Saturday, April 06, 2013

வீர தீர சாகசங்கள்.....

காலையில் எழுந்து பசங்க ரூமுக்கு போய் அவங்களை எழுப்பி எங்க ரூமுக்கு வரச்சொல்லிட்டு வந்தாரு அயித்தான். பசங்க வர்றதுக்குள்ள கெட்டிலில் தண்ணீர் போட்டு வெச்சிருந்தேன். வந்ததும் சூடா காபி கலந்து குடிக்கலாம்னு. இந்த ஹோட்டலில் காம்ப்ளிமெண்ட்டரியா கெட்டில், பால் பவுடர்,இன்ஸ்டண்ட் காபி பவுடர்,டீ பேக், சர்க்கரை எல்லாம் இருந்தது. பசங்க ரூமிலிருந்தவைகளும் கொண்டாந்து கலக்கலாம்னு போனேன்.


“நீங்க போய் உட்காருங்க மேடம்! நான் பாத்துக்கறேன்னு!” அயித்தான் சொல்ல :) ஜன்னல் ஓரத்துல கிடந்த சோபாவுல உக்காந்து 12ஆவது மாடியிலெர்ந்து தெரிஞ்ச கடலை ரசிக்க ஆரம்பிச்சேன்.  பால், டிகாஷன் வெச்சு காபி கலப்பது கம்ப சூத்திரமில்ல. இந்த பால்பவுடரை வெச்சு சரியா கலப்பது கொஞ்சம் கஷுடம் தான். அயித்தான் அடிக்கடி ஊருக்கு போறவரு என்பதால இத்தனை வருஷ எக்ஸ்பீரியன்ஸில் ஹோட்டல் போகும் போது காலை காபி வெவகாரம் அயித்தான் கையில் தான். வூட்டுல நாம கலந்து கைல கொடுக்கறோம். இங்க வந்தா அயித்தான் செஞ்சு கொடுப்பாங்க. ஆனந்தமா ரசிச்சு குடிக்க வேண்டியது தானே!! :))

குளிச்சு ரெடியாகி காலை உணவு சாப்பிட கீழே போனோம். காம்ப்ளிமெண்டரி ப்ரெக் ஃபாஸ்ட்.  என்னதான் இருக்குன்னு ஒரு ரவுண்ட் பாக்க போனேன். ஆச்சரியமா வெஜிட்டேரியன் கார்னர் கூட இருந்தது. காலங்கார்த்தாலே பராத்தா யார் சாப்பிடறது? எப்படியும் மதியமும் இரவும் கூட ”நான்” தான் இருக்கேனேன்னு சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.  ஆம்லெட், வெஜ் சாண்ட்விச், பழங்கள், கேக், வெஜிடபிள் கறி, வெஜ் நூடில்ஸ் இதெல்லாம் இருக்கு. தவிர ஹேம், சாசேஜ் என வெரைட்டியா இருந்தது.

ப்ரெட்டை டோஸ்ட் செஞ்சு, வெஜிடபிளோட சாப்பிட்டோம்.  காபி டீ இருந்த இடத்தில் தில்மா டீ பேக் போட்டு கொதிக்க வெச்சிருந்தது பாத்து ஆனந்தமா ப்ளாக் டீ குடிச்சு லாபியில வந்து உட்கார்ந்தோம். 9.30 மணிக்கே வர்றேன்னு சொன்ன டிரைவர் வரலை. 9.45க்கு தான் வந்தாரு. உடன் கிளம்பியாச்சு. போக இருந்த இடம் ஸ்ரீரச்சா டைகர் ஜூ. பேங்காக் செல்லும்  ஹைவேயில் பட்டயாவிலிருந்து 20 நிமிட பயண தூரத்தில் இருக்கு.

10.15க்கு போய் சேர்ந்தோம். டிரைவர் போய் டிக்கெட் வாங்கி கொண்டு வந்து கொடுத்தார். அத்தோடு ஒரு ஸ்டிக்கரை நம் உடையில் ஒட்டிக்கணும்.  10.30க்கு ஷோ ஆஷிஷ் அதை மிஸ் செஞ்சிடக்கூடாதுன்னு  சொன்னதுனால ஓடினோம்.  முதலைகள் ஷோ. ஆஷிஷிற்கு முதலைகள் ரொம்ப பிடிக்கும்.
முதலை மேலே படுத்துக்கறாங்க, முதலை வாய்க்குள்ளே தலையை விடறாங்க. அதுவும் பேசாம வாயை ஆன்னு பிளந்துக்கிட்டு இருக்கு.

முதலைகள் கூட படம் எடுத்துக்கலாம். ஆஷிஷ் முகத்தை பார்த்தேன்.
”யெஸ்”னு சொல்ல அழைத்து போனோம். முதலை மேல உட்கார்ந்திருப்பது போல போட்டோ. ஆன்னு வாயைப்பிளந்து இருக்கு.  போட்டோ முடிச்சு வந்ததும்.  த்ரில்லிங்கா இருக்குமா!! நான் மேலே உட்காரலை. கொஞ்சம் பயம்தான், உட்கார்ந்த மாதிரி இருந்தேன் ஆனா என் காலிலேயே பாலன்ஸ் செஞ்சு மடிஞ்சு உட்கார்ந்திடேன். ஸ்கின் ஹார்ட் வேறன்னு “ சொன்னாப்ல.
ஆனா முதலையை கிட்ட இருந்து பாத்தேன் அது செம எக்ஸ்பீரியன்ஸ், வாயை திறந்துகிட்டு இருக்கு அப்படி திருப்பி ஒரு அடி அடிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்னு கமெண்ட் வேற.


அடுத்து புலிகள் ஷோ. எல்லாம் பக்கத்து பக்கத்துலேயே இருக்கு. செம வெயில். புலிகள் வலையத்தில் குதிப்பது, அந்த ஷோவும் நல்லா இருந்தது.
எல்லா புலியும் ஸ்டூலில் படுத்தோ, தொங்கியோ உட்கார்ந்திருக்க எங்களுக்கு முன்னாடி இருந்த புலியார் மட்டும் கொஞ்சம் “டிஃபரண்டா” உட்கார்ந்திருந்தார். கடைசியில ஒரு புலி ரெண்டு காலையும் ட்ரையினர் கழுத்தில போட்டு கட்டிகிட்டு அவரை கொஞ்சினது செம ஆச்சரியம்.
 
அடுத்து யானைகள். அதுல ரொம்ப ரசிச்சது இந்த நிகழ்ச்சி தான். பார்வையாளர்கள் வரிசையிலிருந்து ஒரு ஆணையும், ஒரு பெண்ணையும் கூப்பிட்டாங்க. பெண்ணை குப்புற படுக்கச் சொல்லி மேலே ஒரு டவல் போர்த்தினாங்க. அடுத்து ஆணை நேர படுக்கச் சொல்லி அவர் மேலயும் ஒரு துணி போர்த்தினாங்க. இப்ப யானை வந்து இவங்களுக்கு தாய் மசாஜ் செய்யும் அப்படின்னு சொல்ல, அவங்க முகத்துல கொஞ்சம் டென்ஷன். முதலில் ஒரு யானை வந்து செல்லமா மசாஜ் செஞ்சது. ரெண்டாவது யானை வந்து அவங்களை துதிக்கையால சும்மா தொட்டுட்டு, தாண்டி போயிடிச்சி!!!!


அந்தம்மாவை அனுப்பிட்டு அவர மட்டும் நிக்க வெச்சாங்க. எதுக்குன்னு கேட்டா இப்ப யானையோட உங்களுக்கு மட்டும் தனிஷோன்னு சொல்ல கலவரமாவே ஓகே சொன்னாரு. பலூன்களை யானை சின்ன கம்பு போட்டு எப்படி உடைக்குதுன்னு ட்ரையல் நடந்தது. 1 தடவைதான் சரியா போட்டது, மீதி ரெண்டு தடவை குறி தப்பி போச்சு. இதுல என்ன கலவரம்!!! அந்த ஆண்மகனை ஒரு தட்டியில கட்டியிருந்தாங்க. அவர் கை இடுக்குல ரெண்டு பலன், கால் இடுக்குல 1 பலூன். இதை யானை உடைப்பது இதுதான் மேட்டர்.

யானை ரெடியா அவருக்கு எதிரா கொஞ்சம் இடைவெளி விட்டு நின்னுச்சு. அந்த சமயத்துல அவரோட கண்ணை வேற கட்டிவிட்டாங்க. மனுஷன் செம டென்ஷன் ஆகியிருப்பாரு. டக்குன்னு பாத்தா இந்த யானை உள்ள ஓடிப்போச்சு, இன்னொரு யானை வந்து துதிக்கையாலேயே பலூனை டக்குன்னு உடைச்சப்ப செம கரகோஷம். அவருக்கு என்ன நடக்குதுன்னே தெரியலை.... திக் திக் நிமிடங்களா கழிச்சிருப்பாரு!!!கண்ணைத் திறந்து தான் ”சேஃபா” இருப்பதை பார்த்து சந்தோஷம் அவருக்கு.
3 ஷோவும் முடிஞ்சது. எங்க டிரைவர் 2 மணிக்கு வந்து அழைத்து போவதா சொல்லியிருந்தாரு. அதுவரைக்கும் சுத்தி பாக்க போகலாம்னு ப்ளான். ஆனா புலிக்குட்டிக்கு பால் புட்டியில கொடுத்தே தீருவேன்னு அயித்தான் கிட்ட
சொல்லியிருந்தேன். அந்த இடத்துக்கு போனோம். நானும் அம்ருதாவும் மட்டும் உட்காரலாம்னு ப்ளான். அம்ருதம்மாவுக்கு கொஞ்சம் பயம். அம்மா நீங்க இடது பக்கம் உட்காருங்க. அங்கதான் பால்புட்டி பிடிக்கறாப்ல இருக்குன்னு சொல்ல சரின்னு உட்கார்ந்தேன். அயித்தானையும், ஆஷிஷையும் கூட கூப்பிட்டு ஒரு ஃபேமலி போட்டோவா எடுக்கலாம்னு டக்குன்னு தோண அயித்தான், அம்ருதா,நான் உட்கார ஆஷிஷ் எங்களூக்கு பின்னாடி நிக்கறாப்ல செட் செஞ்சுக்க சொன்னாங்க.

மடியில டவலைப்போட்டாங்க.  அதுமேல புலிக்குட்டி வந்து உட்கார்ந்துச்சு.
அதுக்கு என்ன அவசரமோ தெரியலை பாலை வாயில் வெச்சா கட கடன்னு குடிக்குது. எங்க கிட்ட வரும்போது 2ஆவது பாட்டிலில் பால் குடிச்சுக்கிட்டு இருக்கு. மூச்சு முட்ட குடிச்சிருக்கும் போல திணறது. நாங்க போட்டோ எடுக்க உட்காரும்போது பாட்டிலை வாயில வெக்க முடியாம திணற பாட்டிலை எடுத்திட்டேன். அம்ருதம்மாவுக்கு டென்ஷன். அம்மா கைய கடிச்சிற போகுதுன்னு!!!  அப்புறம் வாய்க்கிட்ட வைக்கறமாதிரி வைக்க, போட்டோ எடுத்தாங்க. :)) அந்தக் குட்டியை உள்ளே விட்டுட்டு, இன்னொரு குட்டியை வெளிய கூட்டிகிட்டு வந்தாங்க. உடனேயே போட்டோவை வாங்கிக்கலாம்.

அங்கே வெள்ளைப்பன்றியும் இருக்கு. அதுக்கிட்ட சின்ன புலிக்குட்டி இருந்தது. அந்த பன்றிக்கிட்டதான் பால் குடிப்பதா சிலர் பேசிக்கிட்டு இருந்தாங்க. அதே மாதிரி புலி இருந்த கூட்டுக்குள்ள 4 வெள்ளை பன்றிக்குட்டிகளூம் இருந்ததை பார்த்தோம்.


பெரிய புலியை உட்கார வெச்சு அது பக்கத்துல நாம உட்காருவது போல போட்டோ எடுத்துக்கிட்டு இருந்தாங்க. அங்க போய் பார்த்தோம். நம்ம கேமராவுல போட்டோ எடுத்துக்க 100 தாய்பட். அதுவும் ஒரு போட்டோ எடுத்துக்கிட்டோம். முயல்குட்டி, மான்கள்னு இருந்தது. ஆனா பெயருக்கு ஏத்தாப்ல புலிகள் தான் கொஞ்சம் கூட இருந்தது. தனியா ஒரு பறந்த இடத்துல உலாவிக்கிட்டு இருந்துச்சு. கண்ணாடி தடுப்புல நாம பார்க்கலாம். இன்னொரு இடத்துல கீழே புலிகள் இருக்கு. மேலே அதுகளுக்கு உணவு சின்ன பீஸ் மாமிச துண்டு தொங்கிகிட்டு இருக்கும். துப்பாக்கியிலா ஷூட் செஞ்சா அந்த தூக்கு திறந்துக்கும், உணவு கீழே விழும். இதுக்கும் காசு. அந்த இடத்துல எப்படி அந்த தூக்கு தொங்குது, உணவை எப்படி திரும்ப அதுல வைச்சு மேலே தொங்க விடுறாங்க இது தெரிஞ்சிக்கணும்னு
கொஞ்ச நேரம் நின்னோம்.

காலியான தூக்குகள் மின் கம்பிகள் மூலமா இந்தப்பக்கம் மேலே இருக்கும் ஒரு சின்ன இடத்துக்கு போகுது, அங்கே உணவை போட திரும்ப மின்
கம்பிகள் மூலமா புலிகளின் தலைக்கு மேலே வருது. நியாயமான உயரம். இந்த மாதிரி பொம்மைகள் செஞ்சு முதலைகள் வகுப்புல இருக்கறாமாதிரி ஒரு செட் அப் செஞ்சு வெச்சிருந்தாங்க.

மீனுக்கு சிலர் பால்புட்டியில பால் கொடுத்திக்கிட்டு இருந்தாங்க சிலர். நமக்கு வெயில் தாங்க முடியலை. 1.30க்கே டிரைவருக்கு போனைப்போட்டு நாங்க ரெடின்னு சொல்ல அவரு வந்து கூட்டிகிட்டு போனாரு. மதிய உணவை முடிச்சு ஹோட்டலுக்கு திரும்பி நல்ல தூக்கம்.

சூரியன் கடலுக்குள்ள மறைய ஆரம்பிக்கும் நேரத்துல இன்னொரு ரவுண்ட் அடிக்க கிளம்பினோம்... அதைப்பத்தி அடுத்த பதிவுல....7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

யானை விளையாட்டு மிகவும் பிடித்தது...

தொடர வாழ்த்துக்கள்...

புதுகைத் தென்றல் said...

வாங்க தனபாலன்,

யானைகள் செய்வது அத்தனையும் அழகு. எனக்கு ரொம்ப பிடிச்சது யானை தான்.

வருகைக்கு மிக்க நன்றி

வல்லிசிம்ஹன் said...

யானையைத் தூக்கச் சொல்லிப் படம் எடுத்துப்பாங்களே. நீங்க அதைச் செய்யலையே:)
அப்புறம் முதலைப் படங்களையும் காணோம்.!

புதுகைத் தென்றல் said...

வாங்க வல்லிம்மா,

யானைக்கிட்ட படம் எடுத்துக்கும் மூடு இல்லை. புலி, ஒராங்குட்டான்னு திட்டம் போட்டிருந்தோம். ஒராங்குட்டானும் மிஸ்ஸாகிடிச்சு.

வருகைக்கு மிக்க நன்றி

கோவை2தில்லி said...

புலிக்குட்டிக்கு பால்புட்டி குடுத்தீங்களா!!!!

பயமா இல்லையாங்க...:)

நல்ல அனுபவங்கள்...

புதுகைத் தென்றல் said...

வாங்க கோவை2தில்லி,

அங்க புலிகள் ஆக்ரோஷமா இல்லை. இந்த போட்டோ எடுக்க அனுமதிக்கும் புலிகளை கொஞ்சம் பழக்கபடுத்தி வெச்சிருந்தாங்கன்னு தான் சொல்லணும். அங்கயே இன்னொரு இடத்துல புலிக்குட்டியை ஏதோ பூனைக்குட்டி மாதிரி மடியில சாதாரணமா வெச்சிருந்தாங்க. :))

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க கோவை2தில்லி,

அங்க புலிகள் ஆக்ரோஷமா இல்லை. இந்த போட்டோ எடுக்க அனுமதிக்கும் புலிகளை கொஞ்சம் பழக்கபடுத்தி வெச்சிருந்தாங்கன்னு தான் சொல்லணும். அங்கயே இன்னொரு இடத்துல புலிக்குட்டியை ஏதோ பூனைக்குட்டி மாதிரி மடியில சாதாரணமா வெச்சிருந்தாங்க. :))

வருகைக்கு மிக்க நன்றி