபாலன்
நன்றி வல்லிம்மா. (அவள்விகடனில் வலைப்பூவரசியாக நான் போன இதழில்.)
நன்றி சுரேஷ்,
நன்றி மாதேவி
நன்றி அருணா
நன்றி எல்கே
நன்றி தோஹா டாக்கீஸ் (அடிக்கடி வாங்க)
கண்டிப்பா சொல்லிடறேன் சிட்டுக்குருவி
ரெண்டு பேருக்கும் வாழ்த்துகள் :))
உங்கள் இருவருக்குமே வாழ்த்துகள் சகோ.
Post a Comment