மார்ச் பிறந்தாலே உலக மகளீர் தினம் பற்றிய செய்திகள், நிகழ்ச்சிகள், பதிவுகள் தான்.
ஆனாலும் பெண் என்பவள் வயது வித்தியாசம் இல்லாமல் பலரால் போற்றப்படும் அதே வேளையில், பலவித இன்னல்களை எங்கோ ஓர் மூலையில் சந்தித்துக்கொண்டு தான் இருக்கிறாள்.
வெட்கத்தையும், வேதனையையும் தரும் நிகழ்வாக இது இருக்கிறது. துடைக்கவழி தான் என்ன என குழம்பாமல், நம் வீட்டிலிருந்து இதை துவங்க வேண்டும். வீட்டில் இருக்கும் சின்னக்குழந்தைகளுக்கு அதுவும் குறிப்பாக ஆண்குழந்தைகளுக்கு பெண்மையைப்பற்றி நல்லதாக சொல்லிக்கொடுப்பது அவசியம்.
அக்கம்பக்கத்தாரைக்கூட அண்ணா, அக்காவென்று அழைத்து ஒரு உறவு ஏற்படுத்திப்பழக்கப்பட்ட நமக்கு, இன்று யாரைக்கண்டாலும் ஒரு வித பய உணர்வு தான் இருக்கிறது. நம் வீட்டு ஆண்குழந்தைகளை, ஆண்களை கண்டு அடுத்தவர் பயப்படாத சூழல் உருவானால் ஒரு ஆரோக்கியமான சூழல் கண்டிப்பாய் வரும்.
இந்த விளம்பரம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.
பெண் குழந்தைகளுக்கு தைரியத்தையும், விடாமுயற்சியையும் கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம். தன்னம்பிக்கை அவர்களை தலைநிமரச்செய்யும். அதே சமயம் தனது கடமையை செய்வதில் பெண் தவறக்கூடாது என்பதையும் போதிக்க வேண்டியது மிக மிக அவசியம். ஒரு பெண்ணிற்கு தீங்கு நேர தான் காரணமாகக்கூடாது என்பதை ஆண்மகனுக்கு சிறுபிராயத்திலேயே போதித்தால் போதும், எந்தப்பெண்ணையும் தவறாக நினைக்கமாட்டான், நடந்துகொள்ளவும் மாட்டான்.
தாயாய், சகோதரியாய், மகளாய், தோழியாய் ஆணுக்கு பெண் துணை தேவை. அதேபோலத்தான் பெண்ணுக்கும். ஒருவருக்கு ஒருவர் துணை எனும் எண்ணத்தை விதைத்து விட்டால் போதும், அவன் மனதில் அது விருட்சமாக வளரும்.
”நிர்பயா” உலக நாடுகள் கூட உச்சரிக்கும் பெயர். அந்தப்பெண்ணிற்கு நடந்த கொடுமை, அதற்காக திரண்ட மக்கள் இதற்காக அந்தப்பெண்ணிற்கு அமெரிக்கா விருது வழங்கி மரியாதை செய்கிறது. சட்டத்திருத்தம் கொண்டுவரவேண்டிய சூழலை உருவாக்கியிருக்கிறாள் நிர்பயா. போராடி தன்னால் வாழ்வை ஜெயிக்க முடியாவிட்டாலும் பல பெண்களுக்கு தன்னால் ஆன உதவியை இறந்தும் இந்தப்பெண் செய்துகொண்டிருக்கிறாள்.
இந்த நிகழ்வைக்கொண்டு பல நிகழ்ச்சிகள் வந்துகொண்டிருக்கின்றன. அதில் பர்வரிஷ் இந்தி சீரியலில் தைரிய சாலியாக அந்தப்பெண்ணைக்காட்டி கோர்ட், வழக்கு என எப்படி போராடுகிறாள். தைரியமாக சாட்சி சொன்னதன் பலனாக அந்தப்பெண் மற்றும் குடும்பத்தினர் பட்ட கஷ்டம் என காட்சிகள் மிக அருமை.
கோர்ட்டில் அந்தப்பெண் பேசும் இடம் மிக அருமை. பார்க்காதவர்கள் பார்க்க இதோ அந்த கிளிப்பிங்.
முதலில் குற்றவாளியைப் பிடிக்கிறீர்கள், பிறகு பெயிலில் வெளியே விடுகிறீர்கள். அவர்கள் வந்து தொல்லை கொடுக்கிறார்கள், என பேசுவது அருமை. அதற்கு பதில் சொல்ல முடியாத வக்கீல் தரும் எக்ஸ்பிரஷன் பார்க்க வேண்டிய ஒன்று. நம் பிள்ளைகளுக்கு போராட கற்று கொடுக்க வேண்டும். நாம் உற்ற துணையாக இருக்க வேண்டும்.
அந்த சீரியலில் டைரக்டருக்கு என் பாராட்டுக்கள். பாசிட்டிவாக காட்டுகிறாரே அதற்குத்தான் பாராட்டு.
மனதில் உறுதி வேண்டும்.
பாரதி கனவு கண்டதில் கொஞ்சமாகவேணும் பெண்கள் அடைந்திருக்கும் சூழலில் அந்த நிலை நீடிக்க பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்குவது அவசியம்.
இந்தப்பாட்டில் வரும் வரிகளை உணர்ந்தால் போதும். மாற்றங்களை மெல்ல விதைக்கலாம்.
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள் பெரியவர்கள். அப்படி ஒரு மோசமான சூழல் உருவானால் பூமி தாங்காது. பெண்களை பூஜிக்கவும் வேண்டாம், கஷ்டத்தையும் கொடுக்க வேண்டாம். மனிஷியாக மதித்தாலே போதும். அவளொன்றும் போகப்பொருள் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

16 comments:
இரு பாடல்கள் போதும்...
நல்ல பதிவு.
//அவளொன்றும் போகப்பொருள் அல்ல என்பதை நினைவில் கொள்ள//
இதுதான் எல்லாரும் விரும்புவது. சம்பந்தப்பட்ட பத்திரிகைகள், மீடியாக்கள், பெண்களும் இதற்கானப் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும்.
மகளிர் மாத வாழ்த்துக்கள் தோழி!
நீங்கள் சொன்னதுபோல பெண்களை பார்த்து துதிக்கவா கேட்கிறோம் மிதிக்காமல் இருந்தாலே நலம்!! எவ்வளவு படித்தாலும் சில ஆண்களுக்கு பெண்கள் ஒரு போக பொருள் தான்!
நன்றி தனபாலன்
நன்றி கடைசிபெஞ்ச்
நன்றி ஹுசைனம்மா
நன்றி சமீரா
good one!
பெண் போகப் பொருள் அல்ல என ஒவ்வொரு ஆணும் உணர வேண்டும் - சிறு வயது முதலே அதனை உணர்த்த வேண்டும்....
இன்னும் எத்தனை எத்தனை நிர்பயா உருவாகிக் கொண்டு இருக்கிறாள் தில்லியில் - கடந்த 72 மணி நேரத்தில் 10 வன்புணர்வுகள்.... எங்கே சென்று கொண்டிருக்கிறோம்!
நன்றி அருணா
நன்றி்ச கோ (இன்றைய நாளிதழில் பார்த்த செய்தி ஹைதை நல்லகுண்டாவில் பக்கத்துவீட்டு படுபாவியால் 5 வயதுக்குழந்தை கற்பழிக்கப்பட்டுள்ளாள்) :((

//ஒரு பெண்ணிற்கு தீங்கு நேர தான் காரணமாகக்கூடாது என்பதை ஆண்மகனுக்கு சிறுபிராயத்திலேயே போதித்தால் போதும், எந்தப்பெண்ணையும் தவறாக நினைக்கமாட்டான், நடந்துகொள்ளவும் மாட்டான்.//
நிஜமான வரிகள்.
தினமும் அரைமணி நேரம் என்று உங்களது / மற்றவர்களது / தமிழ்மணத்தை / சார்ந்த இடுக்கைகளை படித்து வருகிறேன். என்னை சுற்றி நடப்பவைகளை கவனிப்பவன் என்ற ஒன்று மட்டுமே இதற்க்கான காரணமாக இருக்கிறதே அன்றி வேறு காரணங்கள் இல்லை என்பதையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். காரணம் அறிய விரும்பினால் எனது 2013 மார்ச் மாத இடுக்கையை பார்க்கவும்!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
கோவை2தில்லி
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஷர்புதீன்
Post a Comment