Tuesday, September 11, 2012

அசத்திபுட்டோம்ல ஆஷிஷை!!! :))

என் தோழியை ரொம்ப மிஸ் செஞ்சுகிட்டு இருந்தேன். நேற்று என்னோட
உறவு கொண்டாட என் தோழி வந்திட்டா. அழைச்சுகிட்டு வந்தது
என் பிள்ளைகள். :)) இதோ என் தோழி உங்கள் முன்னாலே!!


(மொபைலில் இருக்குன்னாலும் இந்த மாதிரி பேட்டரி ஆப்பரேட்டட்
ரேடியோ தான் பெஸ்ட். இனி நானும் என் தோழியும் இணைபிரியாமல்
இருக்கலாம். எந்த பவர் கட்டும் எங்களை பிரிக்க முடியாது பாருங்க. :))

பசங்களுக்கு ட்ரீட் கொடுக்க சர்ப்பரைஸா டின்னருக்கு அழைச்சுகிட்டு
போனேன். இந்த ரெஸ்டாரண்டுக்கு எங்க முதல் விசிட் இதுதான்.
போன இடம் எங்கன்னு அப்புறமா சொல்றேன். முதலில் போட்டோ
:))

வெல்கம் ட்ரிங் சாப்பிடறது ஆஷிஷ். சால்ஜீரா ரொம்ப சுவையா
அதிகம் காரமில்லாம இருந்தது.

நாம டேபிளில் உக்காந்த உடனேயே வெல்கம் ட்ரிங்க் கொடுத்த
நிமிஷத்துல பரபரன்னு சர்வ் செய்ய ஆரம்பிக்கறாங்க.
தட்டுல பரிமாறுவது என்னன்னு சொல்லிக்கிட்டே பரிமாறுவது சூப்பர்.
சாபுதானா வடா, பாக்கர் வாடி, பனீர் பசந்தா, தால்பாட்டி, சூர்மா,
நெய், கட்டேகி சப்ஜி, ஸ்வீட் தால், கார தால், கடி இப்படி ராஜஸ்தானி +
குஜராத்தி உணவுகளில் சங்கமம். மிசல்னு மராட்டி ஐட்டம் ஒண்ணு
இருக்கும். அது கூட காரமில்லாம அருமையா இருந்தது இங்கே.
72 வகை மெனுக்கள் மொத்தமா இருக்கு. அதில் தினத்துக்கு
சில வகைன்னு ரொட்டேடிங்கா சர்வ் செய்யறாங்க.

அன்லிமிட்டட் மசாலா சாஸ். யம்மி!!!

ரொட்டிலயும் நாலு வெரைட்டி, புல்கா, பாலக் ரோட்டி, பூரி அப்புறம்
இன்னொரு ராஜஸ்தான் அயிட்டம், பேருதான் ஞாபகத்துக்கு வரலை.

தாலி மீல்ஸ் என்பதால அன்லிமிட்டட். நான் போட்டோ எடுத்துக்கிட்டே
இருக்க சூடு ஆறிடபோகுது மேடம்! சாப்பிடுங்கன்னு அன்புத் தொல்லை. :)
உணவு ரொம்ப ருசியா இருந்துச்சு. தால்பாட்டி இதுக்கு முன்ன சாப்பிட்டிருக்கேன்.
ஆனா இம்புட்டு சுவையா இல்லை. உணவுகளை ருசித்த பிள்ளைகளுக்கு
ரொம்ப பிடிச்சிருந்தது. எங்கம்மா பிடிச்ச இந்த ஹோட்டலைன்னு ஆஷிஷுக்கு
ஆச்சரியம். எப்பவும் வெரைட்டியா ஹோட்டலை ஆஷிஷ் மட்டும்தான்
கண்டுபிடிக்க முடியுமா என்ன?? :)) அயித்தானுக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது.

வகைவகையா வெச்சிருக்கும் சப்ஜிகளை அதிகம் சாப்பிடவிடாம பெரிய
சைஸ் ரொட்டிகளை போடாம சின்னதா போட்ட ஐடியா சூப்பர்.

அப்புறம் இந்த ஹோட்டலில் கிச்சனை நீங்க போய் பார்க்கலாம்?
பசங்க நான் போய் பாத்தோம். செம கீளீனா இருந்துச்சு.

அதோட போட்டோ பாருங்க.


போட்டோக்கள் பார்த்தாச்சா!!! எங்க போனோம்னு சொல்றேன்

ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் இருக்கும் KHANDANI RAJDHANI
ரெஸ்டாரண்ட் தான் அது. ஒரு ப்ளேட் 300த்தி சொச்சம்.
இங்கே போனீங்கன்னா அதன் தளத்தை பார்க்கலாம்.

ஹைதையில் இருக்கு சாப்பிட போனீங்கன்னு வருத்தப்பட வேண்டாம்.
சென்னை, பெங்களூர்ல மட்டும் 5 இடத்துல இருக்கு , அலாக்ஹாபாத், டெல்லி,
மும்பை, நாசிக், ஷீர்ட், பரோடோ போன்ற இடங்களிலும் இருக்கு.
அட்ரஸ் எல்லாம் அந்த தளத்துல போய் பார்க்கலாம்.

உணவின் தரம் ரொம்ப அருமையா இருந்தது. முகம் சுளிக்காம
பரிமாறுவது சுகம்.


24 comments:

s suresh said...

போட்டோவில் பார்த்து ஆறுதல் பட்டுக்கிறேன்! அங்க வர வாய்ப்பு கிடைச்சா பார்க்கலாம்! நன்றி!

இன்று என் தளத்தில்!
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 8
http://thalirssb.blogspot.in/2012/09/8.html

கோவை2தில்லி said...

நானும் என் தோழியை நெடுநாட்களுக்கு பிறகு சந்தித்து இப்போது இணை பிரியாமல் இருக்கிறோம்....:)

ராஜஸ்தான், குஜராத் கலவையா அருமையா இருக்கும் போல....

நல்ல அறிமுகம்.

வல்லிசிம்ஹன் said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். தென்றல் இப்படி ஃபோட்டொலியே அசத்துதறதே.
என்னது சென்னைல இருக்கா. அப்பா இடிக்கவேண்டியதுதான். நன்றியோ நன்றி.நட்புன்னா ஹோட்டல் குறிப்பு கொடுக்கணும். அதற்கு சிறந்த உதாரணம் நீங்க,. ரேடிய்யோ எங்க கிடைச்சதுப்பா.அதையும் சொல்லுங்க.

புதுகைத் தென்றல் said...

வாங்க சுரேஷ்,

சென்னையில் கூட இருக்கு.

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க சுரேஷ்,

சென்னையில் கூட இருக்கு.

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க கோவை2தில்லி,

ஓ உங்களுக்கும் உங்க ஃப்ரெண்ட் கிடைச்சாச்சா!! சூப்பர்.

ஆமாம் உணவு நல்லா இருக்கு. தலைநகரில் கூட இருக்கு. முடிஞ்சப்போ ட்ரை செஞ்சு பாருங்க

புதுகைத் தென்றல் said...

வாங்க வல்லிம்மா,

இப்படி ஃபோட்டொலியே அசத்துதறதே.//

ஆமாம் வல்லிம்மா. அதான் என் பிறந்தநாள் ட்ரீட்டா அங்கே பசங்களை கூட்டிகிட்டு போனேன்.

இந்த ரேடியோ வாங்க ரொம்ப கஷ்டப்பட்டேன். பெரிய்ய கடைகளில் கிடைக்கவே இல்லை. என்னது ரேடியோவான்னு கேக்கறாங்க. எலக்ட்ரிகல் ஷாப்கள் நிறைய்ய இருக்கும் பகுதியில் கிடைத்தது. :)

மனோ சாமிநாதன் said...

ரொம்பவே உபயோகமான பதிவு! விரிவாய் மெனுவை சொல்லிப்போகிற அழகு நம்மை ஈர்க்க வைக்கிறது. அனைத்து விபரங்களும் அசத்தல்!!

மாதேவி said...

அருமையாக இருக்கின்றது.

இலங்கைக்கும் கொண்டு வாங்க:))

திண்டுக்கல் தனபாலன் said...

பசிக்க வைச்சிட்டீங்க...

கோவை2தில்லி said...

ரொட்டில நாலு வெரைட்டி....

மறந்து போன அந்த ராஜஸ்தான் ஐட்டம் காக்ராவா.....

புதுகைத் தென்றல் said...

வாங்க மனோ சாமிநாதன்,

ஒரு இடம் நமக்கு பிடிச்சிருந்தா அதை சொல்லும்போதே அழகாயிடும். அதேதான் இங்கே நடந்திருக்கு :)

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க மாதேவி,

கொழும்புவில் மாங்கோட்ரீ போயிருக்கீங்களா?? சூப்பரா இருக்கும் (விலையும் தான்) அங்கே நார்த் இண்டியன் ரொம்ப நல்லா ரிச் டேஸ்டா இருக்கும்.

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க தனபாலன்,

பசிச்சு சாப்பிட்டா ருசிக்கும்னு பெரியவங்க சொல்வாங்க. இன்னைய பொழுதுக்கு என்னால ஆன கைங்கர்யம் :))

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க கோவை2தில்லி,

காக்ரா இல்ல. நானிலேயே ஒரு ஷ்பெஷல் வெரைட்டி. அப்புறம் பதிவுல பனீர் ரோட்டின்னு கொடுத்திருக்கேன். அது தப்பு பாலக் ரோட்டி

வருகைக்கு மிக்க நன்றி

வெங்கட் நாகராஜ் said...

வாவ்... இங்க வீட்டு பக்கத்திலேயே இருக்கு! சீக்கிரம் போய்ட வேண்டியது தான்!

எல் கே said...

கொஞ்சம் காஸ்ட்லின்னு நினைக்கிறேன்

எல் கே said...

கண்டிப்பா சென்னையில் இதைவிட அதிகமா இருக்கும் இருக்கற இடம் ஸ்கை வாக் / எக்ஸ்ப்ரஸ் மால்

புதுகைத் தென்றல் said...

வாங்க சகோ,

நல்லா எஞ்சாய் செய்யுங்க

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க எல்கே,

நாலு பேருக்கும் வரியோட சேர்த்து 1500 ஆச்சு. பிறந்தநாளுக்காக :))

வருகைக்கு மிக்க நன்றி

காற்றில் எந்தன் கீதம் said...

ஆஷிஷ் ரொம்ப ஸ்மார்ட்...
கட்டாயமா ஒரு தரம் சாப்பிடுரதுக்கே இந்தியா வரணும்.. படத்துலேயே சூப்பரா இருக்கே...

என்னிட்டையும் ஒரு தோழி உண்டு இங்க கொஞ்சம் லேசாவே கிடைக்கும்.

fundoo said...

சாப்பிட்டு விட்ட ஏப்பம் சென்னை வரை கேட்கிறது

புதுகைத் தென்றல் said...

வாங்க சுதர்ஷிணி,

கண்டிப்பா இந்தியா வாங்க. அங்கே இருந்தப்ப என் தோழியுடன் நல்லா எஞ்சாய் செஞ்சேன். சக்தி எஃஎம், ரூபவாஹினின்னு செம ஜாலியா இருந்தேன். :))

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க ஃபண்டூ,

:))

வருகைக்கு மிக்க நன்றி