எல்லாவற்றிற்கும் எல்லாருக்கும் ஒவ்வொரு விதமான கருத்து இருக்கும். அது சரியா? தவறான்னு? கருத்து கந்தசாமியா கருத்து சொல்றவங்க சொல்வாங்க. அந்த கருத்தைக்கேட்டு குழம்பி போறவங்களும் உண்டு.
காலம், அதன் அவசியம் இதை வெச்சு எந்த ஒரு செயலும் நியாயமாகலாம்? ஆனா பொத்தாம்படையா பல விஷயங்கள் இது தப்புன்னே சொல்லிக்கிட்டு இருக்கோம். அதுவும் நியாயமா இருக்க சான்ஸ் இருக்கு. என்ன மண்டை குழம்புதா??!!! எனக்கும் சில விஷயங்களை பார்க்கும் போது, கேட்கும்போது இப்படித்தான். :)
வரப்போகும் பதிவுகளில் என்னுடைய கருத்துக்களை மட்டும் பதியபோறேன்னு சொல்லமாட்டேன். பலருடைய கருத்துக்கள், அனுபவங்கள் இதை மத்தவங்க பார்க்கும் பார்வையில வித்தியாசமா இருக்கும். சோ.... வாங்க பகிர்ந்துக்கலாம்!!! பதிவுகளை படிச்சிட்டு உங்க கருத்துக்களையும் பின்னூட்டமாக்க மறந்துடாதீங்க. அப்பதான் பலருக்கும் ஒரு தெளிவு கிடைக்கும். இனி பதிவுகள் தொடருது:
சமீபத்துல ஒரு கதை படிச்சேன். “ஓடிப்போயிடலாம்!!!” இதுதான் தலைப்பு.
(நீங்களும் படிச்சிருக்கலாம்). அந்த கதையின் கருத்து இதுதான். வயதான தன் மனைவி இரவு பகல் பார்க்காம உழைச்சுகிட்டே இருப்பதை தாங்க முடியாத வயதான கணவர் அந்த வீட்டை விட்டு ஓடினால் தன் மனைவிக்கு ஓய்வு கிடைக்கும் என நினைக்கிறார்.
இது சரியா??!!!! தவறா??!!!!
1.ரிட்டயர்மெண்ட் இல்லாத ஒரு வேலை குடும்ப வேலை. அதிலயும் அடுப்படி வேலைக்கு ஓய்வே இருக்காது. தனியா போனாலும் அங்கயும் அந்தம்மா சமைக்கத்தானே போறாங்க??? மத்த வேலைகளும் குறையாதே????
2. பெத்த பிள்ளைங்களுக்கு ஆரம்ப முதலே சமைச்சு, நோய்வந்தா பார்த்து எல்லாம் செஞ்சது இதே பெற்றோர் தானே??? அதுவே மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் ஆனதும் செய்யும்போது மட்டும் எப்படி தப்பாகும்?? எக்ஸ்ட்ரா கேரக்டரா மருமகள்..... அப்புறம் பேரக்குழந்தைகள் வந்திட்டதால செய்யக்கூடாதா??
3. அந்த காலத்துல பெரியவங்க உசுரு இருக்கறவரைக்கும் ஓடியாடி வேலை செஞ்சா நல்லதுன்னு சொல்லி சுறுசுறுன்னு இல்லாட்டியும் கைய கால மடிக்க நீட்டி வேலை பாத்தாங்க. இப்ப மட்டும் முதுமை ஏன் அதிகமா கொண்டாடப் படுது?
4. தான் வேலைல இருந்தப்ப மனைவி குடும்ப பாரத்தை சுமந்தது தெரியாம இருந்த ஆண்கள் ரிட்டயர்ட் ஆனதுக்கப்புறம் மட்டும் ஏதோ தன் மனைவியை கண்ணும் கருத்துமா கவனிச்சுக்கறது மாதிரி இருப்பது சரியா??
5. நீ ஒரு வேலை? நானொரு வேலைன்னு வயதான தன் மனைவிக்கு தன்னால் முடிஞ்ச உதவியை செஞ்சா அந்த மனைவிக்கும் ஓய்வு கிடைக்கும்,
வேலைகளை நேரத்தோட முடிக்கவும் முடியும். இதைப்பத்தி ஏன் யாரும் யோசிக்க மாட்டாங்க. (ஆபிஸ்ல ரிட்டயர்மெண்ட் உண்டு, வீட்டு வேலைக்கு ரிட்டர்மெண்ட் இல்லைன்னு புரிஞ்சிக்காத ஆட்கள் இன்னமும் இருக்காங்க)
இதுதாங்க இந்த தொடரின் முதல் பதிவு. இந்த டாபிக்குல உங்களுக்கு வேற ஏதும் கேள்வி இருந்தா அதையும் பின்னூட்டத்துல சொல்லுங்க. கண்டிப்பா உங்க கருத்துக்களை தெரிஞ்சுக்கும் ஆவலுடன் அடுத்த பதிவுக்கு தயாராகிகிட்டு இருக்கேன்.

17 comments:
நல்ல கேள்விகள்.....
தொடரட்டும் உங்கள் கண்ணோட்டம்....
வாங்க சகோ,
வருகைக்கு மிக்க நன்றி
வயதான கணவர் அந்த வீட்டை விட்டு ஓடினால் தன் மனைவிக்கு ஓய்வு கிடைக்கும் என நினைக்கிறார்.
.!
மனைவிக்கு
மனக்கஷ்டம் தானே அதிகரிக்கும் ..!
நியாயமான கேள்விகள்தான்.. தொடருங்க.
வாங்க இராஜராஜேவரி,
ஆமாம். எனக்கும் அதுதான் யோசனை....
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க அமைதிச்சாரல்,
வருகைக்கு மிக்க நன்றி
ஹிஹிஹி, மூணு நாளா பிசியோ பிசி, நேத்திக்கு ஊரிலே வேறே இல்லை, இன்னிக்கும் பிசி தான். உங்களோட கேள்விகளைக் காப்பி, பேஸ்ட் பண்ணிட்டு பதிலை ஒரு பதிவாக்கலாமா? அப்படியே ஒரு பதிவும் தேத்திடலாமே! என்ன சொல்றீங்க?? :))))) அவ்வப்போது வந்து படிச்சாலும் பின்னூட்டம் கொடுக்காமல் போவதுக்கு மன்னிக்கவும். :)))))
வாங்க கீதா சாம்பசிவம்,
பின்னூட்டம் பதிவாக வரலமே!! தப்பேயில்லை. மாப்பெல்லாம் வேண்டாம். பதிவை படிக்கறீங்க அதுவே பெரிய விஷயம்.
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க கீதா சாம்பசிவம்,
பின்னூட்டம் பதிவாக வரலமே!! தப்பேயில்லை. மாப்பெல்லாம் வேண்டாம். பதிவை படிக்கறீங்க அதுவே பெரிய விஷயம்.
வருகைக்கு மிக்க நன்றி
//இப்ப மட்டும் முதுமை ஏன் அதிகமா கொண்டாடப் படுது?//
எல்லாமே நியாயமானக் கேள்விகள். அதிலயும் இது ரொம்பவே...
முன்காலங்களில் முதியவர்கள் உடல்வலிமையோடு இருந்தார்கள். இப்பல்லாம் அப்படியில்ல. சின்ன வயசுக்காரவுகளே பலவீனமா இருக்காங்க. அதனால முதியவர்களைக் கொஞ்சம் கவனமாப் பாத்துகிட வேண்டியிருக்குன்னு சொல்லலாம்.
ஆனா சில வீடுகளில் நடப்பதெல்லாம் கேட்டா, ச்சேன்னு இருக்கும். முதியவர்களை மதிக்கணும், ஆனா அதுக்காக ஒரேடியா உள்ளங்கைல தாங்கணும்னு எதிர்பார்த்தா எப்படி...
உங்களின் 5வது கருத்து நடைமுறைக்கு சாத்தியமானது. ஆனால் எந்தக் கணவனும் செய்ய முன் வருவதில்லை. சிலர் முன் வருகிறார்கள் - ஆனால் அத்தனை வருடம் செய்துவந்த மனைவியை ஏளனம் செய்து கொண்டே - உன்னை விட நான் நன்றாக சமைக்கிறேன் பார்' என்று சொல்லிக் கொண்டே.
வருந்த வேண்டிய நிலை.
வாங்க ஹுசைனம்மா.
உங்க கருத்து அம்புட்டு அருமை.
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க ஹுசைனம்மா.
உங்க கருத்து அம்புட்டு அருமை.
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க ரஞ்சனிம்மா,
ம்ம்ம்ம் நடந்தா நல்லாஇருக்கும்னு நினைச்சுக்க வேண்டியதா இருக்கு.
வருகைக்கு மிக்க நன்றி
அறிவான பதிவு தென்றல். வயதும் நோயும் சேரும்போது முடிவதில்லைதான். என் பாட்டி நினைவு பருகிறது. தன் வீட்டிலும் வேலை செய்வார். விருந்தாகச் செல்லும் வீடிலும் வேலை செய்வார். இன்னோரு பாட்டி,காலை நீட்டி உட்கார்ந்து கொண்டு எங்களிடம் அம்மாவிடமும் பேசியே பொழுதைக் கழித்துவிடுவார்,.அப்பொழுதிருந்த சுபாவங்கள் வேறு. இப்போதிருக்கும் மனநிலை வேறு. யோசித்துச் செய்ய வேண்டிய பதில்:)
வாங்க வல்லிம்மா,
இப்ப எதிர்பார்ப்புக்கள் ரொம்ப ஜாஸ்தியா இருக்கோன்னு தோணுது. (எந்த ஒரு உறவுக்கு இது பொருந்தும்).
வருகைக்கு மிக்க நன்றிம்மா
வயதானவர்களை பல வீடுகளில் மதிப்பதில்லை. அதற்கெதிராக விழிப்புணர்ச்சி ஏற்பட வேண்டும் என்று செய்யப்படும் பிரசாரங்கள் இப்படி பெரியவர்கள் வேலை செய்தால் குற்றம் என்று தவறாக கொள்ளப்படுகிறது.
இவ்வாறு தவறாக கொள்ளப்படும் சில விஷயங்கள் வரதட்சணை கொடுமை என்று சொல்லி கணவர் மீது பொய் புகார் கொடுப்பது. தன் தந்தைக்கு உதவியாக அவர் வியாபாரத்தை கவனித்தால் அது குழந்தை தொழிலாளர் என்பது போன்றவை.
பல வீடுகளில் இதனால் முதியவர்கள் செய்யும் பிரச்சனைகள் தாங்க முடியவில்லை. "என்ன நீ சரியா நடதரதில்லன்னு போலீஸ் ல்ல புகார் கொடுக்கட்டுமா," என்று மகனையோ மகளையோ மிரட்டும் அளவில் இது இருக்கிறது.
Post a Comment