Sunday, October 20, 2013

DILWALE DULHANIA LEJAYENGE!!!!!

கல்யாணம் முடிஞ்சு மும்பையைவிட்டு கிளம்ப போகிறேன் என்பதால் மாமா ஷ்பெஷலாக பர்மிஷன் (என் ஃப்ரெண்ட்ஸ்கள் வீட்டிற்கு வந்து மாமாவை கன்வீன்ஸ் செய்தது தனிக்கதை) பார்த்த முதலும் கடைசியுமான படம் ரங்கீலா!!!! ஆனால் பார்க்க வேண்டும் என துடித்த படம் DILWALE DULHANIA LEJAYENGE!!!!!


1942 லவ் ஸ்டோரி பாடல்கள் தான் இனிமை. ஆனால் இந்த படம்.......  ஞாயிறு இரவு வரும் டாப் 10 பாடல்களில் இந்த பாடலைப் பார்க்க தவம் கிடப்பேன். பாடல்கள் என்னவோ மனதுக்குள் அப்படியொரு சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொண்டன.

காஜலும் ஷாருக்கும் அருமையான ஜோடி. இந்தப்படத்தில் ஒவ்வொரு நடிக,நடிகையரின் நடிப்பும் மிக அருமையாக இருக்கும். மைனேபியார்கியா, ஹம் ஆப்கே ஹே கோன் வரிசையில் அருமையான படம் டிடிஎல்ஜே.





 இப்ப வரைக்கும் இந்த பாடல் மனதுக்கு ரொம்ப  பிடிச்ச பாடல்கள் லிஸ்டில்.


துறு துறு ஷாருக், அழகான காஜல்னு நடிப்பில் கலக்கியிருப்பாங்க. அனுபம் கெர், ஃபரிதா ஜலால் நடிப்பை சொல்வதா,  அம்ரிஷ் பூரியின் நடிப்பு இந்த படத்தில் தான் அருமைன்னு சொல்வது மிகையாகுமா!!!

இந்த படம் நான் மும்பையிலிருந்து கிளம்பிய பின் ரிலீஸானதால் பார்க்க முடியவில்லை. (டிசம்பரில் எனக்கு கல்யாணம் என்பதால் வேலையை விட்டுவிட்டு அக்டோபரில் ஊருக்கு கிளம்பிவிட்டேன்.) இந்த படத்தை பார்க்கவில்லையே என்று ஒரு வருத்தம் இருந்தது.  திருமணம் முடிந்து வந்தது ஹைதைக்கு. ரயில்வே ஷ்டேஷனிலிருந்து வெளியே வந்ததும் கண்ணில் பட்டது இந்தப்பட ஹோர்டிங் தான். :)

ஊருக்கு வந்து செட்டிலாகி, ரிஷப்ஷன் என எல்லா வேலைகளும் முடிந்ததும் சர்ப்ரைஸாக டிக்கெட் புக் செய்து அயித்தான்  படத்துக்கு அழைத்து சென்றார். அப்பொழுது செகந்திராபாத்தில் பரமேஷ்வரி என்றொரு தியேட்டர் உண்டு. (இப்போ அதை இடித்துவிட்டு மல்ட்டிப்ளக்ஸோ, மாலோ கட்டியிருக்கிறார்கள்).  மிக விரும்பிய படம் பார்க்க கிடைத்த ஆசை. ஆனால் கிளைமாக்ஸ் பார்க்க முடியவில்லை!!!!

வேறொன்றும் இல்லை. ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருந்த படம் அது. அயித்தான் டூவீலர் எடுக்க கஷ்டமாகிவிடும் என்று ஷாருக் ரயில்வே ஷ்டேஷனில் அடிவாங்கி கொண்டிருந்த பொழுதே எழுந்து வெளியே செல்ல ஆரம்பித்துவிட்டார். :((  வண்டியை எடுத்துக்கொண்டு தியேட்டர் காம்பவுண்ட் கூட தாண்டவில்லை மொத்த கூட்டமும் வெளியே வர தொடங்கிவிட்டது...  ஆனாலும் கிளைமாக்ஸ் பார்க்க முடியவில்லையே என்று எனக்கு வருத்தம் தான்.

1 வருடம் கழித்தோ 2 வருடம் கழித்தோ   அயித்தான் ஒரு கிஃப்ட் கொடுத்தார். தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே படத்தின் விசிடி. :))  கிளைமேக்ஸ் பார்க்கலைன்னு வருத்தப்பட்டியே..... இப்ப எத்தனை முறை வேணாலும் முழு படத்தையும் பாரு என்றார். இப்ப வரைக்கும் அந்த படத்தை எத்தனை முறை பார்த்திருப்பேன்னு கணக்கே இல்லை. :))). பொக்கிஷமா வெச்சிருக்கேன்.



இப்ப என்ன இந்த படத்தை பத்தி பதிவு??? இன்னையோட இந்த படம் வெளிவந்து 18 ஆண்டுகள் ஆகுது. :)) மும்பையில் மராத்தா தியேட்டரில் இந்த படம் இன்னமும் தொடர்ந்து ஓடிகிட்டு இருக்குன்னு விக்கி சொல்றாப்ல!!!
 



2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிமையான பாடல்கள் கொண்ட படம்... ரசனைக்கு வாழ்த்துக்கள்...

Anonymous said...

வணக்கம்
மனசுக்கு படித்த படங்கள் எப்போதும் எம் நெஞசை விட்டு அகலாது என்பதை மிக அழகா சொல்லியுள்ளீர்கள் பதிவு அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-