Thursday, May 09, 2013

saffari world & Marine park bangkok.....

டாண்ணு வந்திட்டாரு ட்ரைவர். இன்னைக்கு கைட் அண்ணாத்தே கிடையாது. எங்களுடன் இன்னும் இரண்டு குடும்பங்களும் இருந்தாங்க. அவங்களும் இந்தியாவிலிருந்துதான். ஒருத்தர் ஏற்கனவே எங்களுடன் பட்டயா வந்தவர்.

 1 மணிநேர பயணத்தில் சஃபாரி வோர்ல்டை அடைந்தோம். எங்களை காரிலேயே இருக்க சொல்லிவிட்டு ட்ரைவர் இறங்கிபோய் டிக்கெட் வாங்கி வந்தார்.  இந்த வண்டிலேயே சஃபாரி வோர்ல்ட் சுத்தி பாக்கலாம்னு சொன்னார். அடிக்கற வெயிலுக்கு இறங்காம இருக்கோமேன்னு சந்தோஷப்பட்டுக்கிட்டு உட்கார்ந்திருந்தேன்.

பறந்து விரிந்திருக்கு அந்த இடம். மிருகங்கள் இயற்கையாக தன்போக்கில் தான் இருக்க, வாகனங்களில் நாம் ரவுண்ட் அடிச்சு அவைகளை தரிசிப்பது போல அமைப்பு.


காண்டாமிருகம், ஒட்டகச்சிவிங்கி எல்லாம் தன்போக்கில் அலைஞ்சுகிட்டு இருக்கு. கூட்டமா மான்கள் துள்ளி விளையாடிக்கிட்டு இருக்கு. எங்க வண்டிக்கு முன்னால பாஞ்சு ஓடி வந்துக்கிட்டு இருந்தது. இப்படி கிட்டத்துல மிருகங்களை தன்போக்கில் பார்ப்பது ரொம்ப அபுரூபம். இருய்யா போட்டோ எடுக்கலாம்னா, ட்ரைவர் கேட்டாதானே!!!! கட கடன்னு ஓட்டுறாரு.

4 அல்லது 5 புலிகள் கொத்தா ஒரே இடத்துல இருக்கு,  கொஞ்சம் தூரத்துல தனியா சிங்கராஜா!!! நம்ம வண்டிக்கு க்ரில் எல்லாம் இல்ல. கண்ணாடிதான். பாஞ்சு உடைக்குமோன்னு பயமாத்தான் இருக்கு. கூட இருந்த சின்ன பசங்களுக்கு த்ரில் தாங்க முடியாம, கத்திக்கிட்டே இருந்தாங்க. கொஞ்சம் நிதானமா ஓட்டினா நல்லா போட்டோ எடுக்கலாமேன்னு எங்க எல்லோருக்கும் ஆதங்கம். ட்ரைவர் கிட்ட சொன்னா “நோ டைம்!!””னு பதில் வருது. செம கடுப்பு எனக்கு. அப்புறம் எதுக்குய்யா கூட்டியாந்தன்னு கத்தணும்னு.

பின்னாடி வரும் மத்த பஸ்ஸெல்லாம் நின்னு நிதானமா போட்டோ எடுக்க வாய்ப்பு கொடுக்கறாங்க. தோகை விரிச்சு மயில் ஆடிக்கிட்டு இருக்கு, அதை கூட போட்டோ எடுக்க விடாம விர்ருன்னு வண்டியை விட்டாப்ல ட்ரைவர். திரும்ப கொண்டாந்து ஆரம்பிச்ச இடத்துலேயே நிப்பாட்டினார். அதாவது சஃபாரி வோர்ல்ட் & மரைன் பார்க் ரெண்டும் பக்கத்து பக்கது பில்டிங்.

இதுக்கா இம்புட்டு வேகம்ணு நினைச்சோம். இப்ப மரைன் பார்க் போக டிக்கட் எங்க குழுவுக்கு வாங்கியாந்தாரு. எத்தனை மணிக்கு பிக் அப் அதை பத்தி மட்டும் சொல்றாரே தவிர முக்கியமான விஷயத்தை பத்தி வாயே திறக்கலை!!! :)) பொறுத்து பொறுத்து பார்த்து இன்னைக்கு லஞ்ச் இங்கேதான்னு சொன்னாங்களே!! அதைப்பத்தி என்ன தகவல்னு கேட்டதற்கப்புறம் ஒரு சிட்டை எடுத்து காட்டி இதான் உங்க டேபிள் நம்பர். உங்க 12 பேருக்கும் டேபிள் புக் செஞ்சிருக்கு. ஆனா யாராவது ஒருத்தர் கிட்டதான் இந்த சிட்டை இருக்க முடியும்னு சொல்ல டேபிள் நம்பரை மனப்பாடம் செஞ்சுகிட்டு ஓடினோம். மனசுக்குள்ள டென்ஷன் தான்.

சாப்பாடு ஒண்ணும் சரியா அமைய போறது இல்லை. தாய்லாந்தில் இந்த காட்டுக்குள்ள நமக்கு என்ன சாப்பிட கிடைச்சிட போகுது!!! தாய் அரிசி நல்லா இருக்கும். அதோட ஏதாவது சாலட், யோகர்ட் வெச்சு வண்டியை ஓட்ட வேண்டியதுதான்னு நினைச்சுக்கிட்டோம்.

orangutan  ஷோ 10.30 மணிக்கு. கூட்டமோ கூட்டம் அன்னைக்கு. ரொம்ப சூப்பரா இருந்தது ஷோ. மல்யுத்த வீரர்களா ரெண்டு orangutan  சண்டை போட அதுக்கு மத்த சிம்பன்சிகள் சியர் அப், ஒரு சியர் கேர்ள், கீழே விழுந்த  orangutan ஸ்ட்ரெச்சரில் வெச்சு தூக்கிகிட்டு போறேன்னு கீழே போட்டுட்டு போறதுன்னு செம ஜாலியா இருந்தது. மனசு விட்டு சிரிச்சுகிட்டு இருந்தோம்.

அடுத்து சீலயன் ஷோ. அதுவும் ரொம்ப நல்லா இருந்தது. கங்கணம் ஸ்டைல் பாட்டுக்கு டான்ஸ்  சீ லயன் டான்ஸ் ஆடியது சூப்பர்.

அங்கேயிருந்து வெளியே வந்தால் தாங்க முடியாத வெயில். கொளுத்தி எடுக்கிறது. தவிர பட்டயாவில் ஸ்ரீரச்சா டைகர் ஜூவில் மிருகங்களை பார்த்திருந்ததால இங்கே அவ்வளவா பிடிக்கலை. அதை விடவும் கூட்டம் கூட்டம் கூட்டம்...... நமக்கு கூட்டம்னாலே அலர்ஜி. அன்றைக்கு லோக்கல் பள்ளி குழந்தைகள், பிலிப்பைன்ஸ், மணிலா, இந்தியா என பல நாட்டிலிருந்தும் மக்கள்ஸ் வந்திருந்தனர். நம்ம இந்தியா தான் இந்த இடத்தில் டாப்பாம். ஆதாவது இந்தியர்கள் இந்த இடத்தை பார்வை இடுவதில் முதல் இடம் வகிக்கிறார்களாம்.

மதியம் 12.30க்கு  லயன் டென் ரெஸ்டாரண்டில் சந்திக்கலாம்னு சொல்லி மத்தவங்க கிட்டேயிருந்து பிரிஞ்சு அவங்க அவங்க இஷ்டத்துக்கு சுத்திக்கிட்டு இருந்தோம். எங்களுக்கு பசியை விடவும் ஓர் இடத்தில் காத்தாட உட்கார்ந்தா போதும்னு இருக்க ,ரெஸ்டாரண்ட் எங்கே இருக்குன்னு தேடிக்கிட்டு போய் எங்க டேபிள் நம்பர் சொல்ல குறிச்சுகிட்டாங்க. டேபிளை தேடி போய் உட்கார்ந்தோம்.

சாப்பாடு என்ன இருக்கும் என்பது தானே கொஞ்சம் டென்ஷனா இருந்துச்சு. முதலில் ஒரு ரவுண்ட் என்ன இருக்குன்னு பார்த்து வருவோம்னு போனா செம ஷாக்!!!! தாய்லாந்தில் மரைன் பார்க்கில் இப்படி ஒரு இந்திய விருந்தை நான் எதிர்பார்க்கவே இல்லை. பூரி, பட்டர்பனீர், ஆலூ சப்ஜி, ரைஸ், தால், கர்ட், சாலட் என வெஜிட்டேரியன் கார்னர் களை கட்டி எங்களை வரவேற்றது!!!
டெசர்ட்டுக்கு ரவா கேசரி சுடச்சுட. நான் வெஜ் கறிகள் மட்டும் தனியா இருந்தது. இதுல இன்னமும் ஆச்சரியமாக இருந்த விஷயம் ஜெயின் ஃபுட் தனியா இருந்தது தான்.


சரியான கூட்டம். 15,000க்கும் மேல மக்கள்ஸ் இருந்திருப்பாங்க. பக்கத்து அறையில காண்டினெண்ட்டல் சாப்பாடு. அங்கே தாய் உணவு கூட இருக்கு ட்ரை செய்யலாம்னு சொன்னாங்க. நமக்கு இதுவே ரொம்ப ஜாஸ்தி. இந்தியன் செஃப் தான் அங்கே இருந்தாரு அவரைப்பார்த்து அருமையான சாப்பாட்டுக்கு நன்றின்னு மனசார வாழ்த்திட்டு வந்து உட்கார்ந்தோம். 

(படங்களை பதிவேத்த முடியலை. இண்டர்நெட் ஏதோ ஆட்டம் காட்டிகிட்டு இருக்கு. நாளைக்கு தனிப்பதிவா படங்கள், வீடியோவுடன் போடறேன்.)

அடுத்தது???!!!!!

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

த்ரில் அனுபவத்தை ரசித்தேன்... தொடர்கிறேன்...

புதுகைத் தென்றல் said...

பதிவு போட்ட உடன் கமெண்ட்.

மிக்க நன்றி தனபாலன்

ஸாதிகா said...

அனுபவம் அருமை!

பழனி. கந்தசாமி said...

ரசித்தேன்.

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு மிக்க நன்றி ஸாதிகா

புதுகைத் தென்றல் said...

மிக்க நன்றி ஐயா

வெங்கட் நாகராஜ் said...

சுவையான அனுபவம் தான்!

ரசித்தேன்....

Anonymous said...

கடல் சிங்கம் கண்டு திரும்பிய சிங்கங்களே வருக

புதுகைத் தென்றல் said...

வாங்க சகோ,

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க கடைசி பெஞ்ச்,

நல்லவேளை புதுகை வந்தப்போ பேனர் எதுவும் வைக்காம விட்டீங்க. :))

வருகைக்கு மிக்க நன்றி