எல்லோரும் சுகமா? கொஞ்சம் இல்லவே ரொம்பவே பிசியாகிட்டேன். இந்தோனேஷியாவில் ஏற்பட்ட புகை சிங்கை, மலேசியாவெல்லாம்
பரவி மக்களை கஷ்டப்படுத்தியது எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும். அம்மாவும் அப்பாவும் சிங்கை போயிருந்தாங்க. மகனோட கொஞ்ச நாள் இருந்திட்டு வரலாம்னு. இந்த புகையால அவங்க உடல் பாதிக்கப்பட்டு 1 1/2 மாசத்துலேயே திரும்ப வரவேண்டிய சூழல்.
அதனால தம்பி அவசர அவசரமா ரெண்டு பேரையும் கூட்டியாந்து இங்கன விட்டு, ட்ரீட்மெண்ட் பார்த்து அவங்களை ஊருக்கு அனுப்பி வெச்ச கையோட, நானும் தென்னாட்டுக்கு ஒரு விசிட் போட்டேன். :)) அதான் என் பதிவுகள் வரலை. வாங்க எங்க போனேன்னு பாக்கலாம். கோவில்கள் தான் டார்கெட். :)
எல்லா ஊர்லயும் பிள்ளையார் உண்டு. ஆனா இந்தக்கோவிலில் மனித முகத்துடன் பிள்ளையார் காட்சி தருகிறார். எங்கே??? திருவாரூர் பக்கத்துல பூந்தோட்டம்னு ஒரு இடம். அதுக்கு பக்கத்துல இருக்கும் திலதர்பணபுரியில் தான் நரமுக விநாயகர் அருள் பாலிக்கிறார். அதாவது சிவபெருமானால் தலை துண்டிக்கப்படுவதற்கு முந்தைய தோற்றம்.
கூத்தனூரிலிருந்து 2 கிமீ தொலைவில் இந்த கோவில் அமைந்திருக்கு.
(கூத்தனூர் பத்தி தனிப்பதிவு வருது). செதலபதி- திலதர்ப்பணபுரின்னு சொல்லப்படற இந்த இடத்துல பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லதாம்.
ராமேஷ்வர, காசி வரிசையில் இந்த கோவிலும் இருக்கு.
ஆதி விநாயகர் கோவில்னு பிரசித்தம்னாலும் இங்கே பிள்ளையார் தனிக்கோவிலில் தான் மெயின் கோவிலுக்கு வெளியே உட்கார்ந்திருக்கார்.
மெயின் கோவிலில் கணபதியின் அப்பாவும், அம்மாவும் முக்தீஸ்வரர்-ஸ்வணவல்லி தாயாரும் அருள் பாலிக்கிறார்கள். இந்தக்கோவிலுக்கு நாம் திட்டம் போட்டாலும் போய்விட முடியாதாம். என்னை வந்து பார் என ஆண்டவன் நம்மை அழைத்தால் தான் முடியுமாம்.
அந்த கோவிலில் பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்பது பிரார்த்தனை. அந்த கோவிலை தொடர்பு கொள்ள ப்ரம்ம ப்ரயர்த்தனம் செய்தேன். முடியவில்லை. தம்பியின் நண்பர் திருக்கடையூரில் இருக்கிறார். அவருக்கு தெரிந்த குருக்கள் மூலம் இந்தக்கோவிலின் குருக்கள் நம்பர் வாங்கி, போன் செய்தால் சாத்தியம் இல்லை. அன்று பக்கத்தில் இருக்கும் சிவாலயத்தில் குடமுழுக்கு என்றார். ஹைதையிலிருந்து இதற்காகத்தான் வருகிறேன்னு சொன்னதும், நாளைக்கு போன் செய்ங்க என்று சொல்லிவிட்டார்.
அடுத்த நாளும் போன் செய்து எனக்கு பால், பஞ்சாமிர்த அபிஷேகம் மட்டும் போதும் என்று சொல்ல, இரவு போன் செய்யச்சொன்னார். இரவு செய்த பொழுது எல்லா அபிஷேகமும் செய்வதாக சொன்னார். கோவிலுக்கு பக்கத்தில் பூக்கடை எதுவும் கிடையாது. அது அங்கே போன பின் தான் தெரிந்தது. குருக்கள் அவர்களே பூமாலை, தேங்காய் எல்லாம் ஏற்பாடு செய்து வைத்திருந்தார்.
இதுதான் முகதீஸ்வரர் ஆலய முகப்பு. மனித முக விநாயகர் பட உதவி கூகுளாண்டவர். (புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை)
அருமையாக அபிஷேகம், அர்ச்சனை நடந்தது. சுடச்சுட வெண்பொங்கல்
நைவேத்தியம் செய்து கொடுத்தார்கள். முடியுமோ முடியாதோ என்று கலங்கடித்து அபயஹஸ்தத்துடன் காட்சி தருவது போலவே அபயம் அளித்து
தரிசனத்துடன், அபிஷேகம் செய்யும் பாக்கியத்தையும் அனுக்ரஹித்தான் ஆதி விநாயகர். இந்த கோவில்பற்றிய மேலதிக தகவல்களுக்கு
கோவில் முகவரி:
அருள்மிகு ஸ்ரீ சுவர்ணவல்லி அம்பிகா ஸமேத முக்தீஸ்வரர் ஆலயம்.
(திலதர்ப்பணபுரி) செதலப்பதி, பூந்தோட்டம்-609503
04366-238818, 239700
ஸ்ரீ ஸ்வாமிநாத சிவ குருக்கள்:
09442390299
தொடரும்

6 comments:
உடல் நலத்தை கவனமாக பாரித்துக் கொள்ளவும்... கோவிலின் தகவலுக்கு நன்றி...
வருகைக்கு மிக்க நன்றி தனபாலன்
அம்மா அப்பா இப்ப எப்படி இருக்காங்க?
கோவில் பற்றிய தகவல்கள் பயனளிக்கும். நன்றி.
கோவில் பற்றிய தகவலுக்கு நன்றி. மனித முகத்துடன் விநாயகர்.... பார்க்கணுமே...
வாங்க கோவை2தில்லி,
அம்மா,அப்பா இப்ப நலம். ஊருக்கு போயிட்டாங்க.
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க சகோ,
அவனுடைய அருள் சீக்கிரம் கிடைத்து கண்டிப்பா தரிசனம் கிடைக்கும்
வருகைக்கு மிக்க நன்றி
Post a Comment