நான் மிகவும் மதிக்கும் போற்றும் ஒரு பெண்மணி மரியா மாண்டிசோரி
அவர்கள். இன்று அந்த உன்னத ஆசிரியையின் 142ஆவது பிறந்தநாள்.
நானும் ஒரு மாண்டிசோரி முறையில் பயிற்சி பெற்ற
ஆசிரியை என்பதால் என்னுடைய இந்தப் பதிவை மீள்பதிவாக
பதிகிறேன்.
She was often heard saying, "I studied my children, and they taught me how to teach them". - மரியா மாண்டிசோரி.
உலகையே பேசவைத்த மாண்டிசோரி முறைக்கல்வியை
கண்டுபிடித்த மரியா மாண்டிசோரி இவர்தான்.
மாண்டிசோரி முறைக் கல்வியின் அடிப்படைத் தத்துவம் இது தான்:
1. The teacher must pay attention to the child, rather than the child paying attention to the teacher.
2 - The child proceeds at his own pace in an environment prepared to provide means of learning.
3 - Imaginative teaching materials are the heart of the process.
4 - Each of them is self-correcting, thus enabling the child to proceed at his own pace and see his own mistakes.
If you were to look inside a Montessori classroom, each child would be quietly working at his private encounter with whatever learning task he or she has chosen. (Montessori in Perspective, 1966).
Montessori often reminded teachers in her course, "When you have solved the problem of controlling the attention of the child, you have solved the entire problem of education." (Kramer, 1976, p. 217).
மேலே இருக்கும் ஆங்கிலவாக்கியங்களுக்கு
பாசமலர் மொழிபெயர்த்து
தந்தது. மிக்க நன்றி மலர்.
மரியா மாண்டிசோரி அடிக்கடி இப்படிச் சொல்வாராம்,
" என் மாணவர்களை நான் படித்துப் புரிந்து கொண்டேன்.
எப்படி அவர்களுக்குப் கற்றுத்தரவேண்டுமென்று
அவர்கள்தான் எனக்குக் கற்றுத் தந்தார்கள்.
"1. ஒரு குழந்தை தன் ஆசிரியரிடம் கவனம்
செலுத்துவதைக் காட்டிலும்,ஓர் ஆசிரியர் தன்
குழந்தையிடம் கவனம் செலுத்துவது
முக்கியமானது.
2. படிப்பதற்கான வழிமுறைகள் முறைப்படுத்தப்பட்ட
ஒரு சூழலில் ஒரு குழந்தை தன்னிச்சையாகத்
தன் வழியில் தானே முன்னேறும் சாத்தியக்கூறு
அதிகமாகிறது.
3. கற்பனைத்திறன் சார்ந்த போதிக்கும் கருவிகள்தான்
இம்முறையின் முக்கியமான அம்சமாகும்.
4. ஒவ்வொரு கருவியும் சுய திருத்தம் என்ற
அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
எனவே, ஒரு குழந்தை தனக்கேற்ற வேகத்தில்
படித்துத் தன் தவறுகளைத் தானே சரி செய்ய முடியும்.
ஒரு மாண்டிசோரி வகுப்பறையைப் பார்வையிடும்போது,
தனித்தனியே ஒவ்வொரு குழந்தையும் தானே தேர்ந்தெடுத்த
ஒரு படிக்கும் தளத்தில் அமைதியாக இயங்கிக்
கொண்டிருப்பது புரிய வரும்.
மாண்டிசோரி அம்மையார் இந்தத் துறையில்
பயிற்சி பெறும் ஆசிரியர்க்கு அடிக்கடி நினைவுறுத்துவது:
"ஒரு குழந்தையின்கவனத்தைக் கட்டுப்படுத்தும்
ப்ரச்னையைச் சமாளித்துவிட்டால் போதும்.
முழுக் கல்வி சம்பந்தப்பட்ட ப்ரசனையும்
இதன் மூலம்தீர்ந்து விடும்.
"அரிஸ்ட்டாடில் என்ற தத்துவ ஞானி சொல்வது:
"புலன்களுக்குப் புலப்படாத எந்த ஒன்றும்
மனிதனின் மனதில் இருக்கவே முடியாது.
"sensorial - உணர்ந்து அறிவது
Essence of Practical Life - எதார்த்த வாழ்வின் சாராம்சம்
Number Rod - எண் கருவி
Cards and Counters - அட்டைகளில் எண் அட்டவணைகள்
Geometrical tray - வடிவங்களின் அறிமுகக் கருவிகள்
****************************************************
"casa dei Bambini" அதாவது மழலையர் இல்லம். இங்குதான்
5 வயதிற்குட்பட்ட ஏழைக் குழந்தைகள் இருந்தனர்.
இந்தப் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளும்
சூப்பர்வைசராக மாண்டிசோரி வந்தார். இவர்களின்
பொழுதை இனிமையானதாக மாற்ற சில் உபகரண்ங்களைக்
கொண்டுவந்தார்.
குழந்தைகளிடம் மாற்றம் வந்தது. கைகளால் உணர்ந்தும்,
அனுப்வித்து குழந்தைகள் எளிதாக கற்றனர். மற்ற பள்ளிகளில்,
விளம்பிக்கொண்டும், எழுத கஷ்டபட்டுக்கொண்டும் இருந்தனர்.
இந்த மாறுதல்கள் காட்டுதீயாய் உலகெங்கும் பரவியது.
தான் ஒன்றும் அற்புதத்தை நிகழ்த்தி விடவில்லை என்றுதான்
மாண்டிசோரி கூறுவார். "பிள்ளைகளிடம் அபார சக்தி இருக்கிறது.
அதை முறையாக பயன்படுத்த அவர்களுக்கு உதவினேன்,'
என்றுதான் கூறுவார்.
மாண்டிசோரி முறையில் ஐம்புலன்களினாலும் கற்கும்படி
பாடத்திட்டங்கள் இருக்கும்.
(ARISTOTLE- THE GREAT PHILOSPHER SAYS," There is nothing
in the mind fo men, that his senses have not known".
பார்த்தல், கேட்டல், உணர்தல், சுவைத்தல், முகர்தல் எனும்
முறையில் இருக்கும் பாடத்தை - SENSORIAL என்போம்.
அடுத்து மொழி.
அடுத்து கணிதம்.
அடுத்து ESSENCE OF PRACTICAL LIFE (EPL)
எனப்படும் வாழ்க்கைக்குத் தேவையான பாடங்கள்.
மாண்டிசோரி முறைக்கல்வி பற்றிய
என் பதிவுகள் 1, 2, 3, 4.
12 comments:
தெரியாத மாண்டிசோரி பற்றிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி சகோ! நல்ல பதிவு...
மாண்டிசோரி அம்மையார் அவர்கள் மிகவும் போற்றப்பட வேண்டியவர்...
அவர்கள் சொல்வது போல இன்றைய குழந்தைகளிடம், நாம் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய உள்ளன... நன்றி...
nalla pathivu...
vaazhthukal.
மீள் பதிவாக இருந்தாலும் மீண்டும் படித்த பதிவு....
மாண்டி சோரி அம்மையார்பற்றிய பதிவு அருமை.
மாண்டி சோரி அம்மையார் சொன்னது போல குழந்தைகளிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன,
அவர்களை நல்ல முறையில் வழி நடத்தினால் அவர்கள் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.
மாண்டிசோரி பள்ளி முறை பற்றி படித்தவரிடத்திலும் தெளிவு இல்லை. நான் என் பையனைப் பள்ளியில் சேர்க்க விசாரித்தபோது "அந்தப் பள்ளிக்கூடத்தில் எல்கேஜி படிக்கிற வயதில் எழுதவே சொல்லித்தர மாட்டாங்காளாமே" என்று மக்கள் சொன்ன ஆதங்கமே அந்த முறையில் என் பையனைச் சேர்க்கக் காரணமாயிருந்தது. 3 வயதில் அவன் எழுதி சம்பாதித்து நம்மைக் காப்பாற்ற வேண்டுமா என்ன. மேலும் ஸ்மார்ட் கல்வி, விளையாட்டு முறைக் கல்வி என்கிற பசப்பு வார்த்தைகளுடன் மெட்ரிக் பள்ளிகள் ஈர்க்கின்றன. பெற்றோர்களின் அகோரப் பசிக்கு இறை போட மெட்ரிக் பள்ளிகளாலேயே முடிகின்றன. இன்றைய தேதி வரை எனது முடிவை தவறாகப் பார்க்கும் நபர்கள் என் நண்பர்கள் வட்டாரத்திலேயே உள்ளனர்.
வாங்க ஆயிஷா ஃபாருக்,
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க தனபாலன்,
அவருடைய ஒவ்வொரு உபகரணங்களும் புனிதமானவையாக மாண்டிசோரி ஆசிரியைகளால் போற்றப்படுகிறது.
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க இரசிகை,
உங்க வருகைக்கு மிக்க நன்றி
வாங்க சகோ,
உங்க வருகைக்கு மிக்க நன்றி
வாங்க கோமதி அரசு அம்மா,
பிள்ளைகளிடம் கற்க ரொம்ப இருக்கு. அதுவும் அந்த சின்னஞ்சிறு பிராயத்தில் அவங்களை அப்படியே தூண்டிவிட்டா போதும். அதுதான் மாண்டிசோரி அம்மையாரின் கொள்கை.
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க ஃபண்டூ,
மாண்டிசோரி வழிக்கல்வி பற்றி தெரியாததால்தான் மக்கள் அப்படி பேசறாங்க.
கவலையைவிடுங்க. வருங்காலத்தில் உங்க பையன் நல்ல திறமையுள்ளவரா தன்னை வெளிப்படுத்திக்க இந்த வகை கல்வி ரொம்ப உதவும்.
வருகைக்கு மிக்க நன்றி
Post a Comment