Monday, May 06, 2013

அழகுச்சிலையென நீயிருந்தால்!!!!!

பேங்காக் ட்ரிப் மொத்தமும் ஆஷிஷின் கண்ணுக்கு ”குளிர்ச்சி தான்!!” சைட் அடிப்பதைப்பத்தி சொல்லவில்லை. அவனுக்கு பிடித்தது கார்கள்... கார்கள்... அங்கே பல வெரைட்டி வெளிநாட்டுக்கார்கள். பைக்குகளைக்கூட மாடிஃபை செய்து வைத்திருப்பதைப்பார்த்து ஆஷிஷின் கண்களுக்கு நல்ல விருந்தாக இருந்தது. போலீசா இருந்தாலும் பேங்காக் போலீஸ் வேலை கிடைச்சா சரி. என்ன பைக் வெச்சிருக்காரு பாரும்மா!!ன்னு ஒரே புலம்பல்ஸ் தான். அன்று சாயந்திரம் எங்களை கைட் அழைத்து செல்ல கொண்டு வந்திருந்தது  பென்ஸ்!!! ஆஷிஷின் குஷிக்கு அளவேது. வண்டியை பார்த்த கணத்தில் இது 96ஆவது வருஷத்து மாடல்... அது இதுனுன்னு விவரங்கள் சொல்லிக்கிட்டு இருக்கும் போதே இறங்க வேண்டிய இடம் வந்திருச்சு.


கைட் சார் எங்களிடம் ஒரு ப்ரிண்ட் அவுட்டை கொடுத்து இதை கொண்டு போய் மேலே காட்டினால் உங்களுக்கு டிக்கட் கொடுப்பாங்கன்னு சொல்லிவிட்டு, இங்கே முடிஞ்சதும் நீங்க போகவேண்டிய இடம் எதிரில்னு சொல்லிட்டு போயிட்டாரு. அதாவாது அத்தோடு அவருடைய அன்றைய வேலை முடிந்தது!! siam discovery  இந்தக் கட்டிடத்தின் ஆறாவது மாடியில் தான் நாங்கள் பார்க்க சென்ற இடம். மேடம் டுஸ்ஸாட்னு சொன்னா புரிஞ்சிடும்.

லண்டனுக்கு அப்புறம் பெங்காக்கில் தான் மேடம் டுஸ்ஸாட் ம்யூசியம் இருக்கிறது. எங்க ஹோட்டலுக்கு கொஞ்சம் கிட்டத்துலதான். மேலே ஏறிச்சென்று பிரிண்ட் அவுட்டை காட்ட ஸ்டிக்கர் ஒண்ணு எல்லோருக்கும் ஒட்டி விட்டாங்க. உள்ளே நுழைஞ்சதும் வரவேற்றது தாய்லாந்தின் தற்போதைய மன்னரும், ராணியும்.

நம்ம காந்தி தாத்தா மட்டும் தான் அங்கேயிருந்த இந்தியன் பர்சனாலிட்டி!!!
ஓடிப்போய் அவருடன் போட்டோ எடுத்துக்கிட்டேன். பிகாசோ, பித்தோவான், டயானான்னு பெரிய்ய லிஸ்ட்.


ஒபாமா, மிச்சல் ரெண்டு பேரும் ஏதோ நம்ம ஆபீஸ்ல இருக்கறமாதிரி ஒரு செட் அப் அங்க தான் போட்டோ எடுக்க எல்லோரும் விருப்ப பட்டாங்க. எலிசபத் ராணி, டைகர் வுட்ஸ், மடோனா, பெக்கம் உடற்பயிற்சி செய்யறாப்லன்னு நிறைய்ய இருந்தது.


நான் தேடி ஓடிப்போய் போட்டோ எடுத்தது நான் ராணிமாதிரி சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்க எலிசபத் ராணி பக்கத்தில் நிற்பது போல, ஜிம்கேரி, வில்ஸ்மித் அம்ருதா நிக்க சொன்னதால ஜாக்கிசானோட... :)) பசங்களுக்கு செம குஷி. நிறைய்ய போட்டோ எடுத்தோம். ஏறியிருந்த கொஞ்சம் சார்ஜும் தீர்ந்ததும் மொபைலில் போட்டோ எடுத்தோம்.


சுத்தி சுத்தி வந்து போட்டோ எடுத்து தள்ளிக்கிட்டு இருந்தோம். இந்த இடத்துக்கு தான் முதலில் அழைச்சுக்கிட்டு வரச்சொல்லி கைட் கிட்ட சொன்னேன். வெயில் குறைஞ்சதும் கோவிலுக்கு போகலாம்னு சொன்னேன். நம்ம பேச்சை கேட்டாத்தானே!! மண்டை காயும் வெயிலில் கோவிலுக்கும், வெயில் குறைய ஆரம்பிச்ச மாலை வேளையில் குளுகுளுன்னு இருக்கற மேடம் டுஸ்ஸாட் ம்யூசியத்துக்கும் கொண்டாந்திட்டாரு.

ஆஸ்கார் விருது கையில வெச்சிருக்கற  மாதிரி போட்டோ எடுத்துக்கிட்டோம். போட்டோவை அப்லோட் செய்ய முடியலை.






6 comments:

வெங்கட் நாகராஜ் said...

அடடா... ஃபோட்டா போடலையேன்னு படிச்சுட்டே வந்தால் அப்லோட் ஆகலைன்னு சொல்லிட்டீங்களே.... அடுத்த பகிர்விலாவது போட்டுடுங்க!

திண்டுக்கல் தனபாலன் said...

அடுத்த பகிர்வில் படங்களை எதிர்ப்பார்க்கிறேன்...

pudugaithendral said...

வாங்க சகோ,

நேற்றிலேர்ந்து ட்ரை செய்யறேன் அப்லோடே ஆக மாட்டேங்குது.

நாளை கண்டிப்பா ட்ரை செய்யறேன்.

pudugaithendral said...

வாங்க தனபாலன்,

மீ த ட்ரையிங்.

வருகைக்கு மிக்க நன்றி

ராமலக்ஷ்மி said...

நன்றாக எஞ்சாய் செய்தது அறிந்து மகிழ்ச்சி. படங்களும் பார்த்து விட்டேன்:).

pudugaithendral said...

வருகைக்கு மிக்க நன்றி ராமலக்‌ஷ்மி