Wednesday, July 24, 2013

வைத்திய நாதா.... சரணம் சரணம்....

அவ்ளவு தூரம் போயிட்டு பக்கத்துல இருக்கற பெரிய்ய டாக்டரை பார்க்காட்டி எப்படி? அடுத்து பார்க்க போனது வைத்தியநாதரை. ஐயா நோய் நொடி இல்லாம எங்களை காப்பாத்துன்னு சொல்லி ஒரு விசிட் அடிச்சிட்டா நல்லதுன்னு ஓடினோம். ஆமாம் அப்படித்தான் சொல்லணும். நாங்க வைத்தீஸ்வரன் கோவிலை நெருங்கிய போது மணி 12.45. நல்ல வேளை!!! 1.30 வரை கோவில் இருக்குன்னு சொன்னாங்க. உள்ளே போனா ஆரத்தி எடுத்து சந்நிதி சாத்த ரெடியா இருந்தாங்க. வைத்தீஸ்வரன் கோவிலுக்கு புள்ளிருக்கு வேலூர்னு கூட பெயர் இருக்கு


 கோவில் மூடிடறதுக்குள்ள நாம ஓடிப்போய் ஒரு ரவுண்ட் எல்லா சாமிகளையும் பாத்துட்டு வந்திடலாம்.

முதல்ல அம்பாள் சந்நிதிக்கு எதிரில் இருக்கற சித்தமுர்த தீர்தத்துக்கு போவோம். ஒரு நிமிஷம். அதுக்கு முன்ன இந்த கடையில வெல்ல பாக்கெட் சின்னது வாங்கிடலாம். நமக்கு நாமே சுத்தி போட்டு இந்த வெல்லத்தை தீர்தத்துல கரைப்பதால தோல்வியாதி எல்லாமேநீங்கிடுமாம். இந்த தீர்தத்துல ஜடாயு குளிச்சதால ஜடாயு தீர்த்தம்னு ஒரு பேர் இருக்கு. முடிச்சாச்சு. ஓகே தீர்த்தத்தை தலையிலும் தெளிச்சுக்கிட்டு அதே கடையில் உப்பு மிளகு வாங்கி சாத்திட்டு வந்து அம்பாளை பாக்கலாம்னு உள்ளே போவோம். ஆனா பிள்ளையாரை கும்பிட்டுக்குவோம்.

இங்கே சிவன் வைத்தியநாதனா அருள் பாலிக்கிறார். அவருக்கு பக்கத்துல செல்வ முத்துகுமாரசுவாமியா முருகன்.  ஏதோ மந்திரம் காதுல கேக்குது என்ன நடக்குதுன்னு பக்கத்துல இருக்கறவங்க கேட்டேன். சண்முகார்ச்சனையாம். வைத்தீஸ்வரன் கோவில்னு பிரசித்தம்னாலும் இந்த கோவில் நவக்கிரஹ கோவில்களில் அங்காரக தோஷத்துக்கு பரிகார ஸ்தலம். அங்காரஹனை ஆள்வது நம்ம முருகு.

 பக்கத்துலேயே கஜலட்சுமி அழகோ அழகு.நடராஜர், துர்கை, தன்வந்திரி,  தக்‌ஷிணாமூர்த்தி எல்லாம் தரிசிச்சுகிட்டே வந்தா ஜடாயு குண்டம். ஸ்ரீராமர் ஜடாயுவை இங்கேதான் எரியூட்டியதா புராணம் சொல்லுது.

பிரதக்‌ஷிண பாதையிலேயே கொஞ்சம் வெளியே வந்தா ஸ்தல் விருட்சம்.
வேப்ப மரம். ஆனா இந்த மரம் க்ரேதாயுகத்துலேர்ந்து இருக்காம். அப்ப இது 
கடம்ப மரமா காட்சி தந்திருக்கு. த்ரேதாயுகத்துல வில்வ மரம், துவாபராயுகத்துல வகுளமரமா இருந்து இப்ப கலியுகத்துல வேப்பமரமா இருக்குன்னு சொல்றாங்க.

அங்காரக உற்சவர் வைத்தியநாத ஸ்வாமிக்கு பக்கத்துலேயே இருக்கார். ஆனா மூலவர் வெளிப்ப்ரகாரத்தில் இருக்கார். எல்லாம் ஓட்டமா ஓடி ப்ரதக்‌ஷிணம் செஞ்சுகிட்டே அம்பாள் சந்நிதிக்கு வந்தோம்.
அன்னைக்கு தையல்நாயகின்னு பேரு. நோய் தீர்க்கும் எண்ணையை கையில வெச்சுக்கிட்டே தன்னை நாடி வரும் அன்பர்கள் நோய் நொடி இல்லாம இருக்கணும்னு ஆசிர்வதிக்கற தாயா காட்சி தருவதை பார்க்க கொள்ளை அழகு.

டாக்டர் கிட்ட போனா மருந்து இல்லாமலா!!!! கோவிலில் முக்கியமா வாங்கிக்க வேண்டியது திருச்சாந்துருண்டை. அங்காரகனுக்கு ஏற்பட்ட தொழுநோயை போக்க டாக்டர் வைத்தி கொடுத்த மருந்து இது. ஹோம குண்டத்திலிருந்து இந்த உருண்டைகளை தயாரிக்கறாங்க. இன்னொரு மருந்து நேத்ரபிடி சந்தனம். சந்தனத்தில் குங்குமப்பூ சேர்த்து முருகன் நெற்றியில வெச்சு கொடுப்பாங்களாம். எல்லா வியாதிகளையும் தீர்க்கும் அருமருந்துன்னு இதுக்கு பேர்.









ஓட்டமா ஓடினாலும் கோவில் மூடுவதற்குள் எல்லா சாமியையும் தரிசனம் செஞ்சாச்சு. சாயந்திரம் 4 மணிக்கு கோவில் திறந்தாலும், அபிஷேகம் ஆராதனை எல்லாம் முடிச்சு 7 மணிக்குத்தான் அர்சனை எல்லாம் செய்வாங்க. நல்ல வேலை வைத்தி நல்ல படியா தரிசனம் கொடுத்திட்டார்.

கோவிலுக்கு வெளியில் இருக்கும் கடையில் இதைப்பாத்தேன். வாங்கியாந்தேன். கரண்ட் கட் ஆகும் சமயங்களில் கை குடுக்குமே!!


 அனந்தமங்கல பிரசாதம் கையில இருந்தது. வைத்தீஸ்வரன் கோவில் பக்கத்துல லெமன் ரைஸ் பாக்கெட் வாங்கிகிட்டு  மதிய சாப்பாடு முடிச்சாச்சு. அந்த இடம் கொஞ்சம் நிழலா நல்லா இருந்தது.

வேற எங்கயும் ரூம் கிடைக்கலை அதனால கும்பகோணம் போய் சேர்ந்தோம்.
நேரா புதுகை போயிடலாமேன்னு யோசிச்சுகிட்டு இருந்தேன். ஆனா அயித்தான் இல்ல கும்பகோணத்துல தங்கி நாளைக்கு இன்னும் சில இடங்களுக்கு போயிட்டு அப்புறம் புதுகை போறோம்னு சொன்னாப்ல.
செம டயர்ட். கும்பகோணத்துல ஓகே ஒகே ரக ஹோட்டல்தானு.  கிடைச்சது.
காசி இண்டர்நேஷனல். :)

ரெஸ்ட் எடுத்தோம் அடுத்த நாள் ப்ரெக்ஃபாஸ்ட் முடிச்சு கிளம்பியாச்சு.

15 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எவர்சில்வர் கைப்பிடியோடு அழகாக இருக்கு...!

திண்டுக்கல் தனபாலன் said...

தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

இராஜராஜேஸ்வரி said...


நல்ல படியா தரிசனம் கொடுத்திட்டார்.
அருமையான பகிர்வுகள்..
பாராட்டுக்கள்..!


http://jaghamani.blogspot.com/2011/11/blog-post_15.html
வையகம் காக்கும் வைத்திய நாதர்..!

http://jaghamani.blogspot.com/2011/11/blog-post_16.html
மணிராஜ்: செல்வ முத்துக்குமாரர்

sathishsangkavi.blogspot.com said...

நல்ல தரிசனம்...

கானா பிரபா said...

இதுவரை அறியாத தகவல்கள், மிக்க நன்றி பாஸ்

”தளிர் சுரேஷ்” said...

வைத்திய நாத தரிசனம் சுவையாக பகிர்ந்தமை சிறப்பு! நன்றி!

pudugaithendral said...

வாங்க தனபாலன்,

மினி கிரைண்டர். :)

வருகைக்கும் இணைப்புக்கும் நன்றீஸ்

pudugaithendral said...

வாங்க இராஜராஜேஸ்வரி,

உங்க லிங்குக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க சங்கவி,

மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க பாஸ்,

நலமா. ரொம்ப நாளைக்கப்புறம் நம்ம கடைக்கு வந்திருக்கீக.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க சுரேஷ்,

வருகைக்கு மிக்க நன்றி

வெங்கட் நாகராஜ் said...

நல்ல தரிசனம்....

மாதேவி said...

வைத்திய நாதர் தர்சனம் கிடைத்தது.

கல்லுரல் போல இருக்கின்றதே.

pudugaithendral said...

வாங்க சகோ,

ஆமாம்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க மாதேவி,

அதேதான் :)

வருகைக்கு மிக்க நன்றி