Thursday, February 28, 2013

ஹைதை ஆவக்காய பிரியாணி 28/2/13

ஹைதையில் பயங்கரவாத தாக்குதல் நடந்து இன்றோடு ஒருவாரம் ஆகிறது :(( இது இங்கே ஒன்றும் புதிதல்ல. ஆனால் பெரும் அளவில் இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்திருக்கிறார்கள். உண்மையில் தில்குஷ் நகரில் இருக்கும் சாய்பாபா கோவிலைத்தான் தாக்க திட்டம். வியாழகிழமை, கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் உயிர்ச்சேதத்தை கணிசமாக்க நினைத்திருந்தினர். போலீஸ் உயரதிகாரி ஒருவர் எதிர்பாராமல் மாலை பூஜையில் கலந்து கொள்ள வந்ததால் போலீஸ் கெடுபிடி பார்த்து தீவரவாதிகள் இடத்தை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. (இந்த சாய்பாபா கோவிலை சென்ற முறை கூட தாக்க திட்டமிட்டிருந்து என்பது முக்கியமான தகவல்)

இதில் இன்னும் கொடுமையான விஷயம் 2007ஆம் வருடம் மெக்கா மஸ்ஜித்தில் நடந்த தாக்குதலில் தன் காலை இழந்த வாலிபர் ஒருவர் மீண்டும் இம்முறை இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்திருக்கிறார்!! :((

******************************************************************************

ரொம்ப நாளா மண்டையில குடைஞ்சுகிட்டு இருந்த விஷயத்தை  சமீபத்தில் நடந்த சர்வேயில் பலரும் சொல்லியிருக்காங்க. அதிகமா பணம் இருந்தும் ஒழுங்கா முறையா வரிகட்டாதவங்க கிட்ட அதிக வரி வசூலிச்சா என்னான்னு யோசிச்சிருக்கேன். அதையே பலரும் எதிரொலிச்சிருக்காங்க.

இது மட்டும் நடைமுறைக்கு வந்தா நல்லா இருக்கும். பாப்போம்.

******************************************************************************

ருட்யார்ட் கிப்லிங்  அவர்களின் கடைசி 50 கவிதைகளை கண்டு பிடிச்சிருக்காங்க. இவைகளை வெகு சீக்கிரமே அச்சிடப்போறாங்க. 1936லேயே கிப்லிங் இறந்திட்டாரு. இப்ப வரைக்கும் அவருடைய 50 கவிதைகள் வெளியே தெரியாம இருந்திருக்கு....

கெமரூன் இந்தியா வந்து ஜாலியான் வாலாபாக் போய் இது நடக்காம இருந்திருக்கலாம்னு எல்லாம் செண்டிமெண்டா சொல்லிட்டு,  கோஹினூர் வைரத்தை தரமாட்டோம்னு சொல்லிருக்காரு.  அதை கொடுத்திருந்தா பெரியவர் மனசார ஃபீல் பண்ணாருன்னு நினைக்கலாம். இப்ப முதலைக்கண்ணீர்னு தான் தோணுது.
*******************************************************************************





போன வார  குண்டு வெடிப்புக்கு அப்புறம் ஹைதையில் பல சுற்றுலா தலங்கள் மூடப்பட்டிருக்கு. லும்பினி பார்க் (போன முறை தாக்கப்பட்டது)
ஒரு வாரமா  மூடப்பட்டிருந்தது. ஹுசைன சாகரில் போட்கள் போகவில்லை. தன்னை யாரும் பார்க்க வரலையேன்னு புத்தா நினைச்சிருக்கலாம்.

பேகம் பசாரில் குண்டு வெச்சிருக்கோம்னு செய்தி வந்தது. குண்டு வைக்கறவங்க இங்க வைக்கறேன்னு சொல்லிட்டா வெப்பாங்க. சார்மினார் போக வேண்டிய வேலை இருந்தது. போகலாமா வேணாமான்னு யோசனைதான்னாலும் குருட்டு தைரியத்தில் கிளம்பிட்டோம். (மாமா மகளுக்கு பர்ச்சேஸ் செய்ய)  எப்பவும் சார்மினாரை சுத்தி கன்னாபின்னான்னு ஆட்டோக்களும், கார்களும் போய்கிட்டு இருக்கும்.  ஆனா நேற்று போலீஸ் பந்தோபஸ்து ஜாஸ்தியாவே இருந்தது. ஆட்டோவை நிக்கவே விடலை.  பார்க்கவே அந்த இடம் அருமையா இருந்தது. வாகன போக்குவரத்துஇருந்தாலும் கொஞ்சம் நிதானமா நடக்க முடிந்தது.

சார்மினார் பக்கம் எப்பவுமே இந்தமாதிரி இருந்தா நல்லா இருக்கும்.
******************************************************************************
சார்மினாரில் ஒரு லட்சுமி கோவில் இருக்கு பாருங்கன்னு சொன்னாரு அங்கே கடை வைத்திருக்கும் எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர்.
எத்தனை வாட்டி சார்மினார் போயிருக்கோம், இது தெரியாதேன்னு நினைச்சு மாமா மகளையும் கூட்டிகிட்டு போனேன். சார்மினாரின் ஒரு பக்கம் இந்த லட்சுமி கோவில். பாக்யலட்சுமினு அம்மனுக்கு பேராம்.


சார்மினாருக்கு கீழே ஆரஞ்சு வண்ண கொடிகளுக்கு கீழே தெரியுது பாருங்க அதான் அந்த கோவில். புராதனமானது, சுயம்புன்னு மக்கள் சொல்றாங்க. ஆனா இது 1969க்கு அப்புறம்தான் அமைக்கப்பட்டிருக்குன்னு சொல்றாங்க.  டென்ஷன் வெடிக்கும் சூழலில் இந்தக் கோவில் இருப்பதால எப்பவுமே அங்கே போலீஸ் பாதுகாப்பு இருக்கும்.




13 comments:

சாந்தி மாரியப்பன் said...

ஹைதராபாத் சம்பவம் வருந்தத்தக்கது. சார்மினார்ல இருக்கும் லக்ஷ்மி கோயிலை ஒருவேளை துள்சிக்கா பதிவுல பார்த்திருப்போமோன்னு தோணுது.

Anonymous said...

இந்தக் கோயில்களையும் மசூதிகளையும் வைத்துக்கொண்டு மக்கள் படும் பாடு....

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

துளசி டீச்சரோட நானும் சார்மினார் போயிருந்தேன். அப்ப தெரிஞ்சிருந்தா கண்டிப்பா அவங்களுக்கும் காட்டிருப்பேன்.

வருகைக்கு மிக்க நன்றி

வல்லிசிம்ஹன் said...

அன்பு தென்றல் போனவாரம் துபையில் இருந்தோம் . இந்த நிகழ்ச்சி தொலைக்கட்சியில் வந்தது. கொடூரமாக இருந்ததுமா.
அப்ப உங்களை ரொம்ப நினைச்சுக் கொண்டேன்.
இவர்கள் யாரும் அந்தப் பக்கம் போகக் கூடாதேன்னு,.
நலமே இருங்கள் அம்மா.

Ranjani Narayanan said...

ஹைதராபாத் பற்றிய செய்திகள் எல்லாம் சுவாரஸ்யமாக இருந்தன. ஒன்றிரண்டு முறை அங்கு வந்திருந்தாலும் சார்மினார் பார்க்க முடியவில்லை.

நல்லதொரு தொகுப்பிற்கு பாராட்டுக்கள். ஹைதை ஆவக்காய் பிரியாணி நல்ல ருசி!

அன்புடன் அருணா said...

ஹைதராபாத்தில் குண்டு வெடிப்புன்னு தெரிஞ்சதும் மனசு பதறிய பதறல்...பொண்ணு அங்கே இருக்காளே...இது போல ஜெய்ப்பூரில் ஒருதடவை வெடித்தபோது அம்மா பதறிய போது தன் கூடும் குஞ்சுகளும் நலமென்றால் உலகமே நல்மேன்னு ஒரு கவிதை எழுதினேன்! இப்போதானே தெரியுது அம்மாவின் பதற்றம்... நீங்க எல்லாம் நலம்தானே???

இராஜராஜேஸ்வரி said...


பரபர்ப்பான "ஹைதை ஆவக்காய பிரியாணி

pudugaithendral said...

வாங்க கடைசிபெஞ்ச்,

அதான் கஷ்டமே,

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

உங்க அன்புக்கு மிக்க நன்றிம்மா

pudugaithendral said...

வாங்க ரஞ்சனி மேடம்,

அடுத்தவாட்டி ஹைதை வர்றதா இருந்தா ஒரு மெயில் தட்டுங்க. சுத்திபாக்க ஏற்பாடு செஞ்சிடலாம்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க ரஞ்சனி மேடம்,

அடுத்தவாட்டி ஹைதை வர்றதா இருந்தா ஒரு மெயில் தட்டுங்க. சுத்திபாக்க ஏற்பாடு செஞ்சிடலாம்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க அருணா,

யாவரும் நலமே...

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க இராஜராஜேஸ்வரி,

நன்றி