Saturday, October 13, 2012
சந்தேரி சில்க்
சந்தேரி மத்தியபிரதேசமாநிலத்தில் இருக்கும் ஓர் ஊர் இது. இங்கே தயாரிக்கப்படும்
சந்தேரி சில்க் மிக பிரசித்தம்.பட்டும், பருத்தியும் கலந்த தயாரிப்பு இது. அதில்
ஜரி கொண்டு டிசைன் செய்யும் பொழுது இன்னும் அழகாக இருக்கும்.
லைட்வெயிட் எனும் ரகம் இந்தப்புடவைகள். மெலிதாக இருக்கும்.இந்த வகை துணியை
ஸ்ரீகிருஷ்ணனின் உறவினர் சிசுபாலர் கண்டு பிடித்ததாகவும் கதை இருக்கிறது.
தூயபட்டு, பருத்தி, பட்டும் பருத்தியும் இணைந்தது என 3 வகையாக தயாரிக்கப்படுகிறது
சந்தேரி புடவைகள்.
புடவைகள் மட்டுமல்லாது சுடிதார் மெட்டீரியல்களும் கிடைக்கிறது என்பது கூடுதல் அட்ராக்ஷன். :)
சந்தேரி மஸ்லின் துணிக்கும் பெயர் பெற்றது. ஆரம்ப காலத்தில் மஸ்லின் துணியில்
ஜரிவைத்து நெய்து கொண்டிருந்தார்கள். பிறகுதான் பட்டு நூல் கொண்டு தயாரித்தார்கள்.
1970 லிருந்து புதுமைப்படைப்பாக சில்க் காட்டனில் தயாரிக்கப்பட்டு மக்களின் மனதை
மேலும் கொள்ளை கொள்ள ஆரம்பித்தது சந்தேரி சில்க்.
இந்த சில்க்காட்டன் துணியை பெட்ஷீட், சோபா குஷன் கவர் ஆகியவற்றிலும் பயன்படுத்துகிறார்கள். அரச பரம்பரையினர் மிகவும் விரும்பிய ஒரு வகை இது என்பது
குறிப்பிடத்தக்க விஷயம். அதனால்தான் இதற்கு GI (GEOGRAPHICA INDUCTION) அந்தஸ்து கிடைத்துள்ளது.
மத்திய பிரதேச கைத்தறி நிறுவனமான மிருகநயனி பல இடங்களில் உள்ளது. சென்னையிலும் மிருகநயனி ஷோரூம் இருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
ஆஜர்!
ம்ம்ம்ம்ம். அழகான மெட்டிரியல்.
நல்ல சுடிதார்கள்.. நானும் போய்ப் பார்க்கிறேன். நல்லதொரு பதிவு தென்றல்.
வாங்க ஃபண்டூ,
ப்ரசண்ட் போட்டுக்கிட்டேன். :))
வருகைக்கு நன்றி
வாங்க வல்லிம்மா,
மெலிசா ரொம்ப அழகா இருக்கு. உடுத்தவும் சுகமா இருக்கும். சின்னச்சின்ன ஃபங்கஷ்ன்களுக்கு சூப்பரா இருக்கும்.
வருகைக்கு நன்றி
அழகாக இருக்கும் போல் தோன்றுகிறது....
பெண்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் + கெடுக்கும் பதிவு..:)
வாங்க கோவை2தில்லி,
மெத்துமெத்துன்னு சுகமா இருக்கும். :))
சுடிக்கு ஒண்ணு, புடவைக்கு ஒண்ணுன்னு ஜமாய்ங்க
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க சிட்டுக்குருவி,
எப்படியும் பண்டிகைக்கு பர்ச்சேஸ் செஞ்சுத்தானே ஆகணும். :))
வருகைக்கு மிக்க நன்றி
அழகான மெட்டிரியல்ஸ்... நன்றி...
ஆகா! அழகு.
சும்மா படங்காட்டிகிடே இருக்காம, ரகத்துக்கு ஒண்ணுன்னு ஒரு மூணு சேலை (அது போதும்) வாங்கி அனுப்புங்க உடனே!! :-))))
(நேத்துதான், எப்பவும் சுடிதார்தானே வாங்குறோம். ஒரு சேஞ்சுக்கு(!!!) வரும் பெருநாளைக்குச் சேலை வாங்கலாமான்னு யோசிச்சுகிட்டிருந்தேன். நீங்கவேற சேலை பதிவாப் போட்டு தாக்குறீங்க! என்ன, ப்ளவுஸ் தைக்க இங்க ஆள் கிடையாது, அதான் ப்ரச்னை)
அட்டகாசம்
vanga husainamma,
anupina blouse thachukka kashtamache!!!
:))
varugaiku nandri
varugaiku nandri selvi
Post a Comment