Friday, November 30, 2012

வாழ்த்து சொல்லும் நேரமிது....... :)))

போன வருஷமே இந்த டென்ஷன் ஆரம்பமானிச்சு. தான் மேலே படிக்கணும்னு அயித்தான் ஆசைப்பட்டாக. இலங்கையில் இருந்தப்பவே எம்பிஏ சேர்ந்தாங்க. அப்பத்தான் இங்க மாத்தலாகி வர அது அப்படியே நின்னு போச்சு. ஐஐஎம்ல கோர்ஸ் ஜாயிண்ட் செய்யலாம்னு முயற்சி செஞ்சாரு. 800 அப்ளிகேஷன் வந்ததுல 80 பேர்தான் செலக்ட்டானங்க. அயித்தானுக்கும் அட்மிஷன் கிடைச்சதுல ரொம்பவே மகிழ்ச்சி. ரொம்ப பெருமையாவும் இருந்துச்சு.

 ஜனவரி2ஆம்தேதி வகுப்பு ஆரம்பமானிச்சு. முதல் கிளாஸ்லேயே அடுத்த 11 மாதங்கள் உங்கள் வாழ்க்கை அடுப்பில் இருக்கும் பிரஷர் குக்கர் மாதிரிதான்!!!!னு குண்டு போட்டாங்களாம். வேலை + ஆன் கேம்பஸ் வகுப்பு + ப்ராஜக்ட்கள் + பரிட்சைகள் எல்லாம் இருக்கே. 3 மாதத்திற்கு ஒரு முறை ஒரு வாரம் முழுதும் வகுப்பு. இதைத் தவிர சனிக்கிழமைகளில் மாதத்திற்கு (2)வகுப்புக்கள். அட்டெண்டென்ஸும் முக்கியம். ஆபிஸ் வேலையும் விட முடியாது. அதுவும் ஒரு கம்பெனிக்கு CEO போஸ்ட்ல உக்காந்துகிட்டு இருக்கும் போது ஒரு வாரம் ஆள் ஆபிஸில் இல்லைன்னா போன் கால் மேல போன் கால்தான்.

இங்கேயிருந்து கிளம்பி பெங்களூர் போய் சேர்ந்த உடன் ஆரம்பிக்கும் போன் கால்... அயித்தானோட கிளாஸ்மேட்கள் இருவருக்கு பிரஷர் தாங்க முடியாமல் உடல்நிலை சரியில்லாம போயிடிச்சு. ஒருவருக்கு ஹார்ட் அட்டாகே வந்திருச்சு. மார்ச்மாதம் வரைக்கும் கூட தாங்க முடியலை. இப்ப படிக்க சேர்ந்து தப்பு பண்ணிட்டோமோன்னு அயித்தான் யோசிக்க ஆரம்பிச்சாங்க.

 நான் மாண்டிசோரி கோர்ஸ் படிச்ச போது அயித்தான் தான் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பசங்களை பாத்துக்கிட்டு உதவி செஞ்சது. இப்ப நம்ம டர்ன் ஆச்சே.. :)) களத்துல குதிச்சேன். பசங்க கிட்ட பேசினேன். சனிக்கிழமை இரவு வெளியே செல்வது என்பது எங்க வீட்டுல எழுதப்படாத விதி. ஆனா இப்ப அயித்தானின் வகுப்பு இருப்பதால முடியாது. தவிர அயித்தானுக்கு தான் கால்ல சக்கரத்தை கட்டி விட்டாமாதிரி டூர் இருக்குமே. இதனால பிள்ளைகள் வெளியே போக முடியலையேன்னு வருத்தப்பட்ட போது பசங்களை உட்கார வெச்சு பேசினேன்.

 இப்ப நம்ம சப்போர்ட் அப்பாவுக்கு ரொம்ப முக்கியம். உங்களுக்கு பரிட்சை வருதுன்னா நானும், அப்பாவும் எவ்வளவு அட்ஜஸ்ட் செஞ்சுக்கறோம். இப்ப நீங்க உங்க பங்களிப்பை செய்யணும். ஐஐஎம் மாதிரி இடத்துல அட்மிஷன் கிடைக்கறதே பெருசு. அதுல அப்பா இந்த வயசுல படிக்கறாங்க. சின்ன வயசுல படிக்க முடியலை. ஆனா அந்தக்கனவை நனவாக்க அவர் பாடுபடறார். நாமளும் ஒத்துழைச்சாதான் முடியும்னு சொன்னேன். பசங்க அப்பாகூட வெளிய போக முடியலையேன்னு புலம்பாம புரிஞ்சுகிட்டாங்க. (ஞாயிற்றுக்கிழமை காலை அப்பாவைக்கட்டிக்கிட்டு 1 மணிநேரம் கிடப்பாங்க. அது கூட முடியாம சனிக்கிழமை வகுப்பு முடிஞ்சு ட்ரையின் பிடிச்சு ஞாயிறு காலைதான் வருவார்)

 அப்பா வகுப்புக்கு கிளம்பினா ஆல் த பெஸ்ட், எஞ்சாய்னு சொல்லி வழி அனுப்ப ஆரம்பிச்சாங்க. அயித்தான் கிட்ட மோடிவேஷனா பேசினேன். உங்களுக்கு இது நல்ல சான்ஸ். 800 அப்ளிகேஷன்ல நீங்கல் செலக்டாகி இருக்கீங்க. எந்த ரெக்கமண்டேஷனும் இங்க வேலை செய்யாது. உங்க இத்தனை வருட எக்ஸ்பீரியன்ஸுக்கு கிடைச்ச அங்கீகாரம் இது. நானும், பசங்களும் எங்களால ஆன ஒத்துழைப்ப கொடுக்கிறோம்.

 இந்த படிப்புக்காக உங்க நண்பர் அலுவல வேலையை விட்டு படிக்கப்போனாரு. ஆனா உங்களுக்கு உங்க கம்பெனி அந்த நேரத்துல விடுப்பு எடுத்துக்க அனுமதி, சில சலுகைகள் எல்லாம் கொடுத்திருக்கு. கஷ்டமாத்தான் இருக்கும். நான் மாண்டிசோரி படிச்சபோது அந்த ப்ராஜக்ட் வேலைகள் ரொம்ப கஷ்டம். ஆனாலும் சின்னக்குழந்தைகளை வெச்சுக்கிட்டு செஞ்சு முடிச்சேன். உங்களாலும் முடியும்னு சொன்னேன்.

 மேமாதம் விடுமுறைக்கு பெங்களூர் போயிருந்த போது பசங்க ஐஐஎம் சுத்தி பார்க்க போனபோது, அப்பாவின் வகுப்பு, அவர் படிக்கறது எல்லாம் பாத்துட்டு, சூப்பர் நாநான்னு பாராட்டு. பெருமையா இருக்குப்பா உங்களை நினைக்கும்போதுன்னு சொல்ல, அவருக்கு இன்னும் எனர்ஜியா இருந்தது.

வேலைப்பளு, பயணம் அதோடு குறிப்பிட்ட நேரத்தில் ப்ராஜக்ட் செஞ்சு அனுப்பனும், அதிலும் குரூப்பா செய்யணும். மார்க்கட்டிங் ப்ராஜக்ட் வந்தபோது அயித்தான் ரொம்ப ஈசியா செஞ்சாரு. ஏ கிரேட் கிடைச்சது அவங்க குரூப்புக்கு. “எப்படின்னு உடன் படிக்கறவங்க வியக்க, என்னுடைய இத்தனை வருட எக்ஸ்பீரியன்ஸே மார்க்கட்டிங் & ஸ்டேர்டஜிலதானான்னு சிரிச்சார். 3 ப்ராஜ்க்ட்ல ஏ கிராட், 2 எழுத்து தேர்வுல பி கிரேட்ன்னு வர நாங்க வீட்டுல அயித்தானுக்கு ட்ரீட் கொடுத்தோம். :))

 இதோ இந்தவாரத்தோட வகுப்பு முடியுது. இன்றைக்குத்தான் கடைசி வகுப்பு. ஓடினதே தெரியலைன்னு இப்ப நினைக்கறோம் ஆனா..... அவ்வளவு ஈசியா இருக்கலை. தன்னோட கனவை நனவாக்கி இந்தியாவின் மதிப்பு மிக்க ஐஐஎம் பெங்களூருவில் அயித்தான் EGMP course செர்ட்டிஃபிகேஷன் இன்னைக்கு வாங்கறாங்க. இந்த நேரத்துல அயித்தானுக்கு வாழ்த்து சொல்லிப்பதில் மட்டில்லாத மழிச்சி.
காலையில் வகுப்புக்கு கிளம்பும் முன்னாடி போன் செஞ்சப்பவே “ஹேப்பி மாப்பிள்ளை அழைப்பு டேன்னு “ வாழ்த்து சொன்னேன்.
நாளை எங்களுடைய 17ஆவது திருமண நாள். இப்படி ஒரு உன்னதமான மனிதர் என் வாழ்வில் வந்தது எனக்கு கிடைச்ச பரிசு. இறைவனுக்கு நன்றி. க்ராஜுவேஷனுக்கும், திருமணநாளுக்கும் அயித்தானுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். ( ஆஹா இன்னையோட டென்ஷன் முடிஞ்சிச்சுன்னு சொல்றேன், இல்ல பிஹெச்டி பண்ணலாம்னு பாக்கறேன்னு சொல்றாரு மனுஷன். சாமி 2 வருஷம் கேப் கொடுங்க. ஆஷிஷுக்கும் அம்ருதாவுக்கும் முக்கியமான நேரம் இதுன்னு சொல்ல சிரிச்சுகிட்டே, ஓகே, ஓகே, எனக்கும் கொஞ்சம் ஓய்வு தேவைன்னு சொல்றாரு) :)) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

17 comments:

வல்லிசிம்ஹன் said...

வாவ் வாவ் வாவ். தென்றல் கொடுங்க கையை. ஐ ஐஎம் கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம். உங்க அயித்தானுக்கும் பிள்ளைகளுக்கும் உங்களுக்கும் மனம் நிறைந்த பூரண வாழ்த்துகள். ஸ்டார்ட் மியுசிக். ம்கொண்டாடுங்க. அருமையான கணவன் மனைவிக்கு திருமண நாள் வாழ்த்துகள். மிக மிக மகிழ்ச்சி.

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

உங்க ஆசிர்வாதத்துக்கு ரொம்ப நன்றி. நாளைக்குத்தான் கொண்டாட்டம். இன்னைக்கு வகுப்பு இருப்பதால நாளைக்குத்தான் அயித்தான் வர்றாங்க.
பசங்களும் நானும் திட்டம் போட்டு காத்திருக்கிறோம்

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

உங்க ஆசிர்வாதத்துக்கு ரொம்ப நன்றி. நாளைக்குத்தான் கொண்டாட்டம். இன்னைக்கு வகுப்பு இருப்பதால நாளைக்குத்தான் அயித்தான் வர்றாங்க.
பசங்களும் நானும் திட்டம் போட்டு காத்திருக்கிறோம்

சாந்தி மாரியப்பன் said...

டபுள் வாழ்த்துகள் தென்றல்.

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

நன்றீஸ்

காற்றில் எந்தன் கீதம் said...

வாவ் அக்கா அண்ணாவுக்கும் உங்களுக்கும் மனமார்ந்த பாராட்டும் வாழ்த்துக்களும்... முக்கியமாக பிள்ளைகளுக்கு பாரட்டுக்கள் ரொம்ப சமர்த்து பசங்க உங்களுக்கு... நிறைய வாழ்த்த ஆசை நாளைக்கு ஒரு முக்கிய வேலை அதை முடிச்சிட்டு வந்து மெயில் போடுறேன் அக்கா...

ராமலக்ஷ்மி said...

மகிழ்ச்சி தென்றல். இனிய வாழ்த்துகள்:)!

pudugaithendral said...

வாங்க் சுதர்ஷிணி,

வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி :)

pudugaithendral said...

வாங்க ராமலக்‌ஷ்மி,

வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிகள்

திண்டுக்கல் தனபாலன் said...

மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

வெங்கட் நாகராஜ் said...

இரட்டை சந்தோஷம் எங்களுக்கும்....

வாழ்த்துகள் சகோ....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துகள் சொல்லிடுங்க சாருக்கு..
உங்களிருவருக்கும் கல்யாண நாள் வாழ்த்துகளும்.. வாழ்கவளமுடன்
குழந்தைகளுக்கும் உங்களுக்கும் பாராட்டுகள்..:)

கோமதி அரசு said...

வாழ்த்துக்கள் தென்றல்.
இனிய மண நாள் வாழ்த்துக்கள்.
உங்கள் கணவருக்கு வாழ்த்துக்கள்.
குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.

ADHI VENKAT said...

இரட்டை வாழ்த்துகள். உங்களுக்கும், பசங்களுக்கும் பாராட்டுகள்....

அன்புடன் அருணா said...

பூங்கொத்துப்பா!!! கலக்குங்க!!

pudugaithendral said...

வாங்க தனபாலன், மிக்க நன்றி

வாங்க சகோ மிக்க நன்றி.

வாங்க கயல். ரொம்ப நன்றிப்பா

வாங்க கோமதிம்மா- வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

வாங்க கோவ2தில்லி. ரொம்ப நன்றி

வாங்க அருணா- பூங்கொத்தை வாங்கிக்கொண்டேன்

மாதேவி said...

வாழ்த்துகள்.

மென்மேலும் சிறப்புகள்பெற்று இனிது வாழ வாழ்த்துகின்றேன்.