Wednesday, March 13, 2013

லாங்க் ட்ரைவ் போகலாமா!!!!!????????

வூட்டுக்கும் சீக்கிரம் வந்திடுவாங்க. சனி.ஞாயிறு கட்டாய விடுமுறைங்கற மாதிரியான ஊர்ல இருந்தாக்க, அதுவும் உறவுகள்னு யாரும் இல்லாம தனியா உக்காந்திருக்கும்போது வேற என்ன செய்ய? அப்படியான ஒரு நாளில் அயித்தான்”லாங்க் ட்ரைவ் போகலாமான்னு? ”கேட்டாரு.  பசங்களுக்கு செம குஷி. எனக்கு சொல்லவே வேண்டாம். :)

எங்க போறது லாங்க் ட்ரைவ்னு கேட்க சிசில் வரச்சொல்லியிருக்காப்ல அவங்க ஊருக்கு போய் வருவோம்னாரு. சரின்னு கிளம்பியாச்சு. கிட்டத்துல தான். ஏர்போர்ட் தாண்டி இன்னும் ஒரு மணிநேரம் போனா சிலாபம். (chilaw)
(கொழும்பிலிருந்து ஏர்போர்ட் ஒரு மணிநேரம் :)) )

கட்டுநாயகே விமான நிலையத்தை கடந்து போய்க்கிட்டு இருக்கும்பொழுது
ஒரு விமானம் தரை இறங்கிகிட்டு இருந்துச்சு. பசங்க ஆர்வமா பாத்துக்கிட்டே இருந்தாங்க.  வழியில அயித்தானோட இந்திய நண்பர் ஒருவர் இருந்தார் அவரைப்பாத்திட்டு அங்கேயிருந்து சிலாவ் திரும்பும் பாதையில் பயண பட்டோம் .  பச்ச பசேல்னு ஒரு கிராமம் அது. பாரதியோட கானி நிலம் வேணும் பாட்டை ஒவ்வொரு வீட்டுக்காரங்களும் படிச்சிருப்பாங்களோன்னு நினைக்கத்தோணும்.

வழி தப்பிடக்கூடாதேன்னு சிசில்க்கு போன் போட்டார். சிசில்,  அயித்தானோட அசிஸ்டெண்ட். ரொம்ப நல்ல மனுஷர். கொழும்பில் இருக்கும்போதெல்லாம் பெரும்பாலும் வீட்டுக்கு சாப்பிட வருவார். நான் கொடுப்பதை நல்லா சாப்பிட்டுவிட்டு போகும் வழியில் ஃபிஷ் கொத்து வாங்கி சாப்பிட்டுவிட்டு போகும் நல்ல மனிதர். போயாடே (பொளர்ணமி)அன்னைக்கு உங்களால பல மீன்கள் தப்பிச்சிருச்சு சிசில்னு சொன்னா சிரிப்பாரு. அன்னைக்கு மட்டும் கஷ்டப்பட்டு நான் வெஜ் சாப்பிடாம இருப்பாரு. சிசில் மட்டும் கொழும்புவில் தங்கியிருக்க அவரது மனைவி குழந்தைகள் சிலாவில். அவரது மனைவி அரசு மருத்துவமனை நர்ஸ்.

மதிய சாப்பாடு எங்க வீட்டுலதான் சாப்பிடணும்னு கறாரா சொல்லியிருந்தார் சிசில். ஸ்ரீலங்கன் தால் , பொறிச்ச கத்திரிக்காய் கறின்னு நல்ல சமையல். சிசிலுக்காக கொஞ்சமா நான் வெஜ். சிசில் அவங்க வீட்டுல நிறைய்ய செடி, கொடிகள் மரம்னு இருக்கும். நாங்க போயிருந்த சமயம் பலாமரம் பெரிய பெரிய காய்களோட இருந்துச்சு. அவங்க வீட்டுல ஃபேனே கிடையாது. கதவைத் திறந்த ஜில் ஜில்னு காத்து நல்லா வருது. பசங்க விளையாடிக்கிட்டு இருந்தாங்க. நாங்க பேசிக்கிட்டு இருந்து 3 மணிவாக்குல கொழும்பு திரும்பலாம்னு சொல்லிக்கிட்டு இருக்க சிசில் இருங்க பக்கத்துலதான் மூனீஸ்வரன் கோவில் போகலாம்னாரு.

சரின்னு போனா அது ஒரு சிவன் கோவில். பக்கத்திலேயே காளி கோவிலும் இருக்கு. அம்மன் ரொம்ப உக்கிரமா இருக்காப்ல தோணிச்சு. அந்த சிவன் கோவிலைத்தான் மூனிஸ்வரன் கோவில்னு சொல்றாரோன்னு பாத்தா அங்கே ஒரு அய்யனார் கோவிலும் இருந்தது. இந்த சிவன் கோவிலைப்பத்தி கேட்டப்போ கிடைச்ச தகவல் புராணகாலத்துல ராமபிரான் ராவணனை வதம் செஞ்சிட்டு திரும்பும் பொழுது இந்த இடத்தின் மேலே செல்லும் போது அவருடைய ப்ரம்மஹத்தி தோஷம் தீர்ந்ததம். உடனே வாகனத்தை கீழே இறக்கி, சிவனுக்கு பூஜை செய்ததாக புராணம் சொல்லுது. முன்னைநாதர் இறைவன் திருப்பெயர், தாயார் வடிவுடையாம்பிகை. கோயில் முன்னாடி தெப்பக்குளம் அழகா இருக்கும். நம்ம தென்னிந்திய அமைப்பில் இந்தக்கோவில் இருக்கும்.

5 சிவன் கோவில்கள் ரொம்ப பிரசித்தம்.முன்னேஸ்வரம் (புத்தளம்) கோனேஸ்வரம் (திருகோணமலை),நாகுலேஸ்வரம் (கீரிமலை), திருக்கேதீஸ்வரம் (மன்னார்), ராமேஸ்வரம் (தமிழகம்) இவைகளைத்தான் இங்கே பிரதானமா சொல்வாங்க.

புத்தளம் மாவட்டத்தில் முன்னீஸ்வரம் எனும் இடத்தில் இந்த கோவில் இருக்கு. சிலாபத்திலிருந்து பக்கம். சிவன், காளி, அய்யனாரோடு(சிங்களர்கள் அய்யனாகேன்னு சொல்றாங்க) இங்கே நம்ம கதிர்காமருக்கு சந்நிதி உண்டு.  அங்கே எல்லா கோவில்களிலும் நான் பார்த்த விஷயம் ஒண்ணு என்னன்ன? ரொம்ப பேர் கையில தேங்காயும் கற்பூரமும் வெச்சு சுத்தி வந்து சதுர் தேங்கா உடைப்பாங்க. பிள்ளையாருக்கு மட்டும்தானே சதுர்தேங்கான்னு யோசிச்சு, விசாரிச்சப்ப ஷாக்கிங் தகவல் கிடைச்சது. எதிராளியை போட்டுத்தாக்க இந்த மாதிரி தேங்காய் உடைப்பாங்களாம்!!!

லாங்க் ட்ரைவ் வந்த இடத்துல சிவ ஸ்தலம் ஒன்றை தரிசிக்க வெச்சத்துக்கு சிசிலுக்கு நன்றி சொன்ன்னோம். அங்கேயிருந்து சிலாப் பீச்சுக்கு கூட்டிகிட்டு போனார். நம்ம மெட்ராஸ் பீஸ் மாதிரி இருக்கும்னு நினைச்சேன். இது வேற மாதிரி இருந்தது. அட மாங்கா பத்தக்கு சொன்னேங்க!!! அங்கே இறால் வடை வாசமா இருந்தது ஏரியாவே.




ஆத்தோரம் வீடுகட்டின்னு அண்ணன் தங்கை இரண்டு பேரும் விளையாடிய போட்டோ இப்பவும் எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு பொக்கிஷம். இது அந்த சிலாவ் பீச்சில் எடுத்த படம்.

சிசில் இன்றைக்கும் எங்களுடன் தொடர்பில் இருக்கும் ஒரு நல்ல நண்பர். அய்யே (அண்ணா) என அழைப்பேன். ஒவ்வொரு புத்தாண்டுக்கும் போன் செய்து வாழ்த்துக்களை சொல்லிவிடுவோம். இப்ப சிசில் கொழும்புவிலேயே வீடு கட்டிட்டாரு. வரச்சொல்லி அழைப்பும் வந்துக்கிட்டே இருக்கு. இன்னொருத்தர் கிட்டேயிருந்து அழைப்பு வரலையே!!!! வெயிட்டிங்.


16 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய பயணம்...

அழகான பொக்கிசம்...

pudugaithendral said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

ADHI VENKAT said...

சிறப்பான லாங்க் ட்ரைவ் தான்...

ஆஷிஷும், அம்ருதாவும் வீடு சூப்பரா கட்டறாங்களே..:)

மனோ சாமிநாதன் said...

சிவன் கோவில், இரால் வடை, குழந்தைகள் மணலில் விளையாடும் அழகிய புகைப்படம் என்று சுவாரஸ்யமாக இருந்தது படிக்க!

Ranjani Narayanan said...

அண்ணாவும் தங்கையும் கட்டிய வீடு அருமை. உங்களுடன் நாங்களும் லாங் டிரைவ் வந்து திரும்பினோம்!
மகிழ்ச்சி!

மன்சி (Munsi) said...

இலங்கையில் புகழ்பெற்ற ஐந்தாவது சிவன் கோவில் - பொன்னம்பலவானேச்சரம் கோவில். இராமேஸ்வர கோவில் அல்ல.

மன்சி (Munsi) said...

நாகுலேஸ்வரம் அல்ல, நகுலேஸ்வரம் / நகுலேச்சரம், கோணேச்சரம் (மூன்று சுழி ண)

pudugaithendral said...

வாங்க கோவை2தில்லி,

10 வருஷத்து முந்தைய நினைவுகள் :)


வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க மனோ சாமிநாதன்,

வருகைக்கும் உங்க கருத்துக்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க ரஞ்சனி மேடம்,

பயணம் இனியதா இருந்தது சந்தோஷம்

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க மன்சி,

நான் அங்கே இருந்த பொழுது கோவில் பூஜாரி ஒருவர் சொன்ன தகவலை வைத்து எழுதினேன்.

உங்களுடைய கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

Anonymous said...

அருமை. படங்கள் வெகு சிறப்பு.

pudugaithendral said...

வாங்க கடைசி பெஞ்ச்,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

காற்றில் எந்தன் கீதம் said...

நல்ல பயணம்.. சீக்கிரமே அவரிடம் இருந்தும் அழைப்பு வரும் பாருங்களேன்...

pudugaithendral said...

வாங்க சுதர்ஷிணி,

வரும் எனும் நம்பிக்கையில் காத்திருக்கேன்.

வருகைக்கு மிக்க நன்றி

மாதேவி said...

நம்ம நாடு. வாழ்த்துகள்.