Tuesday, February 26, 2013

நீங்களே படிச்சு பாருங்க :)

* எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும்


 * ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வரும்


 * ஒரு பொய்க்கு ஒரு மூட்டை பொய் பாலம்


 * ஓடும் குதிரை ஓட்டத்தில் தெரியும்


 * கார் ஓட டயரும் தேயும்


* சிகரெட் விரலளவு சீக்கு உடலளவு


 * சைக்களுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை


 * தான் ஓடாவிட்டாலும் தம் கடிகாரம் ஓடும்


* தீக்குச்சி தன் தலைக்கனத்தால் கெடும்


* துப்பாக்கி முனையைவிட பிரிண்டர் முனை பொரியது


 * பந்தை காத்து கோல்கீப்பரிடம் கொடுத்தாற்போல


 * மிதிக்க மிதிக்க சைக்களும் நகரும்


 * முடியுள்ள போதே சீவிக்கொள்


* பழகின செறுப்பு காலை கடிக்காது


 * மாத நாட்காட்டிக்கு ஒருமுறை கிழி தினநாட்காட்டிக்கு தினம்தினம் கிழி


 * ஹெல்மெட் இல்லாதவன் பின்னே எமன் வருவான் முன்னே


 இப்படியும்  பழமொழிகள்னு தங்கச்சி மெயில் அனுப்பியிருந்தாங்க.... :)

16 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எல்லாமே புதுசா இருக்கே...!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரைட்டுங்க...


இன்னும் இதுமாதிரியே பேர்டுங்க படிக்கிறோம்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வித்தியாசமான பழமொழிகள்

தெரிஞ்சிக்கிட்டேன்... பகிர்ந்தமைக்கு நன்றி...
தங்களுக்கும் தங்களுக்கு அனுப்பியவர்களுக்கும் நன்றி

ஸாதிகா said...

சூப்பர் புதுகை தென்றல்.

சாந்தி மாரியப்பன் said...

ஜூப்பருப்பா..

வெங்கட் நாகராஜ் said...

புது மொழிகள்! :)

ADHI VENKAT said...

புதுமொழிகள் நல்லாவே இருக்குங்க...

பால கணேஷ் said...

ஆஹா.... என்னமா யோசி்ச்சு புது மொழிகளை உருவாக்குறாங்கப்பா...! ரசிச்சேன் தென்றல் மேடம்!

Anonymous said...

டரியல் தொடரட்டும்

pudugaithendral said...

ஆனா பழசையும் ஞாபகபடுத்தற மாதிரி இருக்குல்ல்... வருகைக்கு நன்றி தனபாலன்.

இன்னும் இதுமாதிரியே பேர்டுங்க படிக்கிறோம்...// :)) வருகைக்கு நன்றி சொளந்தர்

நன்றி ஸாதிகா

நன்றி அமைதிச்சாரல்

ஆமாம் சகோ. வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

ஆமாம் கோவை2தில்லி, வருகைக்கு மிக்க நன்றி


ஆமாம் பாலகணேஷ், வருகைக்கு மிக்க நன்றி,

தங்களின் வருகையும் தொடரட்டும் கடைசிபெஞ்ச். வருகைக்கு மிக்க நன்றி

பூ விழி said...

காலத்திற்கு ஏற்ற பழமொழிகள் தான் எல்லாமே அருமை (நான் புதுசு பதிவுலகத்திற்)

அம்பாளடியாள் said...

அடடா அத்தனையும் புதுமொழிகள் ....!
காலத்துக்கு ஏற்ற பொன்மொழிகள் !என்னமா ஜோசிக்கிறாங்க :)))
வாழ்த்துக்கள் மிகவும் ரசித்தேன் .

pudugaithendral said...

வருகைக்கு மிக்க நன்றி மலர்பாலன்

pudugaithendral said...

வருகைக்கு மிக்க நன்றி அம்பாளடியாள்

Ranjani Narayanan said...

சூப்பர் கடியா இருக்கே!
எல்லாம் ரசிக்கும் படி இருக்கிறது.
அனுப்பிய தங்கச்சிக்கும் எங்களுடன் பகிர்ந்த உங்களுக்கும் பாராட்டுக்கள்!