Monday, August 12, 2013

எது சரி???!!! - 2

இப்ப முதியோர் இல்லம் ரொம்ப ஜாஸ்தியாகிடிச்சு. பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி அந்த பெற்றோர் பட்ட கஷ்டத்தை கொஞ்சம் கூட நினைச்சு பாக்காம இப்படி முதியோர் இல்லத்துல சேத்துட்டாங்க. என் பிள்ளை என்னை கவனிப்பதில்லைன்னு பெத்தவங்க வேதனை சொல்லில் அடங்காது. :(
நிராதரவா விட்டுட்டாங்கன்னு ஊரே தப்பு பேசும்.

இதுல எது சரி??!! தவறு??? 

1. வயதான காலத்துல பெத்தவங்களை பார்த்துக்க வேண்டியது பிள்ளைகளின் தலையாய கடமை. இதுல எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. (அட்லீஸ்ட் நம் இந்திய நாட்டில்னு வெச்சுப்போம்). ஆனா பிள்ளைங்க பெத்தவங்களை பாசமே இல்லாமலா முதியோர் இல்லத்துல சேத்திடறாங்க?? (அப்படியும் இருக்குன்னால்ம் மேலும் சில காரணங்கள் இருக்குமான்னு யோசிக்கணும்ல)

2. வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் ரேஞ்சுக்கு பல வீட்டுல இன்னைக்கு மகன் வெளிநாட்டுலதான் இருக்காப்ல. அந்த சூழ்நிலை இவங்களுக்கு ஒத்து வரலைன்னா உடம்பு படுத்தும். அதைவிட இந்தியாவுலேயே இருந்திடறேன்னு சொல்லும் பெற்றவங்க தனியா இருக்க வேணாம்னு நினைச்சு இந்த மாதிரி சேர்த்துவிடலாம்ல. இது தப்பா??

3. இந்தியாவுலேயே வேறு மாநிலத்துல மகனோ,மகளோ கூட இருந்தாலும் பெத்தவங்க முதியோர் இல்லத்துல சேர்க்கறாங்களே!!! அது?? நம்ம நாடாகவே இருந்தாலும் கலாச்சாரம், தட்பவெட்பநிலை சூழ்நிலை எல்லாமே மாறும்.
அதை அட்ஜஸ்ட் செஞ்சுகிட்டு பிள்ளைகளோட இருப்பது சுகம்னு நினைச்சு பெரியவங்க இருந்தாங்கன்னா ஏன் முதியோர் இல்லத்துல சேர்க்க போறாங்க?

4. வயதான பெற்றோருக்கு துணையா தன் வாழ்க்கைத் துணையை அனுப்பி வெச்சிட்டு வெளிமாநிலங்களிலும், வெளிநாட்டிலும் ஃபோர்ட்ஸ்டு பேச்சிலர்களாக சில மகன்கள் இருக்காங்களே?? அதுக்கு காரணம் யாரு?
பிள்ளையின் பாசமா? மருமகள் வாங்கி வந்த வரமா? இல்லை மாமனார், மாமியார் சொளகரியம்தான் முக்கியமா??

5. தன்னை வளர்த்து ஆளாக்கிய பெற்றோரின் நலத்திற்காக தன் குடும்ப வாழ்க்கையை தியாகம் செய்து தான் பெற்ற பிள்ளையுடன் நேரம் செலவழிக்க முடியாமல் வாழ்க்கை பயணத்திற்கு நிதி சேர்க்க பாடுபடும் அந்த மகன்களை என்னவென்று சொல்வது? இதற்காகவா அந்த பெண்ணின் பெற்றோர் அவளுக்கு திருமணம் முடித்து வைத்தது?

6. இதையெல்லாம் யோசிச்சு வயதான காலத்துல அங்கேஇங்கே அலைய வேண்டாம்னு இந்த மாதிரி இல்லங்களில் விட்டு வைப்பது எப்படி தப்பாகும்?

7. சில பெரியவங்க எந்த சூழலுக்கும் தன்னை மாத்திக்காம நான் இப்படித்தான் இருப்பேன்னு இருப்பாங்க. அப்ப அந்த பிள்ளைகள் படும் பாடு??

8.  இப்பல்லாம் ரிட்டயர்மெண்ட் ஹோம்ஸ் வர ஆரம்பிச்சிருக்கு. தனி வீடோ, அப்பார்ட்மெண்டோ வாங்கிக்கலாம். சமையல் தேவையில்லை. வீடு மெயிண்ட்னன்ஸ், மருத்துவம் எல்லாம் அங்க பாத்துப்பாங்க. தன் வயதொத்த ஆளுங்களுடன் இனிதாக நேரத்தை செலவிடலாமே??

9. பிள்ளைங்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கணும்... நல்ல படியா படிக்க வைக்கணும்.. வசதியா வைக்கணும்னு புருஷனும் பொஞ்சாதியும் புள்ளைகளை கிரச்சில் விட்டுட்டு போகும்போது மட்டும் ஏன் யாருமே எதுவும் கேட்க மாட்டேங்கறாங்க??? அந்த பசங்க மட்டும் அங்கே சந்தோஷமாவா இருக்காங்க???!!!!!! அது தப்பில்லை ஆனா முதியோர் இல்லத்துல சேத்துட்டாங்கன்னா மட்டும் தப்பு.

மணல்கயிறு படத்துல விசு சொல்வது போல அப்படி சிலர்... இப்படி சிலர் இருக்காங்க. என்ன செய்ய????

உங்களுக்கு வேற எந்த கேள்வியும் தோணினா பின்னூட்டத்துல சொல்லுங்க.
அடுத்த பதிவுல சந்திப்போம்

8 comments:

சாந்தி மாரியப்பன் said...

லைக் போடும் வசதியிருந்தா இந்த இடுகைக்கு எக்கச்சக்கமா லைக்கியிருப்பேன் தென்றல். எனக்கும் இந்தக்கேள்விகள் உண்டு.

பாசமில்லாத ஒரு சில பிள்ளைகள் செய்யும் தப்புக்காக அத்தனைப் பிள்ளைகளையும் தப்பாக நினைக்கக்கூடாதல்லவா. முதியோர் இல்லத்திலோ தனியாகவோ வசிக்கும் பெற்றோர் செய்து கொள்ளும் அட்ஜஸ்ட்மெண்டுகளை பிள்ளைகளுடன் கூட இருக்கும்போது செய்து கொள்ளத் தயாராக இருப்பதில்லை என்பதும் வேதனைக்குரிய உண்மை. ஒரு சில பெற்றோரோ பிள்ளைகளைப் பணம் காய்ச்சி மரங்களாக நடத்துவதும் வேதனைக்குரியது.

இராஜராஜேஸ்வரி said...

மணல்கயிறு படத்துல விசு சொல்வது போல அப்படி சிலர்... இப்படி சிலர் இருக்காங்க. என்ன செய்ய????

சூழ்நிலைக்கேற்ற மாதிரி
வாழப் பழகவேண்டும்..!

ஹுஸைனம்மா said...

எல்லாமே ரொம்ப ரொம்ப சரியானவைப்பா.

//எந்த சூழலுக்கும் தன்னை மாத்திக்காம நான் இப்படித்தான் இருப்பேன்னு இருப்பாங்க. அப்ப அந்த பிள்ளைகள் படும் பாடு?//
உண்மைதான். எங்க ஊருகளில் மாமனார்-மாமியார் நலல் திடகாத்திரமா இருந்தாலும்கூட, அவங்களைக் “கவனிக்கணும்”னு சொல்லி மருமகளை கணவனோடு அனுப்பாம வச்சிருப்பாங்க. மகள்கள் உள்ளூரில் இருந்தாலும், மருமகளுக்குத்தான் அது கடமையாம். ரொம்ப அநியாயம்.

இதில உடல்நிலை முடியாத மாமியாராக இருந்தாலும், உள்ளூரிலயே இருந்துகிட்டு உதவி செய்ய மறுக்கும் மருமகள்களும் இருக்காங்க.

மருமகளுக்குப் பரிஞ்சு பேச நினைக்கும்போது, இப்படியும் இருக்கவங்களை நினைச்சா வாய் எழும்பாது.

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

கன்னபின்னா லைக்குக்கும் அருமையான கருத்துக்கும் நன்றி

pudugaithendral said...

வாங்க இராஜராஜேஸ்வரி,

அந்த மாதிரி இருந்திட்டா பிரச்சனையே இல்லையே. வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

மருமகள்கள் ஆட்டமும் பதிவா வருது.

உங்க கருத்துக்கு மிக்க நன்றி

வெங்கட் நாகராஜ் said...

கேள்விகள்.... கேள்விகள்.... விடைகள் மட்டும் கிடைத்துவிட்டால்...

pudugaithendral said...

வாங்க சகோ,

பதில் சொல்லப்போவது யாருன்னு தெரிஞ்சா ஒரு வேளை விடை கிடைக்கலாமோ......

வருகைக்கு மிக்க நன்றி