Tuesday, May 21, 2013

விடாத “மால்”!!!!





டோனட் போட்டோக்கள்.  உறவினர்களுக்கு என்னென்ன வாங்கினோம்னு லிஸ்ட் போட்டு பார்த்ததில் சிலருக்கு விட்டு போயிருந்தது. திரும்ப எம்பிகே மால் போவோம்னு அயித்தான் டாக்சி காரரை கேட்டால் எங்க நல்ல நேரம் 100 பட்னு சொல்ல டக்குன்னு ஏறி உட்கார்ந்திட்டோம். :))


இந்த காரில் போகும் போதுதான் இந்த மாலில் பிக் அப் ட்ராப் வசதி இருக்குன்னு தெரிஞ்சது. அதைப்பத்தி அப்புறம் விரிவா சொல்றேன். கீழே தளத்திலேயே ஒரு கடையில் நிறைய்ய அயிட்டங்கள் இருந்தது. பசங்க அவங்க நட்புக்களுக்கு கீ செயின் வாங்கினாங்க. நானும் அயித்தானும் சில ஞாபகார்த்த சாமான்கள் வாங்கிட்டு பசங்க திரும்ப டோனட் கடைக்கு போகணும்னு சொல்ல போனோம்.

நாலு வீல் இருக்கற பெட்டி இருந்ததைப்பார்த்து அயித்தான் ஒண்ணு வாங்கினாப்ல. அப்புறம் இன்னொரு கடையில எந்த சைஸ் பேக் எடுத்தாலும் 199 பட்னு ஆஃபர் இருந்தது.  அங்கயும் சிலது வாங்கிகிட்டோம்.

அடுத்த நாள் 6.30க்கே ரெடியா இருக்கணும்னு கைட் அண்ணாத்தே சொல்லியிருந்தார். அம்புட்டு சீக்கிரம் எப்படிய்யா??? ஹோட்டல்ல ப்ரெக்ஃபாஸ்ட் ஆரம்பிக்கவே 6.30 மணி ஆகும். தவிர அம்புட்டு சீக்கிரமா எப்படி ப்ரெக்ஃபாஸ்ட் சாப்பிடறதுன்னு கேட்க, ஹோட்டல்ல சொன்னீங்கன்னா அவங்க கட்டி கொடுத்திடுவாங்கன்னு சொல்லியிருந்தார்.  நாங்க தங்கியிருந்த ஹோட்டல் ரிஷப்ஷனிஷ்ட் கிட்ட சொல்ல கஷ்டம்தான்னு சொன்னார். நாங்க எங்க நிலமையை எடுத்து சொல்ல பார்க்கறேன்னு சொன்னாப்ல. அதைவிட நீங்களே காலையில் வந்து உங்க ப்ரெக்ஃபாஸ்ட்  கூப்பனை காட்டி சொன்னா பேக் செஞ்சு தருவாங்கன்னு சொன்னாப்ல.

ஆனா எனக்கு என்னவோ இது சரிப்பட்டு வரும்னு தோணலை. வயிறு காயப்போவது உறுதி. அதைவிடவும் மிஞ்சிப்போனா  வெஜ் சாண்ட்விச்தான் தரணும். நல்ல பேஸ்ட்ரி கூட தராத 3 நட்சத்திர ஹோட்டல் அது.!!!! அதனால மாலிலேயே  ஒரு சூப்பர் மார்க்கெட் இருந்தது. அங்கே போய் மைலோ பாக்கெட்கள், எனக்கும் அயித்தானுக்கும் சில் காஃபி வாங்கிகிட்டோம்.



அங்கே ஒரு பேஸ்ட்ரி ஷாப் இருந்ததைப்பார்த்து ஏதாவது பேக் செஞ்சு எடுத்துக்கலாம். ஹோட்டல்ல ப்ரெக்ஃபாஸ்ட் கட்டி கொடுக்காட்டி இதுவாவது கைகொடுக்கும்னு போனோம். நிறைய்ய நான் வெஜ் பேஸ்ட்ரிஸ் இருந்தது.
கவுண்டரில் இருந்த பொண்ணையே கேட்டு வெஜிட்டேரியன் பேஸ்ட்ரிஸ் எடுத்து கொடுக்க சொன்னோம். கடைசியில் பாப்பாய் ச்பினாச் பேஸ்ட்ரி கிடைச்சது. அதை வாங்கி பேக் செஞ்சு எடுத்துக்கிட்டோம். காலையிலிருந்து வெயிலில் சுத்தியது, இப்பவும் சுத்திக்கிட்டே இருப்பது எல்லாம் சேர்ந்து செம டயர்ட். இதுல அடுத்த நாள் காலியில் 6.30க்கு பிக் அப் வேற.

போதும் கிளம்பலாம்னு முடிவு செஞ்சோம். அப்பதான் அயித்தான் மெயின்ரோட்ல போய் அவஸ்தை படுவதை விட்டு மாலில் பிக் அப் ட்ராப் சர்வீஸ் இருக்கே அங்கே போவோம்னு சொல்ல அங்கே போய் வரிசையில் நின்னோம்.

மாலில் ட்ராப் செய்ய வர்ற டுக்டுக், டாக்ஸி இவைகள் வரிசையா அங்கே வரும். ஒரு போலீஸ்கார் இருப்பாரு. நாம போக வேண்டிய இடத்தை அவருக்கு சொன்னா அவர் அந்த டிரைவரிடம் அதை சொல்ல அவருக்கு அங்கே ஓகேன்னா நம்ம அழைச்சுக்கிட்டு போவார். இல்லைன்னா அடுத்தவங்க போகும் இடம் சொல்லலாம்.

எங்களுக்கு முன்னாடி ஒருத்தங்க தலை சுத்துது, வாந்தி வருதுன்னு சீன் காட்டி நாங்க பிடிக்க வேண்டிய டாக்சியை பிடிச்சுக்கிட்டு கிளம்பிட்டாங்க. எங்களுக்கு 10 நிமிட காத்திருப்புக்கு அப்புறம் டாக்சி வந்தது. சரின்னு சொல்ல ஏறி உட்கார்ந்தோம். மீட்டரைப்போடுவார்னு நினைச்சா மாலைத்தாண்டி மெயின் ரோட் போனதும் 300 தாய்பட் கொடுன்னு பேரம் ஆரம்பிச்சாரு.

 கதையே வேணாம் நீ எங்களை திரும்ப கொண்டு போய் மாலிலேயே விட்டுடுன்னு அயித்தான் சொல்ல, அவரு மாட்டேன் வழியில இருங்கங்கன்னு சொல்ல, அயித்தான் சரி போலீஸுக்கு போன் செய்ய வேண்டியதுதான்னு நம்பரை எடுத்து சுழட்ட ஆரம்பிக்க என்ன நினைச்சாரோ தெரியலை ட்ரைவர் சரி, 250 கொடுன்னு பேரம் பேசிக்கிட்டே வண்டியை ஓட்டிக்கிட்டு இருந்தாரு. மாலுக்குத்தான் திரும்ப போறாருன்னு நினைச்சா
எங்க ஹோட்டலுக்கு போகும் வழியில போய்க்கிட்டு இருக்காரு. கத்தி சண்டை போட்டு மாலுக்கே திரும்ப போன்னு சொல்ல கொஞ்சம் பயந்திட்டாரு ட்ரைவர். 200 பட் கொடுங்க ஹோட்டல்லையே இறக்கிடறேன்னு வந்தாரு. மொதோ நாள் 150 பட் அந்த டுக்டுக்குக்கு அழுதது ஞாபகம் வந்தது. தொலையுது ராத்திரி நேரத்துல அவஸ்தை என்னாத்துக்குன்னு 200 பட் தரோம்னு சொல்ல, அப்புறம் அமைதியாகி ஹோட்டலில் இறக்கிவிட்டார்.


தாய்லாந்தில் இந்த டாக்சிக்காரர்கள், டுக்டுக்காரர்கள் ரொம்ப அடாவடின்னு முன்னமே தெரியும். நன்றி axn tv.  amazing race அப்படின்னு ஒரு நிகழ்ச்சி இதுல வரும். ஒவ்வொரு இடத்துக்கும் அவங்க போய் சேர்வது எப்படின்னு பாக்கலாம். த்ர்ல்லிங்காவும் சர்ப்ரைஸாவும் இருக்கும். amazing race 19 (முன்னால நடந்தது) ஒளிபரப்பு நாங்க பேங்காக் டிக்கட் புக் செஞ்சதும் போய்க்கிட்டு இருந்தது. அதுல ஒரு எபிசோட் பேங்காக் தான். அந்த வெளிநாட்டுக்காரங்க டாக்சிகாரங்க கிட்ட பட்ட அவஸ்தையை பாத்திருக்கோம். தகராறு செஞ்சு  வந்ததுல பஸ்ஸையே மிஸ் செஞ்சிருப்பாங்க ரெண்டு பேர். ஆனாலும் அவங்க ஊர்க்கார லேடி ஒருத்தங்க போலீஸை கூப்பிடறேன்னு மிரட்டி இவங்க கிட்டேயிருந்து பணம் வாங்கி டிரைவருக்கு கொடுத்த வீடியோ பாத்திருக்கிறோம். இங்க போலீஸ் கேட்டுத்தானே ஏத்திவிடறாங்கன்னு பார்த்தா ம்ஹூம் ஒண்ணும் சரியில்லை.


நம்ம நாட்டுல தான் இந்த ஆட்டோக்காரங்க கிட்ட பேரம் பேசி அலுத்துப்போய் கிடக்கோம்னா இதையே போய் வெளிநாட்டுலயும் செய்யறோம்னு அனுபவப் படும்போது அலுப்பா வருது.  இன்பச்சுற்றுலாவை சோகச்சுற்றுலா ஆக்குது. நல்ல வேளை நாம ஃபுல் பேக்கேஜ் டூர் வந்தோம். ஒவ்வொரு இடத்துக்கும் நாமளே வண்டி ஏற்பாடு செஞ்சு போய்க்கிலாம்னு நினைச்சு வந்திருந்தா பட்ஜட் கன்னாபின்னான்னு எகிறியிருக்கும்னு  நானும் அயித்தானும் நினைச்சோம்!!!!

வாயில் வைக்க பிடிக்கலை ஆனாலும் வேற வழியில்லாம இரவு சாப்பாடு சாப்பிட்டு ரூமில் போய் படுத்ததுதான் தெரியும். காலையில் சீக்கிரம் எழுந்து குளித்து ரெடியாகி அம்ருதம்மாவை கூட்டிக்கிட்டு ப்ரெக்பாஸ்ட்டுக்கு போனேன். (அம்ருதம்மாவுக்கு வெறும் வயிற்றில் ட்ராவல் செய்ய கூடாது. ஏதாவது திட உணவு சாப்பிட்டு கிளம்பினாத்தான் வயிறு பிரட்டாம இருக்கும். தவிர காலை 6.30க்கே காலை  உணவு சாப்பிடும் பழக்கம் இருப்பதால ப்ரெட் சாப்பிட்டாப்ல)

அதற்குள் அயித்தானும் ஆஷிஷும் ரெடியாகி கீழ வர ப்ரெக்ஃபாஸ் பேக் எல்லாம் செஞ்சு தரமுடியாது, வேணும்னா சாப்பிட்டு போங்கன்னு சொல்ல சூடான டிகாஷனில், சில்லுன்னு பால் ஊத்தி காஃபின்னு பேருக்கு ஒண்ணு குடிச்சிட்டிருக்கும் பொழுதே கைட் போன் செஞ்சாரு. இவரு புதுசு.

வண்டியில் ஏறினதும், இன்னும் சிலரை பிக் அப் செஞ்சுகிட்டு போகணும்னு சொன்னாரு.  அடுத்தது எங்கேன்னு கேட்பது தெரியுது. அடுத்த பதிவில்.......



8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

டாக்சிக்காரர்கள் - ரொம்ப அநியாயம் தான்...

அமுதா கிருஷ்ணா said...

இந்த ட்ரைவர்களுடன் சண்டை போடவாவது நல்லா சாப்பிடணும்.

பால கணேஷ் said...

Oh god... inga than autowalas ippafinna anga taxiwalas kooda ippadi thana... manitharfgal ore ragam than pola...

pudugaithendral said...

வாங்க தனபாலன்,

கொடுமையா இருந்தது

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க அமுதா கிருஷ்ணா,

நல்லா சாப்பிடணும்.//

அதுவும் சரிதான் அதனாலத்தான் கிடைச்சதை ஒரே சாப்பாடா இருந்தாலும் சரின்னு சாப்பிட்டோம். :))

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க பாலகணேஷ்,

ஏன்யா இப்படின்னு கேட்டாக்க, டிராபிக், விலைவாசின்னு வரிசையா லிஸ்ட் சொல்றாங்க.

வருகைக்கு மிக்க நன்றி

மாதேவி said...

டாக்சி காரர்கள் இந்தபாடு படுத்தறாங்களே.

pudugaithendral said...

வாங்க மாதேவி,

டாக்ஸி, ஆட்டோ எல்லாமே அங்கே படுத்தல்கள் தான்.

வருகைக்கு மிக்க நன்றி