Friday, October 12, 2012

BLOUSE ஐடியாக்கள்!!!!

பண்டிகைக் காலம் நெருங்கிகிட்டு இருக்கு. ஜவுளி வாங்கி தைக்க கொடுத்துன்னு பிசியா இருக்கும். டெய்லர் கிட்ட கொடுத்திட்டு போராடுவதற்கு பதில் ரெடிமேட்டே மேல்னு பலர் ரெடிமேட் உடைகள் எடுத்துப்பாங்க. தீபாவளி, தசரா போன்ற பாரம்பரிய பண்டிகைகளுக்கு புடவை உடுத்துவதுன்னு சிலர் கொள்கை வெச்சிருப்பாங்க. ஆசை ஆசையாய் புடவை எடுத்து ப்ளவுஸில் டெய்லர்கள் சொதப்பிடுவாங்க. அவங்களுக்கு அவசரம்.


எங்கப்பா தசராவுக்கு ட்ரெஸ் எடுக்கும்போதே தீவளிக்கு துணி எடுத்து கொடுத்திடுவாங்க. அதாவது தசராவுக்கு ஒரு மாதம் முன்பே. அப்பவே துணியை தைத்து ரெடியா வெச்சிடுவோம். இப்பவும் அதே பழக்கம் தொடருது. :))

 புடவை என்னதான் க்ராண்டா இருந்தாலும் அதை எடுத்துக்காட்டுவது ப்ளவுஸ் தான். (ஜாக்பாட் நிகழ்ச்சியில் குஷ்பு போட்ட சில டிசைன் கொடுமையா இருந்தாலும் பல டிசைன் அந்த புடவையை எடுத்துக் காட்டும்)

ஏதோ டூபைடூவில் ப்ளவுஸ் வாங்கினோமா தெச்சு போட்டோமான்னு இருப்பதை விட கொஞ்சம் மெனக்கெட்டால் போதும் புடவையும் பளிச்சுன்னு தெரியும். இப்பல்லாம் வித்ப்ளவுஸ் புடவைகள்தான். சில புடவைகளுக்கு அவங்க கொடுக்கும் அளவுக்கு அவ்வளவு மேட்சிங்கா வேற துணி கிடைக்காது என்பதால அதையே தைத்து போட்டுக்குவோம். ஆனா வித்தியாசம் வேணும்னு நினைக்கறவங்களுக்கு இந்த டிப்ஸ்:

 1. புடவைக்கு மேட்சிங்கா சில்க் காட்டனில் துணி வாங்கிக் கொண்டு உடம்புக்கு அந்த துணியையும் கைகளுக்கு புடவையில் வந்திருக்கும் ப்ளவுஸ் துணியையும் கொடுத்து தைக்கலாம்.

 2. சில்க் காட்டனில் ப்ளவுஸ் தைத்து கைகளுக்கும் கழுத்து பகுதிக்கும் ப்ளவுஸ் துணையை பைப்பிங் வைக்கச் சொல்லலாம்.

 3. பின் கழுத்து டிசைனில் மட்டும் அந்த ப்ளவுஸ் துணியைக்கொண்டு தைக்கச் சொல்லலாம். கீழே இருக்கும் இந்த பேட்டனில் தைக்கச் சொல்லலாம்.
ஜரி போட்ட புடவைகளுக்கு கைகளில் மட்டும் ஜரி வாங்கி வைத்து தைய்ப்போம். அதோடு கொஞ்சம் கூட ஜரி வாங்கி பின் கழுத்து பேட்டனில் வைத்து தைத்தால் டிசைனர் ப்ளவுஸ் ரெடி. கொஞ்சம் மெனக்கெட்டு புடவைக்கு மேட்ச்சான லேஸ், மயில், மாங்காய் மோத்திஃப்கள் வாங்கிக்கொண்டால் இரண்டு பக்கம் கைககளிலும் வைத்து தைய்க்கலாம். பார்க்க ரொம்ப அழகா இருக்கும்.
இதுமாதிரி தைய்ப்பதை ஜுவல்லரி டைப் என்பார்கள். கீழே டாலர் போல் அமைப்பது ரொம்ப அழகா இருக்கும். எம்ப்ராய்டரியும் செய்யலாம். ஜரி. மோத்திஃப்கள் கொண்டும் வடிவமைக்கலாம். டெய்லரை வாங்கச் சொல்வதை விட நமக்கு பிடித்த டிசைனில் நாமே வாங்கி கொடுத்து தைத்துக்கொள்வது நலம். (அவர்களுக்கும் அலைச்சல் கம்மி. தவிர அவர்கள் சொல்வதுதான் விலை)
சில டிசைன்கள்:


 சாதாரண ஜியார்ஜட் புடவைகளுக்கு கூட அம்சமாக சிம்பிள் டிசைன் ப்ளவுஸ்களில் செய்தால் பார்க்க ரொம்ப அழகாக இருக்கும். நாம் டெய்லரிடம் சொல்லி ரெடி செய்து கொள்ளலாம்.


ப்ளவுஸில் டீப்நெக் வைத்தால் மட்டுமே டிசைன் செய்ய முடியும் என்பதில்லை. (சில பேட்டன்களை தவிர்த்து) அதனால் தைரியமாக டீப்நெக் போடாதவர்களும் தங்களின் ப்ளவுசில் டிசைன் செய்யச் சொல்லலாம்.
 (படங்கள் உதவி கூகுளாண்டவர்)

மேலும் சில டிசைன்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும்.

புடவை வகைகள் பதிவுகளுக்கும்  லிங்க் கொடுக்கறேன் பண்டிகை பர்ச்சேஸுக்கு உதவியாய் இருக்கும் :)) இன்னும் சில புடவைவகைகள் பற்றிய பதிவுகளும் இனி தொடர்ந்து எதிர்பாருங்கள்.

கலம்காரி
பாந்தினி
கத்வால்
வெங்கடகிரி
நாராயண்பேட்
தர்வார்
 மங்களகிரி
பட்டு
அஹிம்சா பட்டு
 15 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

டிசைன்கள் நல்லா இருக்குங்க...

selvi said...

நன்றாக இருந்தது
நன்றி

வல்லிசிம்ஹன் said...

சோளி டிசைன்கள் பிரமாதம். வயது எல்லை என்னவோ:)
தென்றல் நல்ல பகிர்வு.

selvi said...

really super

புதுகைத் தென்றல் said...

வாங்க செல்வி,

நிறைய்ய தடவை கமெண்ட் கொடுத்திருக்கீங்க. ரொம்ப நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க வல்லிம்மா,

வயதுக்கு எல்லை எதுக்கு வல்லிம்மா. நமக்கு பிடிச்சா போட்டுக்க வேண்டியதுதான். :))

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு மிக்க நன்றி வல்லிம்மா

fundoo said...

ஏதேது.. போற போக்கைப் பார்த்தால் தீவாளி வரை மகளிர் சமாசாரம் மட்டும் தான் போல

M said...

இந்த டிசைன் அனைத்தும் ரொம்ப பழைய டிசைன். ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு முந்தியவை

புதுகைத் தென்றல் said...

வாங்க ஃபண்டூ,

ஆமாம் :))

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க எம்,

இருக்கலாம். ஆனால் என்னைப்போல இதைப்பற்றி தெரியாதவர்களுக்காகத்தான் இந்தப் பதிவு.

நன்றி

கோவை2தில்லி said...

அழகான டிசைன்கள். ட்ரை பண்றேன்.

புதுகைத் தென்றல் said...

வாங்க கோவை2தில்லி,

:) வருகைக்கு மிக்க நன்றி

ஹுஸைனம்மா said...

//என்னைப்போல இதைப்பற்றி தெரியாதவர்களுக்காகத்தான்//

ஹி..ஹி. மீ டூ!!

டிஸைனலாம் பாக்க அழகாருக்கு. தச்சுகிட்டா வீட்டில் மட்டும் போட்டு அழகுபாத்துக்கலாம்.

புதுகைத் தென்றல் said...

vanga husainamma

:)