Wednesday, February 27, 2013

பயணிகளின் கனிவான கவனத்திற்கு..........

பயணிகளின் கனிவான கவனத்திற்கு..... 2ஆம் நடைமேடைக்கு வந்து சேரவேண்டிய வண்டி தற்போது 4காவது நடைமேடைக்கு வந்து கொண்டிருக்கிறதுன்னு அறிவிப்பு வரும். தடதடன்னு ஓடினாத்தான் லோக்கலை பிடிக்க முடியும்.

 யாத்ரிகன் க்ருபயா த்யான் தே.... அப்படின்னு கனிவா ஆரம்பிச்சு நம்ம கவனத்திற்கு அவங்க கொண்டு செல்வது வண்டி தாமதாமா வரும் என்பதாத்தான் இருக்கும். இது ரயில் பயணிகள் பலருக்கும் அத்துப்படி ஆன விஷயம். இப்ப இது எதுக்கு இங்கன்னு கேக்கறீங்களா??? புலம்பல்ஸ் ஆஃப் இந்தியா தான்.


நேற்று நம்ம ரயில்வே பட்ஜட் அறிவிச்சிருக்காங்க. பலதடவை டங்க் ஸ்லிப்பாகி அதுக்கு ஃப்ராக்சராகின ரேஞ்சுக்கு உச்சரிப்போட  (குஜ்ஜு ) பன்சால் அவர்கள் கொடுத்த பட்ஜட் பலருக்கு பகீர் பட்ஜட்.

பயண கட்டணம்லாம் உயர்த்தலப்பா....ன்னு சொன்னதும் எல்லோரும் சந்தோஷமாகிருப்பாங்க. வெச்சோம்ல ஆப்புன்னு ரிசர்வேஷன், கேன்சலேஷன், தத்கால் டிக்கெட்களுடன் கூட்ஸ் சார்ஜ்களை ஏத்திவிட்டுட்டாரு. இதுனால பொதுமக்கள் அடையப்போற கஷ்டம்... அடுத்த மாசம் வரும் பட்ஜட்ல தெரியும். (வீட்டு பட்ஜட்ல கம்பிளிதான் இனி :(( )


ரிசர்வேஷன் சார்ஜ் ஏத்தினதைக்கூட சரின்னு ஒத்துக்கலாம். ஆனா கேன்சலேஷன் சார்ஜை ஏன்யா எத்தணும்??? பணத்தைக்கட்டின்னாத்தானே ரிசர்வேஷன் கிடைக்கும். எங்க பணம் உங்ககிட்ட இருக்கப்போவுது. அதை நாங்க கேன்சல் செஞ்சா நியாயமா நீங்க வட்டி கொடுக்கணும்!!! அத்தைவிட்டு அதுலயும் லாபம் பார்ப்பது எந்த நாட்டு நியாயம்??!! (எத்தனைக்காலம் எந்த ஊருன்னு கேக்கறது சொல்லுங்க!!)

அதுவும் இப்பல்லாம் ஒரு ஊருக்கு போகணும்னா 120 நாளுக்கு முன்னாடி திட்டம் போட்டாத்தான் கன்ஃபார்ம் டிக்கெட் கிடைக்குது. நான் சொல்வது தப்புன்னா ஐஆர்டிசி வெப்சைட்டுக்கு போய் மே மாசக்கடைசிக்கு எதாவாது ஊருக்கு டிக்கட் புக் செய்ய முடியுமான்னு பாருங்க. அப்புறம் பேசிப்போம்.

கிட்டத்தட்ட 90 நாளைக்கு முன்னாடி புக் செஞ்சா ரொம்ப அரிதா 4 டிக்கட் இருக்கும்.  நிலமை இப்படி இருக்க, ஏசில போறவங்களா இருந்தா (ரெண்டு பேர்னு வெச்சுப்போமே) அவங்க சுமார் 2000 ரூவா பணத்தைக்கட்டி ரிசர்வேஷன் செய்றாங்க. டிக்கட் கன்ஃபார்மா கிடைச்சா சரி, இல்லாங்காட்டி கூட நப்பாசைக்காக, வேற வழியே இல்லாம வெயிட்லிஸ்ட் டிக்கட் புக் செஞ்சா, கடைசி நிமிஷம் வரைக்கும் டிக்கட் கன்ஃபார்மாகாட்டி போனா பணத்தை உங்க அக்கவுண்ட்ல சேப்பாங்க. அதுவரைக்கும்  நம்ம பணத்தை அவங்ககிட்ட வெச்சிருக்கறதுக்கு நமக்கு வட்டி கொடுப்பது போய், நம்ம கிட்டயே கேன்சலேஷன் சார்ஜ் தீட்டினா இதை எப்படி ஜீரணிப்பது? இரும்பை தின்னுட்டு ஜெலுசில் குடிச்சா மாதிரி இருக்கு இப்ப நம்ம நிலமை.

ஒரு புத்தகத்துக்கு சந்தாதாரர் ஆகுறீங்கன்னா,  அதுல நமக்கு ஏதாவது  நமக்கு ஆதாயம் இருக்கும். விலை குறைச்சோ இல்ல கூட இனாம் ஏதோ தருவாங்க.
நம்ம பணம் அவங்ககிட இருக்கப்போவதுக்கு அதுக்கு காம்பன்சேஷன். ஆனா ரயில்வேயில மட்டும் நாம முன்கூட்டியே புக் செஞ்சாலும் சரி, கடைசி நிமிஷத்துல புக் செஞ்சாலும் சரி விலை ஒண்ணுதான், போதாக்குறைக்கு கேன்சலேஷன் சார்ஜ் வேற......

சில நல்ல விஷயங்களும் சொல்லியிருக்காரு நடக்குமான்னு பாக்கணும். இந்த ஐஆர்டிசி வெப்சைட்ல போய் டிக்கெட் புக் செய்றதுக்குள்ள பாதி சமையலே முடிச்சிடலாம்!!!  செம ஸ்லோ. அதை இம்புரூவ் செய்வதா சொல்லியிருக்காரு.  ஆனா இந்த 120 நாளைக்கு முன்னயே டிக்கட் புக் செய்யலாம் என்பதை கொஞ்சம் குறைச்சா, 4 மாசம் முன்னாடியே ப்ளான் செய்ய முடியாம ரெண்டு மாசம் முன்னால ப்ளான் செய்யறவங்களுக்கு வசதியா இருக்கும்.ஓகே. நடக்குமா!!!!  ஆத்திர அவசரம்னா தத்கால் இருக்கு. அதுல ரயில்வேக்கு வர்ற ஆதாயம்.  அவர் சொல்லியிருக்கும் பல விஷயங்கள் நடைமுறைக்கு வந்து அதன் செயல்பாட்டைப் பார்த்தான் தெரியும்.

விஜயவாடாவில் ரயில்நீர் ப்ளாண்ட் வரப்போகுதாம். ஆந்திராவுக்கு  ஆதாயமாத்தான் ரயில்வே பட்ஜட் இருக்கு. இந்த ரயில்நீரைப்பத்தி எனக்கு சம்ஷயம்!!! மினரல் வாட்டர்னு சொல்லப்படற இந்த ரயில்நீர் குடிச்சா எனக்கு கண்டிப்பா த்ரோட் இன்பக்‌ஷன் வந்திடுது.  ஆனா பாருங்க சென்னை செண்ட்ரலில்  இந்த மினரல் வாட்டர் பாட்டில்களை விட கம்மி விலையில் மினரல் வாட்டர் அதுவும் ஜில் ஜில்னு வாங்கிக்கலாம். 2 லிட்டர் தண்ணீர் பாட்டிலோட 10ரூவாதான்!!!!! இந்த வாட்டி இந்தத்தண்ணி குடிச்சு எனக்கு எதுவும் ஆகலை என்பதால தெகிரியமா இதை இங்கே சொல்றேன்.


இந்த ஃப்ளைட்ல இருக்கற மாதிரி முன்னக்கூட்டியே புக் செய்யறவங்களுக்கு விலை கழிவு, கடைசி நேரத்துல புக் செய்யறவங்களுக்கு விலை ஜாஸ்தி ஐடியாவையும் கன்சிடர் செய்யலாம். அனுபூதி கோச் எல்லாம் சரி, ஆனா நேற்று நியூஸ் சேனல்களில் மக்கள் சொல்றாப்ல, கரப்பான்பூச்சி, எலிகள் இல்லாத கோச்கள் தான் வேணும்.   ஸ்டேஷன்கள் சுத்தமா வெச்சிருக்கறதுக்கு காட்டற முனைப்பை ரயில்பெட்டிகளிலும் காட்டணும்.


அவங்க வூட்டுக்காரம்மாவை திருப்தி படுத்திட்டாரு பன்சால். அவங்க மனைவி டீவிக்காரங்களுக்கு கொடுத்த பேட்டியில, பெண்களுக்காக ஆபத்துக்கால அவசர தொலைபேசி எண்கள்  இருக்கணும்னு சொல்லியிருக்கேன்னு சொன்னாங்க. அவங்க சொன்னாப்ல ரயில்வே அமைச்சர் அதை அறிவிக்கவும் செஞ்சாரு. நேற்று வீட்ல  ஜலேபி ரபடி செஞ்சு கொடுத்திருப்பாங்க அம்மா!!!

ஃப்ரைட் சார்ஜ் ஏத்தினதுல நமக்கு என்னன்னு விலைவாசி இன்னும் ஏறப்போவதுல தெரியும். மொத்தத்துல ரயில்வே ஸ்டேஷன்ல வரும் அறிவிப்பைப்போல இனிமையா பட்ஜட் போடுறாப்ல காட்டி மெல்ல நம்ம மேல சுமை ஏத்தறாங்க!!!!  இது என் எண்ணங்கள் அம்புட்டுதான்.
13 comments:

அமைதிச்சாரல் said...

120 நாளுக்கு முன்னாடியே ரிசர்வ் செஞ்சுக்கறது எல்லா நேரத்துலயும் எப்படி சாத்தியப்படும்ன்னு தெரியலை. என்னதான் தத்கால் இருக்கு ஃப்ளைட் சர்வீஸ் இருக்குன்னாலும் சில சமயங்கள்ல வெறும் மூணு மாச கால அவகாசத்துல எங்கியாவது போகணும்ன்னு ப்ளான் பண்ணும்போது ரயில்ல குறிப்பிட்ட 120 நாள் திட்டம் நந்தி மாதிரி குறுக்கே நிக்குது. ரயில்ல சாவகாசமா போலாம்ன்னு நினைச்சாலும் வேற வழியே இல்லாம ஃப்ளைட்டைப் பார்க்க வேண்டியிருக்கு.

கேன்சலேஷன் சார்ஜ்... அருமையா சொன்னீங்க.

s suresh said...

வழக்கம் போல தமிழகத்தை கை கழுவியும் விட்டு விட்டாரு நாம் ஏமாந்த சோனகிரிகள்தான்!

pudugai tendral said...

வாங்க அமைதிச்சாரல்,

இந்த 120 நாளை குறைச்சாத்தான் ரயில் பயணம் இனிமையாகும். இதை எப்படி செய்வதுன்னு தான் புரியலை.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

pudugai tendral said...

வாங்க சுரேஷ்,

ஆமாம் தமிழகத்துக்கு இந்தவாட்டி எதுவும் புதுசா, பெருசா சொல்லிடலை. :(

வருகைக்கு மிக்க நன்றி

வெங்கட் நாகராஜ் said...

நல்ல அலசல்....

கடைசி வரை வெயிட் லிஸ்ட் டிக்கட்டாக இருந்தால், உங்களுக்கு முழு பணமும் கிடைக்கும்!

ஆர்.ஏ.சி. வந்தாலும் கிடைக்காது.

120 நாள் - அப்படி வாங்கி வைத்த பணத்தை வைத்து தானே வண்டி ஓடிட்டு இருக்கு! :(

கோவை2தில்லி said...

பயணப்பதிவு 120 நாளுக்கு முன்னாடியே என்பதே நல்லா இல்ல....:(

அவ்வளவு முன்கூட்டியே எப்படி ப்ளான் பண்ண முடியும். அப்படியே குத்துமதிப்பா முன்பதிவு செய்து கேன்சல் செஞ்சா அதுக்கும் நமக்கு தான் நஷ்டம்...:(

இதுல கேன்சலேஷன் க்கு கூடுதல் பணம்... தாங்கலைப்பா...:((

Anonymous said...

தென்றலாரே
அதுக்காக புதுக்கோட்டை தஞ்சாவூர் ரயில்பாதையை எழுதாம விடுறதா?

Ranjani Narayanan said...

IRCTC தளத்தை சீக்கிரத்தில் சீர் செய்யப்போவதாகச் சொன்னது ஒண்ணுதான் ஆறுதல்.

கான்சலேஷன் சார்ஜஸ் அநியாயம்.

எங்க ஊருக்கு சென்னையிலிருந்து டபுள் டக்கர் ரயில் வருது. நாகர்கோயில் - பெங்களூரு வண்டியை தினமும் விடப் போறாங்க. இதுதான் ஆறுதல்.

அவங்க வீட்டு அம்மாவை மட்டுமல்ல தலைவியையும் சந்தோஷப் படுத்திட்டார் அமைச்சர்!

pudugai tendral said...

வாங்க கடைசிபெஞ்ச்,

நம்ம ஊருக்கும் தஞ்சாவூருக்கும் ரயில்பாதை சரிதான். ஆனா நம்ம் ஊருக்கு போய் சேர பகல் நேரத்துல ஒரு ட்ரையின் விடலை என்பதால் எனக்கு இது பெருசா படலை. :)

pudugai tendral said...

வாங்க கடைசிபெஞ்ச்,

நம்ம ஊருக்கும் தஞ்சாவூருக்கும் ரயில்பாதை சரிதான். ஆனா நம்ம் ஊருக்கு போய் சேர பகல் நேரத்துல ஒரு ட்ரையின் விடலை என்பதால் எனக்கு இது பெருசா படலை. :)

pudugai tendral said...

வாங்க கடைசிபெஞ்ச்,

நம்ம ஊருக்கும் தஞ்சாவூருக்கும் ரயில்பாதை சரிதான். ஆனா நம்ம் ஊருக்கு போய் சேர பகல் நேரத்துல ஒரு ட்ரையின் விடலை என்பதால் எனக்கு இது பெருசா படலை. :)

pudugai tendral said...

வாங்க கடைசிபெஞ்ச்,

நம்ம ஊருக்கும் தஞ்சாவூருக்கும் ரயில்பாதை சரிதான். ஆனா நம்ம் ஊருக்கு போய் சேர பகல் நேரத்துல ஒரு ட்ரையின் விடலை என்பதால் எனக்கு இது பெருசா படலை. :)

pudugai tendral said...

வாங்க ரஞ்சனி மேடம்,

அவங்க வீட்டு அம்மாவை மட்டுமல்ல தலைவியையும் சந்தோஷப் படுத்திட்டார் அமைச்சர்!//

:))

வருகைக்கு மிக்க நன்றி