இந்த பதிவு ஏதோ மாமுலான பிள்ளையார் சதுர்த்தி பகிர்வு பதிவு என நினைத்து விடாதீர்கள். மிக முக்கியமான விஷயம் பற்றி பகிரவே இந்த பதிவு.
இந்த முறை சுற்றுப்புற சூழலைமாசு படுத்தாமல் இருக்கவேண்டும் என திட்டம் போட்டிருந்தோம். களிமண் கணேசா கிடைத்தால் சரி இல்லாவிட்டால், வீட்டில் இருக்கும் சிலைக்கு பக்கத்தில் மஞ்சளில் பிள்ளையார் வைப்பது என முடிவு செய்திருந்தோம்.
மெயின் மார்க்கெட்டில் கூட பிஓபி கணேசா தான். அம்ருதாவின் பள்ளியில் முன் பதிவு செய்திருந்தால் களிமண் கணேசா தருவித்து தருவதாக பிள்ளைகளிடம் சொல்லியிருந்திருக்கிறார்கள். பரிட்சை அடாவடியில் அதை மறந்து விட்டோம். எதேச்சையாக வீட்டுக்கு அருகிலேயே களிமண் கணேசா கிடைத்தார்.
ஞாயிறன்று அன்னை கொளரி ஸ்வர்ணகொளரியாக வந்து கொலுவிருந்தாள்.
அன்னையைவிட்டு பிரியாத செல்லப்பிள்ளை கணேசனும் அடுத்த நாள் வந்து அம்மா பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.
ஆற்றுமணலைக்கொண்டு கெளரி செய்வது எங்கள் வீட்டு பழக்கம். ஆனால் மணலை தேடிச்செல்ல கஷ்டம் என்பதால் இலங்கையில் இருந்த பொழுது மஞ்சளில் கெளரி செய்ய ஆரம்பித்தேன். இப்போதும் தேங்காயில் மஞ்சள் கொண்டு முகம் செய்து அலங்காரம் செய்கிறோம்.
அம்மனை புனர்பூஜை புடித்து நீரில் கரைப்பது பழக்கம். பிள்ளையாரை கொண்டு போய் நீர்நிலையில் விட்டு வந்து கொண்டிருந்தோம். இந்தமுறை பேப்பரில் வந்திருந்த ஒரு கட்டுரையை பார்த்து அம்ருதா அம்மா நாமும் இதே முறையில் நிமர்ஜன் செய்வோம் என்றாள். ஆமாம்ல்ல. ஐடியா நல்லா இருக்கே என சொல்லி ஆயத்தமானோம்.
வினாயகரை நிமர்ஜனம் செய்ய நீர்நிலைக்கு போகத்தேவையில்லை. போய்வரும் நேரமும் மிச்சம். இது ஒன்று புதிய டெக்னிக் கிடையாது. அந்தக்காலத்தில் வீட்டில் இருக்கும் கிணற்றில் நிமர்ஜனம் செய்தார்கள். சிலர் இந்த டெக்னிக்கை உபயோகித்திருக்கிறார்கள். அயித்தான் கூட திருவல்லிக்கேணியில் எங்கள் வீட்டில் இப்படி செய்த ஞாபகம் வருகிறது என்றார்.
வீட்டிற்கு வெளியே பக்கெட்டில் தண்ணீர் வைத்து அதில் கணேசாவை இறக்கி வைத்துவிட்டால் போதும். தானே கரைந்துவிடும். அந்த தண்ணீரை வீட்டில் இருக்கும் தோட்டத்தில் ஊற்றிவிடலாம்.(மேலே படம் கூகுளாண்டவர் அருளியது)
இதே முறையில் எங்க வீட்டிலும் செய்தோம். கெளரியுடன் சேர்த்து கணபதிக்கும் நிமர்ஜனம் செய்தோம். ஐடியா நல்லா இருக்குல்ல.
ஹைதராபாத்தில் கைரதாபாத் எனும் ஏரியாவில் வைக்கப்படும் கணேசா ரொம்ப பிரசித்தம். ஒவ்வொரு வருஷமும் அவரின் ஹைட் வளர்ந்து கொண்டே போகிறது. இந்த வருஷம் இந்த ஹைட்தான் வைப்போம் திட்டம் போட்டு வைக்கறாங்க. 2013ஆம் வருடமாகிய இந்த வருடம் இந்த கணேசா கமிட்டியில் கணேசா வைக்க ஆரம்பிச்சு 59 வருஷம் ஆகுதாம். அதனால 59 அடிக்கும் செஞ்சு வெச்சிருக்காங்க. இந்த வருஷம் இவருக்கு ஃபேஸ்புக்ல கூட அக்கவுண்ட் ஆரம்பிச்சிருக்காங்க. வெப்சைட் கூட இருக்கு.
ஒவ்வொரு வருஷமும் ஹுசைன் சாகர்ல தான் நிமர்ஜன் நடக்கும். இந்த நேரத்துக்குள்ள நிமர்ஜனம் செஞ்சிடுங்கன்னு போலீஸ் சொல்லியிருந்தாலும் கைரதாபாத் கணேசா மட்டும் ரொம்பவே லேட்டாத்தான் கிளம்புவார்.
இவ்வளவு பெரிய்ய சிலைகள் செஞ்சு அதை நீர்நிலைகளில் போட்டு சுற்று சூழல் மாசு படுதுன்னு முடிவு செஞ்சு எங்க அப்பார்ட்மெண்ட்டில் கூட பொதுவா வைக்கும் கணேசா வைக்கவில்லை. அவங்கவங்க வீட்டுல பூஜை போதும்னு விட்டாச்சு. ஒருங்கிணைப்பா பண்டிகைகள் இருக்குன்னாலும், மாசுபடுத்துதல்னு பாக்கும் போது ஒரு யோசனை. ஹுசைன் சாகரை அழகு படுத்து முயற்சியில் இருக்கோம்னு சொல்லி பல கோடிகளை ஒதுக்கிருக்காங்க. ஆனா கணேசா நிமர்ஜன் அங்கேதான் நடக்கும். :(
சுற்று சூழல் மாசுபடுவதை தவிர்ப்போம்!! ஆனந்தமாய் வாழ்வோம்.

17 comments:
நல்ல ஆலோசனைகள்... இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...
பிள்ளையார் அழகாருக்கார்.
பிள்ளையார் விசர்ஜன் நல்ல யோசனைதான், எங்கூட்லயும் இப்டித்தான் செய்யறோம்..
நாங்கள் பல ஆண்டுகளாய் இப்படித்தான் வாளி நீரில் பிள்ளையரை கரைத்து எங்கள் வீட்டு செடிகளுக்கு ஊற்றுகிறோம்.
நீர் நிலைகள் வற்றி போனது, ஒரு காரணம். ஓடும் நீரில் தான் கரைப்பார்கள், இப்போது குட்டை போல் தேங்கி கிடக்கிறது அதனால் எங்கள் குடும்பத்தில் எல்லோருமே இப்படித்தான் செய்கிறோம்.
நானும் போன வருடம் இதைப்பற்றி பதிவு போட்டேன் என நினைக்கிறேன்.
கர்நாடாகவில் இப்படித்தான் செய்கிறார்கள்.
அம்மாவும் மகனும் கொலுவீற்றிருக்கும் உங்கள் வீட்டுப் பண்டிகை படம் அழகாய் இருக்கிறது.
வாழ்த்துகள்.
ரொம்பவே சிரமம் எடுத்து, அக்கறையாச் செயல்பட்டுருக்கீங்க. மனமார்ந்த பாராட்டுகள்.
சுற்றுச் சூழல் பாதுகாப்பினை மக்கள் கருத்தில் கொள்ளாதவரை சிரமமே .வாழ்த்துக்கள் தோழி சிறப்பான பகிர்வுக்கு .
சிந்திக்க வேண்டிய விஷயம். எல்லோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுவது அவசியம். நன்றி தென்றல்!
Pudugai akka,
Have been reading your blog recently (started to read from your first post). Romba romba interestinga ezhudareenga. This is one of favorite passtime during my work lunch break. Keep writing, waiting for your next episode on "Seetha kalyana vaibogame". Unga pssanga rendu perume super and they are so blessed to have an amma like you.
- a fan reader from Calfornia, US
பக்கெட் குளியல் அவருக்கு(ம்) ஆனந்தமா இருந்துருக்குமே!!!
சூப்பர் ஐடியா.
நம்ம வீட்டுலே புள்ளையார் சிலைக்குத்தான் எப்பவும் பூஜை.
அவரையும் இடம்விட்டு நகர்த்தமாட்டேன். இருக்குமிடத்தில் இருந்தால் போதும்.:-)
வாங்க அமைதிச்சாரல்,
நன்றீஸ். :)
வருகைக்கும் சேர்த்து
வாங்க கோமதிம்மா,
இப்பல்லாம் கடல்ல கரைக்கறேன், ஆற்றுல கரைக்கரேன்னு பொடிசுங்க கூட போகுதுங்க. இன்னைக்கு கூட ஏதோ அசம்பாவிதம் நடந்ததா செய்தி பாத்தேன்.
சின்னதா வாங்கி பூஜை செஞ்சா போதுமே.
ஆமாம் கர்னாடகாவிலும் கெளரி கண்பதி தான்.
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க ஹுசைனம்மா,
பசங்களும் பெரியவங்க ஆகிகிட்டு வர்றதால அவங்க சொல்வதையும் கேட்டு தெரிஞ்சிக்கறேன். :)
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க அம்பாளடியாள்,
மாற்றம் மெல்ல ஆரம்பிச்சிருக்கறதை உணர முடியுது. மாறும்னு நம்புவோம்.
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க கவிநயா,
சிந்திக்க வேண்டிய விஷயம்//
ஆமாம்.
வருகைக்கு மிக்க நன்றி
a fan reader from Calfornia, US//
ஹாய். ரொம்ப சந்தோஷமா இருக்கு. உண்மையா சொன்னா என் பசங்க எனக்கு கிடைச்சது ஒரு வரம்.எல்லாம் ஆண்டவனருள். சீதா கல்யாண வைபோகமே சீக்கிரம் வரும்.
பண்டிகை வேளைகளில் கைவலி ஜாஸ்தியாகி கட்டு போட்டு உக்காந்திருந்தேன். இன்னைக்குத்தான் வலி இல்லை.
உங்க அன்புக்கு மிக்க நன்றி
வாங்க டீச்சர்,
ஆனந்தமா சீக்கிரமே குளிச்சிட்டார். அம்ருதா போட்டோ எடுக்க போனாப்ல. பக்கெட்ல வெச்ச அரைமணிநேரத்துல காணோம். :)
இருக்குமிடத்தில் இருந்தால் போதும்//
அதே அதே
வருகைக்கு மிக்க நன்றி
வாங்க டீச்சர்,
ஆனந்தமா சீக்கிரமே குளிச்சிட்டார். அம்ருதா போட்டோ எடுக்க போனாப்ல. பக்கெட்ல வெச்ச அரைமணிநேரத்துல காணோம். :)
இருக்குமிடத்தில் இருந்தால் போதும்//
அதே அதே
வருகைக்கு மிக்க நன்றி
விழா அழகாக இருக்கின்றது.
சுற்றுசூழல் விழிப்பு வேண்டியதே.
Post a Comment