Friday, May 10, 2013

படங்களுடன், வீடியோவும் பார்க்க வாருங்கள்!!!!

வெயில் தாங்க முடியலையாம் கரடியாருக்கு!!!

தனிக்காட்டு ராஜா!! தனியா இருக்கத்தான் பிடிக்கும்அட போங்கப்பா வெயில் தாங்கலை!!!

  உராங்குடான் நிகழ்ச்சி செம சூப்பரா இருந்தது. வீடியோ பாருங்க
 

இந்த சாப்பாடு இவ்வளவு அருமையாய் இருக்கும்னு நினைச்சு கூட பார்க்கலை.

ஆரம்பம் தான்!!!
எங்களைப்போல பலருக்கும் இது ஒரு ஆச்சரியம் தான்!!!

இன்னும் வருது!!!


தாய்லாந்தில் இந்திய பூரி!!!இந்த சப்ஜி போதுமா!!! அரிசியும் இருக்கு பாருங்க!!


புளிக்காத தயிர் அருமையாய்
கேசரி!!அல்வா!!!
நான் கப்புல கேசரி போட்டு எடுத்துக்கிட்டு ஸ்பூன் எடுக்க போனப்ப ஒரு இந்தியர் “ இது எங்கங்க இருக்கு?? இது அல்வா தானே!! நல்லா இருக்கான்னு கேள்வி கணையால துளைச்சு எடுத்தாரு. நான் வெஜ்ஜுக்கு பின்னாடி இருக்குன்னு சொல்ல உடனே போறேன்னு ரெண்டு கப் எடுத்துக்கிட்டு போனாரு. பூரியோட இந்த கேசரி சூப்பர் காம்பினேஷன்.
கைதட்ட சொல்லிக்கேட்டது அழகுகடற் சிங்கம்
படங்கள் நல்லா இருக்குல்ல. சாப்பிட்டு முடிஞ்சதும் டால்பின் ஷோ. 2 மணிக்குன்னு போர்ட் போட்டிருக்காங்க. ஆனா ஷோ நடக்கும் இடம் 30 நிமிடம் முன்னாடிதான் திறக்கப்போறாங்க. முன்னாடியே போய் சீட் பிடிச்சாதான் உண்டு. அம்புட்டு கூட்டம். அதனால வேற எங்கயும் போகாம
டால்பின் ஷோ இருக்கும் இடத்து கிட்ட போய் காத்திருந்தோம். வெயில் வெயில் வெயில்!!!!
1.30க்கு கதவு திறந்தாங்க ஓடிப்போய் நல்ல இடமா பார்த்து உட்கார்ந்தோம். எல்லாரும் எங்களைப்போல காஞ்சு போய் இடத்தை தேடி பிடிக்க வந்திட்டாங்க போல. கொஞ்ச நேரத்துலேயே இடம் நிரம்பிடிச்சு.
சஃபாரி வோர்ல்ட் மரைன் பார்க்கில் தான் இந்தியர்கள் அதிகம்னு சொன்னேன்ல. அதை உறுதி செய்வது போல நேயர் விருப்ப பாடலாக சில ஹிந்தி பாட்டுக்களை ஒலிபரப்பினாங்க.  இந்தியர்கள் எல்லாம் எந்திரிச்சு ஆடுங்கன்னு சொல்ல ஒருத்தர் எழுந்து செம ஆட்டம். இதோ வீடியோ பாருங்க :)
 டால்பின்கள் துள்ளி குதிச்சு நீந்துவது ரொம்ப அழகு.  அதிலும் இந்த வீடியோவில் கடைசி ஷாட் பார்க்க தவறாதீங்க. ரொம்பவே அதிசயமா அழகா இருந்தது நிகழ்ச்சி.
 
நிகழ்ச்சி முடிஞ்சதும் எங்கயும் சுத்தி பார்க்க மனசில்லை. பட்டாயா ஜூவில் பார்த்தது போதுமேன்னு ஆயிடிச்சு.  ட்ரைவருக்கு போனைப்போட்டா “பிக் அப் 3.30 மணிக்குத்தான்”னு கறாரா சொல்லிட்டாப்ல. அங்கனயே தான் இருக்காரு. ஆனா நல்ல உறக்கம் போல. நாம போய் உட்கார்ந்தா தூக்கம் கெடுமே!!!
அதுவரைக்கும் அங்க இங்க சுத்திக்கிட்டு இருந்தோம். முடியலை. 3 மணிக்கே வெளியே வந்து அங்க சேர் போட்டிருந்தங்க காத்திருந்தோம். ட்ரைவர் வந்தார். எங்க குரூப் ஆளுங்க சிலர் வர லேட்டாச்சு. ஒரு வழியா 4 மணிக்கு கிளம்பினோம். 
5.45 மணிக்கு ஹோட்டலில் இறக்கிவிட்டாப்ல. சூடா டீ குடிச்சா தேவலைன்னு இருந்திச்சு. நம்ம சாப்பாட்டு ஹோட்டலில் டீ கிடைக்குமேன்னு போனோம்.
அப்பதான் ஒரு குருப் வந்து அங்க சாப்பாடு நடந்துகிட்டு இருந்தது.

டீ வேணும்னு கேட்க, இப்ப சாப்பாடு நடக்குதுன்னாரு ஓனர் முன்னா. மணி 6ஆகப்போகுதேன்னு வந்தோம்னு சொல்ல, வெளியில வெயிட் பண்ணுங்கன்னு சொல்ல காத்தாட வந்து உட்கார்ந்தோம். இஞ்சி போட்ட டீ சுடச்சுட கொண்டு வந்து கொடுத்தாப்ல. 

டீ உள்ள போனதும் தான் உயிர் வந்தா மாதிரி இருந்தது. அடுத்த ரவுண்ட் அப்புக்கு கிளம்பினோம். 

அடுத்த பதிவுல சொல்றேன்.

15 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசிக்க... பசிக்க... ருசிக்க... படங்கள் அருமை...

டீ அவ்வளவு சுவையோ...?

அடுத்து...

புதுகைத் தென்றல் said...

வாங்க தனபாலன்,

வெளிநாட்டுல நம்ம இஞ்சி டீயை யாரோ போட்டுக்கொண்டு வந்து சுடச்சுட பரிமாறுங்கன்னா அது அந்த சமயத்துல அமிர்தம் மாதிரி தானுங்களே!! :))

வருகைக்கு மிக்க நன்றி

அம்பாளடியாள் said...

ரசிக்கவும் ருசிக்கவும் வைத்த பகிர்வு இதற்க்கு மிக்க நன்றி .இனிய
அன்னையர் தின வாழ்த்துக்களும் இன்று உங்களுக்கு .

ராமலக்ஷ்மி said...

அருமை. தொடருங்கள்.

புதுகைத் தென்றல் said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி அம்பாளடியாள்

புதுகைத் தென்றல் said...

மிக்க நன்றி ராமலக்‌ஷ்மி

கோமதி அரசு said...

படங்களும் , வீடியோவும் அருமை.
பயணம் இனிமையானது.

வெங்கட் நாகராஜ் said...

அருமையான படங்கள்.... ரசித்தேன்.

kadaisibench said...

முதல் படத்தைப் பார்த்தவுடன் என்னவோ என்னைத்தான் யாரோ படம் பிடித்துவிட்டார்கள என்று நினைத்தேன்..ஆவ்வ்.

இன்னும் உரை படிக்கலை. இரவில் படிக்கிறேன்.

புதுகைத் தென்றல் said...

வாங்க கோமதிம்மா,

அதனால தான் பயணம் எங்களுக்கு ரொம்ப பிடிச்ச விஷயம்.

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு மிக்க நன்றி சகோ

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு மிக்க நன்றி கடைசி பெஞ்ச்

அமுதா கிருஷ்ணா said...

கேசரி பார்க்கவே ரொம்ப நல்லாயிருக்கு...

புதுகைத் தென்றல் said...

வாங்க அமுதா,

கேசரி கலர்லாம் போடாம இய்ற்கையா ரொம்ப நல்லா இருந்தது.

வருகைக்கு மிக்க நன்றி

மாதேவி said...

படங்கள், வீடியோ அருமை.

ரசித்தேன்.