Thursday, October 04, 2012
ஆரத்தி தட்டுக்கள்!!!!
இனி பண்டிகை காலம். நவராத்திரி, தீபாவளி பண்டிகைகள்.
ஆரத்தி தட்டுக்கள் தாம்பூலம் கொடுக்க பெரிதும் உதவியாய் இருக்கும்.
இந்த வகை தட்டுக்கள் கடைகளில் வாங்கினால் பர்ஸ் பழுத்துவிடும்.
நாமே வீட்டில் செய்யலாம்.
நான் செய்த படங்களை பார்க்கலாம்.
ஸ்டீல் ட்ரே வாங்கி அதில் ஃபேபரிக் பெயிண்ட் வாங்கி
அடித்தேன்.( ஹார்ட்வேர் கடைகளில் கிடைக்கும் பெயிண்டுகளில்
சின்ன டப்பா வாங்கி அதையும் அடிக்கலாம்.)
நன்றாக காய்ந்ததும் வீட்டில் இருந்த கோல ஸ்டிக்கரை எடுத்து
நடுவில் ஒட்ட வைத்தேன்.
கோலத்தில் குந்தன் ஸ்டோன்களை வைத்து டிசைன் செய்தேன்.
அழகான ட்ரே ரெடி.
இரண்டு ட்ரேக்கள் இதுமாதிரி ரெடி செய்திருக்கிறேன்.
கடைகளில் கிடைக்கும் மெலமைன் தட்டுக்களில் ஆரத்தி தட்டுக்கள் செய்யலாம்.
ப்ளைனாக தட்டுக்கள் கிடைக்கவில்லை. அதனால் ப்ரிண்டட் தட்டுக்கள் வாங்கி அதில் என்
கற்பனையைக் கலந்து டிசைன் செய்திருக்கிறேன் பாருங்கள்:
ஒவ்வொரு தட்டிலும் குந்தன் கற்களும், 3டி கிளிட்டர்களும் உபயோகித்து இருக்கிறேன்.
வீட்டில் இருந்த லேஸ்களை உபயோகித்து செய்திருக்கிறேன்.
நிச்சயதார்த்தம், திருமணம், கிரஹப்ரவேசம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு நம் கையால் செய்து
பரிசளிக்கலாம். காலத்திற்கும் அவர்கள் வீட்டில் இந்த தாம்பூலத்தட்டுக்கள் நம் பெயர் சொல்லிக்கொண்டு நம்மை நினைவில் வைக்கச் செய்யும்.
Subscribe to:
Post Comments (Atom)
30 comments:
வாவ்.. ஜூப்பரோ ஜூப்பரு. கலக்கியிருக்கீங்க தென்றல் :-)
அழகிய கைவண்ணம். பாராட்டுகள்.
கண்ணைக் கவர்கிறது
வாங்க அமைதிச்சாரல்,
மிக்க நன்றிப்பா :)
வாங்க கோவை2தில்லி,
பாராட்டுக்கு மிக்க நன்றி
வாங்க ஃபண்டூ,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
அத்தனையும் அழகு. அருமையான வேலைப்பாடு.
நிச்சயமாக கொள்ளை அழகு...
சிக்கனமாகவும் இருக்கும் போல.
வாழ்த்துக்கள்
எல்லாமே அழகு. நீங்க செஞ்சதாச்சே கேக்கணுமா.
ஒரு டவுட்: ஆரத்தி தட்டுன்னா, ஆரத்தி எடுக்கப் பயன்படும் தட்டுதானே? அதுல மஞ்சத்தண்ணி ஊத்தித்தானே ஆரத்தி எடுக்கிறது வழக்கம்? அப்படின்னா, அந்தத் தண்ணில இந்த வேலைப்பாடுகள், கல் எல்லாம் கழண்டுடுடாதா?
அப்புறம், தாம்பூலத் தட்டுகள் வெத்தில, பாக்கு, ப்ளவுஸ் பீஸ் போன்றவை வச்சுக் கொடுக்கத்தானே? தட்டையும் சேத்தே கொடுத்துடுவீங்களா? (நிறைய செஞ்சு வச்சிருக்கீங்களே, அதான் கேட்டேன்)
இந்த தட்டுகளில் எதுவும் வைக்கவே மனசே வராதே.
ஆரத்தி தட்டுக்கள் எல்லாம் அழகு.
நாமே செய்யும் போது அது தனி ஆனந்தம் தான்.
தென்றலுக்கு வாழ்த்துக்கள்.
ஃபண்டாஸ்டிகோ ஃபண்டாஸ்டிக். தென்றல் கைவலியை வைத்துக் கொண்டே இத்தனை வேலையா. .ரொம்ப நல்லா இருக்குப்பா. கண்ணில ஒத்திக்கிற வேலைப்பாடு. நல்ல ஐடியா. இதையே கொலுவுக்கு வருகிறவர்களுக்கு பரிசாகக் கொடுக்கலாமே.
ஆர்டரின் பேரில் செய்து தரப்படுமா ??
ஆஹா...சூப்பரோ சூப்பர்ப்...ஒவ்வொன்றும் மிகவும் அழகாக இருக்கின்றது..கலக்குறிங்க...
நவராத்திரிக்கு உங்க வீட்டிற்கு வர வேண்டியது தான்..தட்டு கண்டிப்பாக கொடுக்க வேண்டும்...சரியா...
வாங்க ராமலக்ஷ்மி,
ரொம்ப நன்றிப்பா :)
வாங்க சிட்டுக்குருவி,
ஒரு தடவை குந்தன் கற்கள் வாங்கி வெச்சுக்கிட்டா போதும். 3டி கிளிட்டர் பாட்டில் 20ரூவா. தட்டு எவர்சில்வர்னா 150, மெலமைன்னா 50 :)
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க ஹுசைனம்மா,
ஆரத்தின்னா நம்ம ஊர் ஆலம் இல்ல. இது வடநாட்டு ஹாரத்தி. பூ, மஞ்சள் குங்குமம் கிண்ணம், விளக்கு எல்லாம் வெச்சுக்கற தட்டுக்கு ஆரத்தி தட்டுன்னு பேர்.
இவைகளை கழுவலாம் பிரச்சனை இல்லை. ஃபெவிகால் போட்டுல்ல ஒட்டிருக்கோம் :)
ஆமாம் ஹுசைனம்மா,
தாம்பூலம் வெச்சு கொடுக்கலாம். ஆனா இந்த தட்டு இந்த மாசம் வர இருக்கும் ஃபங்கஷனுக்காக ரெடி செஞ்சிருக்கேன்.
நவராத்திரி சமயங்களில் இந்தமாதிரியும் கொடுக்கலாம். :))
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க அமுதா,
இதையே ஷோகேஷில் வெச்சிக்கலாம். :)
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க கோமதிம்மா,
ஆமாம் அந்த ஆனந்தம் எனக்கு ரொம்ப பிடிக்கும். :)
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிம்மா
வாங்க வல்லிம்மா,
கைவலி, தலைவலியெல்லாம் மறக்கத்தானே இந்த மாதிரி வேலைகள். இந்த மாதிரி வேலைகள் செய்யும்போது மனதுக்கும் இதமா இருக்கு. ஆமாம் இது கிஃப்ட் செய்ய நல்லா இருக்கும்.
வாங்க எல்கே.
ஆர்டரின் பேரில் இதுவரைக்கும் செய்யலை. காசு கொடுத்து வாங்கும்போது இன்னும் பெட்டரா இருக்கணும், இன்னும் பெட்டரா இருக்கணும்னு.... கஸ்டமர்ஸ் ஆசைப்படுறாங்க. (சாக்லெட், செல்ஃபோன் பேக்ல ஏற்பட்ட அனுபவம்) அப்ப வியாபார நோக்கத்துலதான் தயார் செய்யத்தோணுது. மனசுக்கு பிடிச்சா மாதிரி செஞ்சு வைப்பது யாராவது வாங்கிக்க ரெடின்னா செய்ய நானும் ரெடி. :))
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க கீதா,
கண்டிப்பா வாங்க. நிச்சயம் தர்றேன். :))
வருகைக்கு மிக்க நன்றி
கலக்கல் தென்றல்// நவராத்ரிக்கு நல்ல இடுகை இது... நல்ல ஐடியா கொடுத்ருக்கீங்க கைவண்ணம் அபாரம் பாராட்டுக்கள்!
அட்டகாசமாக இருக்கு... அத்தனையும் அழகு...
வாவ்! மிக அழகு, உங்கள் கை வண்ணம்!
வாங்க ஷைலஜா,
பாராட்டுக்கு ரொம்ப நன்றி
வாங்க திண்டுக்கல் தனபாலன்,
ரொம்ப நன்றி
வாங்க கவிநயா,
பாராட்டுக்கு மிக்க நன்றி
பல இதழ்களில் இது குறித்து வெளி வந்திருந்தாலும், உங்க கைவண்ணம் சிறப்பு.[முதல் வருகை]வாழ்க.
Post a Comment