Tuesday, July 23, 2013

த்ரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில்

மாயவரத்துலேர்ந்து 1 மணி நேரத்துல திருக்கடையூர். அபிராமியை ஏற்கனவே தரிசனம் செஞ்சாச்சு. அதனால் வெளியிலேர்ந்தே ஹர ஹரன்னு கண்ணத்துல போட்டுக்கிட்டு போனோம். திருக்கடையூரிலிருந்து 2 அல்லது 3 கிமீ தொலைவில் இந்த கோவில் அமைந்திருக்கு.  ஹைவேயில் நாராயண நாயக்கன் சாவடின்னு பஸ்ஸ்டாப்பில் இறங்கி உள்ளே 1/2கிமீ தூரம் நடந்தால் இந்த கோவில் வருது.

கோவிலில் ராஜகோபாலன் தான் ப்ரதான தெய்வம். ஆனா மக்கள் வந்து அதிகமா தரிசிப்பது நம்ம ஆஞ்சியைத்தான்.



 இங்கே அப்படி என்ன ஆஞ்சிக்கு சிறப்பு. 3 கண்கள், 10 புஜங்கள், கருடனின் இறக்கை எல்லாம் கொண்டு அருள் பாலிப்பது இந்த கோவிலில் மட்டும் தான்.
இவ்வளவும் ஆஞ்சநேயருக்கு ஏன் வந்தது? எப்படி வந்தது?

 ஸ்தலபுராணம் சொல்வது இதுதான்இலங்கையில் யுத்தம் முடிந்தது. ராவணாசுரனை வதம் செய்து சீதா பிராட்டி, லட்சுமணனுடன்  அயோத்திக்கு செல்லும் வழியில் பரத்வாஜ மகிர்ஷியின் ஆஸ்ரமத்திற்கு  வருகிறார் இராமர்.

அங்கே வந்த நாரதர்,”  இராவாணன் அழிந்து விட்டாலும், அவனது உதிரத்திலிருந்து தோன்றிய இரக்த பிந்து, இரக்த ரட்சகன் இருவரும் இன்னமும் பாக்கி இருக்கிறார்கள். அவர்கள் கடலுக்கு அடியில் தவம் செய்துகொண்டிருக்கிறார்கள். கடுந்தவம் பூர்த்தியானால் இராவணனை விட பலம் பெற்று வருவாரள். அவர்களையும் அழித்துவிடு” என்றுவேண்டுகிறார்.

அந்த அரக்கர்களையும் அழிக்க வேண்டும். அண்ணன் நாடு திரும்பாவிட்டால் அக்னியில் குதிக்க தயாராக இருக்கும் பரதனை காக்க இராமர் அயோத்திக்கு சென்றாக வேண்டும். லட்சுமணனோ அண்ணனை விட்டு பிரிய மாட்டேன் என்று சபதம் பூண்டவன். யாரை அனுப்ப என்று யோசிக்க ஆஞ்சநேயரை அனுப்பலாம் என்று முடிவு செய்கிறார் இராமர்.

அழியா வரம் பெற்ற, அளப்பர்க்கரிய ஆற்றலுடைய அனுமன் என்றாலும் மாயாவி அரக்கர்களை அழிக்க திருமால் தனது சக்கரத்தை தருகிறார். பிரம்மன் பிரம்ம கபாலத்தை தருகிறார், ருத்ரன் மழுவைத் தருகிறார். இராமபிரான் தனது வில்லையும், அம்பையும் அளிக்கிறார். இந்திரன் வஜ்ராயுதத்தை அளிக்கிறார்.  இப்படி தெய்வங்கள் வாழ்த்தி தந்த ஆயுதங்களை தனது பத்து கரங்களில் தாங்கி நிற்க, கருடாழ்வார் இறக்கையை தருகிறார். கொஞ்சம் தாமதமாக வந்த சிவன், எல்லோரும் எல்லாம் கொடுத்துவிட்டார்களே!!! தான் என்ன கொடுப்பது என்று யோசித்தவர்
தனது சிறப்பான நெற்றிக்கண்ணை கொடுக்கிறார்.

இத்தனை சிறப்புக்களுடன் போய் கடலுக்கடியில் தவம் செய்த அசுரர்களை அழித்து விட்டு இராமபிரானிடம் திரும்ப செல்லும் வழியில், வனங்கள் நிறைந்த இந்த பகுதியில் வந்து ஆனந்தமாய் வந்து அமர்ந்து கொண்டு தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆனந்தமாய் வந்தமர்ந்த இடம் ஆனந்தமங்கலம் என்றழைக்கப்பட்டு தற்போது அனந்தமங்கல ஆஞ்சநேயராக புகழ் பெற்றுள்ளார்.



எனது தம்பியின் நண்பர் திருக்கடையூரில் இருக்கிறார். அவர் மூலமா இந்த கோவிலில் பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தோம். திருமஞ்சனத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அத்துடன் ஆஞ்சி குளுகுளுன்னு இருக்கட்டுமென்று தயிர்சாத நைவேத்தியத்திற்கு ஏற்பாடு செய்ய சொல்லியிருந்தோம்.  இராஜகோபால சந்ந்திக்கு அருகில் இரு்க்கும் உற்சவ ஆஞ்சநேயருக்குத்தான் அபிஷேகம், அலங்காரமெல்லாம் கோலகலாமாக இருக்கிறது.

திருமஞ்சனத்திற்கு 500 ரூபாய். அதிலேயே வடமாலை சேர்த்துதான். திருப்பதி வெங்கிக்கு படைக்கும் வடை போல மிளகு வடை. அன்று சனிக்கிழமை வேறு. கூட்டம். அழகாக அபிஷேகம், அற்புதமான முத்தங்கி சேவையில் ஜொலித்தார் ஆஞ்சநேயர்.

கோவிலில் அர்ச்சகர் ஒவ்வொரு முறை தீபாரதனையின் போதும் ஆஞ்சநேயரின் விக்கிரஹத்தை வர்ணித்து சிறப்புக்களை சொல்கிறார் அதுவும் கணீரென்ற குரலில். வெளியே மடப்பள்ளியில் பிரசாதம் வாங்கி கொள்ளுங்கள் என்றார். சர்க்கரை பொங்கல் கொடுத்தார்கள். நம்மிடம் டப்பாவும் இல்லை. எப்படியோ ஒரு கவரை ஏற்பாடு செய்து கொண்டு வந்தார் தம்பியின் நண்பர்.

3 படி தயிர்சாதத்தையும் கொடுத்தார். சுடச்சுட இருந்தது தயிர் சாதம். அதை விநியோகம் செய்யலாம் என்றால் தொன்னை, டிஸ்போஸபிள் கப் ஏதும் இல்லை. ஆனாலும் கூட்டம்  வந்து கவர்களில் வாங்கி சென்றது ஆண்டவனருள்.

இந்த கோவிலில் பஞ்சமாலை பரிகாரத்திற்காக சாற்றுகிறார்கள். ரூ,300 கட்டினால் வடமாலை, துளசிமாலை, வெற்றிலைமாலை, பழமாலை & பூ மாலை) சாற்றி நமஸ்கரிக்கலாம்.

சீக்கிரம் முடிந்து விடும் என நினைத்தேன். ஆனால் ஆஞ்சி அலங்காரத்திற்கு ரொம்ப நேரம் ஆகிவிட்டது. அதற்கு பிறகு அர்ச்சனை,ிநைவேத்திய விநியோகம் என்று லேட்டாகிவிட்டது. அடுத்து போக இருந்த கோவில் 1 மணிக்கு மூடிவிடுவார்களே..... என வண்டியை விரசாக ஓட்டினார் டிரைவர்.

தொடரும்





11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இதோ நானும் வந்து விடுகிறேன்...!

திண்டுக்கல் தனபாலன் said...

™+1√

pudugaithendral said...

வாங்க தனபாலன்,

தங்களின் வருகைக்கும் தமிழ்மணம் +ல் இணைத்தமைக்கும் நன்றி

pudugaithendral said...

நடுவில் தமிழ்மணத்தில் கொஞ்சம் பிரச்சனை இருந்த பொழுது விலகியது இப்போது இணைக்க வேண்டும் எனும் எண்ணமே இல்லாமல் ஆகிவிட்டது.

pudugaithendral said...

நடுவில் தமிழ்மணத்தில் கொஞ்சம் பிரச்சனை இருந்த பொழுது விலகியது இப்போது இணைக்க வேண்டும் எனும் எண்ணமே இல்லாமல் ஆகிவிட்டது.

வெங்கட் நாகராஜ் said...

தசபுஜ த்ரிநேத்ர ஆஞ்சனேயரை நாங்களும் தரிசித்தோம்....

அடுத்த கோவில் மூடிடப் போறாங்க.... சீக்கிரமா உங்க பின்னாடியே நாங்களும் வந்துட்டு இருக்கோம்!

வல்லிசிம்ஹன் said...

ஆஹா அற்புத ஆஞ்சனேய தரிசனம்.
எனக்கும் தமிழ்மணப் பட்டை இல்லை.ப்லாக்கரில் அப்டேட் ஆகிறது இப்போது.
இந்தக் கோவில் பற்றிக் கேள்விப்பட்டதில்லை தென்றல். நன்றிமா.

pudugaithendral said...

வாங்க சகோ,

அடுத்த கோவில் தரிசனம் முடிஞ்சாச்சு. பதிவு பாருங்க.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

நானும் இப்பதான் கேள்விபட்டு போனேன்.

வருகைக்கு மிக்க நன்றி

மாதேவி said...

ஸ்தல புராணம் அறிந்துகொண்டு, தர்சனம் பிரசாதம் பெற்றுக்கொண்டோம்.

pudugaithendral said...

வருகைக்கு மிக்க நன்றி மாதேவி