ஜூ போயிட்டு வந்துதோட டூர் ஆப்பரேட்டரோட வேலை முடிஞ்சதும். பட்டயாவிலிருந்து கொஞ்ச தூரத்தில் இருக்கும் கோரல் ஐலண்ட் போனா, கோரல் பாக்க கூட்டிப்போவாங்க, பராசூட் ஜம்பிங் எல்லாம் இருந்தது. முதலில் அங்கே போக ப்ளான் இருந்தாலும் அம்ருதம்மாவுக்கு இன்னும் ஜலபயம் போகவில்லை. தவிர இந்த மாதிரி சாகசங்கள் செய்ய எனக்கும் உடம்பு அவ்வளவா ஒத்துழைக்காது. ஜூ, மினிச்யாம் அலைஞ்சதே கால்வலி.
கண்ணெதிரில் கடலை வெச்சுக்கிட்டு பீச்சுக்கு போகாட்டி எப்படின்னு கிளம்பினோம். நடக்கும் தூரம் தான். எங்க ரூமிலேர்ந்து பார்க்கும் பொழுது ஸ்பீட் போட்டில் போறதை பார்த்து அயித்தான் மெல்ல அம்ருதாகிட்ட பேச்சுக்கொடுத்து ஸ்பீட் போட்டில் போக திட்டம் போட்டிருந்தார். அங்க போய் விசாரிச்சப்ப ஒரு போட்காரர் 4 பேருக்கும் 800 தாய் பட் கேட்டர். அதுவும் அரை மணிநேரப்பயணம் தான். அம்ருதாகூட பேசிட்டு அவருக்கு சொல்வோம்னு நினைச்சு பேசிட்டு திரும்ப பார்த்தா கண்ணுக்கெட்டின தூரம் வரை அவரைக்காணோம்.
இன்னொரு போட்காரர் 1400 பட் கேட்டாப்ல. கடைசியா 1200பட்டுக்குத்தான் வருவேன்னு சொல்ல வேணாம்னு விட்டுட்டு பீச்ல நடந்தோம். சன்பாத் எடுக்கும் சேர்கள் இருந்தது அதுல கொஞ்ச நேரம் உட்காரலம்னு போனா ஒருத்தர் வந்து 30 பட் ஒரு சேருக்குன்னாரு!! அடப்பாவிகளான்னு எந்திரிச்சு திரும்ப நடந்து போட்டோ செஷன் ஆரம்பிச்சோம். சாயந்திர நேரமா இருந்ததால குளிர்ந்த காற்று இதமா இருந்துச்சு.
அங்கே இண்டர்நேஷனல் ம்யூசிக் ஃபெஸ்டிவல் நடக்குதுன்னு சொன்னேன்ல, அன்றைக்குத்தான் அது கடைசி. அதனால பீச்சை ஒட்டின சாலையில் போக்குவரத்தை தடை செஞ்சிருந்தாங்க. நிறைய்ய கடைகள் போட்டிருந்தாங்க. மணல்லையே நடக்க கஷ்டமா இருக்குன்னு கடைகள் இருக்கும் பக்கம் நடந்தோம்.
அங்கே நான் வெஜ் அயிட்டங்கள் சமைச்சு வித்துக்கிட்டு இருந்தாங்க. ஆனா பாருங்க கொஞ்சம் கூட குப்பயே இல்லை!!! டீஷர்ட்கள், டிரஸ், மலிவான தர தாய் பட்டு துணிகள்னு கடைகள். இன்னன்னு சொல்ல முடியாத நிறைய்ய கடைகள் இருந்தது.
என் தோழி அண்ணபூர்ணாவுக்கு ஒரு பழக்கமுண்டு. அவங்க எந்த ஊருக்கு, தேசத்துக்கு போனாலும் அங்கேர்ந்து ஃப்ரிட்ஜ் மேக்னட் வாங்கி வந்து அவங்க ஃபிர்ட்ஜ்ல வெச்சிருப்பாங்க. ஃப்ரிட்ஜ் மொத்தம் நிறைஞ்சு இருக்கும். எனக்கும் அந்த பழக்கமுண்டு. இந்த ஃப்ரிட்ஜ் மேக்கண்ட்டை வெச்சு எங்க ஃப்ரிட்ஜை சமயத்துல நோட்டிஸ் போர்டாக்கிடுவோம். ஸ்கூல் சர்க்குலர் மாதிரி விஷயத்தை, எக்ஸாம் டைம்டேபில் இதையெல்லாம் இந்த மேக்னட் கலெக்ஷன் புண்ணியத்தில் ஃப்ரிட்ஜில் ஒட்டி வெச்சிடுவேன். இதனால மறக்காம இருக்கும்.
அந்த கடை வீதிகளில் இந்த மாதிரி கீ செயின், மேக்னட் எல்லாம் வித்துக்கிட்டு இருந்தாங்க. அதுவும் 100 தாய்பட்டுக்கு 5 மேக்னட்டுன்னு போர்ட் பாத்தேன்.
கொடுப்பதற்கும் நல்லா இருக்கும்னு வாங்கினேன். அதுல பாருங்க மொதோ நா தான் ஒரு மேக்னட் 65 தாய்பட் கொடுத்து வாங்கியிருந்தோம். யார் யாருக்கு கொடுக்கணும்னு ப்ளான் செஞ்சு வாங்கியாச்சு.
ஐ லவ் பேங்காக், ஐ லவ் பட்டயான்னு போட்ட டீஷர்ட்கள் கூட வித்துக்கிட்டு இருந்தாங்க. எங்க கைட் சிண்டி இங்க அதிகமா வாங்காதீங்க, பேங்காக்தான் பெஸ்ட்னு சொல்லியிருந்ததால வேற எதுவும் வாங்கல. ஆனா சும்மா நடந்து கடல்காற்றை அனுபவிச்சுக்கிட்டு இருந்தோம்.
இதான் ம்யூசிக் ஃபெஸ்டிவல் நடந்த இடம்.
ம்யூசிக் ஃபெஸ்டிவலுக்கு கூட்டம் அதிகம் இல்ல. எல்லா கூட்டமும் இந்தக்கடைகளில் தான் இருந்தது!!! வெயில் கொடுமைக்கு சாதாரணமா தண்ணி குடிச்சா பத்தவே இல்லை. அந்த ஊர்ல கூல்ட்ரிங்ஸ் வித்தியாசமா கொடுக்கறாங்க. ஜூஸ் டம்ப்ளர் நிறைய்ய ஐஸ் பொடிச்சு போடறாங்க. மேலே கொஞ்சமா ஸ்குவாஷ் ஊத்தறாங்க. ஐஸ் கரை கரைய குடிச்சுக்கிட்டு இருக்காங்க. நல்லா பெரிய க்ளாஸ் 20 தாய்பட். லெமன் நல்லா இருந்தது.
சரி இப்ப திரும்ப ரூமுக்கு போகணும். நாங்க வந்த வழி நடுவுல இருக்கு. ஆனா அதை இப்ப தவற விட்டுட்டோம். சரி இன்னும் கொஞ்ச தூரம் போவோம். அங்கே எதுவும் ரோடு தென்பட்டா அதுல திரும்பி நேரா போனா மெயின் ரோட் வந்திரும்னு போனோம். அதே மாதிரியே ஒரு ரோடில் திரும்பி நேரா நடக்க ஆரம்பிச்சோம். வழியில ஒருத்தல் சிப்ஸ் வித்துக்கிட்டு இருந்தாரு. ஒரு பொண்ணும் ரொம்ப ஸ்வாரஸ்யமா வாங்கி ருசிச்சுக்கிட்டு இருந்தது. விதம் விதமான புழுக்களின் சிப்ஸ்!!!!
நடக்க தெம்பு இல்லை. கால் கெஞ்சுது. டுக்டுக்வான்னு ஒரு வண்டி. ஆட்டோவும் இல்ல காரும் இல்லங்கற மாதிரி இருக்கும். அது வந்தா அதுல போகலாம்னு மெயின் ரோட் வந்து ஆட்டோகாக வெயிட் செஞ்சோம். 1 வண்டி வந்தது, 200 பட் கொடுங்கன்னாப்ல. கிட்டத்துலதான்னும் தெரியும். வேணாம்னு அனுப்பிட்டு இன்னொரு வண்டியை கூப்பிட்டா அவரு இங்க பக்கத்துலதான் இருக்கு நடந்தே போங்கன்னு ரூட் சொல்லிட்டு போயிட்டாரு.
200 மீட்டர் போய் வலது பக்கம் திரும்பினா ஹோட்டல். ஹோட்டலில் போய் முகம் கழுவி ரெடியாகி கீழ வந்து சாப்பிட போனோம். அப்பதான் டிரைவர் வந்தாப்ல. அழைச்சுக்கிட்டு போனார். எப்பவும் போற ரூட் இல்லாம வேற ரூட்ல போறாரேன்னு பார்த்தா, இன்னொரு ஹோட்டலில் பிக் அப் செய்ய போயி அவங்க இல்லைன்னு எங்களை சாப்பிட விட்டுட்டு வெயிட் செஞ்சாப்ல.
ஒரே ஹோட்டல் வேணாம்னு சொன்னதை டூர் ஆப்பரேட்டர் மாத்தவேயில்லை. ஆனா ஸ்பைஸ் ரெஸ்டாரண்ட்டில் சாப்பாடு விதவிதமாத்தான் இருந்தது. வேளைக்கு ஒரு வகையா சப்ஜியும், க்ரேவியும் இருந்தது. ஒரு ப்ளேட் மீல்ஸ் 200 தாய்பட்டுன்னு சொன்னாப்ல. எங்க 4 பேருக்கு ஒரு வேளை உணவு 800 பட்.
ஒரு தாய்பட்டுக்கு இந்திய பணம் 1.80. நாங்க சாப்பாட்டுக்கு எல்லாத்துக்கும் சேர்த்துதான் பணம் கட்டியிருந்தோம். அதெல்லாம் கணக்கு செஞ்சு பாத்தப்ப எதுவும் சொல்லாம இருப்பதுதான் நலம்னு மொதோ நாளே தெரிஞ்சு போச்சு.
வெளிநாட்டுல ஏதோ நம்ம இந்திய சாப்பாடு கெடச்சதே பெரிய விஷயம். உணவும் ருசியாவும், வெரைட்டியாவும் இருந்தது. அதனால மதியம் அருமையான தாய் அரிசிச்சோறு + என்ன க்ரேவி + சப்ஜி இருக்கோ அதை சாப்பிட்டேன். இரவு வீட்டில் எப்பவும் சப்பாத்தி இல்லாட்டி டிபன் அது போல இங்கே இரவு “நான்”! நம்ம மைண்ட் செட்டை மாத்திக்க வேண்டியதுதான்!!!!
ஆச்சுடா பட்டாபி!!! இன்னையோட பட்டயா முடிஞ்சத, அடுத்த நாள் காலேல 8.30க்கே புறப்பாடு. ஏன்யா அம்புட்டு சீக்கிரம்னு கேட்டா அது அப்படித்தான்னு சொன்னாங்க. 8.30க்கு கிளம்பினா 10.30க்கு பேங்காக்கில் இருக்கலாம். அதுக்கப்புறம் அங்கே லோக்கல் விசிட்.
காலை உணவை பட்டயா ஹோட்டலில் முடிச்சுக்கிட்டு செக் அவுட் லாபியில உட்கார்ந்தோம். டிரைவர் வந்தாரு. வேற யாரும் கூட இருப்பாங்க. அதான் இவ்வளவு சீக்கிரம் கிளம்பறோம்னு நினைச்சோம். யாருமில்ல. நாங்க மட்டும்தான். அட்லீஸ் ஒரு 9 மணிக்காவது கிளம்பியிருக்கலாம்.
பேங்காக் உள்ளே நுழைஞ்சதுமே வண்டி ஊர்ந்துக்கிட்டுதான் போச்சு. டிராபிக்!!! டிராபிக்!!! 11 மணி வாக்குல ஹோட்டல் வந்தோம். இங்கே எந்த வம்பும் செய்யலை. இப்போதைக்கு ஒரு ரூம் தர்றோம். மதியம் இன்னொரு ரூம்னு சொன்னாங்க. அதுக்குள்ள பேங்காக் கைட் போன் செஞ்சு 10 நிமிஷத்துல தான் வர்றதா சொன்னாப்ல.
பொட்டியை வெச்சிட்டு வந்தோம். சுத்தி பாக்க கிளம்பலாம்னு சொன்னாரு. நான் போகணும்னு சொல்லியிருந்த இடம் வேற. ஆனா இவரு சொன்ன இடம் வேற. இந்த மண்ட காயும் வெய்யிலில் அங்கே போனா அவ்வளவுதான்!!!! ஆனா அவங்க கடைசியா எங்களுக்கு இப்படித்தான் புக் செய்ய சொல்லி அறிவிப்பு வந்தது அதுப்படிதான்னு சொல்லிட்டாங்க!!!!
வேற என்ன செய்ய முடியும்??? வண்டியில போய்க்கிட்டு இருக்கும் பொழுதே கைட் நாங்க அங்கேயிருந்து கிளம்பும் வரைக்கும் என்னன்ன ப்ளான், எத்தனை மணிக்கு பிக் அப், ட்ராப் எல்லாம் விவரமா சொல்ல சொல்ல எழுதி வெச்சுக்கிட்டேன்.
போன இடம்....... ஆமாம் அடுத்த பதிவில்.....
போன பதிவுல வலை ஏத்த முடியாம போன ஆஷிஷ் போட்டோ இதோ:

14 comments:
ஜோர்.
கடைசி படத்தை பார்த்தால் பக் என்று விட்டது.
கொஞ்ச நாட்களாய் இந்தப்பக்கம் வர முடியவில்லை. வந்து பார்த்தால் தாய்லாந்து பயணம்! இன்னொரு முறை தாய்லாந்து சென்று வந்த மாதிரி இருந்தது உங்கள் பதிவைப்படித்ததும்! அருமை!
எங்கள் பயணத்தில், தாய்லாந்து பயணம் முடிந்து டூர் ஆப்பரேட்டருடன் புகைப்படம் எடுத்துக்கொன்டிருந்த போது எங்களின் பஸ்போர்ட்டுகள் அனைத்தும் காணாமல் போய் மோசமான அனுபவமாக முடிந்தது. அதைப்பற்றி கீழேயுள்ள இணைப்பில் எழுதியுள்ளேன்.
http://www.muthusidharal.blogspot.ae/2013/03/blog-post_10.html
...ம்... அங்கே குப்பையே இல்லை...
படம் அருமை...
தொடர்கிறேன்...
//ஜூஸ் டம்ப்ளர் நிறைய்ய ஐஸ் பொடிச்சு போடறாங்க. மேலே கொஞ்சமா ஸ்குவாஷ் ஊத்தறாங்க. ஐஸ் கரை கரைய குடிச்சுக்கிட்டு இருக்காங்க.//
இந்த இடத்துல உங்களுக்கு மும்பை ஞாபகம் வந்துருக்கணுமே :-)))). நம்ம அம்ச்சி மும்பையிலும் gola இப்டித்தான் கிடைக்கும் ஞாபகமிருக்கா??
வாங்க ஐயா,
மிக்க நன்றி
வாங்க ஸாதிகா,
ஆஷிஷுக்கும் பக் பக் நிமிடங்கள் தான். ஆனா அப்பாவுக்கும், மகனுக்கும் முதலைன்னா ரொம்ப பிடிக்கும்.
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க மனோ சாமிநாதன்,
உங்க பதிவை இதோ படிக்க கிளம்பிட்டேன்.
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க தனபாலன்,
பட்டயா, பேங்காக் ரெண்டிலும் ஒரு குப்பை கூட பார்க்க முடியலை. சுத்தமா இருக்கு. ராத்திரிலதான் குப்பையை எடுத்து போக வண்டி வருது. காலையில் ரோடே சுத்தமா இருக்கு.
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க அமைதிச்சாரல்,
ஆமாம் அந்த ஞாபகம் வந்தது. இப்ப இங்கே ஹைதையிலும் சிந்தி காலணி போனா கோலா கிடைக்கும்.
வருகைக்கு மிக்க நன்றி
சரியாப்போச்சு. சேருக்கு 30 ரூவாயும் போட்டுக்கு 1200 ரூவாயும் பேரம் பார்த்தா அந்த ஊருக்காரனும் மெரீனா குதிரைக்காரனும் ஒன்னு போல.
கடைசிப் படம் சூப்பர்!
அருமையான அனுபவங்கள்.
வாங்க கடைசி பென்ஞ்ச்,
நம்ம ஊர் மாதிரிதான், சுற்றுலா தலங்களில் நின்னா காசு, உக்காந்தா காசுன்னு இருப்பது போலத்தான் அங்கயும்.
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க கோவை2தில்லி,
ஆமாம் :)
வருகைக்கு மிக்க நன்றி
Post a Comment