Tuesday, November 19, 2013

ஜெய் பஜன்லால்!!!!!!

அம்மம்மாவை பார்த்து சரஸ்வதி பூஜை அங்கே கொண்டாடிவிட்டு நாசிக்கிற்கு புறப்பட்டோம். மும்பையிலிருந்து 3 மணிநேரம்தான். அங்கே இருக்கும் உறவினரை விசிட் செஞ்சோம்.

வசாயிலிருந்து கல்யாண் போகும் பாதையில் திரும்பியதுமே எங்க ஃவேரிட் இடம். அங்க கண்டிப்பா போறோம்னு பேசிக்கிட்டு இருந்தபோதே வர்ஷா (மாமா மகள்) செம காண்டாகி,” என்னைய்ய விட்டுட்டு அங்க போறீங்களான்னு” முறைப்பு வேற. அப்படி என்ன அந்த இடத்தில் இருக்கு, வாங்க சொல்றேன்.

பஜன்லால் டெய்ரி இதான் அந்த இடத்துக்கு பேரு. எனக்கு ஞாபகம் இருந்த வரையில் ஒரு சின்ன கீத்துக்கொட்டகை. அங்கே போகும் வரும் அத்தனை வண்டிகளும் நிப்பாட்டி லஸ்ஸி சாப்பிடுவாங்க. மேலே மிதக்கும் மலாயுடன் சூப்பரா இருக்கும். செம டேஸ்ட்.

போகும் வழிதான் என்பதால அங்கே கண்டிப்பா போகணும்னு முடிவு செஞ்சு அயித்தான் கார்பார்க்கிங்கில் வண்டியை நிப்பாட்டினா எனக்கு ஷாக்!!! எப்ப இம்புட்டு டெவலப் ஆச்சுன்னு கேட்டுகிட்டே இறங்கினேன்.

சந்தோஷ் சுப்ரமணியம் படத்துல  பால் கறக்கும் மிஷனை சொருகுவாங்களே அதுமாதிரி சொருகி பால் கறக்கப்படுது. சாணம் வாசனையே இல்லை. ஹைடெக்கா இருக்கு இடம்.  லஸ்ஸி, ரோஸ்மில்க், மில்க் ஸ்வீட்ஸ்னு எல்லாம் கிடைக்கும். இப்ப அதுக்கு டோக்கன் சிஸ்டம் வேற. :))















எல்லாம் நல்லா டெவலப் ஆகியிருக்கு. எதிரும் புதிருமா நிறைய்ய எருமை மாடுகள் கொண்ட பண்ணையா இருக்கு, ஆனா எனக்கு என்னவோ அந்த சின்ன கடையில் இருந்த டேஸ்ட் இப்ப இருக்காப்ல தெரியலை. :(
லஸ்ஸி கொஞ்சம் நீர்த்து இருந்தது (அதாவது அங்க முன்ன சாப்பிட்டதை வெச்சு பார்க்கும்போது).  ஆனாலும் உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சா அங்கே ஒரு எட்டு போயிட்டு வாங்க.




2 comments:

வெங்கட் நாகராஜ் said...

லஸ்ஸி - வடக்கில் இன்னமும் பிரபலம்.... பஞ்சாப் அல்லது ஹரியானாவில் இருக்கும் டேஸ்ட்.... வாவ் சொல்ல வைக்கும்!

pudugaithendral said...

வாங்க சகோ,

லஸ்ஸி ஆல்டைம் ஃபேவரைட். :))

வருகைக்கு மிக்க நன்றி