கூத்தனூர் சரஸ்வதி ஆலயம் ரொம்ப பக்கத்துல தான் இருக்கு. கோவில் வாசலில் கடைகளில்
நோட்புக்குகள், சிலேட், பேனா, வெள்ளைப்புடவை, பென்சில் எல்லாம் விற்கப்படுது. கலைமகள் கோவில் என்பதால் இவையெல்லாம் வாங்கி பூஜை செய்து பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்க அருளாசி கேட்பது வழக்கம்.
நான் ஹைதையிலிருந்தே புடவை வாங்கிப்போயிருந்தேன். வெள்ளைத் தாமரை மாலை வேணூம்னு தேடினா இல்லவே இல்லை. தாமரை மலர்கள் தான் இருந்தது. ஒரு கடையில் கேட்டப்ப 21 பூ தான் இருக்குன்னு சொல்ல அதை கோத்துகொடுக்க சொல்லிட்டு, இன்னொரு கிடையில் கேட்டா அந்த பொண்ணு ஒரு பூ 10ரூவா அப்படின்னு சொல்ல நாங்க பூ வாங்கின கடையில ஒரு பூ 5 ரூவான்னு சொல்ல,”அப்படின்னா அங்கயே வாங்கிங்கன்னு “தெனாவட்டா பதில் வந்துச்சு. :(
அயித்தான் வேற இரண்டு கடையில கேட்டு அதே 5 ரூவாக்கு பூ வாங்கி இன்னொரு மாலை ரெடி செஞ்சோம். கோவிலில் புடவை சாத்தணும்னு சொன்னாக்க ஒரு புடவைக்கு 20 ரூவா கொடுத்துசீட்டு வாங்கணும்னு சொன்னாங்க. அந்த சீட்டோட நம்பரை புடவையிலயும் எழுதி கொடுத்தாங்க.
கலைமகள் சந்நிதி.
புடவையை அழகாக தோளில் சாற்றினார் அர்ச்சகர். இரண்டு தாமரை மாலைகளையும் கைகளில் தொங்க விட்டார். ஆரத்தியின் போது அன்னை ஜொலிப்பதுபோல இருந்தது.
1000 வருடங்களுக்கு முன்பு இந்த இடத்துக்கு அம்பாள்புரி என்று பெயர். ஒட்டக்கூத்தனாருக்கு இராஜராஜ சோழன் இந்த இடத்தை பரிசாக அளித்தபின் தான் கூத்தனூர் என்று அழைக்கபட்டது. இது போன்ற மேலதிக தகவல்களை கோவில் இணையதளத்தில் காணலாம்.
அன்னையை வலம் வந்து கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தோம்.
அடுத்து போனதும் ரொம்பவே பிரசித்தமான இடம். அதைப்பற்றி அடுத்த பதிவில்.

16 comments:
நீங்கள் கூத்தனூர் சரஸ்வதி அம்மனுக்கு புடவை சார்த்தி, மாலை சமர்ப்பித்ததை நாங்கள் இங்கிருந்தே மனக்கண்ணால் தரிசித்தோம்!
நன்றி!
1000 வருடங்களுக்கு முன்பு...!
சுட்டிற்கு நன்றி...
வாங்க ரஞ்சனிம்மா நலமா?
வருகைக்கு மிக்க நன்றி
தமிழ்மணம் (+1) இணைத்து விட்டேன்... நன்றி...
வாங்க தனபாலன்,
தமிழ்மணம், +1லும் இணைத்ததற்கும், தங்களின் அன்பான வருகைக்கும் மனமார்ந்த நன்றிகள்
கூத்தனூர் தகவல் எனக்கு புதுசுங்க..
நீங்க சமர்ப்பிச்ச புடவையில் சச்சு என்ன அழகாருக்காங்க.. ஆஹா!!. இங்கிருந்தே தரிசனம் செஞ்சேன்.
சிறப்பான தரிசனப்பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!
http://jaghamani.blogspot.com/2012/05/blog-post_28.html
மணிராஜ்: அம்பாள்புரி கூத்தனூர்
தகவலுக்கு நன்றி சகோ.
வாங்க சங்கவி,
கேள்விபட்டிருக்கேனே தவிர நானும் இப்போதான் முதல் தடவை தரிசனம் செஞ்சு வந்தேன்.
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க சங்கவி,
கேள்விபட்டிருக்கேனே தவிர நானும் இப்போதான் முதல் தடவை தரிசனம் செஞ்சு வந்தேன்.
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க அமைதிச்சாரல்,
சச்சுவும் அன்னைக்கு அதே மாதிரி வெள்ளை புடவையில் அரக்கு பார்டர் வெச்சது போட்டுகிட்டு இருந்தாப்லா. இந்த புடவைகளை மேலே வஸ்திரம்போல புஜத்திலே சாத்தினது மேட்சிங்கா ரொம்ப அழகா இருந்தாப்ல.

வாங்க இராஜராஜேஸ்வரி,
சுட்டிக்கும் வருகைக்கும் மிக்க நன்றி. பல புகைப்படங்களுடன் ரொம்ப நல்லா இருந்தது

வருகைக்கு மிக்க நன்றி சகோ
Post a Comment