Wednesday, June 19, 2013

தந்தி....

சேரனின் வெற்றிக்கொடி கட்டு சினிமா வரை அவசர தாக்கல்களுக்கு தந்திதான். நல்லதோ கெட்டதோ அதை உடனுக்குடன்(!!!) கொண்டு சேர்ப்பதில் தந்தி முந்தி. ஆனா பல சமயம் தந்தி அடிச்சு தகவல் சொன்னா அது ரொம்ப தாமதமா போய் சேர்ந்த கதைகள் உண்டு.


நான் மும்பையில் இருந்த பொழுது தனியா ரயிலில் சென்னை வரை வருவேன். சென்னையில் இருக்கும் உறவினர் வந்து அவங்க வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு போவாங்க. பல சமயம் நான் சென்று சேரும் அன்னைக்கு மதியம் தந்தி அவங்க கையில சேரும். நல்லவேளை ராத்திரி 8 மணிக்கு தான் என் ட்ரையின் வரும் என்பதால என்னை அழைச்சுக்கிட்டு போக கரெக்டா வந்திருவாங்க. சென்னை எக்ஸ்பிரஸ் என்பது பென்னை எக்ஸ்பிரஸ்னு பலதடவை ப்ரிண்ட் ஆகியிருக்கு. தந்தின்னாலே மக்கள்ஸுக்கு பயம் தான் வரும்.


 யாராவது காலமானா உடனடியா தாக்கல் தெரிஞ்சே ஆக வேண்டியவங்களுக்கு தந்தி அடிச்சு தான் தகவல் சொல்வாங்க. அப்புறமா தசாகம் கார்டு (பத்தாம் நாள்) எழுதி அனுப்புவாங்க.  வாழ்த்து செய்திகளை விட சோக செய்திகளைத் தான்   தந்தி நிறைய்ய சுமந்து போயிருப்பதலோ.... அக்கம்பக்கத்து காரர்களுக்கு தந்தியில் சோக செய்தி வந்தததாலோ தந்தின்னாலே மனசுக்குள்ள ஒரு பதைபதப்பு உண்டானது.

வக்கீல்கள் கோர்ட் ஆர்டர்களை அனுப்ப தந்தியை தான் நம்பகமான தகவல் தொடர்பு சாதனமா வெச்சிருந்தாங்களாம்!! நம்ம ராணுவம் கூட விடுமுறையை நீட்டிக்கணும்னா அதை தந்தி மூலமா சொன்னாத்தான் ஏத்துப்பாங்களாம். போனெல்லாம் செல்லாதாம். இனி இவங்க என்ன செய்வாங்களோ!! ஸ்மார்ட்போன்களின் ஆளுமைக்கு உட்பட்ட இந்த காலத்திலும் பிஎஸென்ல் தினத்துக்கு 5000 தந்திகளை கொண்டு சேர்த்துகிட்டுதான் இருந்தது. நஷ்டத்தில் இருப்பதால் இந்த சேவையை நிப்பாட்டிட்டாங்க.

லேண்ட் லைன் போனிலிருந்து  வாழ்த்து தந்தி அனுப்புறதே ஒரு சுவாரஸ்யமான விஷயம். போனோ க்ராம்னு பேரு. குறிப்பிட்ட நம்பருக்கு கால் செய்யணும். அவங்க நம்ம நம்பரை வாங்கிகிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு திரும்ப கூப்பிடுவாங்க. நாம அதுக்குள்ள சொல்ல வேண்டிய வாக்கியத்தை ரெடியா வெச்சுக்கிட்டு அவங்களுக்கு சொல்லணும். (ஸ்டாண்டர் வாக்கியங்கள் அதனுடைய கோட் எண்ணுடன் இருக்கும்), அனுப்ப வேண்டிய முகவரி விவரங்களை சொன்னா தகவல் அனுப்பிடுவாங்க. இதற்கான சார்ஜை அடுத்த பில்லில் சேர்த்திடுவாங்க. இந்த மாதிரி பலமுறை மும்பையில் வேலை பார்த்த போது  மெசெஜ் அனுப்பியிருக்கேன். அதற்கான கோட் எல்லாம் கொடுப்பாங்க. அதை பத்திரமா ஒரு நோட்ல எழுதி வெச்சு எங்க ஆபிஸர் கிட்ட காட்டணும். அடுத்த மாச பில்லில் வந்திருச்சான்னு செக் செஞ்சு அவருக்கு சொல்லணும்.


TELEGRAM GREETING CODES

GREETING CODE NUMBER ARE GIVEN IN BRACKET
1. Kind Remembrances and all Good Wishes for the Independence Day (18)
2. Sincere Greetings for the Republic Day Long Live the Republic (19)
FESTIVAL
1. Heartiest Diwali Greetings (1)
2. Id Mubarak (2)
3. Heartiest Bijoya Greetings (3)
4. A Merry Christmas to you (9)
5. My Heartiest Holi Greetings to you (20)
6. Heartiest Pongal Greetings (26)
7. Heartiest Gur Purb Greetings (27)
8. Heartiest Onam Greetings (29)
9. Heartiest Ugadi Greetings (33)
10. Wish you a Happy Bihu (35)
11. A Happy Easter (36)
12. Heartiest Greetings on Buddha Jayanti (37)
13. Heartiest Guru Ravidas Purnima Greetings (39)
SPECIAL OCCASIONS
1. A Happy New Year To You (4)
2. Many Happy returns of the day (5)
3. Hearty Congratulations on the new Arrival (6)
4. Greetings on the occasion of Parvushan-a day of universal forgiveness (28)
5. Heartiest Congratulations on Greh Pravesh (38)
WEDDING
1. Best Wishes for a long and Happy married life (8)
2. May Heaven’s Choicest Blessings be showered on the young couple (16)
3. Wish you both a happy and prosperous wedded life (17)
4. Convey our blessings to the newly married couple (25)
5. Best Wishes on your wedding anniversary (30)
GENERAL
1. Congratulations on the Distinction conferred on you (7)
2. Hearty Congratulations on your success in the Examination (10)
3. Best Wishes for a safe and pleasant journey (11)
4. Many Thanks for your good wishes which i/we Reciprocate Most Heartily (13)
5. Congratulations (14)
6. Loving Greetings (15)
7. Wishing the function every success (21)
8. Many thanks for your kind message of Greetings (22)
9. Best Wishes for your successes in the examination (23)
10. Wish you a happy retired life (31)
11. Wish you a speedy recovery (32)
12. Congratulations on your victory (34)

தந்தியில எத்தனை வார்த்தைகள் அனுப்புறமோ அத்தனை வார்த்தைகளுக்கு காசு. பாண்டிச்சேரி தந்தி ஆன்லைன் வெப்சைட்டில் பாருங்களேன் எத்தனை சார்ஜ் எல்லாம் விவரமா கொடுத்திருக்காங்க.

டெலிக்ராம்ஸ்டாப் அப்படிங்கற வெப்சைட்ல தந்தியை திரும்ப கொண்டு வந்திருக்காங்க. ஆன்லைனில் நாம் மெசெஜ் டைப் செஞ்சு, பணம் கட்டினா அதை பிரிண்ட் எடுத்து டெலிகிராப் ஸ்டைல்ல டெலிவரி கொடுக்கறாங்களாம். இந்த வெப்சைட் ஏன் ஆரம்பிச்சாங்கன்னு சொல்லியிருக்காங்க.

எத்தனையோ பேருக்கு என்னன்ன விதமாவோ தந்தியால நினைவுகள் இருக்கும். தந்தி இனி நம் நினைவுகளின் மட்டும்.

 

18 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆனாலும் வருத்தமாகத் தான் உள்ளது...

இணைப்புகளுக்கு நன்றி...

pudugaithendral said...

வாங்க தனபாலன்,

செய்தி கேள்விபட்டதும் தந்திக்கே தந்தி அடிச்சிட்டாங்களேன்னு வருத்தமாத்தான் இருந்தது.

வருகைக்கு மிக்க நன்றி

புதுகை.அப்துல்லா said...

// தந்திக்கே தந்தி அடிச்சிட்டாங்களேன்னு வருத்தமாத்தான் இருந்தது.

//

பதிவைவிட இது சூப்பரு :))))


ஆமாக்கா, ஆனான்னா வூன்னா கபால்னு டெல்லிக்கு தந்தி அடிக்கும் தலைவர் கலைஞர் இனிமே என்ன பண்ணுவாரு? :)

pudugaithendral said...

வாங்க அப்துல்லா,
:)

நீங்க கேட்டகேள்வி யோசிக்க வேண்டிய விஷயம். (யாரு யோசிக்கன்னெல்லாம் நாம குழம்பிக்க கூடாது)

அம்பாளடியாள் said...

எத்தனையோ பேருக்கு என்னன்ன விதமாவோ தந்தியால நினைவுகள் இருக்கும். தந்தி இனி நம் நினைவுகளின் மட்டும்.
உண்மை தான் தோழி தந்தி என்று சொன்னாலே ஆரம்ப காலத்தில் எல்லோருக்கும் ஒரு பயம் சட்டென மலரும் இருப்பினும் இதுவும் ஒரு சுகமே .

DHANESH KUMAR. R said...

தந்தி நமக்கு வந்த போதும் கண்ணீர் வந்தது இபோது தந்தி நம்மை விட்டு பிரியும் போதும் கண்ணீர் வருகிறதே...

ADHI VENKAT said...

தந்தி வந்தாலே மனசு திக் திக் தான்...தந்தி இனி நம் நினைவுகளில் மட்டும் தான்...:(

சாந்தி மாரியப்பன் said...

முன்னெல்லாம் ஊரிலிருந்து மும்பை வந்ததும் தந்தி மூலம் தகவல் சொல்வோம். அந்த இடத்தை மொபைல் போன் பிடிச்சு ரொம்பக்காலம் ஆகிருச்சு.

pudugaithendral said...

வாங்க அம்பாளடியாள்,

வருகைக்கு மனமார்ந்த நன்றிகள்

pudugaithendral said...

வாங்க தினேஷ் குமார்,

ஆமாம். வருத்தமாத்தான் இருக்கு.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க கோவை2தில்லி,

”யாரோ” இந்தக்கேள்விதான் மனசுல ஓடும். :((

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

மொபைலுக்கும் தந்திக்கும் இடைபட்டு பேஜர்னு ஒண்ணு இருந்தது ஞாபகம் இருக்கா?? அப்பவே இந்த மாற்றம் வந்து படிப்படியா மொபைல் வந்து மொத்தமா அழிச்சிருச்சு.

இன்னமும் கவர்ன்மெண்ட் ஆபிஸ்கள்தான் பதிவு தபாலை தாங்கிகிட்டு இருக்கு. அதுக்கு என்னைக்கு மூடுவிழா நடத்த போறாங்களோன்னு தோணுது.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

மொபைலுக்கும் தந்திக்கும் இடைபட்டு பேஜர்னு ஒண்ணு இருந்தது ஞாபகம் இருக்கா?? அப்பவே இந்த மாற்றம் வந்து படிப்படியா மொபைல் வந்து மொத்தமா அழிச்சிருச்சு.

இன்னமும் கவர்ன்மெண்ட் ஆபிஸ்கள்தான் பதிவு தபாலை தாங்கிகிட்டு இருக்கு. அதுக்கு என்னைக்கு மூடுவிழா நடத்த போறாங்களோன்னு தோணுது.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

தகவலுக்கு மிக்க நன்றி தனபாலன்

CS. Mohan Kumar said...

Nandri madam.

Ranjani Narayanan said...

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்!

தந்தியைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவம் உண்டு.

நானும் உங்களை மாதிரி அலுவலகத்தில் வேலை செய்தபோது நிறைய போனோக்ராம் கொடுத்திருக்கிறேன்.

இனி தந்தி நமது மலரும் நினைவுகளில் மட்டுமே!

pudugaithendral said...

வருகைக்கு மிக்க நன்றி மோகன்குமார்

pudugaithendral said...

வாங்க ரஞ்சனிம்மா,

மிக்க நன்றி.

போனோக்ராம் அனுப்பறதே ஜாலியா இருக்கும் :))

வருகைக்கு மிக்க நன்றி