Tuesday, July 01, 2014

ஊர் சுத்தினது - பாகம் 2

காலை உணவுக்கு இடியாப்பம்,ஸ்ரீலங்கன் தால், ப்ரெட், வெஜிடபிள் சப்ஜிகளுடன் கார்ன்ஃபேளக்ஸ், சாக்கோஸ் இவைகளுடன் பழங்களும் வைத்து அழகாக செட் செய்திருந்தார் மைக்கேல். காம்ப்ளிமெண்டரி ப்ரெக்ஃபாஸ். ப்ரெக்ஃபாஸ்ட் முடித்து கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருந்த பொழுது வண்டி வந்துவிட்டது.  தயாராகி போனது ODEL . இது கொழும்புவில் இருக்கும் ப்ரபலமான  கடை.  அப்பவே கொஞ்சம் காஸ்ட்லி. ஆனால் souvenir  டி ஷர்டுகள் இங்கே தான் தரமானதாக கிடைக்கும். அதனால் ஒரு ரவுண்ட் அடித்தோம்.

அந்தப்பக்கமாவே எத்தனையோ வாட்டி போயிட்டு வந்திருந்தாலும் அம்ருதம்மா என்னவோ அந்த இடம் ஞாபகம் இல்லைன்னு சொல்லி திரும்ப போகணும்னு சொன்னாப்ல. சரின்னு  போனோம்.





independence square - சுதந்திர சதுக்கம்னு சொல்லப்படுற இந்த இடத்துக்கு முன்னாடி அசோக மரங்கள் ரெண்டு பக்கமும் அணிவகுத்து நிக்கும். பார்க்கவே ரொம்ப அழகா இருக்கும்.  கொழும்பு - 7 ல் அமைந்திருக்கும் இந்த மண்டபம், இலங்கை சுதந்திரம் அடைஞ்சதுக்கு அடையாளமா கட்டபட்டது. அங்கயே ம்யூசியமும் இருக்கு, ஆனா அதுக்கு போகலை. சில பல போட்டோ செஷன்கள், செல்ஃபிக்கள் எடுத்துக்கிட்டோம். அம்ருதாம்மா பரம திருப்தி :)

அடுத்து தியங்கரா போகலாம்னு திட்டம். அது நாங்க முன்பு குடியிருந்த திம்பரிகஸ்யாயல இருக்கு.  திம்பரிகஸ்யாய மெயின் ரோடுல முன்பு ட்ராபிகா இருக்கும். குறுகிய ரோட்தான் அப்ப இருந்தது. இப்ப அங்க போய் நின்னா அடையாளமே தெரியாம மாறிப்போச்சு.




இந்த போட்டோவை எடுத்து சிங்கையில் இருக்கும் தம்பிக்கு அனுப்பி வெச்சு எந்த இடம்னு கண்டு பிடின்னு சொன்னோம். கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் தம்பி மெசெஜ் அனுப்பினாப்ல வலது பக்கம் எடுத்தா நாம இருந்த வீடுக்கா, லெஃப்ட்ல நேரா போனா ரூபவாஹிணி ஷ்டேஷன்னு கரெக்டா சொன்னாப்ல. ஆனா இவ்வளவு மாற்றமான்னு ஆச்சரியம் தான்.
எங்க ஆட்டோ அண்ணா ரவிக்கு வர்றதை பத்தி முன்னமே சொல்லியிருந்தோம். ஆனா அன்னைக்கு அந்த இடத்துல ரவியை பார்த்ததும் பசங்களுக்கு சந்தோஷம். வண்டியை ஓரங்கட்ட சொல்லிட்டு ஆஷிஷ் இறங்கி ஓடிப்போய் அங்கிள்னு கட்டிக்க, பின்னாடியே அம்ருதம்மாவும் போய் ஹாய் சொல்ல, ரவிக்கு செம ஷாக். நல்லா வளர்ந்துட்டீங்க! அப்படியே மாமா மாதிரி இருக்கீங்கன்னு ஆஷிஷைப் பாத்து சொல்லி கட்டிக்கிட்டாரு.

பழைய சிகப்பு ஆட்டோவை கொடுத்திட்டு இந்த ஆட்டோ வாங்கியிருக்காங்க. அவ்வளவு தூரம் வந்துட்டு வீட்டுக்கு போகாட்டி எப்படின்னு பக்கத்துலயே இருக்கற வீட்டுக்கு போனோம், ஹவுஸ் ஓனர் ஆண்ட்டி இப்ப மகளுடன் லண்டன்ல இருக்காங்க. நாங்க இருந்த போர்ஷன் வேறயாரோ குடியிருக்காங்க. அதனால வாசல்ல நின்னு போட்டோ எடுத்துக்கிட்டு பக்கத்துல இருக்கற தியங்கரா கடைக்கு போனோம். இப்ப நம்ம ஃப்ரெண்ட் பாபு அங்க இல்ல.  சேல்ஸ் ரொம்ப ஆவுறது இல்லைன்னு அங்க வேலை செய்யற பொண்ணு சொல்லிச்சு. ஆனா எனக்கு தேவையான பேண்ட் அங்கதான் கிடைச்சது. :) 850 ஸ்ரீலங்கன் ரூபாய்க்கு நல்ல ஜீன்ஸ் வாங்கணும்னா அது தியங்கரா தான். எங்க 4 பேருக்குமே தேவையான சில உடைகளை வாங்கிகிட்டு அடுத்து சாப்பிட போனோம்.





 இந்த வாட்டி இங்க கண்டிப்பா சாப்பிட போகணும்னு முன்னாடியே திட்டம் போட்டிருந்ததால போன் செஞ்சு டேபிள் புக் செஞ்சிருந்தோம். அருமையான ஸ்ரீலங்கன் உணவு சாப்பிடணும்னு இந்த இடம் தான் பெஸ்ட். சுடச்சுட ஆப்பம், சூடான ப்ளாக் டீ, அருமையான உணவு, அதைவிட அருமையான ஸ்வீட்கள்னு கிடைக்கும். புஃபே டைப் சாப்பாடுதான். ஆனா ஒரே ஒரு வருத்தம்,  பழைய இடத்துலேர்ந்து புது இடத்துக்கு மாறிட்டாங்க. ஆர்யே டில் மாவத்தைக்கு வந்திருச்சு.  முன்னாடி பீச்சுக்கு பக்கத்துல இருக்கும். இங்க செட்டிங்ஸ் அப்படியே தான், அதே சாப்பாடும் தான். ஆனா அந்த அலைகளின் ஆர்ப்பரிக்கும் அழகு மட்டும் மிஸ்ஸிங். என்ன இடம். ராஜ போஜன். 




இங்கே வெஜிட்டேரியன் சாப்பாடும் உண்டு, நான் வெஜ்ஜும் உண்டு. அருமையான சாப்பாடு சாப்பிட்டாச்சு. திரும்ப திம்பரிகஸ்யாய போயிட்டு மாலையில் வர இருந்த அம்ருதம்மாவின் தோழிகளுக்காக ஸ்னாக்ஸ் பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்த sensal  பேக்கரியில் வாங்கிக்கிட்டு கெஸ்ட் ஹவுஸ் போனோம்.






நாங்க வந்திருக்கோம்னு செம ஆனந்தம் போல, நல்லா இருட்டிக்கிட்டு மழைய பெய்ய ஆரம்பிச்சிருந்தது. மழைவிட்டதும் பிள்ளைகள் வருவாங்கன்னு நினைச்சோம். மழை விடலை. அதனால் தோழிகள் அப்புறமா சந்திக்கலாம்னு போன் செஞ்சு சொன்னாங்க. அம்ருதம்மா கொஞ்சம் அப்செட் தான். ஊருக்கு போறதுக்குள்ள மீட் செய்ய ப்ளான் பண்ணலாம்னு சமாதானம் ஆனாங்க.


அந்த கெஸ்ட் ஹவுஸ் ஓனரான அயித்தானின் நண்பர் வீட்டுல இரவு உணவு. முடிச்சு வந்து படுத்தோம். சரியான மழை........

தொடரும்.......




4 comments:

ADHI VENKAT said...

அருமையான ஊர் சுற்றல். ஆஷிஷ், அம்ருதாவை விசாரித்ததாகச் சொல்லுங்கள். தில்லியில் பார்த்ததை விட வளர்ந்துட்டாங்க....:)

விடுபட்ட பதிவுகளையும் இன்று தான் படித்தேன். தம்பி திருமணம், அம்மம்மாவின் உடல்நிலை குறித்து மிக்க மகிழ்ச்சி. இனி தொடர்ந்து வருவேன்....:)

வெங்கட் நாகராஜ் said...

தொடர்கிறேன்.....

pudugaithendral said...

வாங்க ஆதி,

ஆமாம் ஆஷிஷ் இப்ப இஞ்சினியரிங் காலேஜ்ல சேரப்போறார்ல :))

தொடரப்போவதற்கும் வருகைக்கும் மிக்க நன்றி

pudugaithendral said...

நன்றி சகோ