Thursday, December 13, 2012

ஹைதை ஆவக்காய பிரியாணி 13/12/12

12-12-12 ஜுரம் ஏறி இறங்கிருச்சா!!!! இந்த நாள் திரும்பிவராதுன்னு பலர் செண்டியா மெசெஜ் அனுப்பிகிட்டு இருந்தாங்க. அதுல ரசிச்ச மெசெஜ். 12-12-12 மட்டுமல்ல எந்த நாளுமே திரும்ப வராதே!!! பாயிண்ட். ************************************************************************************* மாயன் காலண்டர் படி 21/12 உலக அழிவுநாள்னு சொல்லிகிட்டு இருந்தாங்க. BUGARACH - அப்படிங்கற இந்த இடம் மட்டும் அழிவுலிருந்து தப்பிக்கும்னு சொல்லியிருக்காங்களாம். அது தற்போதைய ஃப்ரான்ஸில் இருக்குன்னு சொல்றாங்க.
எல்லோரும் டிக்கெட் வாங்கி அங்க போக முடியுமா!!! அதனால விதிப்படி நடக்கட்டும்னு இருங்கன்னு பெரியவங்க சொல்றாங்க. இதனால ஃப்ரான்ஸ் அதிகாரிகள் அந்த மலையாடிவாரத்தில் மக்கள் குவிவதை தடுக்க ஏற்பாடுகள் செய்யறாங்களாம். டிசம்பர் 19-23 வரை அங்கே மக்கள் போவதை தடுக்க போறாங்களாம். இங்கே போய் பார்க்கலாம்: நம்ம இந்தியர்களுக்கு ஏற்கனவே கீதாசாரத்தில் சொல்லப்பட்டதை மனசுல வெச்சுக்கிட்டா போதும். ********************************************************************************* உலக அழியும்னு சொல்லியும் எந்த முன்னேற்பாடும் நாம செய்யலை, செய்யவும் முடியாது. அதனால அடுத்த பகிர்வு என்னன்னா? THE WEEK டிசம்பர் 9 இதழோட THE WALLET அப்படிங்கற இணைப்பு கொடுத்திருக்காங்க. கண்டிப்பா வாங்கி படிச்சு மனசுல வெச்சுக்க வேண்டிய விஷயங்கள் இதுல இருக்கு. கஷ்டப்பட்டு சம்பாதிப்பதை என்னென்ன வகையில சேர்த்து வைக்கலாம்னு ஐடியா, அதுவும் அந்தந்த வயதுக்கு தகுந்தா மாதிரி கொடுத்திருக்காங்க. அவங்க சொன்ன அளவுக்கு இப்ப சேமிக்க கஷ்டம்னாலும் குருவி சேக்கறா மாதிரி ஒரு ஆரம்பமா வெச்சு செய்யலாமே!! என்ன சொல்றீங்க. ************************************************************************************* ஹைதை மாதாபூரில் இருக்கும் அவியல் உணவகத்தை பத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் படிச்சிட்டு அங்க போகணும்னு முடிவு செஞ்சு போனோம். எங்க வீட்டுலேர்ந்து 20கிமீ தூரம் வேற. மெனுகார்டில் விதம் விதமா இருந்துச்சு. பசங்க குழிப்பணியாரம் ஆர்டர் செஞ்சாங்க. நான் ஆப்பம் ஆர்டர் செஞ்சேன், அயித்தான் இடியாப்பம் சொன்னாங்க. ஆர்டர் எடுத்த ஆள் இந்த 3மே இல்லன்னு சொன்னாங்க. அப்புறம் என்னதான்யா இருக்குன்னு கேட்க வெரைட்டி இட்லிகள், தோசைகள் எல்லாம் இருக்குன்னு சொன்ன்னாங்க. வகைகள் வித்தியாசமா இருக்குன்னாலும் இட்லி தோசை சாப்பிடவா அம்புட்டு தூரம் போனோம்!!
மேனேஜரை கூப்பிட்ன்னு கொஞ்சம் காட்டா சொன்னதும் வந்தார். நம்ம தர்மபுரி காரராம். ஐடியில வேலை பார்க்கும் நண்பர்கள் சேர்ந்து நம்ம ஊர் சாப்பாடு வேணும்னு நினைப்பவங்களுக்காக ஆரம்பிச்சிருக்கதா சொன்னாரு. நீங்க சொன்ன அந்த 3 அயிட்டம் மட்டும் மெனுகார்டில் மட்டும்தான் இருக்கு. 2 மாசத்துல வந்திரும்னாங்க. :( அடை,அவியல் ஆர்டர் செஞ்சோம். அன்றைய ஷ்பெஷல் செட்டிநாடு அரிசி அடைன்னு சொன்னார். அதையும் ஆர்டர் செஞ்சோம். டூ இன் ஒன் தோசைன்னு ஒண்ணு அவங்க ஷ்பெஷல்னு சொல்ல அதையும் ஆர்டர் செஞ்சோம். சும்மா சொல்லக்கூடாது உணவோட ருசி சூப்பர். நம்ம வீட்ல செய்யறமாதிரி இஞ்சி எல்லாம் போட்டு அடை. அதுக்கு தோதா அவியல். செட்டிநாட்டு அரிசி அடைக்கு சூப்பரா ஒரு காரச்சட்னி, தோசையும் சூப்பர். :) ஒரு விசிட் கண்டிப்பா செய்யலாம். காசுக்கேத்த தோசை!! ********************************************************************************* பேப்பர் படிக்கும் போது மனதை சங்கடம் அடைய செய்யும் விஷயத்தில் முக்கியமானது பள்ளியில் பிள்ளைகள் சித்ரவதை படுத்தப்படுவது. டீச்சர் அடிச்சு கை ஒடிஞ்சது, முகத்தில் காயம், கண்ணில் ரத்தம் எல்லாம் போய், ஹெட்மாஸ்டர் கோவத்துல அடி பின்னியதில் படக்கூடாத இடத்தில் பட்டு அந்த இடம் வீங்கி அந்தக்குழந்தை இறந்தே போய்விட்டது!!! :( குழந்தைகளை உளவியல் ரீதியா ட்ரீட் செய்யணும்னு இவங்களுக்கு யார் சொல்லிக்கொடுப்பது!!! ஒசோலோவில் ஆந்திரா பெற்றோர் குழந்தையை சித்ரவதை செய்தார்கள்னு ஜெயிலில் போட்டாங்க. நம்ம நாட்டுல அப்படி ஒரு சட்டம் இருந்தா புதுசா ஜெயில்கள் கட்ட நேரும். எல்லோருமே அப்படின்னு சொல்ல வரலை. ஆனா நிறைய்ய கூட்டம் இருக்கு. பெத்தவங்களை விடுங்க இப்படி ஆசிரியர்கள் சித்ரவதைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கணும். அதுவரையில் எல்லா பிள்ளைகளை காப்பாத்துன்னு இறைவனுக்கு ஒரு வேண்டுகோள், பிரார்த்தனை!!! *************************************************************************************
அப்புறம் இந்த கேஸ் சிலிண்டர் விவகாரம். மான்யவிலையில் 6 சிலிண்டர்கள் மட்டும்தான்னு அரசாங்கம் அறிவிச்சு 4 மாசம் ஆச்சு. இந்த 6 எப்பலேர்ந்து கணக்கு? அதுதான் குழப்பமே. தெளிவா கேட்டுகிட்டு வந்து உங்ககிட்ட பகிர்ந்துக்கறேன் இப்ப. செப்டம்பர் மாதம் தான் இந்த அறிவிப்பு வந்தது. அதனால அதுக்கு முன்னால நீங்க எத்தனை சிலிண்டர் வாங்கினாலும் அதைப்பத்தி கணக்கில்லை. ஆனா செப்டம்பர்லேர்ந்து மார்ச் வரை உங்களுக்கு 3 சிலிண்டர் மான்யவிலையில் கிடைக்கும். பிப்ரவரிக்குள்ளேயே மான்ய சிலிண்டர் கோட்டா முடிஞ்சிருச்சுன்னா 1000 ரூவா கொடுத்து வாங்கணும்.
அடுத்த ஏப்ரல் 2013 - மார்ச் 2014 வரை புதுசா உங்களுக்கு 6 மான்யவிலை சிலிண்டர் கிடைக்கும். அப்புறம் முக்கியமான விஷயம் நாம் கேஸ் கனெக்‌ஷன் வாங்கினப்ப பாஸ்புக் ஒண்ணு கொடுத்தாங்கள்ல.... அதைத்தேடி எடுத்து கைகெட்டும் இடத்துல வெச்சுக்கோங்க. கேஸ் புக் செஞ்சதும் அந்த தேதி அந்த நம்பர் எல்லாம் எழுதி வெச்சுக்கிட்டு கேஸ் டெலிவரி ஆள்கிட்ட அதுல டெலிவரி தேதி எழுதி கையெழுத்து வாங்கி வெச்சுக்கதால, நமக்கு எவ்வளவு மான்ய சிலிண்டர் ஆகிருக்குன்னு தெரியும், எந்தெந்த தேதில புக் செஞ்சிருக்கோம்னு ரெக்கார்டும் இருக்கும். இது இனி கண்டிப்பா செய்ய வேண்டிய விஷயம். வீட்டுல இருக்கறவங்களுக்கும் இந்த பாஸ்புக் மேட்டர் சொல்லி மறக்காம கையெழுத்து வாங்கி வெச்சுக்க சொல்லுங்க.
*******************************************************************************

10 comments:

அமுதா கிருஷ்ணா said...

கேஸ் இனிமேல் 9 சிலிண்டர்கள் மானிய விலையில் கிடைக்கும் போல.

pudugaithendral said...

வாங்க அமுதா கிருஷ்ணா,

குஜராத் தேர்தலுக்கு அப்புறம்தான் அந்த அறிவிப்பு வரும்னு நினைக்கறேன்.

வருகைக்கு மிக்க நன்றி

வெங்கட் நாகராஜ் said...

பிரியாணி சுவை நன்று.....

ஆத்மா said...

இது என்னது புதுக் கதையா இருக்கு
உலகம் அழியப் போகுதுன்னு சொன்னாங்க அப்புறம் என்ன ஒரு பகுதி மட்டும் தப்புறது ?

pudugaithendral said...

வருகைக்கு மிக்க நன்றி சகோ

pudugaithendral said...

வாங்க ஆத்மா,

2012 படம் பார்த்த எஃபக்ட்டா இருக்கும் :))

வருகைக்கு மிக்க நன்றி

வல்லிசிம்ஹன் said...

சுவையான பிரியாணி. இன்னிக்கு கனெக்டிக்கட்டில் நடந்திருக்கும் அநியாயம் மனத்தளவில் அனைவரையும் வதைக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு திகில் செய்தி. செட்டிநாடு அவியலும் அடையும் சூப்பர் பா.

ஹுஸைனம்மா said...

உலகம் அழியப் போவுதுன்னு நடக்கிற காமெடிகளைப் பாத்து சிரிப்பாத்தான் வருது. என்னவோ போங்க. அழிஞ்சாலும் நல்லதுதான். அழியாட்டி, வேற வழியில்ல, வாழ்ந்துதானே ஆகணும்??!! :-))))

கேஸ் சிலிண்டர், வருஷத்துக்கு ஒன்பதுன்னா பரவால்லை, சின்னக் குடும்பங்கள் சமாளிச்சுடலாம்.

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

நிஜம்மாவே இது கலியுகே ப்ரதமபாதே தானான்னு டவுட்டா இருக்கு!! :((

வருகைக்கு மிக்க நன்றிம்மா

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

அழிஞ்சாலும் நல்லதுதான். அழியாட்டி, வேற வழியில்ல, வாழ்ந்துதானே ஆகணும்??!! :-))))//

கரீட்டு நாம் என்ன செய்ய முடியும். நம்ம கையில ஏதும் இல்லையே.

9 சிலிண்டர் வரும்னு நம்பிக்கை இருக்கு. பாப்போம்.