Tuesday, October 09, 2012

கண்ணீர் அஞ்சலி

சற்று முன் என் உயிர்த்தோழி போன் செய்தாள். “அம்மா போயிட்டாங்க கலா!!” என்றழுத போது ஒன்றுமே புரியவில்லை. போன வாரம்தான் புதுக்கோட்டையை தாண்டிப்போயிக்கொண்டிருக்கிறேன் உன் நினைவுகளோடு” என எஸ் எம் எஸ் அடித்தாள். விடுமுறைக்கு காரைக்குடி சென்றிருந்தாள். இரவு 11 மணிவரை தன் வேலையைத் தானே செய்துகொண்டிருந்திருக்கிறார் அம்மா. திடும்மென நெஞ்சுவலிக்கிறது என்று சொல்ல மருத்துவமனை அழைத்து சென்றிருக்கிறார்கள். முதலுதவி செய்த குடும்ப டாக்டர் அப்பல்லோ அழைத்து செல்ல சொல்லியிருக்கிறார். வழியிலேயே பல்ஸ் குறைந்துவிட்டதாகவும், மருத்துவம் பலனளிக்காமல் உயிர் நீத்துவிட்டார். :( பாவம் என் தோழி. வாழ்வில் எத்தனையோ சோகங்களை தாண்டி இப்போதுதான் பிஎச்டி, கார் வாங்கியது என சந்தோஷத்தின் கீற்று சற்றே பட்டுக்கொண்டிருந்த வேலையில், யாதுமாகி தாங்கிக்கொண்டிருந்த அம்மாவை இழந்து வாடிக்கொண்டிருக்கிறாள்.
தோழியின் தம்பிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தாயில்லாத அந்த வீடு சோகத்தின் இடமாகி போகிவிட்டது. ஆண்டவன் இந்த வலி தாங்கும் வலிமையை சாந்திக்கும், அவளது அப்பாவுக்கும், தம்பி மணிக்கும் கொடுக்க வேண்டும். காலம் அவர்களின் காயங்களுக்கு மருந்து போட இறைவன் அருள் புரிய வேண்டும்.
ஆராரிரோ பாடியதாரோ தூங்கிப்போனதாரோ!!!!!

11 comments:

ராமலக்ஷ்மி said...

தோழியின் அம்மாவின் ஆன்ம சாந்திக்கும் பிரிவில் வருந்தும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கிடைக்கவும் பிரார்த்தனைகள்!

திண்டுக்கல் தனபாலன் said...

அவர் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்...

அமுதா கிருஷ்ணா said...

உங்கள் தோழியின் குடும்பத்திற்கு என் அனுதாபங்கள். இந்த சனி பெயர்ச்சி நிறைய பேரை பதம் பார்க்குது. எனக்கு தெரிந்து 60+ உடம்பு முடியாமல் படுத்து விட்டார்கள் இல்லையென்றால் இறந்தும் விட்டார்கள்.

ADHI VENKAT said...

தோழியின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

ஹுஸைனம்மா said...

அம்மாவின் ஆதரவு போல எதுவும் வராதுதான். இறைவன் அவருக்கு ஆறுதல் தர பிரார்த்திக்கிறேன்.

கோமதி அரசு said...

தோழியின் அம்மாவின் பிரிவு அந்த குடும்பத்தினரை எப்படி துக்கத்தில் ஆழ்த்தி இருக்கும் என புரிந்துக் கொள்ள முடிகிறது.
அவர்கள் பிரிவை தாங்கி கொள்ளும் மனப்பக்குவத்தை இறைவன் அருள வேண்டும்.
காலம் நல்ல சிறந்த மருந்து.

இராஜராஜேஸ்வரி said...

ஆண்டவன் இந்த வலி தாங்கும் வலிமையை சாந்திக்கும், அவளது அப்பாவுக்கும், தம்பி மணிக்கும் கொடுக்க வேண்டும். காலம் அவர்களின் காயங்களுக்கு மருந்து போட இறைவன் அருள் புரிய வேண்டும்.

வெங்கட் நாகராஜ் said...

அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்....

Pandian R said...

வருத்தமான செய்தி. தாயாரின் பிரிவு என்பது தாங்க முடியாதது. தங்களின் உற்ற நட்பின் துயரம் சீக்கிரமே வடியட்டும்.

ஆத்மா said...

தொடர்ச்சியான வலிகளிலும் கஷ்டத்தின் பின்னும் நீண்ட சந்தோஷம் இருக்கும்......

என்னுடைய அனுதாபங்களும்

வல்லிசிம்ஹன் said...

தோழியின் குடும்பத்தாருக்கு எப்படித்தான் ஆறுதல் சொல்வது. இறைவன் துணையிருந்து அவர்கள் மீண்டும் ஆறுதல் பெறவேண்டும்.