Friday, October 12, 2012

பனாரஸ் புடவைகள்

பனாரஸ் அதாவது வாரனாசியில் தயாரிக்கப்படுகிறது இந்தப் புடவை. இந்தியாவிலேயே மிக உயர்ந்த அழகான புடவையாக கருதப்படும் இந்தப் புடவை மணப்பெண்களின் பர்ச்சேஸ் லிஸ்டில் கண்டிப்பாய் இருக்கும். மொகாலய மன்னர்களின் காலத்தில் மொகலாய மோத்திஃபுகளுடன் இந்திய கைவேலைப்பாடு கொண்டு நெய்தார்கள். ஒரிஜனல் தங்க, வெள்ளி ஜரி கொண்டு நெய்வதாலேயே பனாரஸ் புடவைக்கு அவ்வளவு அழகு கிடைக்கிறது. பனாரஸ் புடவைகள் 4 வகை இருக்கிறது: 1.சுத்தமான பட்டு (கதன்) 2.ஆர்கன்சா(கோரா) வில் பட்டும் ஜரியும் சேர்த்த வகை 3. ஜியார்ஜட் 4. ஷத்தீர்.
ஒரிஜனல் பனாரஸ் புடவைக்கு போட்டியாக சில நெசவாளர்கள் பட்டு இல்லாத சிந்தடிக் நூல் கொண்டு குறைவான விலைக்கு நெய்து விற்றுவிடுகிறார்கள். இதனால் ஒரிஜனல் பனாரஸ் புடவை நெசவாளர்களுக்கு நஷ்டம். சிந்தடிக் நூல் கொண்டு தயாரிக்கப்பட்ட புடவை 1500 ரூபாய்க்கு கிடைக்கும். ஒரிஜனல் முறையில் தயாரிக்கும் பொழுது சில சமயம் ஒரு புடவைக்கு 2மாதங்கள் கூட ஆகுமாம்.
ஆனால் மிக அழகாக இருக்கும். பனாரஸ் புடவைகள் மட்டுமில்லாமல் சுடிதார் மெட்டீரியல்களும் கிடைக்கிறது.
நம் பட்டுப்பாவடைகள் போல பனாரஸ் பாவாடைகளும் அழகு.
காக்ரா சோளி, பாவாடை தாவணியும் அழகாக இருக்கும்.
இந்த தீபாவளிக்கு உங்கள் வீட்டு குட்டி இளவரசிக்கு பனாரஸ் பாவாடை சட்டை தைய்த்து போட்டுப்பாருங்கள். ஜொலிப்பாள் குழந்தை. இன்னொரு விஷயம் சொல்லவா ரிச்சான ஜரி, பார்டர் உள்ள புடவைகளுக்கு, பனாரஸ் காட்டன் துணியில் மேட்ச்சிங் ப்ளவுஸ் தைய்த்து போட்டால் அவ்வளவு அழகாக இருக்கும். பட்டுப்பாவடைகளுக்கு சில்க்கில் மேல் சட்டை தைய்ப்பதற்கு பதில் பனாரஸ் காட்டனில் போட்டால் ரொம்ப எடுப்பாக இருக்கும். புடவையில் குந்தன் கற்கள் வைத்து தைய்த்தது பழைய ஃபேஷன். லேட்டஸ்ட் ட்ரண்ட் நல்ல ப்ளைன் அல்லது ப்ரிண்டட் புடவையில் பனாரஸ் பார்டர் வைத்து தைய்த்து அதே நிறத்தில் டிசைனில் ப்ளவுஸ் போடுவதுதான் புதுசு.
இன்னொரு வகை புடவையுடன் நாளை சந்திக்கிறேன்.

13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லா இருக்கு...

எங்கள் ஊரிலும் நிறைய தயாரிப்புக்கள் இது போல் உண்டு...

Pandian R said...

நல்ல ஆரம்பம். திருவப்பூர் பட்நூல் பத்தி சரக்கு வரும்ங்களா?

M said...

aren't you against silk sarees

pudugaithendral said...

வாங்க தனபாலன்,

அதைப்பத்தியும் எழுதுங்களேன்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க ஃபண்டூ,

எடுத்துக்கொடுத்தற்கு மிக்க நன்றி :)

pudugaithendral said...

வாங்க எம்,

பட்டுக்கு எதிரான போராட்டமோ புரட்சியோ கிடையாது. பட்டுப்புழுக்களை கொன்று தயாரிப்பதால் பட்டுப்புடவைகளை தவிர்க்கிறேன்.

ADHI VENKAT said...

பெங்காலிகளின் திருமணப் புடவை கண்டிப்பாக பனாரஸில் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

சந்திர வம்சம் said...

எங்க ஊரிலிருந்துதான் காஞ்சிக்கு புடவை போகிறது.
மேலும் எழுதவும்.நன்றி.

pudugaithendral said...

வாங்க கோவை2தில்லி,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க சந்திரவம்சம்,

தகவலுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

சுசி said...

சென்னையில் பனராஸ் துணி வகைகள் எங்கு கிடைக்கும்? சில்க் காட்டன் என்பது இலவம் பஞ்சு என்று சிந்துவின் பாட புஸ்தகத்தில் போட்டிருக்கிறது. நான் பட்டை விட்டுவிட்டேன். ஆனால், நீங்கள் சில்க் காட்டன் என்பது பட்டும் பருத்தியும் கலந்தது என்கிறீர்களே? சில்க் காட்டன் உடுத்தலாமா? கூடாதா? விளக்குங்கள்?

pudugaithendral said...

சென்னையில் எங்க கிடைக்கும்னு தெரியலை (இன்னும் மார்கெட் ஸ்டெடி பண்ணலை :) )
சில்க் காட்டனில் 50%50 அல்லது ஏதோ ஒரு ரேஷியோவில் பட்டும், காட்டனும் கலந்துதான் தயாரிக்கப்படுது. இது புடவை கடை காரங்களே சொன்னது. அதனால தான் அந்த ஷைன் கிடைக்குது. பட்டு மாதிரி ஹெவியா இல்லாம காட்டன் கலந்திருப்பதால கொஞ்சம் மெத்துன்னு இருக்கும் இதான் சில்க் காட்டனோட ஷ்பெஷாலிட்டி

pudugaithendral said...

நான் சில்க் காட்டனும் கட்டுவதில்லை. பட்டு வேணாம்னு சொல்ற சிலர் சில்க் காட்டன் கட்டிக்கறாங்க. அது எப்படின்னு எனக்கும் புரியலை.