Monday, September 17, 2012

புலம்பல்ஸ் ஆஃப் இல்லத்தரசி!!!!!!

முன்ன போனா முட்டுது, பின்ன வந்தா இடிக்குதுன்னு ஒரு
வசனம் சொல்வாக. அதுமாதிரில்ல இப்ப நிலமை ஆகிப்போச்சு!!!!
என்னாது வார ஆரம்பத்துலேயே புலம்பல்ஸ்னு கேக்கறீகளா!!
இனி இப்படித்தான். இல்லத்தரசிகளுக்கு புலம்பல்ஸ் தான்.
அதெல்லாம் சும்மா. அப்படி எல்லாம் அரசாங்கம் சட்டம் போடாதுன்னு
சொல்லிக்கிட்டு இருந்தாங்க. ஆனா பெட்ரோல் விலையை ஏத்தாம
ஏகமா சிலிண்டர்ல வெச்சிட்டாக ஆப்பு.

மான்யவிலையில் ஒரு குடும்பத்துக்கு ஒரு வருஷத்துக்கு 6 சிலிண்டர்கள்தான்.
அதுக்கு மேல போனா 750ரூவா வரைக்கும் ஆகுமாம்!!!. சராசரியா
5 பேர் இருக்கும் குடும்பத்துக்கு 30 நாளுக்கு மேல சிலிண்டர்
வந்தா அது பெரிய வரம். பொழுது போய் பொழுது விடிஞ்சா
அடுப்பை பத்த வைக்காம எந்த வேலையும் நடக்காது. இந்த
லட்சணத்துல எப்படி சமாளிப்பது.




அதான் மைக்ரோ அவன், இண்டக்‌ஷன் அடுப்பு இருக்கே அதை
வெச்சு சமாளிக்கலாம்னு பார்த்தா “கரண்ட்”???!!! இப்ப
தினம் பவர் கட் என்பது நாடு தழுவிய பிரச்சனை இங்கே
காலை 6லிருந்து 7.30 வரைக்கும் கரண்ட் இருக்காது.
காலையில் அவசரத்தில் அரைக்க, கரைக்க முடியாது. எல்லாமே
முதல் நாள் இரவே செஞ்சு ஃப்ரிட்ஜில் வெச்சுக்கிட்டாதான் உண்டு.
(இந்த லட்சணத்துல இராப்பிச்சைக்காரர்கள் எனும் இனத்தை
ஒழித்த பெருமை ஃபிரிட்ஜையே சாரும்னு ட்வீட் வேற!!!)

அப்படி மொதோ நாள் அரைக்க மறந்தா அதிகாலையில்
அக்கம் பக்கத்தாரின் தூக்கத்தை கெடுத்துகிட்டு மிக்சி ஓடும்!!
அந்த பரபர நேரத்துல கேஸ் அடுப்பே கதி. கரண்ட் வர்றதுக்குள்ள
சமையலே முடிஞ்சதுக்கப்புறம் மைக்ரோ அவன், இண்டக்‌ஷன்
இரவுதான் உபயோகிக்க முடியும். அப்பவும் அறிவிக்கப்படாத
மென்வெட்டு இருந்தா அம்புட்டேதான். (எங்களுக்கு தினத்துக்கு
3 மணிநேரம் கரண்ட் கட். காலை 6-7.30, முன்பகல் 12-1.30)


ப்ளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்கணும்னா மாற்றா
எதை உபயோகிக்கணும். பேப்பர்கப், பேப்பர் நாப்கின். அது
மரங்களால தயாரிக்கப்படுதுன்னு ஒரு குரல் வருது. சரி பேப்பர்
நாப்கினுக்கு பதிலா துணி உபயோகிக்கலாம்னா, தண்ணி செலவு
அதிகம். தண்ணீர் பற்றாக்குறை. டீசல், பெட்ரோல் விலை
அதிகாமான அடுத்த நொடி ஆட்டோ, டாக்சி, பிள்ளைகள் பள்ளி
வேன் இதுக்கு கொடுக்கும் பணம் அதிகமாகிடும். இப்படி
ரிலே ரேஸ் மாதிரி ஒண்ணொக்கொண்ணு தொடர்போட நம்மளை
போட்டு இப்படி வாட்டுது.

பெட்ரோல் விலை கன்னாபின்னான்னு இருக்கு சமயோசிதமா
யோசிச்சு பலர் டீசல் கார் வாங்கினாங்க. இப்ப அங்கயும்
ஆப்பு. CNG வெச்ச வண்டிகளுக்கும் பஞ்சமில்லை. அதுவும்
என்னா விலை இப்ப??? ரங்க்ஸ்களுக்கு இப்படி கஷ்டமுன்னா,
தங்கஸுகளுக்கு அடுப்படி பக்கம் போகவே பயமாக்கிடுவாக
போல. சரி சிங்கப்பூர், மலேசியா மாதிரி சமைக்காமலே
ஹோட்டலை நம்பி காலைத்தை ஓட்டுவோம்னு இருந்திட
முடியுமா??!! மாடுலர் கிச்சன் செஞ்சாளாம் மகராசி ஒருத்தி.
கரண்ட், கேஸ்னு ஏகப்பட்ட தட்டுப்பாடு பிரச்சனையில் கட்டு
குலையாமல் கிச்சன் அப்படியே இருக்கு. சாப்பாடு வெளியிலதானாம்!!??

ஏற்கனவே விக்கற விலைவாசிக்கு விருந்தினர்கள் வந்தாலே
டெர்ரரா இருக்கு. இனி யாரும் வந்தா காபித்”தண்ணி” கூட
கேக்கமாட்டாகயாரும். சின்ன வயசுல புள்ளைக கூட விளையாட்டா
”உங்க வீட்டுல சாப்பிட்டு எங்க வீட்டுல கையக்கழுவ வந்திடுன்னு”
பேசிப்போம். நிஜத்துல அதுதான் இனி நிலமையாகிடும் போல!!

பெட்ரோல், டீசல் விலையேற்றம் படுத்துன்னு புரிஞ்சுகிட்ட
தங்க்ஸ், ரங்க்ஸ் எங்கயும் அதிகமா கூட்டிக்கிட்டு போகாட்டியும்
நிலமையை புரிஞ்சுகிட்டு விதியை நொந்துகிட்டு பேசாம இருப்பாக.
ஆனா ரங்க்ஸ்களுக்கு மட்டும் எல்லாமே விதிவிலக்கு. அவுக
எங்கனயும் போகணும்னா ட்ரூன்னு வண்டி ஓட்டிக்கிட்டு போவாக.
வூட்டல்யும் சாப்பாடு வக்கனையா இருக்கணும்.
விக்கற விலைவாசி ஒருபக்கம் இருக்கட்டும், சமைக்க எரிவாயு
பத்தலை, கரண்ட் இல்லைன்னா தங்க்ஸ்தான் என்ன செய்வாங்க
பாவம். இதெல்லாம் ரங்க்ஸ்களுக்கு எங்க புரியப்போகுது.
சட்னிக்கு தாளிக்கலை,இந்த சாப்பாட்டுக்கு இது தான்
ருசிக்கும்னு படுத்தி எடுத்திடுவாக. தங்க்ஸுக்கு சமைச்சு
போடக்கூடாதுன்னு வஞ்சனையா??!!!


இப்ப சில ஊர்களில் கார்பூலிங் முறை பிரபலமா இருக்கே.
அதுமாதிரி 2 வீட்டுக்காரவுக சேர்ந்து சமையல் செய்யும்
திட்டமாதிரி ஏதும் கொண்டாந்தா நல்லா இருக்குமோ!!!
உங்க ஐடியாக்களையு சொல்லிட்டு போங்க.


23 comments:

இராஜராஜேஸ்வரி said...

புலம்பல்ஸ் ஆஃப் இல்லத்தரசி!!!!!!

என்னபுலம்பி என்ன பிரயோசனம் !!!

pudugaithendral said...

வாங்க இராஜராஜேஸ்வரி,

ரங்க்ஸ்களுக்கு எதிரா சமீபத்துல பதிவும் எதுவும் போடலை. அதனாலத்தான் இந்தப் பதிவு. :))

வருகைக்கு நன்றி

ஸாதிகா said...

நியாயமான புலம்பல்தான்.மிகசிறிய குடும்பத்துக்கு ஒகே.பெரிய குடும்பங்கள் பாடுதான் திண்டாட்டம்.இதில் சிலிண்டர் தராமல் ஆப்பு வைத்து பிரஷரை ஏகிற வைக்கின்றனர்.

திண்டுக்கல் தனபாலன் said...

இதை விட நிறைய புலம்பல்கள் வீட்டிலே... ...ம்... என்ன செய்வது... ?

ஹுஸைனம்மா said...

//சட்னிக்கு தாளிக்கலை, இந்த சாப்பாட்டுக்கு இது தான்
ருசிக்கும்//
இது உலகமகா பிரச்னை போலருக்கு!! :-))))

//2 வீட்டுக்காரவுக சேர்ந்து சமையல் செய்யும் திட்டமாதிரி ஏதும் கொண்டாந்தா //

அதுதான் கடைசியில் நடக்கப்போவுது!!

ADHI VENKAT said...

புலம்பிக்கிட்டே இருக்க வேண்டியது தான்.....என்ன செய்வதென்று தான் தெரியலை....

கோமதி அரசு said...

இப்ப சில ஊர்களில் கார்பூலிங் முறை பிரபலமா இருக்கே.
அதுமாதிரி 2 வீட்டுக்காரவுக சேர்ந்து சமையல் செய்யும்
திட்டமாதிரி ஏதும் கொண்டாந்தா நல்லா இருக்குமோ!!!
உங்க ஐடியாக்களையு சொல்லிட்டு போங்க.,,

முன்னால் ஜானாதிபதி வி.வி.கிரி அவர்கள் பெண்கள் அடுப்படியில் தினம்அதிக இருந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் சேவை நாட்டுக்கு கிடைக்க மாட்டேன் என்கிறது.
பொது இடத்தில் சமையல் வைத்து குறைவான் பேர்கள் உணவு சமைத்தால் போதும் என்றார், அது போல் செய்தால் எரிபொருள் மிச்சம் ஆகும்,
நீங்கள் சொல்வது போல் முதலில் இரண்டு வீட்டுக்காரங்க சேந்து செய்யலாம்.

எல் கே said...

உங்க புலம்பல்ஸ் கேட்டு பத்து சிலிண்டரா மாத்த போறங்களாம்

வெங்கட் நாகராஜ் said...

ம்ம்.... என்னத்த சொல்ல!

Anonymous said...

என்னதான் நம்ம புலம்பினாலும், அது புலம்பலா மட்டுமேதான் இருக்கு!:))) ஆனா, 2 வீடுகள் சேர்ந்து சமைக்கும் திட்டம் நிஜமாலுமே எல்லா விதத்திலையுமே சிக்கனமாகத்தான் இருக்கும், ஆனால் இரண்டு வீட்டுக் காரர்கள் ஒற்றுமைதானே அங்கே பெரிய விசயம்!

வல்லிசிம்ஹன் said...

ஏம்பா இப்படிக்கூட செய்யலாமே. ஒரு நால் ஏல்லாரும் சேர்ந்து ஒரு வீட்டில சமைக்கலாம். இரண்டு நாட்கள் கழித்து அடுத்தவங்க வீட்ல ரெண்டு நாட்களுக்கும் சேர்த்து சமக்கலாம். வொர்க் அவுட் ஆகுமா.
உலம்பிப் புலம்பி மூளை குளம்பிக் கிடக்கு மகளே.:(

pudugaithendral said...

வாங்க ஸாதிகா,

ஆமாம்பா இப்ப ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க தனபாலன்,

இதை விட நிறைய புலம்பல்கள் வீட்டிலே.//

பெருசா நம்மால ஏதும் செய்ய முடியாட்டியும் அவங்களுக்கும் டென்ஷன் இருக்குன்னு புரிஞ்சுகிட்டாலே போதுமே :))

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

இது உலகமகா பிரச்னை போலருக்கு!! :-))))//

இல்லையா பின்ன நம்ம சர்வேசன் இதுக்காக பதிவு போட்டது ஞாபகம் இருக்குல்ல :))

//2 வீட்டுக்காரவுக சேர்ந்து சமையல் செய்யும் திட்டமாதிரி ஏதும் கொண்டாந்தா //

அதுதான் கடைசியில் நடக்கப்போவுது!!//

நடந்தாலும் நடக்கும்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க கோவை2தில்லி,

புலம்பி, புலம்பி, குழம்பி கடைசியில் தெளிவாயிடுவோம்னு நம்பிக்கைதான். :))

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க கோமதிம்மா,

நிஜம்மாவே அது ரொம்ப உபயோகமா இருக்கும்னுதான் தோணுது. ஆனா அவரவர் வீட்டு சாப்பாட்டு ருசி,ஒத்துப்போவது இதெல்லாமும் இருக்கே.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க எல்கே,

எனக்கு 6 சிலிண்டரே போதும். :))

இரண்டு மாசத்துக்கு ஒரு சிலிண்டர்தான் உபயோகிக்கறேன். ஆனாலும் எக்ஸ்ட்ராவா போனா பெம்மா இருக்கு.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க சகோ,

நாடாளும் எசமானர்கள் நம்மளை இன்னமும் எம்புட்டு கஷ்டபடுத்தப்போறாங்களோ தெரியலை.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க சாமுண்டேஸ்வரி,

இரண்டு வீட்டுக் காரர்கள் ஒற்றுமைதானே அங்கே பெரிய விசயம்!//

அதேதான். இதனால தினத்துக்கும் என்ன சமையல் அப்படிங்கற மண்டை குடைச்சல் குறையும். புரிதல் வேண்டும்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,
ஐடியா நல்லா இருக்கு.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வல்லிம்மா,

நாங்க கொழும்புவில் இருந்தபோது நவராத்திரி 9 நாள் ஒவ்வொருவீட்டில் கூடி லலிதா பாராயணம் செய்வோம். அன்று அவர்கள் வீட்டில் சாப்பாடு. கடைசிநாள் அன்று கோவிலில் பாராயணம். அங்கே ஆளுக்கொரு ப்ரசாதம் செய்து எடுத்து போவோம்.

இந்தமாதிரி ஏதாவது செய்தா அட்லீஸ்ட் பண்டிகை நாள் டென்ஷன் கூட குறையும்.

நல்ல நட்புக்கள் இருந்தாதான் இது சாத்தியம்.

மங்களூர் சிவா said...

/
பெட்ரோல், டீசல் விலையேற்றம் படுத்துன்னு புரிஞ்சுகிட்ட
தங்க்ஸ், ரங்க்ஸ் எங்கயும் அதிகமா கூட்டிக்கிட்டு போகாட்டியும்
நிலமையை புரிஞ்சுகிட்டு விதியை நொந்துகிட்டு பேசாம இருப்பாக.
ஆனா ரங்க்ஸ்களுக்கு மட்டும் எல்லாமே விதிவிலக்கு. அவுக
எங்கனயும் போகணும்னா ட்ரூன்னு வண்டி ஓட்டிக்கிட்டு போவாக.
/

கண்டிக்கப்பட வேண்டிய விஷயம் ஹைதராபாதில் மட்டும்.

Pandian R said...

ஆமாமா. ரொம்ப கஷ்டம்
இப்படிக்கு
செய்து கொடுத்தா சட்டி திண்போர் சங்கம்