Saturday, August 17, 2013

சீதா கல்யாண வைபோகமே - 3

மாப்பிள்ளை ரகுராமின் அப்பா மணி பேச்சை அரம்பித்தார். ”நான் ஏற்கனவே உங்க கிட்ட சொன்னமாதிரி, வரதட்சணை எதுவும் வேண்டாம். எங்களுக்கு வரதட்சணை கொடுக்கும் பழக்கமில்லை, வாங்கும் பழக்கமும் இல்லை. சீர், நகை எல்லாம் உங்க இஷ்டம், சொளகர்யம்” என்றதும் சுந்தரி அவ்வா ஆரம்பித்தார்,” ஆமாம்பா! பொண்ணை பெத்தவங்களை கசக்கி பிழிவதில் அர்த்தம் ஏதுமில்லை. கல்யாணம் எனும் பந்தத்துல புருஷன், மனைவி உறவு மட்டும் ஆரம்பமாகலை. ரெண்டு குடும்பம் இணையுது.” என்றார். 

இந்த காலத்திலும் இப்படி பட்ட நல்லவர்கள் இருப்பதால்தான் நாட்டில் கொஞ்சமேனும் மழை பெய்யுது என அம்மம்மா ராஜி நினைத்தார். சுந்தரிஅவ்வா மேலும் தொடர்ந்தார்,” ஆனா எங்களுக்கும் எதிர்பார்ப்பு இருக்கு!!!” என்றதும், எல்லோரும் வரதட்சணை எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டு புதுசா ஏதும் குண்டு போடுவாங்களோன்னு யோசித்து கொண்டிருந்தார்கள்.

 “பாருங்க, கல்யாணத்துக்கு விருந்தாளிகள் நிறைய்ய பேர் வருவாங்க. எங்க பக்கத்துலேர்ந்து குறைஞ்சது 150 பேராவது வருவாங்க.  நாங்க உங்ககிட்ட எதிர்பார்க்கறது ஒண்ணு தான். வர்றவங்களுக்கு போதிய வசதிகளுடன், நல்ல சாப்பாடு.  டீசண்டான மேரேஜ் பண்ணித்தரணும். கல்யாணத்துக்கு அப்புறம் நாங்க உங்க வீட்டுக்கு வந்து என்ன சாப்பிட போறோம்னோ, நீங்க எங்க வீட்டுக்கு வந்து என்ன சாப்பிட போறீங்கன்னோ யாருக்கும் தெரியப்போறதில்லை. கல்யாணத்துக்கு வர்றவங்களுக்கு நல்ல சாப்பாடு இருக்கட்டும். அதுக்காக ஆர்ப்பட்டமெல்லாம் வேண்டாம்! அப்படின்னு சொல்ல தியாகு முகம் மலர அதெல்லாம் நல்லா ஜாமாய்ச்சுடலாம் என்றார்.

அப்போ நிச்சயதார்த்தம் உடனே வெச்சுக்கலாம். அடுத்தவாரம் எங்க பொண்ணுக்கு வளைகாப்பு இருக்கு. அதுக்கு முன்னயே இல்ல பின்னாடியோ வெச்சுக்கலாம். நிச்சயதார்த்தை முடிச்சுகிட்டு நாங்க ஊருக்கு கிளம்பலாம். லீவு இருக்காது ரகுவுக்கு  என்றார் லீலா.  ரொம்ப குறைச்ச டயத்துல எல்லா ஏற்படும் செய்யணும், நிச்சயதார்த்தம் என்றால் பெண்ணுக்கு மாமா இல்லாமலா என ராஜி, பத்மா, தியாகு குழம்பி கொண்டிருக்க, பானுபின்னி 
”நான் கொஞ்சம் பேசலாமா?!!” என்றார்.

“சொல்லுங்கம்மா ” என மணி சொன்னதும், “நிச்சயதார்த்தம்னு தனியா எங்களுக்கு செஞ்சு பழக்கமில்லை.  (சில குடும்பத்தில் நிச்சயதார்த்திற்கு தனியாக நாள் பார்த்து விசேடமாக செய்வார்கள்)  தவிர பத்மாவோட பெரிய தம்பி துபாய்ல இருக்காரு. நினைச்சதும் வர முடியாது. இன்னொரு தம்பி ஹைதராபாத்ல தான் இருக்கார். ரெண்டு பேருக்கும் பத்மா ஒரே ஒரு சகோதரிதான். அதனால ஆசையா மேனகோடலு( மருமகள்) நிச்சயதார்த்தம், கல்யாணம்னு பாக்கணும்னு இருக்காங்க. ஹைதராபாத்ல  இருக்கும் தம்பி பையனுக்கு அடுத்த மாசம் பூணல் என்பதால அவராலயும் லீவு போட்டு வரமுடியாது. தியாகுவோட  அக்கா பாம்பேயில இருக்காங்க. பொண்ணோட  மேனமாமலு (தாய்மாமாக்கள்), மேனத்தலு (அத்தைகள்) கண்டிப்பா இருக்கணும். அதனால இப்ப சிம்பிளா பாக்கு வெத்தலை மாத்திப்போம். சம்ப்ரதாயப்படி கல்யாணத்துக்கு முதல் நாள் லக்னபத்திர்கை நிச்சயதார்த்தம் வெச்சுப்போம்!” என்றார்.

ஒரு பத்து நிமிஷம் டைம் கொடுங்கோ, நாங்க கலந்து பேசிட்டு சொல்றோம்னு சொன்னார் மணி. சுந்தரி அவ்வா, மணி, லீலா, ரூபா, அகில், ரகுராம் மட்டும் தனியா போய் பேசிட்டு 5 நிமிஷத்துல வந்து “நீங்க சொல்வதும் சரிதான். ரகுவோட மாமாவும், அத்தைகளும் கூட இருந்தா நல்லது. இப்ப வெற்றிலை பாக்கு மாத்திட்டு கல்யாண வேலைகளை ஆரம்பிச்சுப்போம். நீங்க சொன்னபடி வரபூஜைக்கு முன்னாடி லக்னபத்திரிகை வெச்சுப்போம். எல்லா சொந்தங்களும் கலந்துக்க முடியும்!!” என்றார் சந்தோஷத்துடன்.

”ரொம்ப தேங்க்ஸ்!” என்றார் பானுபின்னி. தன் உடன் பிறந்தவர்களுக்கு சப்போர்ட் செய்து பேசுகிறாரே என பத்மாவுக்கும் பானுபின்னிமேல் ஒரு நல்ல அபிப்ராயம் வந்தது. அம்மம்மா ராஜி மெல்ல தன் கையால் பானுபின்னி கையை பிடித்துக்கொண்டார். பானு பின்னி முகம்மலர்ந்து சிரித்தார்.

”தாம்பூலம் மாத்திப்பதில் புடவை வைக்கணும் என்பது சம்ப்ரதாயம் இல்லை. ஆனா எங்களுக்கு எங்க மருமகளுக்கு புடவையும் வைத்து கொடுக்கணும்னு ஆசை. ஒரு அரை மணி கடைக்கு போய் புடவை வாங்கிட்டு வந்திடறோம்.
 வந்ததும் தாம்பூலம் மாத்திக்கலாம்” என்றனர் லீலாவும், மணியும்.  ரூபா அலையவேண்டாமென, ரூபாவும் சுந்தரி அவ்வாவும் மட்டும் இருந்து கொண்டார்கள்.

பானுபின்னி தியாகு, பத்மா, ராஜியை உள்ளே அழைத்து போனார். “அவங்க புடவை வைக்கறாங்க. அதனால நாமளும் மாப்பிள்ளை பேண்ட்& ஷர்ட் அல்லது வேஷ்டி அங்கவஸ்திரம் வைக்கணும்” என்றார், உடனே ஷ்யாம் “ பக்கத்துல தான் கடை அவ்வா. நானும் அப்பாவும் போய் வாங்கி வந்திடறோம் என்றதும் சந்தோஷம்பா, அதோட 5 தேங்காய்,  வாழைப்பழம் (மஞ்சள் கலர்), பழ வகைகள்,  ரவிக்கை 2, வெற்றிலை,பாக்கு,மஞ்சள், குங்குமம், ஸ்வீட் ஒரு கிலோவும் வாங்கிண்டு வந்திடுங்கோ என்றார் அம்மம்மா ராஜி. சரியா சொன்ன ராஜி. “பசுங்கம் (பசுபு (மஞ்சள்) குங்குமம்) வெச்சுதான் தாம்பூலம் மாத்தணும் என்றார் பானுபின்னி.

தியாகுவும் ஷ்யாமும் கடைக்கு போய் வேண்டியதை வாங்கிகொண்டு வந்தனர். உடனடியாக ராஜி தேங்காய்களுக்கு மஞ்சள் தடவிகுங்குமம் வைத்து ஒரு தாம்பாளத்தில் வைத்தார். அதே தட்டில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள் வாழைப்பழம் வைத்தார். இன்னொரு தட்டில் ஸ்வீட் & பழங்கள் வைத்தார் பத்மா. ஷ்யாம் மாப்பிள்ளைக்கு ரெடிமேட் பேண்ட் ஷர்ட்டும், ஜரிகை வேஷ்டி, அங்கவஸ்திரமும் வாங்கியிருந்தான். அதையும் ஒரு தட்டில் வைத்து, பழவகைகள் ஒருதட்டிலும் வைத்து கொண்டிருந்த பொழுது வெளியே சென்றிருந்த மணமகன் வீட்டினரும் வந்து சேர்ந்தார்கள்.

pasunkam thenkaya

அவர்களும் பசுபுகுங்கும  வைத்த தட்டு,ஸ்வீட், பழவகைகளுடன் புடவை, ரவிக்கையுடன் பூவும் வாங்கி வந்திருந்தனர். இரு வீட்டினரும் ஹாலில் கொண்டு வந்து வைத்துக்கொண்டு சம்பந்திகள் இருவரும் எதிரும் புதிரும் அமர்ந்து தாம்பூலம் மாற்றிக்கொண்டார்கள். பெரியவர்கள் அனைவரும் அவர்களுக்கு அட்சதை போட்டு ஆசிர்வதித்தார்கள். ரூபா தனியாக சீதாவை அழைத்து சென்று ஒரு பார்சலை கொடுத்தாள். அதில் ரகுராம் தன் வருங்கால மனைவிக்கு எடுத்திருந்த சுடிதார் இருந்தது. கையில் திணித்த பேப்பரில் ரகுராமின் காண்டாக்ட் டீடெயில்ஸ். :))

இதை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டிருந்தார் பானுபின்னி. கல்யாணத்திற்கு நாள் குறித்து சொல்வதாக தியாகு சொல்லவும், தன் மகளின் வளைகாப்பிற்கு அனைவரும் வரவேண்டுமென குங்குமம் வைத்து அழைத்தார் லீலா. கட்டாயம் வருகிறோம் என்று சொல்ல தாங்கள் கிளம்புவதாக சுந்தரி அவ்வா சொன்னார். ஒரு நிமிஷம் இதோ வந்துவிடுகிறேன் என சொல்லி உள்ளே ஓடினார் பத்மா. வரும்போது கையில் ரவிக்கை, வெற்றிலைபாக்கு, பழம் குங்குமம் கொண்டு வந்து வந்திருந்த பெண்களுக்கு “விடம்” கொடுத்தார். (வெற்றிலை பாக்கு கொடுப்பதை விடம் என்பார்கள்)

எல்லாம் நல்லபடியாக முடிந்ததில் எல்லோருக்கும் பரமசந்தோஷம். பானுபின்னி சீதாவிற்கு திருஷ்டி சுத்தி போடும்படி சொல்ல அம்மம்மா ராஜி உப்பு சுற்றி போட்டார். “என்னம்மா இனி ரகுராமுடன் வாட்ஸப்பில் சாட்டிங்தான், ஸ்கைப் சாட்டிங் தான்!!!” என கிண்டலடிக்க, சீதா முகம் சிவந்தாள். அந்த காலத்திலேயே வெப்கேம் இருந்திருக்கே என சொல்ல “என்ன பாட்டி அந்த காலத்துல ஏது?” என ஷ்யாம் கேட்க. மாயாபஜார் படம் பாத்திருக்கையோ, அதுல வீடியோ சாட்டிங் இருந்ததே என சொல்ல எல்லோரும் சிரித்தனர்.

மாயா பஜார் படத்தில் வீடியோ சாட்டிங் :)






தொடரும்..



12 comments:

சாந்தி மாரியப்பன் said...

தகவல்களுடன் தொடர்... பேஷ் பேஷ்:-)

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

பாராட்டுக்கு ரொம்ப நன்றி

Appaji said...

இரு வீட்டாரும்...நல்ல மனதுடன் .....விட்டு கொடுத்து சில மாற்றங்களை ஏற்று கொள்வதை, படிக்கும் போதே....அந்த இடத்திலேயே இருந்த உணர்வு ஏற்படுகிறது.!!
பெரியவர்களே இல்லாத .... இந்த கால குடும்பங்களில் ....இது போல் இரு வீட்டாரும் ஒற்றுமையுடன், விட்டு கொடுத்து, சுப முஹுர்த்தங்களை நடத்த முன் வர வேண்டும்..!!

pudugaithendral said...

வாங்க அப்பாஜி,

பதிவை ரசித்தமைக்கு மிக்க நன்றி. புரிந்து கொள்தல், விட்டுக்கொடுத்தல் இது எந்த பந்தத்துக்கும் மிக்க அவசியம். அதுவும் இரு குடும்பம் இணையும் கல்யாணவிழாவுக்கு ரொம்பவே முக்கியம்.

வருகைக்கு மிக்க நன்றி

Geetha Sambasivam said...

நல்லா இருக்கு. முன்னேயே சொன்னீங்க. தெலுங்கு சம்பிரதாயத்தையும் எழுதணும்னு. நல்லா விரிவா எழுதுங்க. ஸ்வீட் ரொம்ப நல்லா இருக்கு.

Geetha Sambasivam said...

மறக்காம சாமுத்ரிகாப் பட்டு வாங்கிடுங்க. :)))

pudugaithendral said...

வாங்க கீதா சாம்பசிவம்,

இன்ஸ்ப்ரேஷன் நீங்க தான். :))

கண்டிப்பா விரிவா அம்மம்மாவை கேட்டு எழுதறேன்.

சாமுத்ரிகாவா சரி பொண்ணோட அப்பாகிட்ட சொல்லிவைக்கிறேன்.

pudugaithendral said...

வாங்க கீதா சாம்பசிவம்,

இன்ஸ்ப்ரேஷன் நீங்க தான். :))

கண்டிப்பா விரிவா அம்மம்மாவை கேட்டு எழுதறேன்.

சாமுத்ரிகாவா சரி பொண்ணோட அப்பாகிட்ட சொல்லிவைக்கிறேன்.

cheena (சீனா) said...

ஆகா ஆகா மூணாவது பதிவு சிம்பிளா தாம்பூலம் மாத்திக்கிட்டு எல்லோரும் சந்தோஷமா ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக்கொடுத்து நல்ல மனசோட திருமணத்துக்குச் சம்மதிச்சுட்டாங்க - டும்டும்டும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

மாதேவி said...

வீடியோ சட்டிங் சூப்பர்.:)

pudugaithendral said...

வருகைக்கு மிக்க நன்றி சீனா சார்

pudugaithendral said...

நன்றி மாதேவி :)