Saturday, July 20, 2013

மூலக்கனலே சரணம். சரணம்..... முடியா முதலே சரணம்..... சரணம்....

கூத்தனூரிலிருந்து  பேரளம் செல்லும் வழியில்.... பேரளம் ரயிலடிக்கு எதிரில் போகும் சின்ன பாதையில் இந்த கோவில்.. அமைதியான சூழலில் ஆனந்தமாய் அருள் மழை பொழிகிறாள் அன்னை லலிதாம்பிகை. மேகநாத சுவாமியாக சிவனும் அருகிலேயே ஆலயம் கொண்டிருந்தாலும், லலிதாம்பிகை திருத்தலமாகவே போற்றப்படக்காரணம், லலிதா சஹஸர்நாம ஸ்லோகம் உதித்த இடமல்லவா!!!!  திருமீயச்சூர் என்பது ஊரின் பெயர்.
இது மட்டுமா இன்னும் இருக்கே!!!

அன்னையின் அழகை என்னவென்று சொல்வது.  கண்கள் இரண்டு போதவில்லை அவள் அழகை பார்க்க. கருணை சிந்தும் விழிகளுடன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருளை வழங்கும் லலிதாம்பிகைக்கு ஆரத்தி காட்டும்போது அர்ச்சகர் , ”அம்பாள் காலில் கொலுசு இருக்கு பாருங்கோ!!”  என்று சொல்லத் தவரவில்லை.

1999 ஆம் ஆண்டு வரை அன்னைக்கு கொலுசு கிடையாது. பெங்களூரில் தன் பக்தையின் கனவில் தோன்றி கொலுசு கேட்டு அதை அவர் கொண்டு வந்தால்,
கோவில் அர்ச்சகரோ கொலுசு போல சின்ன சந்து கூட கிடையாது என்று சொல்ல, நல்லா பாருங்க. என் கனவில் கேட்டாள் என்று சொல்ல கொலுசு போட சந்து இருப்பதை பார்த்து வியந்து கொலுசு அணிவிக்கப்பட்டதாம் அன்னைக்கு. ( இதை பற்றி சமீபத்தில் பக்தி இதழ் ஒன்றிலும் சொல்லியிருந்தாங்க)

அகஸ்தியர் அருளிச் செய்த ஸ்லோகம் தான் லலிதா நவரத்ன மாலை. அன்னை அவருக்கு நவரத்னமாய் தரிசனம் தர, மனம் மகிழ்ந்து அன்னையை பாடிய ஸ்லோகங்கள் அவை. மேகநாத ஸ்வாமியும் அட்டகாசமாய்த்தான் இருக்கிறார். இந்தக்கோவிலில் சூரியன் சாப விமோசனம் பெற்றதாகவும், பூஜிக்க வருவதாகவும் சொல்லப்படுகிறது.


சூரியன் சிவ சாபம் தீர 7 வருடங்கள் கடும் தவம் இருக்கிறார்.  இத்தனை பூஜை செய்தும் தன் உடல் பொலிவு பெற வில்லையே என்று கத்தி கதறுகிறார் சூரிய பகவான். அந்த கோவிலில் அப்பனுடன் கோவில் கொண்டிருக்கும் அம்மைக்கு கோபம் வந்து சபிக்க போகும் போது, சூரியனை காப்பாற்ற அன்னையை சாந்த நாயகியாக்குகிறார். சிவனே அன்னையை சாந்தமாக இருக்க சொன்னதால், அன்னையின் திருவாயினிலிருந்து ”வாசினி” எனும் 1000 தேவதைகள் வந்து அன்னையின் 1000 திருநாமங்களை புகழ்ந்து பாட லலிதா ஸஹஸர்நாம ஸ்லோகம் பிறந்தது.

இதை ஹயக்ரீவர் அகத்தியருக்கு அருளிச் செய்தார்.  அன்னையின் அழகை எண்ணி எண்ணி மகிழ்ந்து கொண்டே கோவிலை விட்டு கிளம்ப மனமில்லாமல் கிளம்பினோம்.

தொடரும்
16 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

லலிதா சஹஸர்நாம ஸ்லோகம் சிறப்புகளுக்கு நன்றி...

கோவை2தில்லி said...

சிறப்பான பகிர்வு. நாங்களும் மனக்கண்ணால் லலிதாம்பிகையை தரிசித்தோம்.

Ranjani Narayanan said...

நான் நலமே புதுகைத் தென்றல்! தென்றல் நலமா?

லலிதாம்பிகையையும், மேகநாத ஸ்வாமியையும் தரிசனம் செய்தோம்.

தல சிறப்புகளையும் படித்தேன்.

பால கணேஷ் said...

ஆலய தரிசனத்தை லயிச்சு அனுபவிச்சு எழுதியிருக்கீங்க தென்றல் மேம்! உங்களோட நானும் தரிசிச்ச திருப்தி கிடைச்சது படிச்சதுல. மிக்க நன்றி!

வெங்கட் நாகராஜ் said...

நிறைய கோவில்கள் சென்று வந்தீர்கள் எனத் தெரிகிறது. தொடருங்கள்.....

உங்கள் மூலம் நாங்களும் சில கோவில்களைத் தெரிந்து கொள்கிறோம்....

புதுகைத் தென்றல் said...

வாங்க தனபாலன்,

சமீபகாலமாக என் பதிவுகளுக்கு முதல் பின்னூட்டம் உங்களுதுதான். இப்படித் தொடர்ந்து ஊக்குவிப்பதற்கு மனமார்ந்த நன்றிகள்

புதுகைத் தென்றல் said...

வாங்க தனபாலன்,

சமீபகாலமாக என் பதிவுகளுக்கு முதல் பின்னூட்டம் உங்களுதுதான். இப்படித் தொடர்ந்து ஊக்குவிப்பதற்கு மனமார்ந்த நன்றிகள்

புதுகைத் தென்றல் said...

வாங்க தனபாலன்,

சமீபகாலமாக என் பதிவுகளுக்கு முதல் பின்னூட்டம் உங்களுதுதான். இப்படித் தொடர்ந்து ஊக்குவிப்பதற்கு மனமார்ந்த நன்றிகள்

புதுகைத் தென்றல் said...

வாங்க கோவை2தில்லி,

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க ரஞ்சனிம்மா,

தங்களின் நலமறிந்து மகிழ்ச்சி. தென்றல் இப்போ நல்ல நலம். வருணபகவான் அருள் மழை பொழிஞ்சுகிட்டு இருக்கார் இங்கே. :)

வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றிகள்

புதுகைத் தென்றல் said...

வாங்க ரஞ்சனிம்மா,

தங்களின் நலமறிந்து மகிழ்ச்சி. தென்றல் இப்போ நல்ல நலம். வருணபகவான் அருள் மழை பொழிஞ்சுகிட்டு இருக்கார் இங்கே. :)

வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றிகள்

புதுகைத் தென்றல் said...

வாங்க பாலகணேஷ்,

அந்த கோவிலில் நின்றபொழுது மனசு ரொம்பவே அமைதியா இருந்தது. அதுதான் பதிவுல வந்திருக்குன்னு நினைக்கிறேன்.

உங்க வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க சகோ,

ஆமாம் ஒருரவுண்ட் அடிச்சிட்டோம்ல :)

பார்த்ததை நட்புக்களிடம் பகிர்வதுதானே நமக்கு மகிழ்ச்சி.

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க சகோ,

ஆமாம் ஒருரவுண்ட் அடிச்சிட்டோம்ல :)

பார்த்ததை நட்புக்களிடம் பகிர்வதுதானே நமக்கு மகிழ்ச்சி.

வருகைக்கு மிக்க நன்றி

அமைதிச்சாரல் said...

கொலுசு விஷயம் ஆச்சரியமூட்டுது. அருமையான தரிசனம்.

புதுகைத் தென்றல் said...

வாங்க அமைதிச்சாரல்,

நிஜமாவே ஆச்சரியமான விஷயம். அதுவரைக்கும் கொலுசு போட வழியே இல்லைன்னு இவங்க இருக்க, பக்தை கொலுசை வாங்கியாந்து போடுங்கன்னு சொல்ல ஒரு சின்ன துவாரம் அப்பதான் கண்ணுல பட்டு கொலுசு போட்டிருக்காங்க.

வருகைக்கு மிக்க நன்றி