4 மணிக்கே செக் அவுட் செஞ்சு கிளம்பியாச்சு. மறக்காம முன்னாகிட்ட போய் ஆலு பராத்தாவை எங்க டப்பாவில் போட்டு கொடுக்க சொல்லி எடுத்துக்கிட்டோம். எங்க ஹோட்டலுக்கு எதிரில் இருந்த ஹோட்டலில் இருந்து இரண்டு இந்தியர்களை பிக் அப் செஞ்சாங்க. அவங்க ரெண்டு பெரிய்ய டீவி (ஒவ்வொருத்தரும்
அங்கேயிருந்து டீவிதான் கொண்டாந்தங்க. எதுவும் வேணாம்னு நாங்க முதல்லயே முடிவு செஞ்சிருந்தோம்)
அந்த டீவியை ஏர்போர்ட் எடுத்துகிட்டு போகணும்னா இம்புட்டு காசு கூட கொடுக்கணும்னு டிரைவர் பேரம் பேசிக்கிட்டு இருந்தாங்க. ஏதோ ஒரு தொகைக்கு பேரம் படிஞ்சு வண்டியில ஏத்திக்கிட்டு கிளம்பினார்.
பாங்காக்கிலிருந்து சுவர்ணபூமி ஏர்போர்ட் 1 மணிநேரப் பயணம் தான்.
அதுலயும் நம்ம ட்ரைவர் சுங்க வரி செலுத்தி இன்னும் சீக்கிரமா கொண்டாந்து தள்ளிட்டாரு. (ஏறினது தான் தெரியும் நல்ல உறக்கம் எங்களுக்கு!!)
பத்துமணி ப்ளைட்டுக்கு 5 மணியே வந்தா செக்கின் செய்ய மாட்டேன்னு சொல்லிட்டாங்க. சரின்னு கொஞ்ச நேரம் அங்கயே உட்கார்ந்து சுத்திக்கிட்டு இருந்தோம். 6.30 வாக்குல முடியலடா வாங்கிக்கங்கன்னு சொன்னதுக்கப்புறம் லக்கேஜை வாங்கி கிட்டு செக்கின் செஞ்சாங்க.
இமிகிரேஷன் முடிச்சு வந்தா பாற்கடல் கடைவதி பெருசா செஞ்சு நடு நயமா வெச்சிருக்காங்க.
தேவர்களும் அசுரர்களும் பாற்கடல் கடைஞ்சது அதை தாங்கி விஷ்ணு கூர்மாவதாரம் எடுத்தது நம்ம ஊர் இதிகாச கதைகள் இருக்கு. அதற்கு நம்ம ஊர்ல எந்த சிலையையும் காணோம். ஆனா பாருங்க பாங்காக் ஏர்போர்ட்ல அசத்தலா வெச்சிருக்காங்க. நம்ம இந்து மத தெய்வங்களை அங்கேயும் வழி படறாங்க. பிக்னேஷ் (விக்னேஷ் தான்), உமா (பார்வதி) லட்சுமி, இந்திரன்,
சிவா, விஷ்ணு போன்ற தெய்வங்களின் உருவச்சிலைகளை பார்த்திருக்கிறேன். மாரியம்மன் கோவில் ஒண்ணு இங்க ரொம்ப பிரசித்தமாம்.
மந்தாரமலையை கடைந்தது ரொம்ப அற்புதமா சிலையா வடிச்சு இருந்தற்கு
பக்கத்துல நின்னு போட்டோ எடுத்துக்கிட்டோம். நாங்க ரொம்ப சீக்கிரமே செக்கின் ஆனதால எந்த கேட்டில் ஏறணும்னு தெரியவே இல்லை. நம்ம ட்யூட்டி ஃப்ரீ பொருட்களை வாங்கணுமேன்னு அதற்கான இடத்தை தேடி கண்டு பிடிக்க முடியாமல் அங்கே இருந்தவங்களை கேட்க கைக்காட்டின இடத்துக்கு போனா, சார் உங்க விமானம் இந்த கேட்டுகளில் இல்லாததால, அந்த சைட் இருக்கும் எங்களுடைய கடையில் வாங்கிக்கங்னு சொன்னாப்ல.
அதாவாது பாலாழி கடைஞ்சுகிட்டது நடு செண்டர்னு வெச்சுக்கிட்டா இந்தப்பக்கம், அந்தப்பக்கம் கேட்டுகள். நமக்கு பாலாழிக்கு அந்தப்பக்கம். அம்புட்டு தூரம் நடக்கணும்னு நினைச்சாலே கால் வலிக்குது. வேற வழியில்லைன்னு நடந்தோம். ஒரு இடத்துல உட்கார்ந்திட்டோம். அயித்தான் போய் கவுண்டரில் சாமான்களை வாங்கியாந்தாரு.
ஏர்போர்ட்ல இண்டர்னெட் ஃப்ரீயா உபயோகிக்க பாஸ்வோர்டு கொடுத்திருந்தாங்க. 1 மணிநேரம் தான் ஃப்ரீ. அத வெச்சு வாட்ஸ் அப்ல மெசெஜ் அனுப்பிக்கிட்டு இருந்தோம். மெயில் செக்கினோம்.
8 மணி வாக்குல கொண்டு போயிருந்த பராத்தாவை சாப்பிட்டு பசியாறினோம்.
நம்ம கேட்கிட்ட போகலாம்னு முடிவு செஞ்சோம். கீழே இறங்கணும் எங்க கேட்டிற்கு. அங்கே போனா அந்த இடமே ஏதோ லவுஞ் மாதிரி அழகா இருந்தது. ஸ்மோக்கிங் ரூம் தனியா இருந்தது, அங்கே சர்வ சாதாரணமா மகளீரும் இடம் பிடிச்சு தம் அடிச்சுக்கிட்டு இருந்தாங்க.
போடிங்கிற்கு ஆயத்தமானோம். ப்ளைட்டில் ஏறி உட்கார்ந்தாச்சு. வரும்போது ஃபுல்லா இருந்த ஃப்ளைட்டை பார்த்திட்டு இப்ப காலியா இருக்கும் ஃப்ளைட்ட பாத்திட்டு ஆஷிஷ் அடிச்ச கமெண்ட், “ திரும்பி வர யாருக்கும் மனசு இல்லியோ!!!” ஃப்ளைட்டில் போனால் அப்பாவும் மகளையும் சேர்த்துவிட்டுட்டு, நானும் ஆஷிஷும் உட்கார்ந்துப்போம். மகளை ஹேண்டில் செய்ய அப்பாதான் சரி. (இந்த வாட்டி டேக் ஆஃப் லேண்டிங் ப்ராப்ளம் இல்லாம அம்மா வந்தாங்க என்பது கூடுதல் மகிழ்ச்சி விஷயம் )
அர்த்த ராத்திரிக்கு சாப்பாடு கொடுத்தாங்க. சுடச்சுட தாய் ரைஸ், காய்கறிகள்னு. ஆனா ஏனோ கேக் நல்லாவே இல்லை. டீ, காபி ஏதுவும் வேணாம்னு சொல்லிட்டு ப்ளைண்ட் ஃபோல்ட் மட்டும் கேட்டு வாங்கிகிட்டேன். சால்வை ஏற்கனவே சீட்டில் இருந்தது. ஆஷிஷ் பக்கத்தில் காலியா இருந்த 4 சீட்டில் போய் நல்லா படுத்து தூங்கினாப்ல.
நானும் 1 மணிநேரம் தூங்கியிருப்பேன். ஏரியல் வ்யூ பாக்கணும்னு முழிச்சு பாத்தேன். ஹைதையும் நல்லாத்தான் இருக்கு. :)) தாய்லாந்தில் ஸ்மூத்தா லாண்டிங் செஞ்சாங்க இந்தியாவில் கொஞ்சம் தடால்னு தான் போட்டாங்க அதே தாய் ஏர்வேஸ் காரங்க தான். கொஞ்சம் சீக்கிரமாவே வந்திட்டாங்க.
வெளியே வந்து டாக்சி பிடிச்சு வீடு வந்து சேரும்பொழுது மணி 2.30.
ஹோம் ஸ்வீட் ஹோம் :))

8 comments:
பாங்காக் ஏர்போர்ட் படம் அட்டகாசம்...
எங்கு சென்று விட்டு வந்தாலும் "ஹோம் ஸ்வீட் ஹோம்..."
செலவில்லாம தாய்லாந்தை சுத்திப் பார்த்துட்டேன், நன்றிங்க! :)
வாங்க தனபாலன்,
ஹோம் ஸ்வீட் ஹோம் தான் இல்லைன்னு சொல்லலை. அர்த்த ராத்திரிக்கு வந்ததால சரியாப்போச்சு. இல்லாட்டி உடனடியா மூடுவிழா நடத்தியிருந்த கிச்சனுக்கு ஓபனிங் செர்மனி நடத்த வேண்டி இருக்குமே!!!
:))
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க மஹி,
நீங்களும் எங்க கூட சுத்தி பார்க்க வந்ததற்கு மிக்க நன்றி
எங்களை அழகாக தாய்லாந்தை சுற்றிக் காட்டிவிட்டீர்கள் மேடம். அடுத்த முறை தாய்லாந்து தனியாக சென்றால் கூட எங்களுக்கு பயமில்லை. மிக்க நன்றி...
ஹோம் ஸ்வீட் ஹோம் :))
அருமையான
பயணப்பகிர்வுகளுக்குப்
பாராட்டுக்கள்..
பாங்காக் எல்லாம் ஒரு காலத்துல இந்தியாவுடன் இணைந்திருந்தது என்று பள்ளியில் படித்த நினைவு. கடாரம், காந்தாரம் என்றெல்லாம் படித்திருக்கிறோம். பெயர்கள் சரியா தெரியவில்லை. அதனால அவங்களுக்கு நம் கடவுளர்கள் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
அழகான சிலை.
எல்லா இடங்களையும் நீங்களும் பார்த்து ரசித்து எங்களையும் ரசிக்கும்படி எழுதியிருக்கிறீர்கள்.
பாராட்டுகள்!
பாற்கடல் கடையும் காட்சி ரொம்ப அற்புதம்.
உங்களுடன் பயணித்ததில் மகிழ்கின்றோம்.
Post a Comment