Friday, January 11, 2013

Holistic Destination


Holistic Destination இப்படித்தான் லியோனியா தன்னை அறிமுகப்படுத்திக்குது. 500 ஏக்கர் பரப்பளவில் பார்த்து பார்த்து கட்டியிருக்காங்க. 3 நட்சத்திர ஹோட்டல்கள், வில்லாக்கள் தவிர லகூன் ஸ்டைல் வில்லாக்களும் உண்டு.


திருமணம், கம்பெனி கெட் டுகதர், மீட்டிங்குகள் எல்லா வற்றிற்கும் இங்கே இடம் உண்டு. பூல் ரெஸ்டாரண்டுன்னு ஒரு இடம் இருக்கு. அங்கே தம்பதியர் விரும்பினால் ஸ்விம்மிங் பூலுக்கு நடுவே மேஜை போட்டு உணவு பரிமாறப்படுது!!!


 நாங்க அங்க தங்கியிருந்த போது 3 திருமணம் 5 அல்லது 6 கம்பெனி கெட்டுகதர் எல்லாம் இருந்தது. அதைத் தவிர தங்கியிருக்கும் கெஸ்ட்கள். இத்தனை பேருக்கும் சமைத்து கொடுப்பது என்றால் எத்தனை நேர்த்தியான செஃப்கள் இருக்க வேண்டும். தரமான சுவையான உணவு!!!


 அடுத்த நாள் காலை எழுந்ததுமே பிள்ளைகள் ஸ்விம்மிங் பூல் போகணும்னு சொல்லிட்டாங்க. முதல்ல சாப்பிட போகலாம்னு காலை உணவுக்கு போனோம். காலை உணவும் அருமையா, இருந்தது. ரொம்ப நாளைக்கப்புறம் croissant சுவையானதா சாப்பிடக் கிடைச்சது. தென்னிந்திய உணவு அதிலும் ஆந்திரா பெசரட்டு சின்னசின்னதா சுடச்சுட ஊத்திக்கொடுத்தது சூப்பர். லஸ்ஸி பெரிய கண்ணாடி ஜார்ல இருந்தது. :)


 ரொம்ப நாளைக்கப்புறம் எங்க எல்லோருக்குமே மனதுக்கு நிறைவான ஒரு இடமா இருந்தது. இந்தியா வந்ததக்கப்புறம் இப்படி ரிலாக்ஸ்டா, இனிமையான சாப்பாடா ஒரு இடம் எங்களுக்கு கிடைச்சதில்லை. அந்தக்குறையை லியோனியா போக்கிடிச்சு.


அங்கேயிருந்து அயித்தானும் பிள்ளைகளூம் ரூமுக்கு போய்ட்டு ஸ்விம்மிங் பூல் போக ரெடியானாங்க. எனக்கு ஸ்விம் செய்யும் மூட் இல்லை. நான் காலாற நடக்க ஆரம்பிச்சேன். மொபைலில் பாட்டு கேட்டுக்கொண்டு ஆனந்தமாக ஒரு நடை. திரும்ப ரூமுக்கு வந்து ரிலாக்ஸாகி ரெடியாகி கிளம்ப வேண்டும் என்பதால் பேக்கிங் செய்து வைத்தேன். அயித்தானும் பிள்ளைகளூம் வந்ததும் சூடாக ப்ளாக் டீ குடித்தோம். கொஞ்ச நேரம்  ரெஸ்ட் எடுத்திட்டு செக் அவுட் செஞ்சோம்.

முதல்நாளே பிஸ்த்ரோவில் தாமதமானதுப்பத்தி சொல்லியிருந்தேன். அவங்க கிட்ட எழுத்து மூலமாவும் எழுதிக்கொடுத்திட்டு வந்தேன். என்ன ஆச்சரியம் கி்றிஸ்துமஸுக்கு அடுத்தநாள் அவங்க கிட்டேயிருந்து ஒரு மெயில். தங்களுக்கு நேர்ந்த உபத்திர்வத்துக்கு மன்னிக்கவும். மேலிடத்தில் இதைப்பற்றி சொல்லிவிட்டோம். தக்க நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்னு!! எடுத்திருக்காங்களோ இல்லையோ, ஆனா மெயில் அனுப்பி சாரி சொன்னது நல்லா இருக்கு.  இதுவரைக்கும் வேற எங்கேயிருந்தும் நமக்கு ரிப்ளை வந்ததே இல்லை.


  செக் அவுட் செஞ்சு வெளியே வரும்பொழுதுதான் லகூன் ஸ்டைல் வில்லா இருப்பது தெரியும்.  அடுத்தவாட்டி கண்டிப்பா அங்கதான் ஸ்டே செய்யணும்னு பசங்க முடிவு செஞ்சிட்டாங்க.  :))


மொத்தத்தில் ஒரு இனிமையான அனுபவம், புத்துணர்ச்சியுடன் வெளியே வந்தோம்.  அடுத்த நாளும் எனக்கு ரெஸ்ட் கொடுத்து உட்கார வைத்துவிட்டார்கள். ( லோனாவாலா போயிருந்தா வீடு எப்படி இருக்குமோ... அப்படியே இருப்பதா நினைச்சுக்கணும், துணி துவைக்கறேன், மடிக்கறேன், க்ளீன் செய்யறேன்னு போக கூடாது. சாப்பாடு வாங்கிட்டு வந்து கொடுக்கப்படும். காஃபி/டீக்கு நாங்க இருக்கோம். அப்படின்னு சொன்னதக்கப்புறம் ரிலாக்ஸா உட்காராம என்ன செய்ய???!!)

:)))




15 comments:

இராஜராஜேஸ்வரி said...

இனிமையான அனுபவம், புத்துணர்ச்சியுடன்
பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்

புதுகைத் தென்றல் புகழ்த்தமிழ் காத்து
புதுமைத் தமிழைப் புனை!

கவிஞா் கி. பாரதிதாசன்
பிரான்சு

இராஜராஜேஸ்வரி said...

இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

ADHI VENKAT said...

விட்டதெல்லாம் உட்கார்ந்து படித்து முடித்து விட்டேன்.

அருமையான ட்ரிப்பாக இருந்திருக்கும் போல....எப்படியோ மனசு ரிலாக்சா இருந்தாலே போதுமே, சமையலறைக்கு மூடுவிழா என்றால் கேட்கவும் வேண்டுமா...:)

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

pudugaithendral said...

வாங்க இராஜராஜேஸ்வரி,

ஆமாம் புத்துணர்ச்சியா இருக்கு இப்ப.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

கவிஞர் அவர்களின் வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

நன்றி இராஜராஜேஸ்வரி,

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

pudugaithendral said...

வாங்க கோவை2தில்லி,

ஆமாம் அதை விட ஆனந்தம் ஏது :))

உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

சமீரா said...

நல்ல ஜாலி ட்ரிப்.. சுவாரஸ்யமா இருக்கு!! இப்போ நீங்க சொன்ன resort - கு போக ஆசை வருது!!

pudugaithendral said...

வாங்க மனோ சாமிநாதன்,

அறிமுகத்துக்கு மிக்க நன்றி. (முதல் முறையா நான் எழுதியிருக்கும் கதை வலைச்சரத்தில்... ரொம்ப சந்தோஷமா இருக்கு)

pudugaithendral said...

வாங்க மனோ சாமிநாதன்,

அறிமுகத்துக்கு மிக்க நன்றி. (முதல் முறையா நான் எழுதியிருக்கும் கதை வலைச்சரத்தில்... ரொம்ப சந்தோஷமா இருக்கு)

pudugaithendral said...

வாங்க மனோ சாமிநாதன்,

அறிமுகத்துக்கு மிக்க நன்றி. (முதல் முறையா நான் எழுதியிருக்கும் கதை வலைச்சரத்தில்... ரொம்ப சந்தோஷமா இருக்கு)

pudugaithendral said...

வாங்க மனோ சாமிநாதன்,

அறிமுகத்துக்கு மிக்க நன்றி. (முதல் முறையா நான் எழுதியிருக்கும் கதை வலைச்சரத்தில்... ரொம்ப சந்தோஷமா இருக்கு)

pudugaithendral said...

வாங்க சமீரா,

அப்படியே ஒரு எட்டு ஹைதைக்கு வந்தீங்கன்னா அந்த ரிசாட்டுக்கு போகலாம். :))

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க சமீரா,

அப்படியே ஒரு எட்டு ஹைதைக்கு வந்தீங்கன்னா அந்த ரிசாட்டுக்கு போகலாம். :))

வருகைக்கு மிக்க நன்றி