Wednesday, January 23, 2013

நல்ல தூக்கமே வருக!! வருக!!!

இப்படில்லாம் குண்டக்க மண்டக்க யோசிக்காம பதிவை படிங்க. :) இது  தூக்கத்தைப் பத்திய பதிவு.  டயர்டா இருக்கு! எப்படா வீட்டுக்கு போய் தூங்குவோம்னு சிலருக்கு இருக்கும் (மத்த சிலர் ஆபீசில, ஸ்கூல்ல தூங்கிடுவாங்கல்ல)

மெல்ல மெல்ல இருட்டத் துவங்கியதுமே நமக்கு தூங்கும் நேரத்திற்கான எதிர்பார்ப்பு இருக்கும். அந்த நேரம் நாம ஓய்வு எடுக்கறோம். நல்ல தூக்கம் கிடைக்கும் பொழுதுதான் நம் உடல் உறுப்புக்கள் புத்துணர்ச்சி பெறுது. தூங்கி எந்திரிச்சா தலைவலி, உடல்வலி எல்லாம் ஓடிப்போயிட காரணம் நாம அசந்து தூங்கும் நேரத்தில் தான் உடலில்  மெயிண்டெனஸ் வொர்க் நடக்கும். ஏதும் ரிப்பேர் இருந்தா அது சரியாகும். அதனால் தான் நாம தூங்கி ஏந்திரிச்சதும் ஃப்ரெஷ்ஷா இருப்போம். இதெல்லாம் நமக்கு ரொம்ப நல்லாத் தெரியும். ஆனா அதென்னவோ படுக்கையில போய் படுத்தா கொஞ்ச நேரம் தூங்குவோம். அப்புறம் பாதி ராத்திரிக்கு கொட்ட கொட்ட முழிச்சிக்கிடுவோம்.


இதைப்படிக்கும் போது ஆஹா எனக்கும் இப்படித்தானே நடக்குதுன்னு தோணுதா, வாங்க ஃப்ரெண்ட் வாங்க, இது உங்களுக்கும் எனக்கும் மட்டுமல்ல
தூக்கமில்லாம அவதிப்படும் எத்தனையோ இந்தியர்கள் நமக்கு துணையா இருக்காங்க. 

வயசானவங்க தான் தூக்கமில்லாம அவதிப்படுவாங்க. ஆனா இப்ப இள வயதினரும் தூக்கத்தை தொலைச்சிட்டுத்தான் இருக்காங்க. உடம்பு அசதியா இருந்தா தூங்கிடுவாங்கன்னு சொல்வாங்க. ஆனா அந்த அசதி மறைய வரை தூங்கிட்டு அப்புறம் முழிச்சிடுவாங்க சிலர். கண்ணைத்திறந்து பார்த்தா பாதி ராத்திரி மணி 1 அல்லது 2 அதுவும் இல்லாட்டி விடியாக்காலை மணி 3 ஆ இருக்கும். தூங்க முயற்சி முடியாம போய் சிலர் எந்திரிச்சி ஆபிஸ் வேலை பாத்துக்கிட்டு இருப்பாங்க. இல்லாட்டி டீவி, கம்ப்யூட்டர்னு இருப்பாங்க.

இப்படி தூக்கமில்லாம இருப்பது பல்வேறு காரணத்தால இருக்கலாம், ஏதேனும் நோயின் அறிகுறியா கூட இருக்கலாம்.



தூக்கமில்லாம இருக்கும் இந்தக்குறை 3 வாரம் முதல் நாலு வாரம் வரைக்கூட போகும்னு மருத்துவர்கள் சொல்றாங்க. ஆனா இதனால மறதி, மனச்சோர்வு, எரிச்சல், இவைகளோட இதய நோய்களும் தாக்கும்னு சொல்றாங்க. நல்ல தூக்கம் ரொம்ப அவசியமான ஒரு விசயம்.

பிரச்சனைன்னா அதுக்கு தீர்வும் இருக்கும்ல!!! மருத்துவர்கள் என்ன சொல்றாங்கன்னு பாப்போம்.

1. மாலை 6 மணிக்கு மேல காபி குடிக்க கூடாது. காபியில் இருக்கும் கஃபைன் தூக்கத்தை விரட்டி அலர்டா வெச்சிடும். அப்ப இரவு தூங்க முடியாது.

2. மாலை  உடற்பயிற்சி ஏதாவது செய்வது நல்லது. நடை கூட போதும்.

3.  ராத்திரி எத்தனை மணியானாலும் டீவி சீரியல், கணினி, மொபைல்னு இருக்கறவங்களா நீங்க உங்களுக்குத்தான் இந்த பாயிண்ட்.

ஸ்மார்ட் ஃபோன்கள், கம்ப்யூட்டர், லேப்டாப், டீவி இவைகளிலிருந்து வெளிவரும்  அதிக  வெளிச்சம் கொண்ட திரைகளைப் பார்ப்பது இரவு நேரத்தில் சுரக்கும்  melatonin  என்கிற ஹார்மோன் சுரைப்பதை அமுக்கிடுது.
இந்த ஹார்மோன் தான் நமக்கு நல்ல தூக்கம் கிடைக்க காரணம்.

அதனால் தான் பெட்ரூம்களில் டீவி, கம்ப்யூட்டர் வைத்துக்கொள்ள வேண்டாம்னு சொல்றாங்க.  அதனால நல்ல தூக்கம் வேணும்னா தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னாடி டீவி, கம்ப்யூட்டர், லேப்டாப், ஸ்மார்ஃபோன் எல்லாத்துக்கும் “ குட் நைட்” சொல்லி ஆஃப் செஞ்சு வெச்சிடணும்.

4. சின்னக் குழந்தைகள் தூங்கணும்னா ரூம் லைட்டை ஆஃப் செஞ்சிட்டு படுக்க வைப்போமே, அது மாதிரி தேவையில்லாத விளக்குகளை ஆஃப் செஞ்சு வெச்சிட்டு குறைவான வெளிச்சம் அதுவும் தேவைப்படும் இடங்களுக்கு மட்டுமே இருக்கும் படி செஞ்சா தூங்க முடியும்னு சொல்றாங்க.

அதாவது இரவா, பகலான்னு புரியாம மண்டை குழம்பி போகும் அளவுக்கு வெளிச்சமா இரவில் இருந்தா தூக்கம் வராது.

5. தூங்குவதற்கு முன் சிலருக்கு குளிக்க பிடிக்கும். ஆனா ஜலக்ரீடை செய்யாம, ஜஸ்ட் க்விக் ஷவர் எடுத்துக்கொள்வதுதான் நல்லது. ரொம்ப சூடான தண்ணில குளிச்சா உடம்பும் சூடாகும். அத்தோட போய் தூங்கினா வேர்த்து விறுவிறுத்து போகும்.

6. தூங்கப்போகும் முன் இடம் சூடான பால் குடிக்கலாம்.

7. ரொம்ப முக்கியமான விஷயம் தூங்கும் நேரம். நம்ம உடம்பில் BIOLOGICAL CLOCK   இருக்கு.  ( An innate mechanism that controls the physiological activities of an organism that change on a regular cycle.) நம்ம உடம்புகளில் இருக்கும் செல்கள் இதை வெச்சுத்தான் நேரத்தை உணர்வது.  இந்த கடிகாரம் சூரிய ஒளி மற்றும் தட்பவெட்பத்தை வைத்து இயங்குகிறது.  அதிக வெளிச்சம், அதிக இருட்டு இரண்டும் இதன் இயக்கத்தை மாற்றிப்போடும்.



8. தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு தூங்கப்போய்விடுவது நல்லது . அதற்கு முன் தூக்க நேரத்திற்கான முன்னேற்பாடுகளை செய்வதை வழக்கமா வெச்சுக்கணும்னு மருத்துவர்கள் சொல்றாங்க. குறைந்த பட்சம் 7 மணிநேர தூக்கம் அவசியம் என்பதால அதுக்கு தகுந்தவாறு நாம்  இரவு தூங்கப்போகும் நேரத்தை நிர்ணயம் செய்து கொண்டு டீவி, கம்ப்யூட்டர் எல்லாவற்றிலிருந்தும் விலகி, இனிமையான பாடல்கள் கேட்கலாம், புத்தகம் படிக்கலாம்.

பின் இயல்பா தூக்கம் வரும் என்றும் இதனால் மதியம் தூங்க தேவையிருக்காது என்றும் ஒரு வாரம் முழுவதும் சுறுசுறுப்புடன் இயங்க முடியும் என்றும் சொல்றாங்க. ஆனந்தமா தூங்கி ஆரோக்யமா வாழ்வோம்.




 ஆவ்வ் பதிவையும் நேரம் கிடைக்கும் போது படிங்க








 

23 comments:

Jaleela Kamal said...

மிக அருமையான பகிர்வு
எல்லா டிப்ஸும் அருமை

இப்ப எங்கே தூங்கும் முன் 1 மணி நேரம் முன் டீவி , கண்னி எல்லாம் ஆஃப் பண்றாங்க.

pudugaithendral said...

வாங்க ஜலீலா,

இப்ப எங்கே தூங்கும் முன் 1 மணி நேரம் முன் டீவி , கண்னி எல்லாம் ஆஃப் பண்றாங்க.//

நீங்க சொல்றது சரிதான்
இரவு 12 மணிவரைக்கும் தொல்லைக்காட்சிகளோடத்தான் பலர் இருக்காங்க.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க ஜலீலா,

இப்ப எங்கே தூங்கும் முன் 1 மணி நேரம் முன் டீவி , கண்னி எல்லாம் ஆஃப் பண்றாங்க.//

நீங்க சொல்றது சரிதான்
இரவு 12 மணிவரைக்கும் தொல்லைக்காட்சிகளோடத்தான் பலர் இருக்காங்க.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

அம்பாளடியாள் said...

யார் யாருக்கெல்லாம் இந்தப் பகிர்வு உபயோகமாய் இருந்ததோ
இல்லையோ எனக்கு மட்டும் மிகவும் உபயோகமான பகிர்வு இது தான் :)
மேலும் மேலும் தொடர என் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

ADHI VENKAT said...

சிறப்பான பகிர்வு. நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது.

”தளிர் சுரேஷ்” said...

அருமையான ஆலோசனை பதிவு! மிக்க நன்றி!

pudugaithendral said...

வாங்க அம்பாளடியாள்,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. ஹேவ் எ குட் ஸ்லீப்.

pudugaithendral said...

வாங்க கோவை2தில்லி,

நானும் தெரிஞ்சிகிட்டதை பகிர்ந்துக்க ஆசை அதான் பதிவு.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க சுரேஷ்,

வருகைக்கும் கருத்துக்கு மிக்க நன்றி

அமுதா கிருஷ்ணா said...

10 hours thungina enna seirathu?? nanga ellam kumbakarnan sisters....

nice post..

கோமதி அரசு said...

இரவு தூங்கப்போகும் நேரத்தை நிர்ணயம் செய்து கொண்டு டீவி, கம்ப்யூட்டர் எல்லாவற்றிலிருந்தும் விலகி, இனிமையான பாடல்கள் கேட்கலாம், புத்தகம் படிக்கலாம்.//

தூங்க போகும் போது எனக்கு இரவு பாட்டு கேட்க வேண்டும் . தூக்கம் வராத நேரம் புத்தகம் படிப்பேன்.
உங்கள் பதிவு நல்ல பயனுள்ளது.
வாழ்த்துக்கள்.

அன்புடன் அருணா said...

/அதனால் தான் நாம தூங்கி ஏந்திரிச்சதும் ஃப்ரெஷ்ஷா இருப்போம்./
அய்யய்யோ.....எனக்குத் தூங்கி எழுந்ததும்தான் ஏதோ வெட்டி முறித்தது போல் அசதியா இருக்கும்!! :))

ஸாதிகா said...

அருமையான அத்தியாவசியமான பகிர்வு.பகிர்வுக்கு நன்றி.

pudugaithendral said...

வாங்க கோமதிம்மா,

நானும் உங்களைப்போலத்தான். பாட்டு, புத்தகம் கொஞ்சம் முடிச்சு மெடிட்டேஷன் செஞ்சிட்டு படுப்பேன்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க அருணா,

அய்யய்யோ.....எனக்குத் தூங்கி எழுந்ததும்தான் ஏதோ வெட்டி முறித்தது போல் அசதியா இருக்கும்!! :))//

ஆஹா...

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸாதிகா

pudugaithendral said...

வாங்க அமுதா கிருஷ்ணா,

கொடுத்து வெச்சவங்க. நல்லா தூங்குங்க.

வருகைக்கு மிக்க நன்றி

வல்லிசிம்ஹன் said...

எனக்குத் தேவையான பதிவு. இன்னிக்குக்கூட 3 மணிக்கு முழிச்சாச்சு.நாளைக்குத்தானே பயணம்னு இவர் மிரட்டறார்.
என்க்குத் திடீர் சந்தேகம் 25 ஆ 24 ஆ ன்னு:)
சாமின்னு ப்ளான் செக் செய்துட்டு திருப்பிப் படுத்தத் தூக்கம் ஹைதைவரை போயிடுத்து.:)
நன்றி ராஜா.

ராமலக்ஷ்மி said...

மிக நல்ல பதிவு. நன்றி தென்றல்.

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

ஆனந்தமான பயணத்துக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராமலக்‌ஷ்மி

வெங்கட் நாகராஜ் said...

நல்ல தூக்கத்திலே இருந்ததால இப்ப தான் படிக்கமுடிஞ்சுது! :)

pudugaithendral said...

வெரி குட் சகோ,

அப்படித்தான் இருக்கணும்.

வருகைக்கு மிக்க நன்றி