Thursday, June 20, 2013

கிங் பவர்!!!!!

ஆச்சு, இன்னைக்கு நைட் இந்தியா திரும்பணும். அதனால எங்கயும் போகாம நல்லா ரெஸ்ட் எடுக்க திட்டம் போட்டிருந்தோம். பேக்கிங் செய்யும் போது அயித்தான் ஏர்போர்ட்ல எடுத்த பெம்ப்ளர் ஒண்ணு கையில சிக்கிச்சு. அங்க போய் பாக்கலாம்னு அயித்தான் சொன்னாரு!!!

ரொம்ப அலைய வேணாம்னு இருக்குன்னு சொல்ல, பசங்களும் இதுக்கு மட்டும் போய் பாக்கலாம்னு சொன்னாங்க. ட்யூட்டி ஃப்ரி ஷாப் தான்.
ஏர்போர்ட்ல போயி பார்த்துக்கலாமேன்னு சொன்னேன். இம்மாம் பெரிய இடம் என்னென்ன இருக்குன்னு பார்க்கலாம்னு சொல்ல சரின்னு ரெடியானேன்.


kings power down town duty free shop அவங்களுக்கு போன் செஞ்சு நம்ம ஹோட்டல் அட்ரஸ் பேரு சொல்லணும். அவங்க நம்ம ஹோட்டலில் செக் செஞ்சுக்கறாங்க. வெளிநாட்டினருக்கு மட்டும்தான் இந்த சேவை. அவங்களே வந்து பிக் அப் செஞ்சுக்கறாங்க.  போன் செஞ்ச பத்தாவது நிமிஷம் நாங்க லாபியில். லாபிக்கு வந்துகிட்டு இருக்கும்பொழுதே கிங் பவர் வேன் வந்து எங்க ஹோட்டல் முன்னாடி நின்னுச்சு. அந்த ட்ரைவர் ஹோட்டல்காரங்க கிட செக் செஞ்சுகிட்டு எங்களை அழைச்சு போனார்.

நம்ம பாஸ்போர்ட், ஃப்ளைட் டிக்கெட் ரெண்டும் கட்டாயம் கைல இருக்கணும்.
10% டிஸ்கவுண்ட் வேற தர்றாங்க.





12000 சதுர அடியில் பெரிய்ய கட்டிடம். ரெண்டடுக்கு மாடியில் மொத்தம் பல்வேறு ட்யூட்டி ஃப்ரீட் ஐட்டங்கள்.




ட்ரைவர் உள்ளே அழைச்சுக்கிட்டு போய் கவுண்டரில் சொன்னதும் அவங்க நம்ம பாஸ்போர்ட், ஃப்ளைட் டிக்கட் பாத்து ரெஜிஸ்டர் செஞ்சுக்கிட்டு ஒரு கூப்பன் தர்றாங்க. (பசங்களுக்கு கிடையாது)

ஃபர்ப்யூம், சாக்லெட்கள், உடை, பெட்டிகள்னு நிறைய்ய அயிட்டங்கள்.  தாய் ஜாஸ்மின் ரைஸ் 1/2 கிலோ 100 தாய்பட். நம்ம ஊர் காசுக்கு 180 ரூவா!!!! சும்மா டேஸ்ட் செய்வோம்னு 1/2 கிலோ பாக்கெட் எடுத்துகிட்டேன். :)


தாய் மசாஜ் நாமே செஞ்சுக்கலாம்னு இந்த மூட்டையை வாங்கினேன். இது ஹெர்பல் மூட்டை. இதன் மேலே தண்ணி தெளிச்சு அவன்ல வெச்சு 20 செகண்ட்ல எடுத்தா நல்லா சூடாயிருக்கும். அதை ஒத்தடம் கொடுக்கறா மாதிரி செஞ்சுக்கிட்டா நல்லா இருக்கும்னு டெமோ செஞ்சவங்க சொன்னாங்க. நல்லாத்தானே இருக்குன்னு வாங்கினேன். ரொம்ப யூஸ்ஃபுல்.

பசங்க விருப்பபட்ட சாக்லெட்டுகள் வாங்கினாங்க.  இங்கயே vat refund counterம் இருக்கு.  மொத்த பில்லிங் ஒரே பேர்ல சேர்த்து இவ்ளவு ஆகியிருக்கணும்னு என்னன்னவோ சொன்னாங்க. அட போங்கயான்னு வந்திட்டோம். 180 ரூவா போகும் போனா போகுதுன்னு. (ரெண்டு பாஸ்போர்டல்யும் பில் செஞ்சிருந்ததால ரெண்டு பில்)


அரோமா ஆயில்கள்,  நெயில் பாலிஷ்கள்னு நிறைய்ய இருந்தது. நெயில் பாலிஷ் கவுண்டர் பார்த்ததும் தான் அம்ருதம்மாவுக்கு ஞாபகம் வந்தது. இருக்கான்னு தேடினோம்.  வேற ஒண்ணுமில்லை. அது base coat & top coat.
base coat போட்டு கொஞ்சம் காய்ஞ்சதும் போட வேண்டிய நெயில் பாலிஷை போட்டு அது காய்ஞ்சதும் top coat. போட்டா பாலிஷ் சீக்கிரமே உரியாது.  நம்ம நாட்டுல பெரிய்ய பெரிய்ய கடைகளில் கூட இது கிடைக்கலை. அயித்தான் இலங்கை போனபோது பேஸ்கோட் கிடைச்சதுன்னு கொண்டாந்தங்க. டாப் கோட் அப்போ அங்கே ஸ்டாக் இல்லை. அது இங்க இருக்கான்னு பாத்தோம். இருந்தது ஒரு பாட்டில் எடுத்துக்கிட்டோம்.


வேற எதுவும் பெருசா வாங்கலை. தாய் சாக்லெட்கள் வாங்கினோம். மணி 1 ஆகிடிச்சு. ட்யர்டாவும் இருக்க பில்லிங் கவுண்டர் போனோம். சில பொருட்களை, (சாக்லெட், நெயில் கோட்) ஆகியவற்றை நீங்க ஏர்போர்ட்ல பிக் அப் செஞ்சுக்கங்கன்னு சொல்லி எழுதி கொடுத்திருந்தாங்க. அதுவும் சரிதான்னு வெளிய வந்தோம். வெயில் சுட்டெரிச்சுக்கிட்டு இருந்தது. ஹோட்டல்லேர்ந்து பிக் அப் செய்யறாங்க, ட்ராப்பும் செஞ்சா நல்லா இருக்கும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.

எதிர்ல ஒரு டுக்டுக் காரர் வந்தாரு. எங்க போகணும்னு கேட்க ஹோட்டலுக்குன்னு சொன்னோம். ஹோட்டலில் ட்ராப் பண்றது இல்லை. பக்கத்துல இருக்கற ரயில்வே ஷ்டேஷன்ல இறக்கட்டுமான்னு கேட்க, எங்களை மெயின்ரோட்ல இறக்கினா போதும் டாக்ஸி பிடிச்சு போயிடுவோம்னு சொல்ல இறக்கிவிட்டாரு. இறங்கி எவ்ளவு கொடுக்கணும்னு கேட்க இது ஃப்ரி சர்வீஸ்னு சொன்னாரு.

பேங்காக்கில் டாக்சி ட்ரைவர்களை வெஞ்சுகிட்டே இருந்தேன்ல, அதனால சாமி கருணை புரிஞ்சு ஒரு நல்ல ட்ரைவர் அன்னைக்கு அனுப்பியிருந்தாரு. :)
போக வேண்டிய இடத்தை சொன்னதும் ஏறுங்கன்னு மீட்டர் போட்டாரு. எங்களுக்கு செம ஷாக். ரொம்ப நல்ல மனுஷரா இருந்தாரு. அவர் கார் முழுக்க க்ரோஷாவால டிசைன் செஞ்சு இருந்ததை காட்டி வாங்கினதான்னு  கேட்க, இல்லை என் மனைவி செஞ்சு கொடுத்தாங்கன்னு மகிழ்ச்சியா சொன்னாரு.

போட்டோ எடுக்கட்டுமான்னு கேட்க சந்தோஷமா தலையாட்டினாரு. எவ்ளோ அழகா இருக்கு பாருங்க.

மதிய உணவுக்கு ஏசியன் ரெஸ்டாரண்டில் இறங்கிகிட்டோம். ஆஷிஷ் நாக்கை தொங்க போட்டுக்கிட்டே வந்தாப்ல. என்ன  அண்ணா ஆச்சுன்னு கேட்க.நாக்கு  செத்து போச்சும்மா. 3 நாளா தினமும் காலையில் ப்ரட், மதியம், ராத்திரியும் ஒரே மெனுன்னு சொல்லிட்டு, “ஊருக்கு போய் நல்லா காரமா மொளகாப்பொடி குழைச்சு 4 இட்லி சாப்பிடணும்”னு சொல்ல சிரிச்சுக்கிட்டே “சாப்பிட்டோம்”!!!

இரவு 10 மணிக்கு ஃப்ளைட். அதனால முன்னா (ஏசியன் ரெஸ்டாற்ண்ட்ஓனர்)கிட்ட ரவைக்கு ஆலு பராத்தா செஞ்சு கொடுக்க முடியுமான்னு கேட்டேன். சரின்னு சொல்ல 4 பேருக்கும் பராட்டா பார்சல் செஞ்சு கொடுக்க சொல்லிட்டு வந்து  படுக்கலாம்னு இருந்தோம். நம்ம கைட் போன் செஞ்சாரு. உங்களுக்கு ஏர்போர்ட் பிக் அப் 4 மணிக்குன்னாரு. சாமி எங்க ஃப்ளைட் 10 மணிக்குத்தான். 6 மணிக்கு கிளம்பினா கூட போதும்னு சொன்னோம். (ஹோட்டலில் செக் அவுட் டைம் எக்ஸ்டண்ட் செஞ்சுகிட்டு ஒரு ரூமில் தங்கலாம்னு ப்ளான்)

இல்லை, 4 மணிக்கு வண்டி வரும். கிளம்ப ரெடியா இருங்கன்னுட்டு போனை கட் செஞ்சிட்டாப்ல. :((( கோவமா வந்தது. ஆனா என்ன செய்ய முடியும். பேக்கேஜ் டூர் ஆச்சே. சரி படுக்கலாம்னு நினைச்சா முடியலை. கொண்டு போன சாமான்களை பேங்கிங் செஞ்சு எல்லாம் ரெடியானோம்.



மாலில் வாங்கின ஒரு சாமான் பாருங்க.(அப்ப போட்டோ போட மறந்திட்டேன்) இது என்னன்னு தெரியுதா??




குடைதான். டிஃபரண்டா இருக்குல்ல.... :))

தொடரும்....


6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பரபரப்பு... சுறுசுறுப்பு...

pudugaithendral said...

நன்றி தனபாலன் :)

மாதேவி said...

நாங்களும் ஷொப்பிங் செய்து கொண்டோம். :)

சாந்தி மாரியப்பன் said...

அது என்னவாயிருக்கும்ன்னு ரொம்ப நேரம் மூளையைக் 'குடை'யத் தேவையில்லாதபடிக்கு உடனே விடையும் கொடுத்ததுன்னு நன்னி :-))

சட்டுன்னு லேண்ட் ஆகிட்ட மாதிரி தோணுது. இன்னும் கொஞ்சம் சுத்திக் காமிச்சிருக்கலாமே.

pudugaithendral said...

வருகைக்கு மிக்க நன்றி மாதேவி :)

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

அடுத்த பதிவுல தான் லாண்டிங். :))

பதிவு போட்டு முடிச்சாச்சு.