Tuesday, February 19, 2013

சகஜ ஆஹாரம்!!!!!

இப்ப நாம சாப்படுற சாப்பாட்டுல்ல சத்தே இருக்கறதில்லை. எல்லாமே விஷமா இருக்கு. காரணம் பூச்சிக்கொல்லி மருந்துகளை உபயோகிப்பதுதான்.
அமீர்கானுடைய  “சத்யமேவ ஜயதே” நிகழ்ச்சியில கூட இதுக்காக ஒரு நிகழ்ச்சி இருந்தது.  அதுவரைக்கும் இந்த ஆர்கானிக் பொருட்கள் ரொம்ப விலையா இருக்கேன்னு நினைச்சுகிட்டு இருந்தேன். அமீர்கான் சொன்னதக்கப்புறம் ஆமாம் நம்ம உடம்பு நல்லா இருக்கணும்னா கொஞ்சம் கூட பணம் கொடுத்தா தப்பில்லைல்லன்னு தோணிச்சு.

அந்த நிகழ்ச்சியில பங்கெடுத்துக்கிட்ட பேராசிரியர் ராமாஞ்ஜ்னேயலு ஆந்திராவில் செய்திருக்கிற மாற்றங்களைப்பத்தி தெரிஞ்சது. அந்த நிகழ்ச்சியில மற்ற விவரங்கள் கிடைக்கலை.  நம்ம கூகுள் ஆண்டவர்கிட்ட கேட்டா கிடைக்காதது உண்டா??!!!


அவரைப்பற்றின வெப்சைட் கிடைச்சது. அப்படி தேடிக்கிட்டு போனா சகஜ ஆஹாரம் அப்படிங்கற வெப்சைட் பாத்து அங்க போய் பார்த்தா , இயற்கை விவசாயத்துல தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பது பத்தி தெரிஞ்சது.
அந்த மார்க்கெட்  கொஞ்சம் கிட்டத்துலதான் இருந்தது.

போன் செஞ்சு எப்படி வரணும் எல்லாம் கேட்டு தெரிஞ்சுகிட்டு
 ஒரு வாட்டி நேர்ல போய் பார்த்திட்டு வருவோம்னு போனேன்.  மாச மளிகை சாமானை அங்கயே வாங்கிடறதுங்கற முடிவுல அங்க போனேன்.

கடுகு, ஜீரகம் மாதிரியான பொருட்கள் கிடைச்சது. அந்த வெல்லம் சும்மா பொருபொருன்னு கிரிஸ்பியா இருந்தது. ஒரு கிலோ வெல்லம் 95 ரூவா. அதுவே சாதாரண வெல்லம் 50ரூவா தான். ஒவ்வொரு பொருளோட விலையும் கணிசமா வித்தியாசம். கிட்டத்தட்ட இருமடங்குன்னு சொல்லலாம். செக்குல ஆட்டின கடலை எண்ணெய் செம வாசமா இருந்தது.

ஆனா வெப்சைட்ல இருக்கற எந்த சாமானும் அங்கே கிடைக்கலை. நான் கொண்டு போன லிஸ்ட்ல பலது இல்லை. எப்ப வரும்னு கேட்டா தெரியாதுன்னுதான்  பதில் வந்தது.  அரிசி வேணும்னாலும் அங்க சரியா பதில் இல்லை. என்னைப்போல வேற சிலரும் அங்கே வந்திருந்தாங்க, வந்தவங்களுக்கும் திருப்தியா இல்ல.

நம்ம தேவைக்கு சாமான் கிடைக்காது போல. எப்ப கிடைக்குமோ அப்ப நமக்கு சொல்லியா விடுவாங்க. உடனுக்குடன் காலியாகிடும்னு சொல்றாங்க. ஆனா ஆந்திராவுல எல்லா இடத்திலயும் இப்படி விளைச்சல் வருதுன்னு சொன்னா தடங்கல் இல்லாம கிடைக்கணும்ல என்பது தான் என் கேள்வி.

பெரிய்ய பெரிய்ய சூப்பர் மார்க்கெட்களில் ஆர்கானிக் பொருட்கள் கிடைக்குது.
அங்க போய் வாங்கிக்கலாம்ங்கற முடிவுக்கு வந்திட்டேன். தேவைக்கு கிடைக்கும் இடத்துலதானே நாம வாங்க முடியும்.

24 manthra  இவங்களுடைய ஆர்கானிக் பொருட்கள் எல்லா சூப்பர் மார்க்கெட்களிலும் கிடைப்பது பலருக்கும் தெரிஞ்சிருக்கும். வைத்தியனுக்கு கொடுப்பதை வாணிகனுக்கு கொடுன்னு பெரியவங்க சொல்வாங்க. அதாவது நல்ல பொருட்களை வாங்கி சாப்பிட்டா மருத்துவருக்கு கொட்டி அழாம இருக்கலாம்னு அர்த்தம். அதுலயும் இந்த இயற்கை விவசாய பொருட்களுக்கு கொடுத்தா நம்ம உடம்பு கண்டிப்பா நல்லா இருக்கும்.

ஆனா பாருங்க இதைப்பத்தி எழுதணும்னு நினைச்சுக்கிட்டே வந்து தள்ளிக்கிட்டு போச்சு. சமீபத்துல படிச்சது அதிகமா இந்த ஆர்கானிக் பொருட்களை உபயோகிச்சா நோய் எதிர்ப்பு சக்தி என்பது உடலில் இல்லாம போயிடும் என்பதுதான். அவங்க என்ன சொல்றாங்கன்னா இயற்கை விவசாய பொருட்களை மட்டுமே சாப்பிட பழகிட்டா மத்த பொருட்களை சாப்பிடும்போது உடல்நிலை சரியில்லாம போயிடுமாம்.

இப்ப என்ன செய்ய??? மண்டை குழம்புதுல்ல??!!! எனக்க்கும் அப்படித்தான்!!!!
உங்க கருத்தை சொல்லுங்க. என்னைப்போல பலருக்கும் உதவியா இருக்கும்.

20 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அவரவர் வயது, உடல் ஆரோக்கியம், தொழில், முக்கியமாக மனம் பொறுத்து மாறும்...

அன்புடன் அருணா said...

/இப்ப என்ன செய்ய??? மண்டை குழம்புதுல்ல??!!! எனக்க்கும் அப்படித்தான்!!!!/
அடடா! என்னையும் இப்பிடிக் குழப்பி விட்டுட்டீங்களே!!!!

”தளிர் சுரேஷ்” said...

இயற்கை பொருட்கள் கிடைப்பது அரிதாக இருந்தால் எப்படி பயன்படுத்துவது?

வெங்கட் நாகராஜ் said...

என்னங்க, நல்ல விஷயமா இருக்கேன்னு சந்தோஷமா படிச்சுட்டு வந்தா கடைசில இப்படி சொல்லிட்டீங்களே! :)

மனோ சாமிநாதன் said...

நல்ல பதிவு! இப்போ தஞ்சாவூரில் தான் இருக்கிறேன். சென்ற வாரம் நிறைய‌ பழங்களை துண்டுகள் போட்டு சாலட் செய்து சாப்பிட்டால் சப்பென்று இருந்தது! அத்தனை பழங்களின் சுவையே தெரியவில்லை! உரங்களின் ஆளுமை அப்போதே புரிந்தது!

அதற்கென்று ஆர்கானிக் பொருள்களை இரு மடங்கு விலையில் வாங்கி சாப்பிட்டாலும் சரி வராது. உழவர் சந்தையில் காய்கறிகள் நன்றாயிருக்கும் என்று சொல்கிறார்கள்! பாரம்பரிய மளிகைக்கடையில் இதயம் நல்லெண்ணெய் கேட்டால் அதெல்லாம் இப்போது தரம் குறைந்து விட்டது என்று சொல்லி புதுப்புது பிராண்ட் நல்லெண்ணெய் வகைகளைக்காண்பித்து 'செக்கில் ஆட்டிய தரமான நல்லெண்ணெய் என்கிறார்கள்! இது உண்மையிலேயே குழப்பமான பிரச்சினை தான்! தீர்வில்லாத பிரச்சினையும் கூட!

pudugaithendral said...

வாங்க தனபாலன்,

நீங்க சொல்வதும் சரிதான்

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க அருணா,

நீங்களுமா!!!!

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க சுரேஷ்,

அதான் புரியலை

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க சகோ.

:))

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க மனோ சாமிநாதன்,

நாம விஷத்தைதான் காசுகொடுத்து வாங்கி சாப்பிடறோம்னு நல்லாத் தெரியுது. :((

வருகைக்கு மிக்க நன்றி

ஹுஸைனம்மா said...

சாப்பாடு விஷயம் எல்லாரையும் படுத்தத்தான் செய்கிறது!! இதுவா அதுவான்னு குழம்பிப் போய்த்தான் நிக்க வேண்டிருக்கு.

இப்பல்லாம் நல்லெண்ணெய், தேங்காண்ணெய் எல்லாம் ரீஃபைண்ட் பிராண்டு எண்ணெய் வாங்காம, மளிகைக் கடைகளில் லூஸில் கிடைப்பதை வாங்குறேன்.

சாப்பாடு மட்டுமா, வாழ்க்கையில் எல்லாமே குழப்படியாத்தான் இருக்கு!! :-)))

ஹுஸைனம்மா said...

சாப்பாடு மட்டுமா, வாழ்க்கையில் எல்லாமே இப்படித்தான் நம்மள குழப்பியெடுக்குது!! :-)))

ADHI VENKAT said...

என்ன செய்யிறதுன்னு புரியலையே?

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

சாப்பாடு மட்டுமா, வாழ்க்கையில் எல்லாமே இப்படித்தான் நம்மள குழப்பியெடுக்குது!! :-)))//

ஆமாம். என்ன செய்யன்னு புரியாத ஒருநிலை.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

சாப்பாடு மட்டுமா, வாழ்க்கையில் எல்லாமே இப்படித்தான் நம்மள குழப்பியெடுக்குது!! :-)))//

ஆமாம். என்ன செய்யன்னு புரியாத ஒருநிலை.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க ஆதி,

காபி உடம்புக்கு கெடுதின்னு சொல்வாங்க. சிலர் காபி உடம்புக்கு நல்லதுன்னு சொல்வாங்க. அதுமாதிரி இருக்கு. நமக்கு எது சரிப்பட்டு வருமோ அதை செய்யலாம்னு நினைக்கிறேன்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க ஆதி,

காபி உடம்புக்கு கெடுதின்னு சொல்வாங்க. சிலர் காபி உடம்புக்கு நல்லதுன்னு சொல்வாங்க. அதுமாதிரி இருக்கு. நமக்கு எது சரிப்பட்டு வருமோ அதை செய்யலாம்னு நினைக்கிறேன்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க ஆதி,

காபி உடம்புக்கு கெடுதின்னு சொல்வாங்க. சிலர் காபி உடம்புக்கு நல்லதுன்னு சொல்வாங்க. அதுமாதிரி இருக்கு. நமக்கு எது சரிப்பட்டு வருமோ அதை செய்யலாம்னு நினைக்கிறேன்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க ஆதி,

காபி உடம்புக்கு கெடுதின்னு சொல்வாங்க. சிலர் காபி உடம்புக்கு நல்லதுன்னு சொல்வாங்க. அதுமாதிரி இருக்கு. நமக்கு எது சரிப்பட்டு வருமோ அதை செய்யலாம்னு நினைக்கிறேன்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க ஆதி,

காபி உடம்புக்கு கெடுதின்னு சொல்வாங்க. சிலர் காபி உடம்புக்கு நல்லதுன்னு சொல்வாங்க. அதுமாதிரி இருக்கு. நமக்கு எது சரிப்பட்டு வருமோ அதை செய்யலாம்னு நினைக்கிறேன்.

வருகைக்கு மிக்க நன்றி