Tuesday, October 22, 2013

இட்லி மஹாத்மியம் - இறுதிப்பகுதி

ஹைதையிலிருந்து சென்னை வந்தோம். அப்பதான் ஏதோ ஒரு புஸ்தகத்துல “அம்மி” அப்படிங்கற வெட் கிரைண்டர் பத்தி படிச்சேன். டேபிள் டாப். (1998 மாடல்) அது வாங்கி கொடுத்தார் அயித்தான். சூப்பரா அரைச்சு மாவு கரைச்சு வெச்சதுக்கப்புறம் அது புசுபுசுன்னு மேலெழும்பி வரும் அழகே அழகு. ஆனாலும் அந்த மாவு 2 நாளைக்குத்தான் இட்லியா வந்தது. அப்புறம் தோசைக்குத்தான் லாயக்கு.

 இந்த நிலையில் 2000மாவது ஆண்டு கோடம்பாக்கத்துக்கு வீடு மாறினோம். பக்கத்து வீட்டுல நோபல் அம்மான்னு ஒரு நல்ல தோழி கிடைச்சாங்க. அவங்க பேரு என்னவோ லீனா. ஆனா அவங்க சின்னமகன் பேரு நோபல். அவங்க வீட்டுல காலையில சுட்ட இட்லி மதியம் ஆனாலும் சாஃப்டா இருக்கும். அவங்க கிட்ட மெல்ல ரெசிப்பி கேட்டேன். ”நீங்க மாவு பொங்கி வந்ததும் கடகடன்னு கரண்டியால கலக்கி டப்பால போட்டுடறீங்க. அதான் மொதோ 2 நாள் மட்டும் இட்லி ஊத்த முடியுது.” அப்படின்னு சொன்னவங்க சொல்லிக்கொடுத்த ரெசிப்பி படிதான் இந்த 13 + வருடங்களா இட்லி செய்யறேன். (அதே மாவுதான் தோசைக்கும்) 6 நாளைக்காவது மாவு இருக்கும். 6ஆம் நாள் கூட இட்லி செய்யறேன். :))

தெரிஞ்சவங்களா போயிட்டீங்க. சரி வாங்க உங்களுக்கும் அந்த ரெசிப்பி சொல்றேன். அரிசி 3 + 1 உளுந்து . நான் பத்து  கிளாஸ் அரிசி போடுவேன்.  இதுல 4 பச்சரிசி, 6 புழுங்கரிசி.  உளுந்து முழு உளுந்துதான் உபயோகிக்கறேன். அது 3 கிளாஸ். இதுதான் ரேஷியோ.   அரிசி, உளுந்து களையும் போதுதான் இருக்கு முக்கியமான விஷயம்.  உளுந்தை ஒரு தரம் மட்டும் கழுவி நிறைய்ய தண்ணி ஊத்தி ஃபிரிட்ஜல வெச்சிருங்க. அது நல்லா ஊறிக்கும். அரிசி இரண்டையும் ஒண்ணா போட்டு 2 தடவை நல்லா கழுவி தண்ணி ஊத்தி வெளிய ஊற வெச்சிடுங்க.

அரைக்கும்போது கல்லுரல்/கிரைண்டரில் முதலில் உளுந்தை ஆட்டிக்கணும். ஃப்ரிட்ஜில் வெச்ச அதே ஜில்லு தண்ணி ஊத்தியே உளுந்தை ஆட்டிக்கணும் என்பது முக்கியம். இதனால உளுந்து சூடாகாம குளுகுளுன்னு இருக்கும். உளுந்து நல்லா கொட கொடன்னு ஆட்டி மாவை அள்ளினதக்கப்புறம்,  3 ஸ்பூன் உப்பு போட்டு பாத்திரத்தில் மூடி வெச்சிடுங்க. அரிசியை போட்டு ஆட்டி ரொம்ப மைய இல்லாம ரொம்ப கொரகொரன்னு இல்லாத பதத்துல ஆட்டி உளுந்தோட சேத்து நல்லா கலக்கி  வெச்சிட்டா மாவு நல்லா பொங்கி வரும்.
மாவு சூடாவதால தான் புளிப்பது, சரியா செட்டாகதது எல்லாம் நடக்குது.

பொங்கி வந்த மாவை கரண்டி ஏதும் போட்டு கலக்காம நல்ல டப்பர்வேர் டப்பாவில் போட்டு வெச்சிட்டா அப்படியே இருக்கும். ஒருவாரம் ஆனாலும் புளிக்காது. கடைசி நாள் வரை இட்லி ஊத்திக்கலாம். இப்ப எங்க வீட்டுல சூப்பரா இட்லி சும்மா சாஃப்ட்டா மெத் மெத்னு ஜமாய்க்கறேன்.

எங்க அவ்வா தட்டுல இட்லி ஊத்தி கொடுப்பாங்க. கொஞ்சம் குழிவான தட்டுல எண்ணெய் தடவி 2 கரண்டி மாவை ஊத்தி டோக்ளாவுக்கு வைப்பது போல அப்படியே வேக வெப்பாங்க. அதென்னவோ ரொம்ப பிடிக்கும். எங்க வீட்டு பசங்களுக்கு குக்கர் செப்பரேட்டரில் (சின்னது) இட்லி ஊத்தி மேலே வெங்காயம் தக்காளி எல்லாம் வதக்கி போட்டு பிட்சா இட்லின்னு கொடுப்பேன். :)) கர்னாடகாவுல இந்த  இட்லிக்கு பேரே தட்டே இட்லியாம். (தட்டே -தட்டு)



 எங்க அப்பாவுக்கு அடுக்கு தீபாரதனையில் இட்லி ஊத்தினா அவ்ளவா பிடிக்காது. அது என்ன அடுக்கு தீபாரதனைன்னு கேக்கறவங்களுக்கு. (நம்ம மாமுல் இட்லி ஸ்டாண்ட் தான்) :)


 எங்கப்பாவுக்கு துணியில சுடுவதுதான் ரொம்ப பிடிக்கும். விரும்பி ரெண்டு கூட சாப்பிடுவாங்க. (அம்மியில் அரைச்ச சட்னின்னா ரொம்ப இஷ்டம்). ஆனா எனக்கு மட்டும் என்னவோ துணியில இட்லி ஒட்டிப்பது, அதை சோப்பு போட்டு கசக்கினா சோப்பு வாசம் இட்லியில பிடிக்குமோன்னு ஒரு யோசனை. அதனால அடுக்கு தீபாரதனை தான். :)


 
 இதுலயும் சில கன்ஃப்யூஷன். இண்டாலியத்துல உபயோகிக்காதீங்க. சில்வர்தான் நல்லதுன்னு சொல்றாங்க. ஆனா சில்வர் ஸ்டாண்ட்ல குழி ஏந்தலாத்தான் இருக்கும். இட்லி உப்பி வர்றது இல்லை. சில சமயம் இந்த தட்டுகளில் இட்லி ஊத்தும்போது மேலே எழும்பி மேல் தட்டுல ஒட்டிக்கும். அதை எடுக்கும்போது பாதி இட்லிதான் மிஞ்சும்.

ஆனா ஹாக்கின்ஸ் குக்கருக்கு மாமுல் இட்லி ஸ்டாண்டை உள்ளே வைக்க முடியாது. அதுக்குன்னு ஒரு தனி மாடல் இருக்கு. அந்த மாடல் இட்லி ஸ்டாண்ட்டில் இட்லி ஒட்டாம அழகா கும்முன்னு வருது.







நான் பொதுவா இட்லி குக்கர்னு தனியா வெச்சுப்பது இல்லை.  எலக்ட்ரிக் ரைஸ் குக்கர்தான் எனக்கு இட்லி குக்கர். தண்ணி ஊத்தி  இட்லி ஸ்டாண்டை உள்ளே வெச்சிருவேன். குக்கிங் மோட்ல  10 நிமிஷத்துல ரெடி. குக்கரை மத்த வேலைகளுக்கு உபயோகிக்கும்போது இட்லி செய்யணும்னா கவலையே படாம எலக்ட்ரிக் குக்கரில் இட்லி செய்யுங்க. ( கரண்ட் இருக்கணும் அது தனிக்கதை)

இட்லியில் எத்தனை வகைகள் இருக்குன்னு பல பதிவுகள் போடலாம் போல இருக்கு.













காபி கலப்பது என்பது ஒவ்வொரு வீட்டுக்கும் தனி ரெசிப்பி தான். அது போல இட்லி ரெசிப்பியும். எனக்கு நோபல் அம்மா ரெசிப்பி சரியா வந்தது. அதை உங்க கிட்டயும் பகிர்ந்துகிட்டேன். உங்களுக்கு சரியா வந்தா ஜமாயுங்க.

ALL THE BEST..... HAPPY EATING.

25 comments:

இராஜராஜேஸ்வரி said...

அருமையான ஐடியாக்கள்..!

ADHI VENKAT said...

நான் பச்சரிசியே சேர்ப்பது இல்லை....புழுங்கலரிசி 5க்கு உளுந்து 1 உபயோகிப்பேன்.

நோபல் அம்மாவின் ஐடியாவை பின்பற்றிப் பார்க்கிறேன். ரகசியத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

ஹாக்கின்ஸ் இட்லி கும்முனு இருக்கே....:)

ஹுஸைனம்மா said...

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு முறை சரிவருது. நானும் இந்த மாதிரி அரிசி தனியா, உளுந்து தனியாத்தான் அரைச்சுகிட்டிருந்தேன். 10 வருஷம் முன்னாடி (என் சோம்பலுக்கேத்தமாதிரி) ஒரு ஃப்ரெண்ட் சொன்னதிலிருந்து, அரிசி+உளுந்து ஒண்ணாவே கலந்து கழுவி ஊறவச்சு, ஒண்ணாவே அரைச்சுடுவேன். அரிசி, உளுந்து ரெண்டையும் தனியா அரைச்சா, அதைக் கலக்கிற வேலை பெரிய சிரமமாருந்துது எனக்கு. இப்ப அதிலிருந்து ரிலீஃப். :-)))

மாவை வெளியில் வச்சு, பொங்கிய பிறகுதான் ஃப்ரிட்ஜில் வைப்பீர்களா? 6 நாள் வரை இட்லி என்றால், மாவு அதற்குள் புளித்துவிடாதா? பரவால்லையே..

நான் அரைத்த உடன், ஃப்ரிட்ஜில் மொத்த மாவையும் (கிரைண்ட கழுவிய)தண்ணீர்/உப்பு சேர்க்காமல் வைத்தால், 2 வாரம் வரைகூட புளிக்காமல் இருக்கும். (ஆனால் அவ்வளவு நாள் வைத்திருப்பதில்லை). தேவையான அளவு மாவை, முந்திய இரவு எடுத்து தண்ணீர்,உப்பு சேர்த்து கலக்கி வைத்தால் காலை இட்லி/தோசை.

//சோப்பு போட்டு கசக்கினா சோப்பு வாசம் இட்லியில பிடிக்குமோன்னு//
ஹி.. ஹி.. ஸேம் பிளட்!!

//மேலே எழும்பி மேல் தட்டுல ஒட்டிக்கும்//

கரெக்ட்.. அதனால பாத்துப்பாத்து கொஞ்சமாதான் மாவு ஊத்தணும். அதனால அது சின்ன இட்லியா இருக்குமேன்னு, மேல் தட்டில் இருக்கும் பொங்கிய இட்லியைத்தான் ப்சங்களுக்குக் கொடுப்பேன். ஹாக்கின்ஸ் ஸ்டேண்ட் மாதிரி, சாதாரண ஸ்டெண்ட் கிடைச்சா நல்லாருக்கும்.

தட்டு இட்லி -புது ஐடியா.

திண்டுக்கல் தனபாலன் said...

சூப்பர்..........!


தங்களின் பார்வைக்கு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-2.html

திண்டுக்கல் தனபாலன் said...

தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

துளசி கோபால் said...

வாவ்!!! எத்தனை எத்தனை வகை!!!!

நோபல் அம்மா ரெஸ்பி நோட்டட்.

எங்க அத்தை வீட்டுலே வாரம் ஒருநாள் மாவு அரைப்பாங்க. அரைச்சவுடனே ஏழு பாத்திரத்தில் பகிர்ந்து ஆறு உடனே ஃப்ரிட்ஜுக்குப் போயிரும்.

தினம் இரவு பலகாரம்(!!) இட்லிதான் அங்கே. காலையில் ஒரு பத்துமணி போல் ஒரு பாத்திரம் எடுத்து வெளியில் வச்சால் மாலைக்குள் மாவு புளிச்சுரும். ராத்ரி இட்லி செஞ்சுடலாம்.

அது சென்னைவெயிலுக்கு ஓக்கே. இங்கே நியூஸியின் குளிருக்கு கங்காரு குட்டி மாதிரி அதௌ வயித்துக்குள்ளே வச்சால்தான் புளிக்கும்.

நம்ம வீட்டில் மாவு அரைக்கும் தினம் திருவிழாதான். மறுநாள் மொத்தமாவுக்கும் இட்லி செஞ்சு எழு இட்லிவீதம் பேக் பண்ணி ஃப்ரீஸருக்குள் தள்ளிருவேன்.

என்னிக்கு இட்லி வேணுமோ அதுக்கு நாலுமணி நேரம் முன்பு வெளியில் எடுத்து வச்சுட்டு சாப்பிட உக்காரும்போது மைக்ரோவேவினால் சுடச் சுட இட்லி தயார்.

நாக்கைத் தீட்டி வச்சுக்கிட்டு என்னெல்லாம் பாடு படவேண்டி இருக்கு பாருங்க:-))))

வல்லிசிம்ஹன் said...

போன பதிவு படிச்சதுமே பின்னூட்டம் இட்டிருக்கணும் .காத்திருந்தது நல்லதாப் போச்சு. கலக்கிட்டிங்க தென்றல். இட்லி ஸ்பெஷல் சூப்பர். இட்லி வீற்றிருக்கும் ஸ்டாண்டும் சூப்பர்.10 க்கு 3 மறக்க மாட்டேன்.:)

ராஜி said...

அடுக்கு தீபாரதனை?? பேரே நல்லா இருக்கு

கே. பி. ஜனா... said...

அருமையான தகவல்!

pudugaithendral said...

வாங்க இராஜராஜேஸ்வரி,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க ஆதி,

எங்கம்மா கருடபஞ்சமி நோன்புக்குதான் புழுங்கலரிசியே சேர்க்காம இட்லிக்கு அரைப்பாங்க. பச்சரிசி சேர்க்கும்போது கலர் கொஞ்சம் நல்லா வருதுன்னு என் நினைப்பு.

அந்த போட்டோ கூகுளாண்டவர் கொடுத்தது தான்னாலும் ஹாக்கின்ஸ் ஸ்டாண்டில் சைஸ் கொஞ்சம் சின்னதா இருந்தாலும் நல்லா கும்முன்னு வருது
வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

ஒன்னா சேர்த்து போட்டு அரைக்கும்போது மாவோட கணிசம் குறையும்னு சொல்வாங்க பெரியவங்க.

ஹைதை கிளைமேட் புண்ணியம்னு நினைக்கறேன், மாவு புளிப்பதில்லை :))

ஹாக்கின்ஸ் ஸ்டாண்ட் ஒண்ணும் வாங்கி வெச்சுக்கோங்க. பிரஷர் பேனில் நல்லா உக்காந்துக்கும்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க தனபாலன்,

பதிவு பாத்து பின்னூட்டமும் போட்டேன்.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க டீச்சர்,

அந்த மாதிரி தனித்தனி டப்பாக்களில் போட்டு நானும் வெச்சிருக்கேன். அப்பதான் சொன்னாங்க மொத்தமா சேர்ந்து மாவு பொங்கினாத்தான் ருசிக்கும்னு. அதனால மாறிட்டேன்.

நம்ம வீட்டில் மாவு அரைக்கும் தினம் திருவிழாதான். //

ஊறப்போட நானும் கொஞ்சம் ப்ளான் செஞ்சுப்பேன் தான். ஞாயிற்றுக்கிழமை மாவாட்டலாம்னா ஒரு நாள் தான் லீவு. அன்னைக்கும் சீக்கிரம் எழணுமான்னு இருக்கும். சனிக்கிழமை செம பிசி. காய்வாங்க அதுஇதுன்னு அதனால ரொம்ப பிசி இல்லாம மொதல்ல ப்ளான் செஞ்சு அன்னைக்கு ஆட்டி வெச்சிடுவேன். :))

நாக்கைத் தீட்டி வச்சுக்கிட்டு என்னெல்லாம் பாடு படவேண்டி இருக்கு பாருங்க:-))))//

அதே அதே சபாபதே.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

10 க்கு 3 மறக்க மாட்டேன்.:) //

ஆஹா நல்லது. அத்தோட உளுந்தை கழுவி தண்ணி ஊத்தி கையோட ஃப்ரிட்ஜில் வெச்சு அந்த ஜில் தண்ணி ஊத்தி ஆட்டிக்கணும். இதையும் நோட் பண்ணிக்கோங்க.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க ராஜி,

அந்த நாமகரணத்தை இட்லி ஸ்டாண்டுக்கு செஞ்சது எங்க அவ்வா :))

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க ஜனா,

வருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றி

ஹுஸைனம்மா said...

//மொத்தமாவுக்கும் இட்லி செஞ்சு எழு இட்லிவீதம் பேக் பண்ணி ஃப்ரீஸருக்குள்/

டீச்சர், நான் என்னைத்தான் (சமையலில்) உலகமகா சோம்பேறின்னு நினைச்சுகிட்டிருந்தேன்.... நீங்கதான் இப்ப எனக்கு குரு!! :-)))))))

Unknown said...

அக்கா நல்லா சொன்னீங்க. உங்க tips try பண்ணி பாக்கறேன். எங்க வீட்டில் 2 நாள் இல்லை 3 நாள் இட்லி அப்புறம் தோசை தான். அதுக்குள்ள மாவு அடி மாவாயிடும்.

உமா (கலி-யில் இருந்து)

சுசி said...

ஹாகின்ஸ் இட்லி ஸ்டாண்ட் நல்லா இருக்கு நான் இதுவரை பார்த்ததில்லை. எனக்கும் இட்லிக்கு எலெக்ட்ரிக் குக்கர் தான் சௌரியம். அந்த ஹாக்கின்ஸ் ஸ்டாண்டை எலெக்ட்ரிக் குக்கரில் வைக்க முடியுமா சொல்லுங்கள், வாங்கிவிடுகிறேன். எனக்கும் இட்லி ஸ்டாண்ட் மேல் தட்டில் ஒட்டிக்கொள்ளும். :((

pudugaithendral said...

ஹுசைனம்மா,

இலங்கையில் ஆரம்பத்தில் ஒரு வீட்டில் குடியிருந்தோம். அந்த வீட்டுக்காரம்மா மல்லு தேசக்காரர். எனக்கு இட்லி சுடச்சுட கொண்டு வந்து கொடுத்தார். அப்புறம் தான் தெரிந்தது அவர் ஃபீர்ஜரில் வைத்து அதை சூடு படுத்தி எடுத்து வந்தார் என்று.

எதுக்கு முன்னாடியே சுட்டு வெக்கறீங்க. அப்பப்ப சுடலாமேன்னு கேக்க வந்த பதில் டீச்சர் பதிலாவும் இருக்கலாம் !!!) என்பதால் தர்றேன்.

அங்கேல்லா வேலைக்காரம்மாவுக்கு காசு ஜாஸ்தி. அதனால வாரத்துக்கு ஒரு நாள் தான் வருவாங்க. அன்னைக்கு மட்டும் எல்லா வேலையும் செஞ்சு வாங்கிக்குவாங்க.

pudugaithendral said...

வாங்க உமா,

மாவு பொங்கி வந்ததும் கரண்டி வெச்சு கலக்காம, அப்படியே டப்பாவில் போட்டு வெச்சிட்டா கடைசி நாள் கூட இட்லிதான். ஜமாய்ங்க.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க தானைத்தலைவி,

ஹாக்கின்ஸ் 4 ப்ளேட் உள்ளது தாரளாமா எலக்ட்ரிக் குக்கரில் உக்காரும்.

எனக்கும் இட்லி ஸ்டாண்ட் மேல் தட்டில் ஒட்டிக்கொள்ளும். :((//

என்ன கஷ்டப்பட்டு மாவாட்டுறோம். இப்படி ஒட்டிப்பது யுனிவர்சல் பிரச்சனையா இருக்கேப்பா. :((

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க தானைத்தலைவி,

ஹாக்கின்ஸ் 4 ப்ளேட் உள்ளது தாரளாமா எலக்ட்ரிக் குக்கரில் உக்காரும்.

எனக்கும் இட்லி ஸ்டாண்ட் மேல் தட்டில் ஒட்டிக்கொள்ளும். :((//

என்ன கஷ்டப்பட்டு மாவாட்டுறோம். இப்படி ஒட்டிப்பது யுனிவர்சல் பிரச்சனையா இருக்கேப்பா. :((

வருகைக்கு மிக்க நன்றி

மாதேவி said...

இட்லி மகாத்மியம் அருமை.

நானும் நம்ம ஊரு இட்லிபற்றி எழுதவேண்டும் என நினைத்திருந்தேன்
அப்புறம் தருகிறேன்.:)