Tuesday, August 13, 2013

எது சரி??!!! - 3

கல்யாண வீடு மட்டுமல்ல இப்ப ஆஸ்பத்திரிக்கு போனா கூட எந்த சமூகம், ஜாதியா இருந்தாலும் பேசப்படுற டாபிக் மகன் கல்யாணம். எல்லாரும் சொல்லி வெச்சாப்ல ஒரே மாதிரி மகனுக்கு பொண்ணு கிடைக்கலை???!!! இதுதான்.... இது மட்டும்தான் பலருக்கு பிரச்சனை. இப்பவும் எப்பவும் எனக்கு ஞாபகம் வருவது “மணல்கயிறு” படம் தான். அந்த படத்துல ஒரு டயலாக். முகத்துல பருவந்தும் கல்யாணம் ஆகலை என்பது இந்தக்கால பிரச்சனை. பருவவயதைக்கடந்தும் இன்னைக்கு பல இளைஞர்களும், இளைஞர்களும் கல்யாண நாள்..... காண்பது எப்போதுன்னு தான் இருக்காங்க. இது சரியா??? எதனால??

எது சரி? தவறு?

1. அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பெதற்குன்னு மூலையில உட்கார வெச்சாங்க. இப்ப நல்லா படிக்கறாங்க. அதுவே தான் பிரச்சனையா??

2. எந்த வயசுல பொண்ணுக்கு கல்யாணம் செய்வதாக உத்தேசம்??
22 வயசுலயே ஜாதக்கட்டை தூக்கி அடுத்த 2 வருஷத்துக்குள்ள கல்யாணம் முடிச்சு அனுப்பிகிட்டு இருந்தாங்க. கல்யாண வயசாகியும் இன்னமும் கல்யாணம் செஞ்சு வைக்காம சிலர் இருக்காங்களே அது ஏன்?

3. கல்யாணம் கட்டாயமான வழக்கம்னு திணிக்கலை. திருமண உத்தேசம் இருக்கறவங்களைப்பத்திதான் பேச்சு.

4. படிப்பு, வேலை இதெல்லாமும் பெண்களுக்கு அவசியம் தான்.  ஆனா எந்த வயசுல திருமணம்?  மகளுக்கு வயது ஏற ஏற வரப்போகும் மருமகனும் வயசாளியாத்தான இருப்பார்? அவங்க எப்ப குழந்தை பெத்து வாழ்க்கையில செட்டில் ஆவுறது?

5. ஒரு நல்ல துணையிடம் மகளை ஒப்படைத்து அவள் அந்த வாழ்க்கையையும் அனுபவித்து மகிழ்வதை பார்க்கணும்னு ஆசை இல்லையா?

6. மகளை படிக்க வெச்சிருக்கோம்!!! நம்ம பேச்சை கேட்க மாட்டாள்னு பெத்தவங்களே தப்பா யோசிச்சு மகள் கிட்ட பேசாம இருக்காங்களா?

7. வரன் பார்ப்பதில் எத்தனையோ சிக்கல்கள் இருந்தாலும், தேடி தன் மகளுக்கு வரனை பார்த்து காலாகாலத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதை ஒரு தலைமுறையினர் மறந்துவிட்டார்களா?? இந்த மாற்றம் ஏன்?

8. 30 வயது பெண்களை முதிர்கண்ணிகள் என்று அந்தகாலத்தில் சொல்லகேள்வி. இப்பொழுது வயது வரம்பு இல்லையா? முதிர்கன்னிகளுக்கு வரன் தேடினால மணமகன் முத்தி முதிர்ந்துல்ல இருப்பாரு??

9. திருமண பந்தமே வேண்டாம் என்று பெண்கள் முடிவு கட்டிவிட்டார்களே? ஏன் இந்த தட்டுப்பாடு.  பெண்வீட்டாரின் எதிர்பார்ப்புகள் அதிகமாகிவிட்டதா?

திருமணங்கள் ஆகாமல் இருக்க இன்னும் வேறு என்ன காரணம்???!!!!


6 comments:

அமுதா கிருஷ்ணா said...

முன்பு வீட்டிற்கு அடங்கி இருந்ததை ஏதோ தான் மிகவும் கஷ்டப்பட்டது போல் இக்கால அம்மாக்கள் நினைத்து,செல்லம் என்று தேவையில்லாமல் சொந்த மகள்களுக்கே பயந்து,அக்காலத்தில் பெண்கள் எல்லோரும் கைநாட்டு போலவும் இப்போதைய டீனேஜ் பெண்கள் மட்டும் தான் படிப்பில் புலி என்பது போலவும் நினைக்கும் மனப்பாங்கு.பெண்கள் எண்ணிக்கையில் குறைவு என்பதால் பெண்ணை பெற்றவர்கள் எல்லோருக்கும் மாப்பிள்ளை வீட்டாரை பார்த்து ஒரு இளக்காரம்,எல்லாத்துக்கும் மேல் மிக அதிகம் இப்போது லவ் மேரஜ் நடப்பதால் தன் இனத்திலேயே பெண் கிடைப்பதும் அரிதாகி போச்சு.

pudugaithendral said...

வாங்க அமுதா கிருஷ்ணா,

உங்க கருத்துக்கு மிக்க நன்றி

Appaji said...

திருமண பந்தத்தை ஏற்படுத்தாமல் இருப்பதற்கு முழு பொறுப்பு
பெண்ணின் பெற்றோர்களே !! பெண்களின் படிப்போ, சம்பாதிக்கும் பணமோ தடை இல்லை...இவர்களுக்கு இவர்களே தடை !
மருத்துவர்களின் கருத்துபடி 30 வயதுக்கு மேல் திருமண வாழ்க்கை
இனியதாக அமைவது கடினம்...மனது மிகவும் வேதனை படுகிறது.....
அனுபவத்தால் கூறுகிறேன்...தவறு இருந்தால் அனைவரும் பொறுத்து அருளவும்.. - அப்பாஜி, கடலூர்.

pudugaithendral said...

வாங்க அப்பாஜி,

நலமா?? பார்த்து ரொம்ப நாளாச்சு.

உங்க கருத்தும் சரிதான்.

வருகைக்கு மிக்க நன்றி

ஹுஸைனம்மா said...

நிறையப் பேசலாம்... ஆனா நமக்குள்ளப் பேசிப் பிரயோஜனமில்லை. :-(

மகள்கள் மட்டுமல்ல, மகன்களுக்கும் - அவர்கள் சம்பாதிக்கத் தொடங்கியதும் - பெற்றோர் அடங்கிப் போகும் காலமாக இருக்கிறது. அவர்கள் தவறுதான்.

”பிற்காலத்தில் பெண் தன் எஜமானனைப் பெற்றெடுப்பாள்” என்று நபி சொல்லிவைத்திருக்கிறார். இது என்னன்னு இப்பத்தான் புரியுது. :-)

சுசி said...

இதே பிரச்சனை தான் எனக்கும்.என் தம்பிக்கு ரொம்ப வருடங்களாக பெண் தேடுகிறேன். பயன் ஒன்றும் இல்லை.



இந்த விஷயத்தில். பெண்களிடம் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவில்லை. பெண்ணுக்கு திருமணம் செய்ய வேண்டுமே என்ற பொறுப்புணர்ச்சி பெற்றோருக்கு இல்லை. அவள் கொண்டு வரும் பணத்தின் மீது தான் குறி. அதனால், "நீ யாரு !, எப்படிப்பட்டவ உனக்கு இத விட நல்ல மாப்பிள்ளையா பார்க்கிறேன்." என்று சொல்லியே ஏற்றி விட்டு தட்டி கழிக்கிறார்கள். ஒரு காலகட்டத்தில் இதை புரிந்து கொள்ளும் பெண்ணோ அந்த சமயத்தில் தனக்கு சரி என்று படும் ஒருவரை தானே திருமணம் செய்து கொள்கிறாள். பெற்றோரோ, பெண் ஓடி போய்விட்டாள் என்று கூப்பாடு போடுகிறார்கள். திருமணம் செய்து கொண்டு போனவனோ இவள் பணத்தையே குறி வைக்கிறான்.

வயது முதிர்ந்து திருமணம் செய்து கொள்வதால் இருவருக்கும் விட்டுகொடுக்கும் மனப்பான்மையும் குறைந்து சண்டையில் ஆரம்பித்து, விவகாரத்தில் போய் முடிகிறது. பின்னர், திரும்பவும் பத்திரிக்கையில் விளம்பரம். விவாகரத்தானவர், விவாகரத்தானவரை மணந்து கொள்ள சம்மதம் என்று.

பையன்களை பொறுத்தவரையில் லைபில் செட்டில் ஆவதற்கே நிறைய வருடங்கள் எடுத்துக்கொள்கிறார்கள். பெண்களை போல் படிப்பில் அவ்வளவு கவனம் செலுத்துவது இல்லை. பின்னர், கல்யாண சந்தையில் பின்தங்கி போய் விடுகிறார்கள்.

யாரை குற்றம் சொல்லி என்ன...!? காலம் செய்கிற கோலம்!