Tuesday, May 07, 2013

மாலை வேளை ”மாலிலே”!!!!!

ஆசையாய் மேடம் டுஸ்ஸாட் ம்யூசியம் பார்த்தாச்சு. வெளியே வந்ததும் மெல்ல தலைவலியும் ஒரு செல்லப்பசியும் இருக்கறாப்ல இருந்தது. சரி மாலுக்கு போறோமே அங்கே பார்த்துக்கலாம்னு வந்தோம். வெளிய வந்து ரோடை எப்படி க்ராஸ் செய்யறதுன்னு யோசிச்சுக்கிட்டே வந்துகிட்டே இருக்கும்போது செக்யூரிட்டியிடம் கேட்க, 3ஆவது தளத்திலிருந்து மாலுக்கு வாக் ஓவர் ப்ரிட்ஜ் இருப்பதை சொன்னார்.

மால் அது என்ன மால்? MBK இதுதான் அந்த மாலின் பெயர். பர்ச்சேசிற்கு பேர் போன இடம். வெளிநாட்டிலிருந்து யார் வந்தாலும் இந்த மாலுக்கு போகாமல் இருக்க மாட்டார்கள் என்பது உள்ளூர் மக்களுக்கு நிச்சயமாக தெரிந்திருக்கு.தாய்லாந்து அழகான ஊர் தான் இல்லைன்னு சொல்லலை. ஃப்ளை ஓவர் எல்லாம் இலங்கையில் இருந்தால் எப்படி இருக்குமோ என நினைத்து பார்க்க அதே அளவு சுத்தத்துடனும், அழகாகவும் இங்கே இருக்கு. அதனாலேயே ஏதோ வெளிநாட்டுக்கு போய் வந்த உணர்வு வரவேயில்லை. அதை விடவும் இந்தியாவை நாங்கள் மிஸ் செய்யவே இல்லை ஒரு விஷயத்தை தவிர. (அது என்ன கண்டுபிடிங்க பார்க்கலாம்).  கன்னாபின்னா ட்ராபிக், வாக் ஓவர் ப்ரிட்ஜ், ஃப்ளைஓவர்கள், அதற்குமேல் சுங்கவரி கட்டி போக பாலங்கள், ஸ்கை ட்ரையின் இத்தனைக்கு பிறகும் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு போக  ரோட்டில் மணி கணக்கில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. பல டுவர் ஆப்பரேட்டர்கள், ஐயா உங்களை ஏதாவது ஸ்கை ஸ்டேஷனில் இறக்கிவிடவேண்டுமா!! சந்தோஷமாக செய்கிறோம். காரில் அழைத்து செல்வோம், நேரம் ஆனால் கோபிக்க கூடாது என்று சொல்லிவிடுகிறார்கள்.முதல் தளம் என நினைக்கிறேன், mr. doughnut கடையை பார்த்ததும் பிள்ளைகளுக்கு ஒரே குஷி. டோனட்களில் மட்டும் நிறைய்ய வெரைட்டி. நம் ஊரில் மிஞ்சி போனால் சாக்லெட், சர்க்கரை ரெண்டு வெரைட்டிதான் கிடைக்கும்.

பிள்ளைகள் ஆசைப்பட்டதை வாங்கிக்கொள்ள தலைவலிக்கு இதமாக சூடாக காஃபேலத்தே ஆர்டர் செய்தார் அயித்தான். நுரை ததும்ப மேலே கரகரவென அருமையாக இருந்தது காபி.  பிள்ளைகள் டோனட்டே போதுமென்று சொல்லிவிட்டார்கள். அடுத்து பர்ச்சேசிங். என்ன வாங்கலாம் என்று பெரிதாக திட்டமில்லை, ஆனால் அனாவசியமாக எதுவும் கொண்டு போய் வீட்டில் குப்பை சேர்க்க கூடாது என்பதுதான் திட்டமே!! :))

ஆஷிஷிற்கு ஷூ வேண்டுமென்று சொல்ல அன்று அங்கே ஷூ சேல் நடந்து கொண்டிருந்தது, போய் பார்த்தோம் ஒன்றும் அட்ராக்ட் செய்யவில்லை. அதே தளத்தில் ஒரு கடையில் பார்தது பிடித்திருந்தது. அம்ருதம்மாவும் ஒரு கட்ஷூ வாங்கிக்கொள்ள நான் துணியால் ஆன கைப்பை பார்க்க போய்விட்டேன். (பேக் கலெக்‌ஷன் நம்ம ஹாபி :) )

இந்த மாலில் எந்த கடையிலும் க்ரெடிட் கார்ட் தேய்க்கும் வழக்கமே இல்லை. ஒன்லி கேஷ்தான் என்கிறார்கள். கார்ட் இருக்கிறது பார்த்துக்கொள்ளலாம் என வந்துவிட்டோம். என்ன செய்யலாம் என யோசிக்கையில் அங்கேயே ஏடிஎம் இருப்பது பார்த்து பணம் எடுத்துக்கொண்டு கொடுத்தோம்.

mahboonkron(MBK) மாலில் என்ன வாங்கலாம் வாங்ககூடாதுன்னு ஒரு லிஸ்ட்டே போடலாம்.

செல்போன்கள் இங்கே கிடைப்பது போல எங்கேயும் விலை குறைவாக கிடைக்காது. ஆனால் அதே சமயம் வாங்கும்போது சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் காரணம், சைனா பீஸ்கள் கிடைக்கிறது. உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன் சினிமா வசனம் போல,” ஐபோன் மாதிரி ஆனா ஐபோன் இல்ல, டேப் மாதிரி ஆனா டேப் இல்ல!!” பாக்சில் மேனுவலோடு தருகிறார்களா என பார்க்கணும். ஒரிஜினலான்னு 4 தடவை நல்லா விசாரிக்கணும்.

அடுத்து டீஷர்ட், ஷார்ட்ஸ், என குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்குமான உடைகள். souvenir டீ ஷர்ட்கள் மற்ற இடங்களை விட இங்கேதான் விலை குறைவு ஒரு ஷர்ட் 199 பட்.


கீ செயின்கள், பேக்கள், புத்தர் சிலை, ஃப்ரிட்ஷ் மேக்னட் என எல்லாம் கிடைக்கிறது. நமக்கு எது விருப்பமோ பார்த்து எடுக்கலாம். பெரும்பாலும் பேரம் பேசி வாங்க முடிகிறது. அதே வேளையில் நம் ஊர்க்காரங்க இருவர் பேசிய பேரத்தில் கோபமாகி எங்களிடம் ஒரு கடைக்காரர் கடுப்படித்த கதையும் உண்டு. (நான் பார்த்த வகையில் தாய்லாந்தில் பெண்கள் அதிகம் கடுப்படித்தே பேசுகிறார்கள். “அந்த மாதிரி” பெண்கள் என்று தம்மை நினைத்து விடக்கூடாது என்பதால் போட்டுக்கொண்ட கவசமா??!!! புரியவில்லை)

பெட்டிகள் நல்ல பிராண்ட் நல்ல விலையில் கிடைக்கிறது. இந்த மாலைப் பொறுத்த வரை தினம் ஒரு பொருளின் சேல் இருக்கிறது. அன்று அந்த பொருள் மலிவாக கிடைக்கும். எங்க வீதியில் சனிக்கிழமை சந்தை அன்று ஒரு அம்மா ஒரு ட்ராலி பேக் கொண்டு வருவாங்க. காய்கறிகளை அதில் போட்டு  இழுத்துக்கிட்டு போவதை பார்க்கையில் நம்ம கைவலிக்கும் இது மாதிரி ஒரு பேக் இருந்தா நல்லா இருக்குமேன்னு தேடித்தேடி கண் பூத்ததுதான் மிச்சம். ஆனா அப்படி ஒரு பேக் இங்கே பாங்காகில் பார்த்தேன்.இது மாதிரி ஒரு பேக் வாங்கிக்கொண்டேன். 350 தாய்பட். அடுத்த நாள் எங்க ஹோட்டலுக்கு பக்கத்துல இருக்கும் ஒரு கடையில் இந்த பேக் பார்த்தேன். இது தான் காய்கறிகள் வாங்க உபயோகிக்கும் பேக். நான் வாங்கியது ஷாப்பிங் பேக்காம். காயகறி பேக்கில் வீல் பெருசா இருக்கு.


அந்த துணி பேக்கை அப்படியே எடுத்துவிட்டு இந்த ட்ராலியை வேற சாமான்கள் ஷிப்ட் செய்யவும் உபயோகிக்கலாமாம்.  எது நடந்ததோ அது நன்றாகவே நடந்ததுன்னு வந்திட்டேன். நமக்கு கைவலி குறைஞ்சா சரி. அதுக்கு ஒரு ட்ராலி பேக் வேணும் அம்புட்டுதான். :))

குடைகள் இங்கே வித்தியாசமா இருக்கு. அப்புறமா போட்டோ எடுத்து போடுறேன். பார்க்க குடைமாதிரியே தெரியாது. அழகாக டப்பாவில் வெச்சது போல இருக்கு.

சுத்தி சுத்தி கால்வலி, தாங்கமுடியலை. செம டயர்ட். வெளிய வந்து ஹோட்டலுக்கு போக வண்டி பிடிக்கலாம்னு டாக்ஸியை கூப்பிட்டா (கால் டாக்சி தான்) என்னவோ நம்ம ஊர் ஆட்டோக்காரர் பேரம் பேசுவது போல கூசாம பணம் கேக்கறாங்க. மீட்டரை துணிப்போட்டு மூடி வெச்சிருக்காங்க. ஏன்யா இதெல்லாம் உபயோகிக்க மாட்டீங்களான்னு கேட்டா, ட்ராபிக், ட்ராபிக்னு பதில் வேற!

சரி டுக் டுக்ல போகலாம்னு கேட்டா எங்க ஹோட்டல்  பேரைச்சொன்னா முழிக்கறாங்க.  எங்க கைட் அண்ணாத்தேக்கு போன் போட்டு எந்த ஏரியான்னு சொல்லுப்பான்னு சொல்ல அதையே நாங்க வழிமொழிஞ்சு டுக்டுக் காரருக்கு சொல்ல அவரு 300 பட் கேட்டார், போய்யான்னு நடைய கட்டி வேற வண்டி பிடிக்க போகச்சொல்ல அவரே வந்து 150 கொடுன்னாரு. 80 தான் சாதாரணமா ஆகும்னு கைட். ராத்திரி நேரம், கால் வலி வேற தொலையுதுன்னு ஏறி உட்கார்ந்தோம். எந்த ரூட்ல போறாருன்னு கன்ஃப்யூஷனா இருந்தாரு. நல்ல மனுஷன் சரியான ரூட்லதான் கூட்டியாந்து விட்டாரு.

யூ டோண்ட் நோ ரூட்.... ஐ டோண்ட் நோன்னு கலாய்ப்பு வேற. நாங்க வழக்கமா போகும் ரோட்டை விடுத்து  அதுக்கு பின் புறமா கூட்டியாந்தாரு அதனாலத்தான் கன்ஃப்யூஷன். சாமான்களை ரூமில் போட்டு திரும்ப வர தெம்பில்லாம அதையும் தூக்கிகிட்டு  சாப்பிட போனோம்.

ஏஷியன் ரெஸ்டாரண்டில் மதியம் சாப்பிட்ட அதே மெனு நைட்டும். கேட்டாக்க இது செட் மீல் சார். குருப்புக்காக இதான்ன்னு பதில் வந்தது. பசி, டயர்ட் ஏதோ ஒண்ணுன்னு சாப்பிட்டோம்.

பட்டயா ஹோட்டலில் ரூமில் கெட்டில், காபிபொடி, பால்பவுடர் எல்லாம் இருக்கும். இங்கே ஹோட்டலில் அது கிடையாது!!!! என்ன செய்யலாம். பக்கத்திலதான் செவன் லெவன். எனக்கும் அயித்தானுக்கும் சில் காஃபி, பசங்களுக்கு மைலோ வாங்கியாந்து ரூமில் இருந்த குட்டி ஃப்ரிட்ஜில் போட்டு வெச்சுக்கிட்டோம். அடிச்சு போட்டா மாதிரி தூங்கிப்போனோம்.

அடுத்த நாள் 8.30க்கு ரெடியா இருக்க சொல்லி இருந்தாரு கைட்.  இந்த ஹோட்டலில் ப்ரெக்ஃபாஸ்ட் ஒரு கொடுமை. ப்ரெட், பட்டர், ஜாமைத் தவிர வெஜிட்டேரியன்களுக்கு ஒன்றும் இல்லை.

காபி/டீ டிகாஷன் சூடாத்தான் இருக்கு. ஆனா பால் சில்லுன்னு!!!!!

8.25க்கு நாங்க ரெடி!!! போன இடம்.... அடுத்த பதிவில்

8 comments:

வெங்கட் நாகராஜ் said...

நடுவே இடைவெளி விட்டாலும் விட்டீங்க! இப்ப கிடுகிடுன்னு பதிவுகள் வெளிவருது போல!

சுவையான பகிர்வு. ரசித்தேன்....

திண்டுக்கல் தனபாலன் said...

மீட்டர் சூடு தாங்காது என்பதால் துணிப்போட்டு மூடி வைத்திருப்பார்கள்... ஹிஹி...

பயணத்தை தொடர்கிறேன்....

புதுகைத் தென்றல் said...

வாங்க சகோ,

ரொம்ப கேப்பாகி போனால் எனக்கே எங்க போனோம்னு மறந்திருச்சின்னா!!! :)) அதான் இனி உடனுக்குடன் பதிவு வரும்

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க தனபாலன்,


மீட்டர் சூடு தாங்காது என்பதால் துணிப்போட்டு மூடி வைத்திருப்பார்கள்...//

கால்டாக்சியில் இந்த கதின்னா பாருங்களேன். வாய்க்கூசாம பேரம் பேசறாங்க.

வருகைக்கு மிக்க நன்றி.

Anonymous said...

அக்கரைச் சீமைக்குச் சென்று பிரட் ஜாம் சாப்பிட்ட தென்றலாருக்கு ஜே!

புதுகைத் தென்றல் said...

வாங்க கடைசி பெஞ்ச்,

வெஜிட்டேரியன்களுக்கு நிலமை அப்படித்தான். இதுவே இலங்கைன்னா இடியாப்பம், ஆப்பம், தேங்காய் ரொட்டி, உருளை மசாலா வைத்த ரோட்டின்னு வாய்க்கு ருசியா சாப்பிட்டிருக்கலாம். ஒண்ணுமே இல்லைன்னாலும் ப்ரெட், பொல் சம்பல், தேங்காய்ப்பால் ஊற்றி செஞ்ச பருப்பு தேவாமிர்தமா இருக்கும். :))

மாதேவி said...

உங்கள் கூடவே சுத்தி வந்தோம்.

இலங்கை சாப்பாட்டை மெச்சுகிறீர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறது.

புதுகைத் தென்றல் said...

வாங்க மாதேவி,

இலங்கை எங்களுக்கு இரண்டாவது சொந்த நாடு போல :))

வருகைக்கு மிக்க நன்றி