Monday, November 18, 2013

ஹாய் ஹாய்!!!!

எப்பொழுதும் போல திடீர் திடீர் வேலைகள் வந்திருச்சு. :)) அதான் இவ்வளவு பெரிய கேப். விஜயதசமி முடிஞ்சு தீபாவளி வந்து ... திருக்கார்த்திகையும் முடிஞ்சிருச்சு. நவம்பர் மாதத்தில் இதுதான் முதல் பதிவு எனும் நினைக்கும்போது எனக்கு ரொம்பவும் ஆச்சரியமாவும் இருக்கு. வடிவேலு ஸ்டைலில், “ நாம அப்படியா பிசியாயிட்டோம்”னு என்னை நானே கேட்டுக்கறேன்.

 ஆஷிஷ் பிறந்த நாள் அன்று என் அம்மம்மாவிற்கு போன் செய்து ஆசிர்வாதம் செய்ய சொல்லி கேட்க, “ எங்கடா கண்ணா உங்கம்மா!! என் கிட்ட பேசியே 1 மாசமாச்சு”! என கேட்கும் அளவுக்கு ஏதோ வேலைகள். அம்மம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அதிகம் பேசவும் முடியாது என்பதாலும் நான் போன் செய்யவில்லை. “எனக்கு உன்னை பார்க்கணும்!” என அம்மம்மா சொன்னதும் செம ஷாக்.

 கல்யாணம் முடிந்து வந்த 18 வருடங்களில் ஒரு போதும் அம்மம்மா இப்படி சொன்னதே இல்லை. நவராத்திரி சமயத்தில் தான் பிள்ளைகளுக்கு லீவு. நவராத்திரி ஸரஸ்வதி ஆவாகனம் அன்று அம்மம்மா பிறந்த நாள் கூட.  பசங்க நாங்களும் அவ்வாவை பார்க்க வருவோம் என்று சொல்ல அயித்தான் காரில் பேக ஏற்பாடு செய்தார் (ட்ரையின் டிக்கெட் 2 மாசம் முன்னாடியே கிடைக்காத நாட்டில்.4 நாள் முன்னாடி கிடைக்குமா??!!  இந்த முறை சரஸ்வதி பூஜை, விஜயதசமி அம்மம்மா மற்றும் மாமா மாமிக்களுடன் கொண்டாடலாம் என முடிவு செய்து கிளம்பினோம்.

வெள்ளிக்கிழமை சாயந்திரம் 6 மணிக்கு கிளம்பினோம். 3 மணிநேரத்தில் ஜகிராபாத். அங்கு பர்மிட் வாங்கி கொண்டு சாப்பிட்டு கிளம்பினோம். கொஞ்ச தூரத்திலேயே ரோடு குண்டும் குழியுமாக இருந்தது. இந்த முறை ஆந்திராவில் நல்ல மழை. அதனால் நிறைய்ய சேதங்கள். சரி கொஞ்சம் தூரம் போனால் சரியாகிடும் என நினைத்திருந்தோம். போகப்போக ரோட் இன்னும் மோசமாகிக்கொண்டே போனதே தவிர நல்ல சாலையாக இல்லை!!! :((

இரவு நேரப்பயணம் வேறு. நாங்கள் முதலில் நாசிக் போய் விட்டு அங்கிருந்து மும்பை செல்ல திட்டமிட்டிருந்தோம்.  இருட்டில் அந்த சாலை எப்படி இருக்குமோ தெரியாது என்பதால்  பூனா செல்லும் நெடுஞ்சாலை தோதாக இருக்கும் என முடிவு செய்து முதலில் மும்பை செல்வோம் என மாற்றினோம்.

கர்நாடக மாநிலத்தின் பசவ கல்யாண் எனும் இடம் வரும் வரை  சாலை மிக மிக மோசம். சாலையோ மோசம், இரவு நேரப்பயணம் வேறு, தூங்கவே இல்லை. காலையில் பூனே சேர்ந்த பொழுது மணி 5.30.  அங்கிருந்து 4 மணிநேரமாவது ஆகும்.

டிரைவருக்கும் ப்ரேக் வேணும். டீ, காபி டிபன் ஏதாவது உள்ளே போனால் முடியும் என்பதால் டீ சாப்பிட்டோம். காலை டிபன் தயாராக 45 பிடிக்கும் என்றார்கள். போகும் வழியில் பார்த்துக்கொள்ளலாம் என கிளம்பினோம். மும்பை போகும் வழி எப்படி என கேட்டு கேட்டு போனோம். எக்ஸ்ப்ரஸ் ஹைவே இருக்கிறது அதில் போகச்சொல்லி சொன்னார்கள்.


 பக்கத்தில் தான் லோனாவாலா என்பதால் சில் சில் கிளைமேட். முதல் நாள் நல்ல மழை பெய்திருப்பதாலும், மழை பெய்யும் வாய்ப்பு அன்றும் இருந்ததாலும் கூலாக இருந்தது. பிள்ளைகளுக்கு காலை உணவு கொடுத்து எக்ஸ்ப்ரஸ்வேயில் சென்றால் பிரச்சனை இருக்காது என ஒரு தாபாவில் நுழைந்தோம்.

டிரைவர் போய் டிபன் கிடைக்குமா என்ற கேட்க அவர்கள் சொன்ன பேர்கள் புரியாமல் மராத்தி பேரா இருக்கு மேடம் நீங்களே கேளுங்க என்றார். மிசல் பாவ் இருக்காம், வடாபாவ் இருக்காம், சூடா ஆலு பராத்தாவும் செஞ்சு தர்றேன்னு சொல்றாங்க இதைத்தவிர வேற என்ன வேணும்.

நானும் பசங்களும் மிசல் பாவ் ஆர்டர் செஞ்சோம் :))  டிரைவரும் அயித்தானும் ஆலு பராத்தா சாப்பிட்டாங்க. அதுவும் சூடா நல்லா இருந்ததுன்னாலும், ஆலு பராத்தா எங்கயும் சாப்பிடலாம். மிசல் பாவ்,  அப்படி இல்லையே!!! :))

லோனாவாலா குகைக்குள் ட்ரையின் போவதே அம்புட்டு அழகா இருக்கும்.  எக்ஸ்ப்ரஸ்வேயில் அது இல்லாம இருக்கும்னு நினைச்சேன். ரொம்ப இல்லாட்டியும் ஒண்ணு ரெண்டு குகைக்குள் பாதை. ஸ்மூத்தா..... சூப்பரா இருந்தது.














மும்பை சிட்டிக்குள்ள போகணும்னா சீக்கிரம் போயிருக்கலாம். நமக்கு வசாய் ரோட் போகணும். மாமாவுக்கு போன் போட்டி வழி கேட்டு, அவர் சொன்ன லேண்ட்மார்க்குகளை கரெக்டா கண்டுபிடிச்சு ஒரு மெயின் ரோட் வந்தது அதற்கப்புறம் அயித்தானுக்கு நல்லாவே ரூட் தெரியும்.

அப்படி இப்படின்னு வீடு போய் சேர மணி 11. :( :) காலை சாப்பாட்டுக்கே வீடு போய் சேர்ந்திருக்க வேண்டியவங்க, அந்த ரோடு நல்லா இல்லாததால 3 மணிநேரல் லேட்டா வீடு சேர்ந்து, குளியலை போட்டு அத்தை சமைச்சு வெச்சிருந்ததை சாப்பிடு  படுத்தது தான் தெரியும்.

தொடரும்...

வலைப்பூ துவங்கி 7 வருடங்கள் முடிந்து இந்த வலைப்பூ இப்பொழுது 8ஆவது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறது. தொடர்ந்து வந்து ஆதரவு தரும் அன்பு நட்புக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

9 comments:

சாந்தி மாரியப்பன் said...

அட.. திடீர் மும்பை விஜயமா?..

அம்மம்மா சௌக்கியம்தானே?

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

ஆமாம் ஃப்ளையிங் விசிட்.

இப்போ கொஞ்சம் நலம்.

வருகைக்கு மிக்க நன்றி

இராஜராஜேஸ்வரி said...

வலைப்பூ துவங்கி 7 வருடங்கள் முடிந்து இந்த வலைப்பூ இப்பொழுது 8ஆவது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறது.

இனிய வாழ்த்துகள்..!

ராமலக்ஷ்மி said...

எட்டாம் வருடத் தொடக்கத்துக்கு வாழ்த்துகள் தென்றல்:).

தங்கள் அம்மம்மா விரைவில் பூரண நலம் பெறப் பிரார்த்தனைகள்!

வெங்கட் நாகராஜ் said...

வலைப்பூ எட்டாம் வருடத் தொடக்கம்....

வாழ்த்துகள் சகோ....

ஹுஸைனம்மா said...

ஆ... நான்கூட சென்னைக்குத்தானோன்னு நெனச்சேன்.. மும்பையா...!!

8-ம் வருஷத்துக்கு வாழ்த்துகள்!!

pudugaithendral said...

நன்றி இராஜராஜேஸ்வரி

நன்றி சகோ

நன்றி ராமலக்‌ஷ்மி

நன்றி ஹுசைனம்மா

Anonymous said...

எட்டு அடி (வருடம்) தாவியிருக்கும் தென்றலாருக்கு வாழ்த்துக்கள்

pudugaithendral said...

நன்றி கடைசிபெஞ்ச்