Sunday, January 27, 2013

ஆஷிஷ் அம்ருதா பதிவுகள்

பசங்க பேர்ல பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு. அவங்க லூட்டி அடிக்கறதை விட்டுட்டாங்கன்னு இல்ல. இப்பவும் ரெண்டு பேரும் கும்மாளம் தான். சமயத்துல வீட்டுல சண்டை போடுற சத்தம் கேட்கும், என்னாச்சோன்னு ஓடினா, “என்னம்மா! பேசிக்கிட்டு தானே இருக்கோம்னு!!” சொல்வாங்க. அவ்வ்வ்வ். இவங்க குரலை வெச்சு பேசுறாங்களா? சண்டை போடறாங்களான்னே புரிபடறதில்லை.  இன்னமும் ரெண்டு பேரும் டாம் & ஜெர்ரி தான்.


 ஆஷிஷ் முன்னாடியெல்லாம் ஒழுங்க பேப்பர் படிப்பாப்ல. வர வர நியூஸ் பேப்பரை சும்மா மேஞ்சிட்டு, ஹைதரபாத் க்ரோனிகள், ஹைதரபாத் டைம்ஸ் மட்டும் படிக்கறதை பாத்திட்டு ஒரு நாள்,” அண்ணா நியூஸ் பேப்பர்ல மெயின் பேப்பரை விட்டுட்டு, சினிமா நியூஸ், டான்ஸ் நியூஸ் வர்றதை மட்டும் படிக்கறது தப்பு. மெயின் பேப்பரையும் படின்னு சொன்னேன்!!’ அதுக்கு சாரோட பதில். அம்மா ஃபார் யுவர் கைண்ட் இன்பர்மேஷன், மெயின் பேப்பரில் கொலை, கற்பழிப்பு தப்ப வேற எதாவது முக்கியமான செய்தியா போடறாங்களா?? அதைப்படிச்சு ஸ்ட்ரெஸ் ஏர்றதுக்கு பேசாம இருக்கலாம்!!
டீவியில செலக்ட் செஞ்சு நியூஸ் பாக்கலாம். பேப்பர் வேணாம் :((

 ஏதாவது கேட்டா சில் மம்மி, லைட் தீசுகோ (கையில லைட் எடுத்துக்க சொல்லலை,  மேட்டரை லைட்டா எடுத்துக்கோன்னு அர்த்தம்)  :( :)
*************************************************************************

அந்தக்கால படங்களைப்பத்தி பசங்களுக்கு  சொல்லிக்கிட்டு இருப்போம். அதுலயும் தேவர் பிலிம்ஸ் படங்களில் வரும் மிருகங்கள் எல்லாம் அவங்க கிட்ட இருந்த பழக்கப்பட்ட மிருகங்கள்னு சொல்லியிருக்கோம்.

அன்னை ஓர் ஆலயம் சினிமா போட்டப்ப எல்லோரும் உக்காந்து பாத்தோம். அதிசயமா இருந்தது பசங்களுக்கு. குட்டி யானை ரஜினியை படுத்தும் பாட்டைப் பார்த்து ரசிச்சுகிட்டு இருந்தாங்க. மிருகத்தை வெச்சு படம் எடுக்கறது தேவர் ஃபிலிம்ஸ்ல மட்டும்தான்னும் சொன்னேன்.

அடுத்த நாள் என் கிரகம்!! சிங்காரவேலன் சினிமா டீவியில “வாட்டேஎ கருவாடு “ காமெடிக்காக பாத்துக்கிட்டு இருந்தோம்.  “சொன்னபடி கேளு மக்கர் பண்ணாத” பாட்டுல ஆடு. மாடு.கொழி, வாத்து எல்லாம் வர்றதைப்பார்த்து
எங்க கிட்ட வந்து விழுந்த கேள்வி,”இதுவும் தேவர் ஃபில்மிஸ் தயாரிச்சதா!!”
இல்ல  மிருகங்களை வெச்சு படம் எடுக்கறது அவங்கதான்னு சொன்னீங்களே!!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

*************************************************************************************


காதலன் படப்பாடல்கள் பசங்களுக்கு எப்பவும் ரொம்ப பிடிக்கும். மடை திறந்து பாட்டு பசங்க கிட்ட ரீமேக்காகி ரீச்சானது போல, அப்ப சூப்பர் டூப்பர் ஹிட்டான முக்காலா முக்காபுலா இப்ப ஏபிசிடி படத்துல பிரபுதேவா ஆடுற இந்தப்பாட்டு மகனார் கிட்டதான் முதன் முதலா தெரிஞ்சுகிட்டேன்.

எங்கவீட்டு ப்ரபு தேவா நேற்று தன்னுடைய காலேஜில் ஃபேர்வெல் பார்ட்டிக்காக  கொரியாக்ராஃப் செஞ்சு  அசத்தியிருக்கார். டான்ஸ், கிடார், பாட்டுன்னு அன்னைக்கு சார் செம கலக்கு கலக்கியிருக்காப்ல. ஆர்கனைசிங் கமிட்டியிலயும் பிரின்சிபல் சார் சேர்த்துவிட்டுட்டார்.

********************************************************************************

அம்ருதம்மாவுக்கு அன்னைக்கு ஒரே டென்ஷன். என்னம்மான்னு கேட்டா, எங்க ஸ்கூல் ஃப்ரிஃபக்ட்ஸ் கவுன்சில் செலக்‌ஷன் நடக்குது. என்னை எங்க டீச்சர் ரெகமண்ட் செஞ்சிருக்காங்க.  இன்னைக்கு பிரினிசிபலோட இண்டர்வ்யூ இருக்குன்னு சொன்னாப்ல.  என்கரேஜ் செஞ்சு அனுப்பினேன். முதல் ரவுண்ட்டில் செலக்ட் ஆகி இனி காம்பயினிங் செஞ்சு ஓட்டு வாங்கணும். அதுவும் முடிஞ்சது. 6 ஓட்டு வித்தியாசத்துல தன்னுடைய ஹவுஸ் கேப்டன் பதவியை இழந்திட்டாப்ல.  (வரும் கல்வியாண்டுல துணை கேப்டன், அடுத்த கல்வியாண்டுல கேப்டன்.)


ஆனா அவங்க பள்ளியில அம்ருதாவை விட மனசில்லை. prefects counsila அம்ருதா கண்டிப்பா இருக்கணும் அப்படின்னு முடிவு செஞ்சு டிசிப்ளின் வைஸ்கேப்டனா பதவி கொடுத்திருக்காங்க. ஸ்போர்ட் மீட்ல சீஃப் கெஸ்ட் கையால பேட்ஜ் குத்தி, பதவிப்ரமாணம் செஞ்சுகிட்டாங்க. அன்னைக்கு  பெத்தவங்களை பெருமை படுத்தும் விதமா மகள் செலக்டாகி இருப்பதை சொல்லி கடிதத்தோட, எங்களுக்கு இருக்கை ரிசர்வ் செஞ்சிருப்பதாக லெட்டரில் சொல்லியிருந்தாங்க.

மகள் பதவிப்ரமாணம் எடுத்துக்கொள்ளும் பொழுது கண்ல தண்ணீர் வழிஞ்சுகிட்டே இருந்துச்சு!!! ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும்.. குறளோட அர்த்தம் புரிய வைக்கறாங்க பசங்க.16 comments:

வெங்கட் நாகராஜ் said...

இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்....

கோமதி அரசு said...

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும்.. குறளோட அர்த்தம் புரிய வைக்கறாங்க பசங்க.//

ஆஷிஷ் அம்ருதாவிற்கு வாழ்த்துக்கள். மேலும் மேலும் அவர்கள் பெற்றோர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும்.
வாழ்த்துக்கள் குழந்தைகளுக்கு.
வாழ்த்துக்கள் குழந்தைகளை நன்கு வளர்த்த உங்களுக்கு.
வாழ்க வளமுடன்.

Ranjani Narayanan said...

குழந்தைகளைப் பற்றிய பதிவு நன்றாக இருந்தது. அவர்களின் உலகமே தனி. மெயின் பேப்பர் படிக்காததற்கு ஆஷிஷ் கொடுத்த பத்தி அருமை!

மகளின் சாதனை கண்டு உவந்ததற்கு ஈடு வேறு என்ன இருக்க முடியும்?

உங்கள் வீட்டு பிரபுதேவாவுக்கும், அம்ருதா (இவங்களுக்கு என்ன பெயர்?) ஆசிகள்.

புதுகைத் தென்றல் said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ

புதுகைத் தென்றல் said...

வாங்க கோமதிம்மா,

ஆரம்பத்துல கஷ்டபட்டதுக்கு பலனை இப்ப அனுபவிக்கறேன்னு சொல்லணும். :)

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க ரஞ்சனி நாராயணன்,

முதல் வருகைக்கு மிக்க நன்றி.

மகன் பேரு ஆஷிஷ். மகள் பேரு அம்ருதவர்ஷிணி. செல்லமா அம்ருதா. :)

வருகைக்கும் உங்க ஆசிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) newspaper sema..
லைட் தீஸுக்கோங்க :)

அன்புடன் அருணா said...

இருவருக்கும்,உங்களுக்கும் பூங்கொத்துக்கள்!!

கோவை2தில்லி said...

இருவருக்கும் வாழ்த்துகள்.

புதுகைத் தென்றல் said...

வாங்க கயல்,

நலமா? லைட் தீஸுகோ இப்ப எனக்கு தாரக மந்திரமா போயிடும் போல இருக்கு :)

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க அருணா,

பூங்கொத்துக்கும் வருகைக்கும் மனமார்ந்த நன்றிகள்

புதுகைத் தென்றல் said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கோவை2தில்லி

அமைதிச்சாரல் said...

நியூஸ் பேப்பர் விஷயத்துல என் பையரும் இப்படித்தான் சொல்றார். தொலைக்காட்சிச் செய்திகளைக்கூட அவ்வளவா விரும்பறதில்லை. இதையெல்லாம் பாக்கறதுனால டென்ஷன் ஏறுது. அதுவுமில்லாம மீடியாக்காரங்களும் சின்ன விஷயத்தைக்கூட ஊதிப் பெரிசாக்கிடறாங்க. இதுக்கு எப்பவாவது லைட்டா செய்திகளை மேய்ஞ்சாப் போறுமேங்கறார்.

பிள்ளைகள் சபையில் முந்தியிருப்பதைப் பார்க்கும் பேறை விட வேறென்ன இருக்கு..

புதுகைத் தென்றல் said...

வாங்க அமைதிச்சாரல்,

ஆமாம் நியூஸ் கூட சானல்கள் கட்சிசார்ந்தவையா இருந்தா அம்புட்டுதான்.

//பிள்ளைகள் சபையில் முந்தியிருப்பதைப் பார்க்கும் பேறை விட வேறென்ன இருக்கு..//

சத்தியமா இல்லை. :))

வருகைக்கு மிக்க நன்றி

பால கணேஷ் said...

இவங்க ரெண்டு பேரும் உங்க எழுத்துக்கள் மூலமா ஏற்கனவே மனசுக்கு நெருக்கமானவங்க. ஆஷிஷ் சூப்பரா ஆடுவார்னு படத்தைப் பார்த்தாலே தெரியுது. அம்ருதாம்மா உங்களைப் பெருமைப்பட வெச்சதுல சந்தோஷம். உங்களோட ரெண்டு செல்லங்களுக்கும் இன்னும் நிறைய நிறைய வெற்றிகளைக் குவிக்க என் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

புதுகைத் தென்றல் said...

வாங்க பாலகணேஷ்,

வாழ்த்துக்களை சொல்லிடறேன்.

வருகைக்கு மிக்க நன்றி