Friday, June 14, 2013

எதிர் பார்த்தை விடவும் அருமையா இருந்த ஒரு பயணம்!!!!!

எந்தப்பயணமா இருந்தாலும் எங்கங்கே போகலாம்னு பாத்து வெச்சு, அப்புறம் அதைப்பத்தி டிஸ்கஸ் செஞ்சுதான் கடைசி முடிவு எடுப்போம். அப்படி இந்த இடத்தை தேர்வு செஞ்சு வெச்சிருந்தோம். நெட்டில் படங்கள் பார்த்தாலும் அந்த அனுபவத்துக்காக ரொம்பவே எதிர் பார்த்து காத்திருந்தோம். முதல் நாள் மிதக்கும் மார்க்கெட் பார்க்க சீக்கிரமே போனது மட்டுமில்லாமல் அதற்கு முந்தைய நாட்கள் கூட தொடர்ந்தாப்ல பயணம் செஞ்சுக்கிட்டே இருந்ததால
மிதக்கும் மார்க்கெட் முடிஞ்சு சாயந்திரம் வரை எங்கேயும் போகாமல் நல்லா ரெஸ்ட் எடுத்தோம்.

மதியம் லஞ்சுக்கு அதே ஹோட்டல் அதே சாப்பாடுன்னு அலுப்பா இருந்தாலும் வேற இடத்துக்கு போனா திரும்ப நிறைய்ய பணம் செலவாகும் என்பதால பேசாம அங்கேயே சாப்பிட போனோம்.  தடுக்கி விழுந்தா நிறைய்ய இந்தியன் ரெஸ்டாரண்ட்கள் தாய்லாந்தில் நிறைய்ய இருக்கு. இந்தியன்னு சொல்லிக்கிட்டாலும் அது வட இந்திய உணவகமாத்தான் இருக்கும்.

திரும்ப ரூமுக்கு போய் ரிலாக்ஸ் செஞ்சு சாயந்திரம் 7 மணிக்கு வந்து பிக் அப் செஞ்சுப்பதா கைட் சொல்லியிருக்க ரெடியாகி கீழே லாபியில் உட்கார்ந்திருந்தோம். ஒரு டிரைவர் எங்க மொபைலுக்கு கால் செஞ்சுக்கிட்டே லாபிக்கு வர அவரைப்பார்த்து ஹாய் சொல்ல, வேனில் அழைச்சுக்கிட்டு போனார். வேனில் எங்களுக்கு முன்னமே 8 பேர் இருந்தாங்க. நாங்கதான் கடைசி பிக் அப் போலன்னு நினைச்சுகிட்டோம்.

என்ன சர்ப்ரைஸா போனது எங்கன்னே இன்னமும் சொல்லாம இருக்கேனேன்னு திட்டறீங்களா!!! அந்த இனிமையான பயணத்தை பத்தி நினைச்சதும் அந்த நினைவுகளிலேயே கொஞ்சம் மூழ்கிட்டேன். :))

chao phraya இது தாய்லாந்தில் முக்கியமான நதி. பேங்காக்கில் ஆரம்பித்து  கல்ஃப் ஆஃப் தாய்லாந்து வரை பாய்கிறது. இந்த அருமையான  நதியில் இரவு நேரத்தில் பயணம், இரவு சாப்பாட்டுடன் சேர்த்து. :))






எங்களை அழைச்சுக்கிட்டு போன டிரைவர் உள்ளே இருப்பவர்களிடம் எங்களின் வருகையை சொல்ல அவர்கள் முன்பதிவு இருக்கான்னு பார்த்து இருந்ததும் எங்க குரூப் ஆளுங்களுக்கு ஒரு ஸ்டிக்கர் கொடுத்தாங்க.

யூ ட்யூபில் எடுத்த வீடியோ


 நாங்க போனது chaopharaya princess அப்படிங்கற போட்ல, ஸ்டார், ரோஸ்னு போட்களுக்கு பேர் இருக்கு. எங்க ஏஜண்ட் புக் செஞ்சிருந்தது மேலே சொன்ன போட்டில்.





கீழே ஏசி, மேலே காத்தோட்டமா இருக்கும்!! :)) எங்களுக்கு மேலே தான் டேபிள் புக் செஞ்சிருந்தாங்க. போட்டோட சைஸையும் அழகையும் பார்த்து பசங்களுக்கு ரொம்ப சந்தோஷம். 8.30 மணிக்குதான் நாங்க போர்டிங் ஆனோம்.
1 மணிநேரம் பயணம் அது. அதுலேயே டின்னர். டின்னர் க்ரூஸ்னே பேரு இதுக்கு.

வெல்கம் ட்ரிங், சிப்ஸ் இதெல்லாம் டேபிளில் ஏற்கனவே செட் செஞ்சு அழகா வெச்சிருந்தாங்க.




வேறென்னவெல்லாம் சாப்பாடு இருக்குன்னு ஒரு ரவுண்ட் போய் பார்த்தேன். டெசர்ட்டில் வெரைட்டி கேக்குகள் இருந்தது, சூடா காபி, டீ அருமையான தாய் ரைஸ் இருந்தது. சப்ஜீ ஏதாவது இருக்குமான்னு பார்த்தா ஒரு வெஜ் கூட இல்லை. எல்லாம் நான் வெஜ் தான் இருந்தது.




அங்கேயிருந்த செஃப்கிட்ட யோகர்ட் கிடைக்குமான்னு கேட்க கீழே இந்தியன் ஃபுட் இருக்கு மேடம்னு சொல்ல அடப்பாவிகளா!! சொல்லாமலே விட்டுட்டீங்களேன்னு கொஞ்சம் காட்டா சொல்லிட்டு கீழே போனா செம கூட்டம் அங்கே. பக்கோடா, பனீர் சப்ஜி, பூரி, ஆலு, வெஜ் பிரியாணின்னு செம ஃபுட் இருந்தது.

தட்டுல போட்டு எடுத்துக்கிட்டு வந்து மேலே உட்கார்ந்து சாப்பிட ஆரம்பிக்கும் போது  “மேட் இன் இந்தியா!! ப்யாரா சோனியா” பாட்டு காதில் கேட்டது. இந்த பாட்டை கேட்டு எவ்ளோ நாளாச்சு!!! அப்படின்னு யோசிச்சுகிட்டு இருக்கும்போதே ஒரு ஆர்ஜே ரொம்ப அழகா அந்த பாட்டை பாடிக்கிட்டே ஒவ்வொரு டேபிளுக்கா வந்தாங்க.

அருமையான உணவை ருசிச்சாச்சு. இரவின் வெளிச்சத்தில் பேங்காக்கின் அழகையும் கண்டு களிச்சகிட்டு இருந்தோம். எங்க போட் தான் மோஸ்ட் ஹேப்பனிங் போட்டா இருந்தது. அந்த ஆர்ஜேவுக்கு நிறைய்ய இந்தி பாடல்கள் தெரிஞ்சிருந்தது. எங்க போட்டில் நிறைய்ய இந்தியர்கள்.  ஆட்டமும் பாட்டமும் கொண்டட்டமுமா போச்சு. கீழே இருக்கறவங்களும் மேலே வந்து சேந்துக்க இந்தி, கொரியா பாடல்கள் பாடினாங்க. “கங்கணம் ஸ்டைல்” பாட்டுக்கு போட்டும் சேர்ந்து ஆடிச்சோன்னு தோணியது. :))





அந்த நதியை  படகு சுத்தி வந்தது. கரையோரம் இருந்த கோவில்கள் எல்லாம்
வெளிக்கொளியில் மின்னியது அருமையான அனுபவம். தக தகன்னு ஜொலிப்பதை பார்க்க அம்புட்டு அழகு.

யூ ட்யூபில் கிடைத்த வீடியோ பாருங்க.



மணி 10.30 தாண்டிடிச்சி.  இந்த பயணம் முடிஞ்சதும் அம்ருதம்மா அப்பாகிட்ட சொன்னது “அப்பா க்ரூஸ்ல போக நான் ரெடி” :)) தண்ணியில பயணம் செஞ்சதே தெரியாம ஒரு இனிமையான பயணம் முடிஞ்சது. டிரைவர் ஹோட்டலில் இறக்கி விடும்போது மணி 12.

நாங்க எதிர்பார்த்ததையும் விட இந்த பயணம் பிள்ளைகளுக்கு ரொம்ப வித்தியாசமா இருந்தது. எங்களுக்கும் தான். ஆச்சு இனி தாய்லாந்திலிருந்து கிளம்பனும்.

அதைப்பத்தி அடுத்த பதிவுல சொல்றேன்.


10 comments:

”தளிர் சுரேஷ்” said...

பயண அனுபவங்கள் இனித்தது! நல்லதொரு பகிர்வு! நன்றி!

திண்டுக்கல் தனபாலன் said...

எங்கே போனாலும் நாம் சாப்பாட்டை சாப்பிட்டால் தான் திருப்தி...

இனிய பயணத்தை தொடர்கிறேன்...

pudugaithendral said...

வாங்க சுரேஷ்,

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க தனபாலன்,

நம்ம சாப்பாடுதான் வேணும்னு இல்லை எங்களுக்கு. ஆனா வெஜ் சாப்பாடா இருக்கணும். தாய்லாந்தில் அருமையான அரிசி சோறு கிடைக்கும், அத்துடன் ஏதாவது காய்கறி இருந்தாலாவாது வைத்து ஒப்பேத்திக்கலாம். (இலங்கையில் சுற்றிய போது பழகிய பழக்கம். அங்கே காய்கறிகளை சாதத்தோடு போட்டு தொட்டுக்கொண்டு சாப்பிட்டு பழக்கம்)

ஆனால் அங்கே அந்த படகில் இந்திய சாப்பாட்டை நினைத்து பார்க்கவே இல்லை. :))

வருகைக்கு மிக்க நன்றி

துளசி கோபால் said...

அட்டகாசமா இருக்கு!!!


நாங்க மிஸ் பண்ணிட்டோமேன்னு இப்ப..........:(

Ranjani Narayanan said...

நாங்களும் உங்களுடன் chao phraya நதியில் படகில் போய்க் கொண்டே இந்திய உணவு சாப்பிட்ட திருப்தி இந்தப் பதிவு படித்தவுடன்!

pudugaithendral said...

வாங்க துளசி டீச்சர்,

அதுக்கென்ன இன்னொரு வாட்டி பட்டயாவுக்காகவும், இந்த க்ரூஸுக்காகவும் ட்ரிப் அடிச்சா போகுது.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க ரஞ்சனிம்மா,

ரொம்ப சந்தோஷம்.

வருகைக்கு மிக்க நன்றி

மாதேவி said...

வாவ்! அருமையான பயணம்.

pudugaithendral said...

வாங்க மாதேவி,

வருகைக்கு மிக்க நன்றி