Saturday, February 15, 2014

அம்மா அப்பா கல்யாணம் - 1

பீமரத சாந்தி நாளன்று காலையில் அம்மாவின் பிறந்த வீட்டினர் சீர் கொண்டு வந்தனர். தாலி, மெட்டி, புடவை, வேஷ்டி இவைகளுடன் சீர் பட்சணங்கள் கூட.  முதல் நாள் கடஸ்தாபனம் செய்து வைத்திருந்த கும்பங்களுக்கு திரும்ப பூஜை செய்து, ஹோமங்கள் முடித்து, தானங்கள் கொடுத்து முடித்ததும் அபிஷேகத்திற்கு தயாரானோம்.  முதல் நாள் மாலை  கொஞ்சம் மழை வேறு பெய்திருந்தது. தை மாத குளிர் வேறு. 


 தாத்தாவிற்கோ கண்களில் ஆனந்தமழை. தனது கையால் மகளுக்கும், மருமகனுக்கும் அபிஷேகம் செய்யும் பாக்கியம் எத்தனை பெற்றவர்களுக்கு வாய்க்கும்.  முடியாத நிலையிலும் அம்மம்மா படிகள் இறங்கி வந்து மகளையும் மருமகனையும் அருகிலிருந்து ஆசிர்வதித்தார். கணீரென்ற குரலில் உறவினர் ஒருவர் பாட அபிஷேகம் நடந்தது. 

குளிர் வெடவெடக்க அம்மா அப்பா உடை மாற்ற வருவதற்குள் சித்தி தன் உடன்பிறப்பை கட்டிக்கொண்டு சந்தோஷத்தில் அழுதே விட்டார். உடன் மேடைக்கு ஓடி அடுத்த நிகழ்ச்சிக்கு ரெடி செய்தேன். அம்மா அப்பா உடை மாற்றி வருவதற்குள் மேடையில் சேர்கள் போட்டு, பக்கத்திலும் இன்னும் 4 சேர்கள் போட்டு மெல்ல என் அத்தைகளையும் (அப்பாவின் அக்காக்கள்) அவரின் கணவர்களையும் மேடையில் மெல்ல உட்கார வைத்தேன்.
அவர்கள் சதாபிஷேகம் கண்டவர்கள். 

மாங்கல்ய தாரண முஹூர்த்தம். பொதுவாக 70ற்கு மாங்கல்ய தாரணம் செய்யாவிட்டாலும் ஓகே. ஆனால் 60 செய்து கொள்ளாவிட்டால் 70ல் மாங்கல்ய தாரணம் உண்டு.



 







 அப்பாவின் தமக்கைகள் இருவரும் தாலிமுடிய இப்பொழுதும் இருவருக்கும் தாலிமுடியும் சீர் பணம் கொடுத்தேன். இருவரின் கண்களிலும் ஆனந்த நீர். 
அடுத்து அப்பாவின் ஒன்றுவிட்ட சகோதரி அம்மாவுக்கு காலில் மெட்டி அணிவித்ததும் அம்மா,அப்பா இருவரும் தம்பதி பூஜை செய்தார்கள். 60ல் விட்டதற்கு சேர்து இரண்டு தம்பதிகளுக்கு பூஜை. அவர்களுக்கும் புத்தாடை கொடுத்து, தாலிகட்டி பூஜித்து ஆசிர்வாதம் பெற்றனர்.

விழாவுக்கு வந்திருந்த உறவினர்களும் நண்பர்களும் அம்மா,அப்பாவிற்கு நமஸ்கரித்து ஆசி பெற்றனர்.  அனைவருக்கும் அருமையான மதிய உணவு. 
அனைவருக்கும் ஆனந்தம். டாக் ஆப் த ரிலேடிஃப்ஸாக ஆகிவிட்டது இந்த பீமரதசாந்தி.

என் அத்தைகள் என்னையும் தம்பியையும் மிகவும் பாராட்டினர். பிள்ளைகள் தலையெடுத்து  மிக மிக சிறப்பாக செய்து விட்டனர் என சொல்லிக்கொண்டே இருந்தார்கள். ஒரு உறவினரோ பலமுறை எங்களுக்கு திருஷ்டி சுத்தி போடச்சொல்லிக்கொண்டே இருக்க, முன்னமே ஏற்பாடு செய்த படி பூசணி சுத்தி போட்டார்கள். அப்பொழுது வந்த கமெண்ட்,”சின்ன பூசணியெல்லாம் போதாது! பெரிய்ய்ய்ய்ய பூசணியா வாங்கி சுத்தி போட்டாத்தான் உண்டு” :))

டாக் ஆஃப் த ரிலேடிவ்ஸாக இந்த பீமரத சாந்தி
எல்லோர் மனதும் நிறைய வைத்த இறைவனுக்கு நன்றி.


11 comments:

வல்லிசிம்ஹன் said...

வாழ்க வளமுடன். நன்றி தென்றல். அருமை.

திண்டுக்கல் தனபாலன் said...

மிக்க மகிழ்ச்சி... சிறப்பை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

நலமா? வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க தனபாலன்,

மிக மிக நன்றி

கோமதி அரசு said...

அம்மா அப்பா பீமரத சாந்தி கல்யாணம் சிறப்பாக நடந்ததை பகிர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சி.

மகிழ்நிறை said...

நிகழ்வும் பகிர்வும் மிகுந்த மகிழ்ச்சி !

சாந்தி மாரியப்பன் said...

நிறைவாயிருக்கு தென்றல்..

pudugaithendral said...

வாங்க கோமதி அரசு அம்மா,

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க மைதிலி,

வருகைக்கு ரொம்ப நன்றி

pudugaithendral said...

வாங்க சாந்தி,

எனக்கும் தம்பிக்கும் மனதுக்கு ரொம்பவே நிறைவாக இருந்தது.

வருகைக்கு மிக்க நன்றி

வெங்கட் நாகராஜ் said...

மிக்க மகிழ்ச்சி சகோ.....

உங்கள் அப்பா-அம்மாவின் ஆசிர்வாதம் எப்போதும் உங்களுக்கு உண்டு.....