Wednesday, November 28, 2012

அக்கரைச்சீமை அழகினிலே மனம் ஆடக் காரணம் என்ன???!!!!!!

எல்லார் மனசிலயும் நீங்காத இடம் பெற்ற பாட்டை ஒரு வாட்டி திரும்ப கேளுங்க. கானகந்தர்வன் குரல்ல பாட்டு சூப்பர்ல. வரிகளும் தான். நண்பர் மோகன் குமார் அவங்க வலைப்பூவில் ஆதிமனிதன் எனும் பெயரில் அவரது நட்பு எழுதும் ஒரு தொடர் ஆரம்பமாகியிருக்கு. தலைப்பு மீண்டும் இந்திய வாழ்க்கை கசப்பும்-இனிப்பும்!!!! அந்தப்பதிவை படிச்சதும் “சேம் பளட்டுன்னு” மனசு கண்டிப்பா ஃபீலிங்க்ஸ் காட்டும்


. என்னுடைய பின்னூட்டம்: // ம்ம்ம் வந்து 4 வருஷமாச்சு. நம்ம வேர் இருக்கற இடத்துக்கு வந்திட்டோம்னு சொல்வது எல்லாம் சும்மனாச்சுக்கும்னுதான் தோணுது. மனதின் ஒரு மூலை தினமும் ஏண்டா இங்க வந்தோம்னு துடிக்குது. மன உளைச்சல் அதிகமாத்தான் இருக்கு இங்க. நீங்க ஸ்கூல்லேர்ந்து ஆரம்பிச்சிருக்கீங்க...... நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய இருக்கு. :)

// இது அவருடைய பதில் பின்னூட்டம். //நம்ம வேர் இருக்கற இடத்துக்கு வந்திட்டோம்னு சொல்வது எல்லாம் சும்மனாச்சுக்கும்னுதான் தோணுது. // தைரியமா சொல்றீங்க. சொன்னா யாரு கேட்குறா? நாலு வருஷம் ஆகியும் இன்னும் இருக்கா? ஆறு மாசத்தில் எல்லாம் சரியா போய்டும்னு நண்பர்கள் நம்பிக்கை ஊட்டினார்கள். அதெல்லாம் சும்மாவா?

 நீங்களாவது அமெரிக்கா போயிட்டு வந்து சொல்றீங்க, நான் பக்கத்துல இருக்கற சிலோன்ல இருந்துட்டு வந்திட்டு புலம்பிக்கினு இருக்கேன்னு மருக்கா பின்னூட்டம் கொடுத்தேன்.

 இந்தியாவை தாண்டி வெளிநாட்டுக்கு போயிட்டு வந்தவங்க எல்லோருமே புலம்பறாங்களே! இவங்க தான் வெளிநாட்டுக்கு போயிட்டு வந்துட்டாங்களாமாம்னு கிண்டல்லாம் கூட செய்வாங்க.

 இந்தியப்பெருங்கடலில் கண்ணீர்த்துளி போல இருக்கும் ஒரு தேசம்தான் இலங்கை. சென்னையிலிருந்து ஒரு மணிநேரத்துல போய் சேர்ந்திடலாம். விமானநிலையத்துல ஆரம்பிக்கற சுத்தம் நீங்க அந்த குட்டி நாட்டுக்குள்ள எல்லா இடத்துலயும் பாக்கலாம். (நம்ம தருமமிகு சென்னை ஏர்போர்ட்ல டாய்லட்....... அது போதும் நம் அவலத்தை பத்தி அயல்நாட்டவர் புரிஞ்சிக்க!!)

 ஒரு ஒழுங்கு எல்லா இடத்துலயும் இருக்கும். நான் இருந்த பொழுது யுத்தம் நடந்துகிட்டுதான் இருந்தது. அப்படி இருந்தும் கட்டுப்பாட்டோட, ஒழுங்கா இருந்ததைப் பார்க்க பார்க்க ஆச்சரியம், ஆனந்தம் எல்லாமும் தான். இதைப்பத்தி நான் நிறைய்ய சொல்லியிருக்கிறேன். அவைகளை இன்னொரு வாட்டி சொல்வது தப்பில்லைன்னு நினைக்கிறேன்.

 1. வங்கிகளில் சேவை நல்லா இருக்கும். நல்ல மரியாதையோட நடத்துவாங்க. வரிசையில் நின்று செல்வது என்பது கட்டாயமா இருக்கும். - இதே பழக்கத்துல நம் நாட்டில் போய் நான் வரிசையில் நிக்க... எனக்கு பின்னாடி வந்தவங்க எல்லாம என்னைத் தாண்டி போய் டேபிளில் கவுந்து நின்னு பேசி வேலையை முடிச்சுக்கிட்டு போயிடுவாங்க!!!

! 2. எதிர்ல வரும் மனிதர் தெரிஞ்சிருந்தாலும், தெரியாதவரா இருந்தாலும் ஒரு சின்ன புன்னகை சிந்துவாங்க. சிநேகமான அந்தப்புன்னகை எனக்கு புதிதா இருந்திருக்கு. இங்க வந்ததக்கப்புறம் புதிரா இருக்கு. நாம சிரிச்சா...... என்னாச்சு இவளுக்கு ரேஞ்சுல பாப்பாங்க. அவங்களும் சிரிக்க மாட்டாங்க. சினேக பாவம் சுத்தமா கிடையாது.

 3. அங்கே தனிவீடுகளில் பெரிய பெரிய மதில்சுவர்களுக்குள் வாழ்ந்தப்போ கூட நான் தனிமையாக உணர்ந்ததில்லை. ஆனா இங்கே அடுக்குமாடி வீட்டில் வாழ்ந்தாலும் நான் உண்டு, என் வீடு, குடும்பம் உண்டுன்னு தான் இருக்கும் சூழல்.



 4. நட்பு பாராட்டுவது, நண்பர்களோட அளவளாவுவது இதெல்லாம் நம்மை புத்துணரச்சியோட வெச்சிருக்கும். வார இறுதிகளில் நட்புகளோட சேர்ந்து உண்பது, சேர்ந்து சுத்துவதுன்னெல்லாம் இருந்தோம். இங்கயும் எங்க பழைய நட்புக்கள் இருக்காங்க. அங்கே பழக்கத்துக்கு இங்கே சாப்பிடக்கூப்பிட்டு அவங்க வேலை முடிஞ்சு சாப்பிட வரும்போது இரவு 11 மணி!!!!!

 5. வேலை பளு. நம்ம இந்தியர்கள் கடின உழைப்பாளிகள். அதனாலேயே எல்லா நாடுகளிலும் மதிக்க படறாங்க. அந்த கடின உழைப்பே நமக்கு சத்ரூ!!! எந்த நாடா இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும்தான் வேலை. அதன் பிறகு அவங்கவங்க தன் வீடு, குடும்பம்னு போயிடுவாங்க. வார இறுதிகளில் கண்டிப்பா ஸ்ட்ரெஸ் குறைஞ்சு தங்களை புத்துணர்ச்சியாக்கிக்க தவற மாட்டாங்க.

 24*7 வேலை செஞ்சாலும் நம்ம நாட்டில் பத்தாது!!! குடும்பத்தோட நேரம் செலவிடுவதை விடுங்க. தனக்கே தனக்குன்னு ஒரு அரைமணி ஒதுக்கி உடற்பயிற்ச்சி செய்ய முடியுமா? ஏன் உடம்பே சரியில்லைன்னு வெச்சுக்கோங்க, ஆஸ்பத்திரிக்கு கூட ஓடாம, ஏதோ வலிநிவாரணியை சாப்பிட்டு அப்புறமா பாத்துக்கலாம்னு ஓடறவங்க எத்தனை பேர் இருக்காங்க!!

! 6. வீட்டு வேலை செய்யறவங்களை உதவிக்கு வெச்சுப்பது. அதென்னவோ தெரியலை அங்கே அவங்க வீட்டுக்கு வந்து வேலை செஞ்சிட்டு போனதும் வீடே மாறிப்போயிருக்கும். அப்படி ஒரு சுத்தமாகிடும். வாங்கற சம்பளத்துக்கு வஞ்சனை இல்லாம வேலை செய்வாங்க. நம்ம ஊர்ல............................ சில வீடுகளில் வயசுபசங்க. முடிதிருத்திகிட்டு வர்றேன்னு சலூனுக்கு போவாக. போயிட்டாந்ததும், இன்னும் முடிதிருத்த போகலியான்னு கேப்பாங்க!!!! அதுமாதிரிதான் இருக்கு வீட்டு வேலைக்காரங்க வேலையும். சொல்லிக்கொடுத்தாலும் கத்துக்க மாட்டேன்னு அடமே பிடிப்பாங்க. :((

7. பிள்ளைகள் படிப்பு. மேலைநாட்டுக்காரங்க நம்மளை மட்டம் தட்டன்னே கொண்டாந்த மெக்காலேயேவே இன்னும் கட்டிகிட்டு அழறோம். ஆனா அவங்களே அதையும் தாண்டி புனிதமான லெவலுக்கு படிப்பை கொண்டு போயிட்டாங்க. ஹோம்வொர்க், ஸ்ட்ரெஸ் இதெல்லாம் இல்லாத ஒரு சூழலில் பிள்ளைகள் 12ஆம்வகுப்பை படிச்சு வருது.

எல்கேஜிக்கே 100 வரைக்கும் எண்கள் கத்துக்கும் கொடுமை நம்ம நாட்டில் மட்டும்தான் நடக்குது. நாம ரேஸ்ல ஓடத்தான் தயார் செஞ்சுகிட்டு இருக்கோம். இப்ப மாத்தங்கற பேர்ல நடக்குற கூத்தை வேடிக்கை பார்ப்பதை விட வேற ஒண்ணுமே செய்ய முடியாது. 1 மாசம் சர்வே எடுத்து, தேடி கண்டுபிடிச்சு ரொம்ப ஸ்ட்ரெஸ் இல்லாத ஸ்கூலில் பசங்களை சேர்க்க நாங்க பட்ட பாடு.....சாமி ரங்கா!!!!

8. தனி மனித ஒழுக்கம் சுத்தமா கிடையாது. பொது இடங்களில் படிச்சவங்களே அசிங்கம் செய்யும் கொடுமை இங்க மட்டும்தாங்க உண்டு.

9. ஒவ்வொரு பண்டிகையை இங்கே கொண்டாடும்போதும் இந்தப்பண்டிகையை நாம இலங்கையில் இருந்தப்போ எப்படி கொண்டாடினோம்!!! இப்படி நினைக்காம எங்களால கொண்டாட முடியாது. நம் நாட்டை விட்டு தூரத்தில் இருக்கோம் என்பதால் நம் கலாச்சாரத்தை மறக்காம, விட்டுக்கொடுக்காம, பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க டீவி பார்க்காம அர்தத்தோட நட்புக்களோட கொண்டாடியது நினைவில் வந்து போகுது.

 சமீபத்தில் ஒரு ஜன்மத்தை சந்திச்சேன். (இப்படி சொல்வதற்கு மன்னிக்கணும்)  பட்டுப்புடவை கட்டாத எங்க கொள்கையைப்பத்தி  கிண்டலடிச்சுகிட்டு இருந்தாரு. அவுரு சொன்னது,” நான் அமெரிக்காவில் இருக்கும் என் பேத்திக்கு 10 பட்டுப்பாவடை வாங்கி கொண்டுபோய் கொடுத்தேன். பட்டுப்பாவாடை கட்டி நிக்கும்போது நம்ம கலாசாரத்தை பிரதிபலிக்கறாங்க!!!”

பட்டு உடுத்தி நின்னாதான் கலாச்சாரமா????!!! கடவுளே.......

10. ரோடு ரிப்பேர் நடக்குதுன்னா அதைப்பத்தி தன்மையா எழுதி வெச்சிருப்பாங்க. (உங்களின் வரிப்பணத்தை நாங்கள் உங்களுக்காகவே
செலவிட்டு கொண்டிருக்கிறோம். அது உங்களின் மேன்மைக்காக. ஒத்துழையுங்கள்)

நம்ம ஊர் ரோடு.............. அதோட பராமரிப்பு..............!!!!?????!!!!

11. எலக்ட்ரிக், ப்ளம்பிங், ஏஸி சர்வீஸ்னு இப்படி எதுக்கும் நாம ஆளைத்தேடி அலைஞ்சுகிட்டு இருக்க வேண்டாம். சில இடங்களில் போன் செஞ்சதும் அவங்களே ஆளை அனுப்பி வெச்சிருவாங்க. அவங்க வேலை செஞ்சிட்டு போகும்போது வேலை செஞ்ச அடையாளமே தெரியாம சுத்தம் செஞ்சிட்டுத்தான் போவாங்க...!!!!!

12. கோவிலுக்கு போனா மனசு நிம்மதி கண்டிப்பா கிடைக்கும். இங்க கோவிலுக்குன்னு கிளம்பினாலே டென்ஷன் தான். டிராபிக், கூட்டம்...

13. பால்காரரில் ஆரம்பிச்சு...... எல்லார்கிட்டயும் போராடி, “ஐயா சாமி இதுதான் உன் வேலை, நீ அதை ஒழுங்கா செய்வே என்பதை மட்டும்தான் எதிர்பார்க்கிறேன்னு” புரிய புரிய வெச்சு....... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ம்ம்முடியலை!!!!!


இப்படி நிறைய்ய இருக்கு. சொல்லிக்கிட்டே போனா எனக்கு திட்டுதான் விழும்.  கல்யாணமாகிப்போன புதுப்பொண்ணு தன் பிறந்தவீட்டுக்கும் புகுந்தவீட்டுக்கும் இருக்கும் மலை-மடு வித்தியாசத்தை பாத்து மருகிப்போய் உட்கார்ந்திருக்கும் பாருங்க.... அந்த ஒரு நிலமை நமக்கு  ஒரு வாட்டி தாய்நாட்டை விட்டு வெளியே போயிட்டு வந்ததும் வரும். மனசு இங்க ஒட்டவே இல்லை.  இலங்கை போய் இருந்திட்டு வந்தது தப்போன்னு நினைக்கிறோம். அதனால்தானே வாழ்க்கைன்னா என்னான்னு புரிஞ்சது, எந்தந்த அத்தியாவசிய, உரிமைகளை கூட இழந்து வாழ்ந்திருக்கோம்னு புரிஞ்சுது!!!


நம்ம நாட்டைத்தவிர எல்லா இடமும் நல்லா இருக்கே??? ஏன்??  இந்தக் குட்டி நாட்டுக்குள்ளேயே என்னால வித்தியாசத்தை உணர முடிஞ்சிருக்குன்னா என்ன சொல்ல. இந்தா இங்கன இருக்கற இலங்கையில் இருந்ததுக்கே இம்புட்டு புலம்பறேனே, அமெரிக்கா, ஜப்பான், துபாய், சிங்கை, ஆஸ்த்ரேலியான்னு போய் இருந்திட்டு இங்க வர்றவங்க புலம்பாம என்ன செய்வாங்க!!!!

இதெல்லாம் நான் சொல்ல ஆரம்பிச்ச போது இலங்கையைப்பத்தி பேசாதேன்னு மிரட்டல் எல்லாம் வந்திச்சு. ஒரு இடம் நல்லா இருக்குன்னு சொல்வது தப்பா??

நம்ம நாட்டுல நம்மளை எப்படில்லாம் ஏமாத்துறாங்கன்னு புரியும்போது பிறந்தவீடே நமக்கு துரோகம் செய்யுதேன்னு துடிக்கும். அதுதான் உண்மை. ஏன்னா உண்மை எப்பவும் கசக்குமே!!!


ஹரினியின் இனிமையான குரலுக்காக மட்டுமில்லை, என்னைக்கவர்ந்த என்னுயிர் தேசத்தில் படமாக்கப்பட்ட படம், பாடல் என்பதற்காகவும் இந்தப்பாடல்.


என்னப்பன் கந்தப்பன் அருளும் கதிர்காமம் வீடியோ.


இந்தப்பதிவு மூலமா என்னப்பனுக்கு ஒரு வேண்டுகோள், “ எனக்கு நல்லது செய்யணும்னு உனக்கு தோணிச்சின்னா, பேசாம எங்களை திரும்ப நீ இருக்கும் ஊருக்கே கூட்டிகிட்டு போய் வெச்சுக்கோ””!!!!! :)))

என்னை என்ன திட்டினாலும் சரி. மனசு இங்க ஒட்டவே இல்லை. அழகன் பட டயலாக் தான், கொஞ்சம் மாத்தி சொல்றேன். “நாம பேசாம வேற நாட்டுலேயே பிறந்திருக்கலாமோ!!””

27 comments:

ப.கந்தசாமி said...

புலம்பல்ஸ் கரெக்ட்டுத்தான். இத்னூண்டு நாட்டில் இருக்கும் சுத்தமும் ஒழுக்கமும் ஏன் இங்கே இல்லைன்னு தெரியணுமா?

மூன்று நாளாக நம் தேசப் பிதாக்கள் (எம்.பிக்கள்). எப்படி பார்லிமென்டில் நடந்துக்கறார்கள்னு பார்க்கறீங்கல்ல. மக்கள் அதுக்கு மேல நடந்தாத்தானே மரியாதை.

pudugaithendral said...

வாங்க ஐயா,

நலமா.

நீங்க சொல்வது ரொம்ப சரி. அந்நியர்கள் நம்ம மேல வரிவிதிச்சதற்கு எதிர்த்தாங்க. இப்ப நடக்கற கூத்துக்கு என்ன செய்யலைன்னு தெரியலை. 4 காசு சேக்க விடமாட்டேன்னு கங்கணம் கட்டிகிட்டு மக்களை படுத்தி எடுத்துக்கிட்டு இருக்காங்க. :((

வருகைக்கு மிக்க நன்றி

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. மாற்றங்கள் அவசியம் தான்...

pudugaithendral said...

வாங்க சகோ,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

வல்லிசிம்ஹன் said...

அன்பு தென்றல், துபாயில் பையன் வீஇட்டில் ஒரு இலங்கைப் பெண்தான் வேலை செய்கிறார்.
அவர் இருக்கும் நான்கு மணி நேரத்தில்சத்தனில்லமல் படுக்கை அறைத் துணிகள் மாற்றுவது, கழிவிடங்கள் சுத்தம் செய்து தானும் குளித்துவிட்டுத் தான் கொண்டு வந்த மலர்களைப் புத்தருக்கு வைத்துவிட்டு, காய்கறிகள் நறுக்கிவைத்து, பாத்திரமும் தேய்த்துவிடுவார். பிறகு தான் கொண்டு வந்திருக்கும் ப்ரெட்,மசாலா இவைகளை அழகாக் உட்கார்ந்து சாப்பிடுவார். இலங்கையில் குடும்பம் இருக்கிறது. தன் 23 வயதில் இங்கே பிழைக்க வந்தவர். பெண்களுக்குத் திருமணம் செய்து பையனுக்கு வேலை வாங்கிக் கொடுத்து,தன்ஸ்பான்சர் வீட்டு(ஷேக்) சமையலையும் கவனிப்பார். நல்ல மனுஷி. நாணயமானவர். முருகன் உங்களுக்கு அருளட்டும்.

ADHI VENKAT said...

வெளிநாட்டை விடுங்க.... வெளிமாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தாலே நிறைய வித்தியாசம் தெரியுது. பேச்சுக்கு பேச்சு அங்க மாதிரி இங்க இல்லைன்னு சொல்லத் தோணுது. நீங்க சொல்ற மாதிரி நாள்கிழமை பண்டிகைகள்.....

இருந்தாலும் நம்ம ஊர் நம்ம ஊர் தான்....:))

நிறைய மாற்றங்கள் வர வேண்டும்.

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

எனக்கு வேலை செஞ்சவங்க கூட 4 மணிநேரத்துல வீட்டையே புரட்டி போட்டுட்டு போவாங்க. அப்ப ரொம்ப லோ பீபில அவஸ்தை படுவேன். எந்திரிக்காம படுத்திருப்பதை பார்த்தா ராத்திரிக்கு டிபன் தானே செஞ்சுவெச்சிருவாங்க. (அதெல்லாம் செய்ய வேண்டிய வேலையில அடக்கம் கிடையாது)

உங்க ஆசிர்வாதத்துக்கும் வருகைக்கும் நன்றி :))

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

எனக்கு வேலை செஞ்சவங்க கூட 4 மணிநேரத்துல வீட்டையே புரட்டி போட்டுட்டு போவாங்க. அப்ப ரொம்ப லோ பீபில அவஸ்தை படுவேன். எந்திரிக்காம படுத்திருப்பதை பார்த்தா ராத்திரிக்கு டிபன் தானே செஞ்சுவெச்சிருவாங்க. (அதெல்லாம் செய்ய வேண்டிய வேலையில அடக்கம் கிடையாது)

உங்க ஆசிர்வாதத்துக்கும் வருகைக்கும் நன்றி :))

pudugaithendral said...

வாங்க கோவை2தில்லி,

அதனாலத்தான் நான் ஹைதையில் கொஞ்சமாவது ஆனந்தமா இருக்கேன். :))

வருகைக்கு மிக்க நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

நிறைய மாற்றங்கள் வர வேண்டும்... உண்மை தான்... ஆனாலும் எங்க ஊர் எங்க ஊர்தான்...

பிடித்த பாடல்களுக்கு நன்றி...

ஹுஸைனம்மா said...

வழக்கமாச் சொல்றதுதான் தென்றல். நான் எழுதின மாதிரியே இருக்கு, இந்தப் பதிவும்.

நம்மள மாதிரி நடுத்தர வயதில் அல்லது சிறுவர்களால்தான் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடியவில்லை என்றில்லை. ரிடையர்ட் ஆகும் வயதிலிருக்கும் முதியவர்களாலும் அப்படியே என்பதுதான், நம் பக்க நியாயத்தை உறுதிப்படுத்துகிறது.

என் தந்தை, 30 வருடங்கள் அரபு நாடுகளில் வேலை பார்த்தவர், 60 வயதுக்குமேல் இந்தியாவில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்ததும், ‘அப்பாடா’ என்று இந்தியா வந்து செட்டில் ஆனார். ஆனால்.... இன்று வரை தான் தவறான முடிவு எடுத்துவிட்டோம் என்றுதான் வருந்திக் கொண்டிருக்கிறார்!!

முதல் இரண்டு வருடங்கள், இலஞ்சம், ஊழல், குடி, முறைகேடுகள் என்று எதிலும் ஈடுபடாத கண்டிப்பானவர் என்று தன் நிலையை அனைவருக்கும் உறுதிப்படுத்தும்வரை அவர் அடைந்த மன உளைச்சல்கள்... சொல்லிமுடியாது!!

அவரை வேலைக்கு எடுத்த உயரதிகாரி, என் தந்தையின் முன்னாள் மாணவர் - என் தந்தையின் குணத்தை நன்கு அறிந்தவர் என்பதாலுமே அவரால் வேலையில் நீடிக்க முடிந்தது.

ஹுஸைனம்மா said...

//அதுமாதிரிதான் இருக்கு வீட்டு வேலைக்காரங்க வேலையும். சொல்லிக்கொடுத்தாலும் கத்துக்க மாட்டேன்னு//

இவர்களே, வெளிநாட்டு வேலைகளுக்கு வந்தால் பளிங்குபோல சுத்தமாக வேலை செய்வார்கள்!!

//அதனால்தானே வாழ்க்கைன்னா என்னான்னு புரிஞ்சது, எந்தந்த அத்தியாவசிய, உரிமைகளை கூட இழந்து வாழ்ந்திருக்கோம்னு புரிஞ்சுது!!!//

மிக உண்மை. சொல்லப்போனால், இந்தியாவில் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்பட வெளிநாடு சென்று வந்த இந்தியர்களும் ஒரு முக்கியக் காரணம்!!

ஆத்மா said...

நான் வெளிநாடு எங்கு சென்றது கிடையாது..
நிங்கள் இந்தியாவில் அனுபவித்திருக்கிறீர்கள் அதனோடு இலங்கையை ஒப்பிட்டு அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்...
இன்னும் ஏறாளம் இருக்கின்றன..
பெருமைப்படுகிறேன் நான் இலங்கையில் பிறந்ததற்கு....

சொர்க்கமே என்றாலும் அது நம்மூறப் போல வருமா... எந் நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா..

இப்போதான் உறைக்கிறது எனக்கு

pudugaithendral said...

வாங்க தனபாலன்,

மாற்றங்கள் வரணும்னு பலதலைமுறையா சொல்லிக்கிட்டு தான் இருக்கோம். ஆனா வாணலியிலிருந்து நேரடியாக அடுப்பில் இப்போ வதைபட்டுக்கிட்டு இருக்கோம். :((

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க தனபாலன்,

மாற்றங்கள் வரணும்னு பலதலைமுறையா சொல்லிக்கிட்டு தான் இருக்கோம். ஆனா வாணலியிலிருந்து நேரடியாக அடுப்பில் இப்போ வதைபட்டுக்கிட்டு இருக்கோம். :((

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க தனபாலன்,

மாற்றங்கள் வரணும்னு பலதலைமுறையா சொல்லிக்கிட்டு தான் இருக்கோம். ஆனா வாணலியிலிருந்து நேரடியாக அடுப்பில் இப்போ வதைபட்டுக்கிட்டு இருக்கோம். :((

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

உங்க அப்பா மாதிரிதான் பலரும் அவஸ்தை பட்டுட்டு என்ன வயதானாலும் பரவாயில்லைன்னு திரும்ப வெளிநாட்டுக்கே போயிடறாங்க. (பணம் சம்பாதிக்கும் ஆசை போகலைன்னு அடுத்தவங்க பேசுவாங்க. பணத்துக்காக இல்லை மன நிம்மதிக்காகத்தான் போறாங்கன்னு புரியலை மத்தவங்களுக்கு)

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

உங்க அப்பா மாதிரிதான் பலரும் அவஸ்தை பட்டுட்டு என்ன வயதானாலும் பரவாயில்லைன்னு திரும்ப வெளிநாட்டுக்கே போயிடறாங்க. (பணம் சம்பாதிக்கும் ஆசை போகலைன்னு அடுத்தவங்க பேசுவாங்க. பணத்துக்காக இல்லை மன நிம்மதிக்காகத்தான் போறாங்கன்னு புரியலை மத்தவங்களுக்கு)

pudugaithendral said...

அயித்தானுக்கு இந்தியாவில் வேலை. ஆனா வேலை பார்ப்பது இலங்கை கம்பெனிக்கு. அதனாலத்தான் அதிகம் மன உளைச்சல் இல்லாம ஓட்டிக்கிட்டு இருக்கோம். இந்திய கம்பெனியா இருந்தா........ நினைச்சு பார்க்கவே முடியலை.

நாம எப்பவுமே சேம் ப்ளட்தான் ஹுசைனம்மா. :))

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

அயித்தானுக்கு இந்தியாவில் வேலை. ஆனா வேலை பார்ப்பது இலங்கை கம்பெனிக்கு. அதனாலத்தான் அதிகம் மன உளைச்சல் இல்லாம ஓட்டிக்கிட்டு இருக்கோம். இந்திய கம்பெனியா இருந்தா........ நினைச்சு பார்க்கவே முடியலை.

நாம எப்பவுமே சேம் ப்ளட்தான் ஹுசைனம்மா. :))

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க சிட்டுக்குருவியின் ஆத்மா,

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்னு நீங்க சந்தோஷமா பாடிக்கலாம். 3 மணிநேரப்பயணத்தில் மலைப்ரதேசம், கண்ணுக்குளிர்ச்சியா பசுமை போர்த்திய ஊர், சுத்தமான தண்ணீர், மின் தடைன்னா என்னன்னே தெரியாது, மாதம் மும்மாரி இல்லை பலமாரி பெய்யும் மழை, பீச், சுத்தமான காற்று, அதிகாலையில் துயில் எழுப்பும் குயிலின் கீதம்னு எல்லாமே கிடைக்க பெற்ற, ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கீங்க.

அதுக்கே கதிர்காமனுக்கு தினம் தினம் நன்றி சொல்லணும். :)

முதல் வருகைக்கு மிக்க நன்றி

sanjana raghavan said...

Foreigners have much better behavior than our NRI's. Agree to that our nation has no self discipline, cleanliness etc., change doesn't come easily... freedom didn't come easily..America didn't become powerful overnight. Everything takes time....Given a chance everyone wants to run to a alien land because of their infrastructure and other luxuriousness. How many of us want to stay back and bring change in the system?? None.. You always brag about your goodness...which comes from education and good family. Who gave you all that...Your country!! Not the ones which you are talking about. All they know is to kill innocent people for no reason. If any of your family members would have suffered their innocent killings then you would know what that country is made of...just because you have everything and all good things happen to you, that cold blooded country will obviously look beautiful to you. Let one cruel killing or a haunted rape happen to your dear ones..you'll know the pain. Also, You should be knowing this Adage "Be a roman when you are in Rome"....do we behave that way...NO!! There too we will were bindi, plait the hair with jasmine, wear anklets jimiki and pair it up with jeans and kurta. Like a nomad dressed in western clothes. Celebrate only diwali and navarathiri and other Hindu festivals. Make an Indian community... Gossip all the time or talk nonsense about India or discuss how much money you have made coming to the new land or how intelligent my kids are. Do we follow their culture of getting married number of times, extra marital affair or simply a broken family...NO! There comes our tradition and stuff. Use Indian values only where you need, but doesn't want to stay in the pigsty and clean it up....Selfish animals..as we are. You have no rights to talk about people who are against your silk wearing tradition. Paper is made by cutting of trees...so, do you and your acquaintances are going to stop reading and writing....No..right. Do not make judgement on others when you have selfish thoughts and no love for your own country. Being a blogger you should be more responsible than you are now.

pudugaithendral said...

சஞ்சனா ராகவன்,

நான் மட்டுமல்ல எல்லோருமே சுயநலவாதிகள் தான்.
உங்க வருகைக்கும் மேலான கருத்துக்கும் மிக்க நன்றி.

ஆதி மனிதன் said...

என்னுடைய பதிவை (ஆதங்கத்தை) குறிப்பிட்டு வெளியிட்டதற்கு நன்றி. தங்கள் பதிவும், அதற்க்கான பின்னூட்டங்களும் சற்று நிறைவை தருகிறது. பல நேரங்களில் நாம் மட்டும் தான் இப்படி நினைக்கிறோமோ என்று எண்ணியதுண்டு. பலருக்கும் அந்த புழுங்கல் உண்டு என்பது தங்கள் பதிவில் தெரிந்து கொண்டேன். இங்கு அவ்வளவு கஷ்டங்கள் பட்டாலும் இன்னமும் எனக்கு இங்கே தான் நிரந்திரமாக இருக்க வேண்டும் என்று ஆசை படுகிறேன். ஆனால் இந்தியாவில் மாற்றங்கள் ...எனக்கென்னமோ அது எட்டா கனியாகவே தோன்றுகிறது.

காற்றில் எந்தன் கீதம் said...

திரும்ப இங்கயே வந்திருங்க அக்கா...

pudugaithendral said...

வாங்க ஆதிமனிதன்,

அந்த ஆசை எனக்கும் இருப்பதால்தான் இது நாம் பிறந்த நாடுன்னு உளைச்சல் படும் மனசுக்கு சொல்லிக்கிட்டு இருக்கேன்.//

இந்தியாவில் மாற்றங்கள் வரும்னு நம்பிக்கை எனக்கு சுத்தமா இல்லை. :((

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க சுதர்ஷிணி,

அப்படி ஒரு பொன்னான வாய்ப்பு மறுபடியும் கிடைச்சா பொட்டி கட்ட நாங்க ரெடி :))

வருகைக்கு மிக்க நன்றி