Tuesday, June 17, 2014

ஆஹாஹா கல்யாணம்.....


அம்மம்மாவுக்கு அவ்வளவு உடல்நிலை சரியில்லாம இருந்தாலும் மனசுல ஒரே ஒரு தாரக மந்திரம் தான் “ என் பேரன் கல்யாணத்தை பார்க்கணும்” . ஐசியூவுக்கும்  ஜெனரல் வார்ட்க்கும் ஷிஃப்ட் அடிச்சுக்கிட்டு அம்மம்மா, கல்யாண வேலைகளில் நாங்க. எது எப்படி ஆகுமோன்னு ஒரே டென்ஷன். அம்மம்மாவின் வேண்டுகோளின்படி அவங்களுக்காக நானும் பசங்களும் தினமும் ரெய்கி செஞ்சுகிட்டு இருந்தோம். ரெய்கியில் பாசிட்டிவ் திங்கிங் ரொம்ப முக்கியம். அதன்படி அம்மம்மா பூரண குணமாகிடுவாங்கன்னு நம்பிக்கை இருந்தது. எல்லோரும் அம்மம்மாவை போய் பார்க்க நான் மட்டும் போக முடியாமலே இருந்தது வருத்தம் தான்.

நாள் நெருங்க நெருங்க திக் திக். ஆஞ்சியோவுலேயே 5 அடைப்புகளையும் எடுத்த டாக்டரின் திறமையை சொல்வதா,  இல்லை அத்தனை வயதிலும் மருத்துவருக்கு பூரண ஒத்துழைப்பு தந்த அம்மம்மாவின் வைராக்கியத்தை சொல்வதா!!!! இறைவனருளால் அம்மம்மா கொஞ்சம் தேறிட வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். அந்த நாளை இப்ப நினைச்சாலும் அவ்வளவு சந்தோஷமா இருக்கு. வீட்டுக்கு போனதும் அம்மம்மாவின் தொணதொணப்பு ஜாஸ்தியாச்சு. :)

ஒரு ஸ்டேஜ்ல தன்னால கல்யாணத்துக்கு வரமுடியாது அதனால பேரனை, தன் மனைவியை அழைச்சுக்கிட்டு மும்பை வரச்சொன்னவங்க, மாமா கிட்ட பேரன் கல்யாணத்துக்கு போகனும் டிக்கட் போடுன்னு தொணத்த ஆரம்பிக்க, 10 நாள் கழிச்சு டாக்டர் கிட்ட கேட்டதும், ஃப்ளைட்ல கூட்டி போங்க, அலைய விடாம பாத்துக்கோங்கன்னு சொல்ல மாமா டிக்கெட் புக் செஞ்சாப்ல.

எங்களுக்கு முன்னாலேயே அம்மம்மா சென்னை வந்து சேர்ந்துட்டாங்க. ( என்னிடம் போனில் வேற ,” பாத்தியா, கல்யாணத்துக்கு வீட்டுல பெரியவளா நான் முன்னாடி வந்துட்டேன்னு பெருமையா சொன்னாங்க) ஏப்ரல் 18 தம்பி திருமணம் சென்னையில். அம்மம்மாவின் ஆசைப்படி எல்லாம் அமர்க்களமாய் நடந்தது. அம்மம்மா அலையாமல் இருக்க வீல் சேர் ஏற்பாடு செய்திருந்தோம். வசதியாய் மணமேடைக்கு வந்து அமர்ந்து கண் குளிர நிகழ்ச்சிக்களை பார்த்தார். தம்பி தாலி கட்டுவதை பார்க்கும் போது அம்மம்மாவுக்கும் தாத்தாவுக்கு கண்களிலிருந்து கண்ணீர்..... இதற்கு தானே அந்த வயது முதிர்ந்த பெரியவர்கள் பூஜை செய்தது, அம்மம்மா தன் உசிரை கையில் பிடித்துக்கொண்டிருப்பது. எல்லாம் நிறைவாக செய்தாய் என அம்மம்மா எனக்கு முத்தம் கொடுத்த நிமிடம் நான் பட்ட கஷ்டங்கள் ஓடியே போய்விட்டது.





ஒவ்வொரு வருடம் பிறக்கும்பொழுதும் இந்த வருடமாவது என் கையால் தம்பியின் மனைவிக்கு தாலிமுடியும் பாக்கியத்தை கொடுன்னு வேண்டிக்கிட்டே இருப்பேன்.  தள்ளிக்கிட்டே போகுதேன்னு வருத்தப்பட்டதுக்கு பாசமான பொண்ணை அனுப்பி வெச்சிருக்கான் ஆண்டவன். திருமணத்துக்கு முன்னாடியே எங்களுடன் அப்படி ஒரு ஒட்டுதல்.  அயித்தானை அவங்க சொந்த அண்ணனா நினைச்சுக்கிட்டு ரொம்ப பாசமழை ( பாசமலர் சிவாஜி கணேசன், சாவித்திரி பார்ட் 2ன்னு நாங்க கிண்டலடிப்போம்)  ஆஷிஷ் அம்ருதாமேல அவ்வளவு பாசம்.  தாலி கழுத்தில் ஏறுவதற்கு முன்பிருந்தே எங்க வீட்டுப்பெண் போல அவ்வளவு பாசம் காட்டிய தங்கத்தை அனுப்பி வைத்த இறைவனுக்கு நன்றி.


டீவியில ஒரு வாட்டி முகத்தை காட்டினாலே ரொம்ப கர்வமா இருப்பாங்க சிலர். ஆனா எங்க தங்கம் விஜய் டீவி சூப்பர் சிங்கர்ல டாப் 13ல வந்த செல்லம். (பேரெல்லாம் சொல்ல மாட்டேன். செல்லத்துக்கு பிடிக்காது) அந்த மமதை எல்லாம் மனசுல இல்லாம இயல்பா இருந்தது ரொம்ப பிடிச்சிருக்கு.  எங்கம்மா நல்லா பாடுவாங்க. முறையா சங்கீதம் கத்துக்கிட்டவங்க. இப்ப மருமகளும் பாடக்கூடியவங்க என்பதுல அம்மாவுக்கும் ரொம்ப  ரொம்ப சந்தோஷம். ( தம்பி மனைவி பாடும்போது எங்கம்மாவுடைய இளவயசுக்குரல் மாதிரியே இருக்கு).




தாலி முடிந்த கையோடு சுற்றிலும் இருக்கும் கூட்டம் எல்லாவற்றையும் மறந்து தம்பியை கட்டிக்கொண்டு முத்தம் கொடுத்ததோடு தம்பியின் சகதர்மிணிக்கும் முத்தம் கொடுத்து என் சந்தோஷத்தை வெளிப்படுத்திக்கொண்டேன். அப்பா என்னை கட்டிக்கொண்டு அழுதே விட்டார்.  ஆனந்தம்.... ஆனந்தம்...



13 comments:

Mahi said...

நிறைவாக இருக்கிறது உங்க பதிவைப் படித்ததும்! வாழ்த்துக்கள்! :)

Appaji said...

அம்மம்மா முன்னிலையில் திருமணம் நடந்தது...
மிக மிக மகிழ்ச்சியாய் உள்ளது..

என் சந்தோஷத்தை வெளிப்படுத்திக்கொண்டேன். >>>>>
உண்மையான சந்தோஷத்தின் வெளிப்பாடு...

தங்களது சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துகள்....

pudugaithendral said...

நன்றி மஹி

நன்றி அப்பாஜி

சுசி said...

ரொம்ப நாளாய் உங்களை காணோமேன்னு நினைச்சிண்டு இருந்தேன். திருமணம் நன்றாக நடந்தது பற்றியும், நல்ல மாட்டுப்பொண் அமைந்தது பற்றியும் மிகவும் மகிழ்ச்சி. உங்கள் நல்ல மனதிற்க்கும், உழைப்பிற்க்கும் இறைவன் கொடுத்த பரிசு இது.

வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

ஆஹ்ஹா கல்யாணம் .வெகு நாட்கள் பிறகு தென்றலின் வாசம் மிகப் பிடித்திருக்கிறது. தம்பி கல்யாணக் கதை அருமை. அம்மம்மாவின் வாழ்த்துகளும் ஆசிகளும் கிடைக்கதம்பதிகள் மிகவும் கொடுத்துவைத்திருக்கிறார்கள். ஒரே உணர்ச்சி மயம். இன்று வந்த இந்த ஆனந்தம் என்றும் நிலைக்கட்டும்.வாழ்த்துகள் தென்றல்.

ஹுஸைனம்மா said...

என்ன சொன்னாலும், நமக்காக உள்ளன்போடு பிரார்த்திக்க வயதானவர்கள் வீட்டில் இருந்தால், அது தனி தெம்புதான்! புகைப்படத்தில் இருவரின் கண்களிலும் பனிக்கும் கண்ணீரில் பாசம் பளிச்சிடுகிறது.

இம்மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்க என் பிரார்த்தனைகள். :-)

Vaishnavi said...

Romba santhosam madam.marriagela nama illayenu feel panna vachiteenga.pasanga exam ellam mudinthatha????ade madiri seetha kalyanathaiyum nadathi vachudunga

Jaleela Kamal said...

பேரன் , பேத்திகள் கல்யாணத்தை சந்தோஷமாய் முன்றின்று நடத்துவது அவர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்திருக்கும் இல்லையா.. கலா பாட்டியின் ஆசை நிறைவேறியது ,
உங்கள் தம்பிக்கும் என் வாழ்த்துக்கள்

pudugaithendral said...

நன்றி தானைத்தலைவி

நன்றி வல்லிம்மா

நன்றி ஹுசைனம்மா

நன்றி வைஷ்ணவி. (அடுத்த கட்ட வேலையாக மகனின் அட்மிஷன் நடக்கிறது. அது முடிந்ததும் சீதா கல்யாணத்தை நல்லபடியா முடிச்சிடலாம்.)

நன்றி ஜலீலாக்கா

நன்றி கடைசி பெஞ்ச்

துளசி கோபால் said...

ஹைய்யோ!!!! வாசிக்கவே மகிழ்ச்சி இன்னும் கூடுதேப்பா!!!!

அம்மம்மா இனி உடல் நல்லா தேறிடுவாங்க பாருங்க.

எல்லாம் நல்லபடியா நடந்துச்சேன்னு பெருமாளுக்கு நன்றி சொல்லிக்கறேன்.

மணமக்களுக்கு எங்கள் நல்வாழ்த்து(க்)கள்.

pudugaithendral said...

நன்றி துளசி டீச்சர். :)

Unknown said...

Reading you after a long time. Congratulations akka for becoming nathanaar. Your ammamma will be just fine now, dont worry. Waiting for more updates to "Seeta kalyana vaibogame..."

Uma (from Bayarea, California)

pudugaithendral said...

நன்றிப்பா. சீக்கிரம் வரும் :)